Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

ஹலால் - உலகின் மூன்றாம் பெரிய வல்லரசு பொருளாதாரம்!!

Wednesday, May 31, 2023

 ஓட்டல்களில் நீங்கள் 'ஹலால்' என்கிற வார்த்தையை கவனித்திருக்கலாம். முஸ்லிம்கள் உண்ணத் தகுதியான உணவு என்பதற்கான அத்தாட்சி/சான்றிதழ்/அறிவிப்பு தான் இந்த ஹலால் என்கிற அளவில் தான் நம்மில் பலரும் இதைப் பற்றி அறிந்து வைத்திருப்பபோம். ஆனால் இந்த ஹலால் ஒரு மிகப்பெரிய வணிகச் சக்கரம் என்பது புதிய & ஆச்சரியமான விஷயம். அதாவது ஆண்டுக்குத் தோராயமாக 4-7ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இந்த ஹலால் பொருட்களின் வணிகம் இருக்கும் எனக் கணிக்கிறார்கள். 4 ட்ரில்லியன்னா எவ்வளவு? பெரிய அளவெல்லாம் இல்லை,  ஜஸ்ட் நம் இந்திய நாட்டின் ஓராண்டு ஜிடிபியை விடக் கொஞ்சம் அதிகம், அவ்வளவு தான். கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஹலால் வணிகத்தை உலக நாடுகளின் ஜிடிபியோடு ஒப்பிட்டால், மூன்றாம் அல்லது நான்காம் இடம் பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாட்டின் பொருளாதாரத்திற்குச் சமம் இந்த ஹலால் வணிகம்!!



ஒரு காலத்தில் உணவில் மட்டுமே இருந்தது, பின் ஆடை, அழகு சாதனப் பொருட்கள், டூர் பேக்கேஜுகள், அவ்வளவு ஏன், உயிர் காக்கும் மருந்துகளில் கூட ஹலால் வந்து விட்டது. இஸ்லாமியச் சமூகம், தன் பொருளாதாரம் வெளியே சென்று விடாமல், தனக்குள் மட்டுமே சுற்றிக்கொண்டு, தன் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கைக் கொடுக்கவே இந்த ஹலால் என்னும் வணிகத்தை முன்னெடுக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். அதனால் தான், குரான் காலத்தில் இல்லாத பொருட்களுக்கு எல்லாம் கூட ஹலால் எனக் கூறி வியாபார வட்டத்திற்குள் இழுக்கிறார்கள். உதாரணம், அழகு சாதனப் பொருட்கள்.




ஹலால் தரச்சான்று பெறுவதும் வணிகமயமாகி விட்டது. நாம் வண்டிக்கு இன்சூரன்ஸ் ரெனியூ செய்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹலால் தரச்சான்று தரும் அமைப்பிற்கு 15000 கொடுத்து ரெனியூ செய்து கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொரு பொருளையும் இணைக்க, ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக இவ்வளவு பணம் என்றும் கட்ட வேண்டும். நேரடியாக வேலை வாய்ப்பு (இஸ்லாமியர் மட்டுமே ஹலால் சடங்கைச் செய்ய இயலும்), மறைமுகமாக அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி என இது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இன்றைய தேதியில் உலக வல்லரசுகள் எல்லாம் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்காமல் இருந்தாலே போதும் எனத் திணறும் போது, ஹலால் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மட்டும் கிட்டத்தட்ட 11%!!! எந்த வல்லரசு நாடும் அந்த அளவில் வளருவதில்லை.


உலக இஸ்லாமிய மக்கள் தொகை 180கோடி. அதுவும் பரவலாக பல தேசங்களில் பிரிந்து வாழும் இனம். இந்துக்கள் போலோ, அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் போலோ ஒரே இடத்தில் குவிந்திருக்கும் மக்கள் தொகை அல்ல. இப்படிப்பட்ட பரவலான மக்கள் தொகை, ஒற்றுமையாக ஒரு மதப்பொருளாதார வல்லரசை உருவாக்கியிருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். தமிழகத்தில் கூட நாடார் இனம் இது போன்ற ஒரு முன்னெடுப்பைச் செய்து தான் தன் சமூக அந்தஸ்தை உறுதி செய்து கொண்டது என்றாலும், நாடார்களின் 'மகமைபண்டு' ஹலால் அளவிற்குக் கண்டிப்பானதோ, கட்டாயமானதோ, உக்கிரமானதோ, அசுர பலமானதோ அல்ல.. ஹலால் சரி, தப்பு என்கிற வாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இதை அவர்கள் இன்று ஒரு விருட்சமாய் வார்த்து எடுத்திருப்பதை தான் ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்.



கிட்டத்தட்ட 1500 வருடத்திற்கு முந்தைய கலாச்சாரத்தை, தன் புனிதநூல் சொல்லியிருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர்கள் பலர். ஆனால் மாறி வரும் உலகப் பொருளாதாரச் சூழலில், குரானை அட்சரம் பிசகாமல் அப்படியே பிடித்துக் கொண்டிருக்க முடியாது என அந்த ஸ்ட்ரிக்ட்டான இஸ்லாமியர்களே கொஞ்சம் வளைத்துக் கொண்டது இரண்டே இரண்டு விஷயங்களில் தான். ஒன்று பணம், இன்னொன்று ஹலால். மனித முகம் இருக்கும் எதுவும் இஸ்லாத்தில் ஹராம் என்றாலும், பணத்தில் காந்தி, ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃப்ரான்க்ளின் என இருக்கலாம், அதெல்லாம் ஹராம் ஆகாது. குரானை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தால் இன்று இஸ்லாமியர் ஒருத்தரும் கரன்ஸியைப் பாவிக்க முடியாது. அதே போல் குரான் காலத்தில் இல்லாத, குரானில் சொல்லப்படாத மருந்துகள், வெளிநாட்டு சுற்றுலா, மேக்-அப் சாதனங்கள், மீடியா, அவ்வளவு ஏன், அப்பார்ட்மெண்ட் வரை அனைத்தையும் ஹலால் என அடையாளப்படுத்தி காலத்திற்கு ஏற்றவாறு பிரித்தது. இந்த இரண்டு சமரசங்களால் தான் இஸ்லாம் ஒரு பொருளாதார சக்தியாக மாறியிருக்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அடிப்படைவாதத்தில் இருந்தும் வெளிவர உதவினால் மகிழ்ச்சி.



ஒரு சின்ன விண்ணப்பம். இந்த ஹலால் கலாச்சாரம் இத்தோடு நின்று கொண்டால் தேவலை. ஹலால் தெரு, ஹலால் காலனி, ஹலால் ஊர், தேசம், ஹலால் உத்தியோகம், ஹலால் கார், ஹலால் பள்ளி, ஹலால் தியேட்டர் என இன்னமும் விஸ்திகரித்துக் கொண்டே போகாமல் இருப்பது நலம். இல்லையென்றால் ஏற்கனவே கடந்த 10-15 ஆண்டுகளாக சமூகக் கட்டமைப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கும் இஸ்லாமியச் சமூகம், இன்னும் அதிகமாக விலகி தனித்து விடப்பட்டிருக்கும். இன்றைய நாகரிக யுகத்திற்கு அது எந்த வகையிலும் பயனற்றதாகவும் அச்சுறுத்தல் தருவதுமாகவே இருக்கும்.

கிறிஸ்தவ மதம், இந்து வாழ்க்கை முறை - பரதவர்கள்

Tuesday, May 30, 2023

தூத்துக்குடிப் பகுதியில் மீன்பிடிக்கும் தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள் (பரதவர்கள்) கொழும்பு நடை செல்லும் போது, மணப்பாடு எல்லை வந்ததும் “மச்சானுக்கு ஒரு காய்” என்றும், குமரியை நெருங்கும் போது “ஆத்தாவுக்கு ஒரு காய்” என்றும் வேண்டிக்கொண்டு தேங்காய் உடைக்கிறார்கள். கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் தேங்காய் உடைப்பது எப்படி வந்தது? இதில் இன்னொரு விசயம், அந்த மச்சானும் ஆத்தாவும் யார்? பல பரதவர்களுக்குமே இது தெரியாது. பாரம்பரியமாகத் தங்கள் முன்னோர்கள் செய்ததை இன்று வரை தொடந்து கொண்டிருக்கிறார்கள்.


மச்சான் என்பது பரத்தியான வள்ளியை மணந்த முருகனையும், ஆத்தா என்பது குமரிக்கடல் ஆத்தாவையும் குறிக்கிறது. ஒரே ஒரு தேவனான ஏசுகிறிஸ்துவைக் கும்பிடும் பரதவர்களுக்குக் கடலில் பாதுகாப்புக்கு எப்படி முருகனும் குமரியாத்தாவும் வந்தார்கள்!! சொல்கிறேன்.



பிரிட்டீஷாருடன் கடல் உரிமைக்காக நடந்த சண்டையில் பரதவர்களுக்குப் போர்த்துக்கீசியர்கள் உதவினர், ஆனால் ஒரு நிபந்தனையுடன். அதாவது அவர்களின் உதவிக்குப் பிரதியுபகாரமாக பரதவர்கள் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்பது தான் அது. அந்தச் சண்டையில் பரதவர்கள் வென்றனர், பிரிட்டீஷார் பின் வாங்கினார். முடிவில், மணப்பாடு போர்த்துக்கீசியர் கைகளில்; பரதவர்களுக்கு மீன் பிடிக்க இருந்தத் தடை விலகியது; சொன்னபடி அவர்களும் மதம் மாறினர். மதம் மாறிய பரதவர்கள் மேல் போர்த்துக்கீசியர்களுக்கு இன்னும் ஏனோ நம்பிக்கை வரவே இல்லை. இவர்கள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பிவிடுவார்களோ என்கிற பயம் இருந்துகொண்டே இருந்தது. அப்போது போர்த்துக்கீசியர்கள் இவர்களிடம் “நீங்கள் மிகப்பெரியதாக மதிக்கும் ஒருவர் மேல் சத்தியம் செய்து நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்குப் போக மாட்டோம் என உறுதி அளியுங்கள்” எனக் கேட்டிருக்கிறார்கள். அப்போது பரதவர்கள் எப்படி சத்தியம் செய்தார்கள் தெரியுமா? "குமரியாத்தாவின் மீது சத்தியமாக நாங்கள் கிறிஸ்தவர்கள் தான்" என!! 



பெரிய பெரிய மீன்கள் தங்கள் படகையோ தங்களையோ தாக்க வரும் போது இப்போதும் “குமரியாத்தா மேல் சத்தியமாகச் சொல்கிறேன் என்னால் உனக்கோ உன்னால் எனக்கோ எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்கிறார்கள். பரதவர்கள் கிறிஸ்தவத்தை மதமாக எடுத்துக்கொண்டார்கள், அதில் வீம்பாகவும் இருக்கிறார்கள். ஆனால் முருகனையும் குமரியாத்தாளையும் வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களையே அறியாமல் அதைக் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.


மதம் மாறுவதற்கு முன்பு வரை நிலத்தில் பரதவர்களின் ஆஸ்தான தெய்வம், தூத்துக்குடி பகுதியின் தாய் முத்தாரம்மன் தான். ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழாவில் பரதவர்கள் தான் அம்மனை சப்பரத்தில் தூக்கி வைப்பார்கள். மதம் மாறிய பின் அவளைப் பரதவர்கள் கண்டுகொள்ளவில்லை. 'ஏசுவைத் தவிர ஏனைய அனைத்தும் கற்சிலைகள் தான்' என மூளையில் ஏற்றப்பட்டுவிட்டதால் ஒவ்வொரு ஆண்டும் முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தேர்த்திருவிழாவிற்கு அவர்கள் வருவதை நிறுத்திவிட்டார்கள். அந்த ஆண்டு சப்பரத்தில் ஏற்றுவதற்காக முத்தாரம்மனைத் தூக்க ஊர் மக்கள் முயல்கிறார்கள். 10 பேர், 20 பேர், எத்தனை பேர் வந்தும் முடியவில்லை. பூசாரி சில சாங்கியங்கள் செய்தும் பலனில்லை. கடைசியில் ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பரதவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஒருவரும் கோவிலுக்கு வரச் சம்மதிக்கவில்லை.



கடைசியாக, அலேக் பிச்சை என்னும் பரதவர் மட்டும் வர ஒத்துக்கொண்டார். கோவிலில் வந்து அம்மனின் மேல் அவர் கை படுகிறது. ஆத்தா அப்படியே ஒரு பஞ்சு மூட்டை போல் துள்ளிவந்து சந்தோசமாகச் சப்பரத்தில் அமர்ந்து கொண்டாளாம். அலேக் பிச்சை கோவிலுக்குப் போனது தெரிந்ததும், “நீ எப்படி வேறு மதத்தைச் சேர்ந்த கடவுளைத் தொட்டு வணங்கலாம்?” எனக் கேள்வி கேட்டு கிறிஸ்தவர்கள் எல்லாம் அவரை ஊரை விட்டுத் தள்ளிவைத்தார்களாம்!!


என்ன ஒரு முரண் பார்த்தீர்களா??? யார் யாரைத் தள்ளி வைப்பது?!?!


- சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் பேச்சில் இருந்து.

ஜப்பான் பிரதமரைக் கொன்ற சர்ச்???

Wednesday, March 22, 2023

சில மாதங்களுக்கு முன் ஜப்பானிய முன்னாள் பிரதமர் Shinzo Abe சுட்டுக் கொல்லப்பட்டது சர்ச் ஃபாதரின் பாவமன்னிப்பு லீலைகள், யூ ட்யூப் மதனின் ஸ்டிங் ஆபரேஷன் எல்லாம் தாண்டி உங்கள் நினைவில் இருந்தால் அதிசயம் தான். அவருடைய கொலைக்கான காரணம் பற்றி படித்துப் போது 'டேய் நீங்க அங்கேயுமாடா?' என அதிர்ச்சியாய் இருந்தது. சரி, Shinzo Abe ஏன் கொல்லப்பட்டார்? யார் அவரைக் கொன்றது? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கிற்காக 55கோடி ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்!!


55 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை southern hemisphere, northern hemisphere எனப் பிரிக்கவில்லை. Gondwana & Laurasia எனப் பிரித்திருந்தார்கள். Gondwana நிலப்பரப்பில் தான் இன்றைய தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா எல்லாம் இருந்தன. பின் பூமிக்கடியில் இருக்கும் tectanic plates நகர்வுகளால் இந்த நிலப்பரப்புகள் எல்லாம் இன்றைய கண்டங்கள், கடல்கள், மலைகள், தீவுகளாயின. 



மனித இனம், Gondwana & Laurasia நிலப்பரப்புகள் நகர்ந்து இன்றைய நிலப்பரப்பு போல் மாறிய பிறகே உருவாகின என்றாலும், இன்றும் இந்த Gondwana பகுதி மக்களின் முக அமைப்பு ஒரே மாதிரி தான் இருக்கும். லத்தீன் அமெரிக்க நாட்டினர் எல்லாம் நம்மூர் ஆட்கள் மாதிரித் தான் இருப்பார்கள். அது மட்டுமல்ல இந்த Gondwana பகுதி மக்களின் வழிபாடும் ஒரே மாதிரியானது தான்; இயற்கை முதற்கொண்டு பல தெய்வங்களை வணங்குபவர்கள். நெருப்பு, மழை, பாம்பு, கோரமான முகம் கொண்ட சிலை என இவர்களுக்கு அனைத்துமே கடவுள் தான்.



இப்ப அப்படியே Laurasia பகுதியில் தோன்றிய மதங்களைப் பாருங்கள். ஓரிறைக் கொள்கை கொண்ட ஆபிரஹாமிய மதங்கள். ஓரிறைக் கொள்கை கொண்டவர்களுக்குத் தங்கள் மதத்தைப் பரப்புவது ஒரு தலையாயக் கடமை, அது அன்பினாலோ, வாள் முனையிலோ, ஏகாதிபத்தியம் மூலமோ. இந்த Gondwana லூசுகள் பல கடவுள்களைக் கும்பிடுவதால், அந்த ஓரிறையையும் தங்களின் ஒரு கடவுளாக ஏற்க ஆரம்பித்து, முடிவில் நெகிழ்வுத்தன்மை கொண்ட தங்கள் வழிபாட்டு முறையை விட்டுவிட்டு, வறட்டுத்தனமான அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றப்பட்டிருப்பார்கள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா எனப் பல கோடி உதாரணங்கள் உண்டு. இவர்களின் இந்த மதமாற்றும் வெறியால் பல கோடி உயிர்களும் பல லட்சம் கோடி வளங்களும் அழிந்தது தான் மிச்சம். Shinzo Abe அதில் ஒரு சிறு துரும்பு.



1920ல் கொரியாவில் Sun Myung Moon என்பவர் பிறக்கிறார். இவருடைய 15வது வயதில், "ஏசுபிரான் என் கனவில் தோன்றி, 'மகனே என்னால் முடிக்க முடியாத பல காரியங்களை நீ தான் முடிக்க வேண்டும் மொத்த மனித குலத்திற்கும் தகப்பனாக இருந்து" எனச் சொன்னதாக அறிவிக்கிறார். இந்த பல இறைக் கொள்கை கொண்ட கும்பல் தான் எவன் சாமியாராக வந்தாலும் ஏற்றுக்கொள்ளுமே? கொரியாவிலும் ஜப்பானிலும் இவரைப் பின்பற்றும் மக்கள் உருவாக ஆரம்பித்தார்கள். Unification Church என்கிற அமைப்பை உருவாக்குகிறார். இந்த UCன் முக்கிய வேலையே பணக்காரர்களையும் அதிகாரமிக்கவர்களையும் தங்கள் மதத்திற்கு மாற்றுவது. அப்படி முடியவில்லை என்றால், அட்லீஸ்ட் அவர்களுக்குக் காசு கொடுத்துத் தங்கள் மதத்தைப் பற்றி மேடைகளில் பேச வைப்பது. நம்மூரில் மார்க்கெட் போன நடிகர்கள், துணை நடிகைகள் ஜீவ சாட்சி சொல்கிறார்களே, அப்படி.



இது போன்ற influencers மூலமாக ஆள் பிடிக்கிறார்கள். ஆள் பிடித்தால் மட்டும் போதுமா? வருமானத்திற்கு வழி என்ன? "உங்கள் மூதாதையர்களோடு பேச வைக்கிறேன்", உங்களின் கஷ்டங்களைப் போக்க வைக்கிறேன், இந்த எண்ணிற்கு அழைக்கவும்" என விளம்பரப்படுத்துகிறார்கள். நம்பிய மக்களும் அந்த எண்ணிற்கு அழைத்தால் ஆரம்பநிலை வேண்டுதலுக்கே பல ஆயிரம் செலவு. ஆனால் அரசியல்வாதிகள், நடிகர்கள் எனப் பலரும் இந்த மதம் பற்றிய தங்கள் அனுபவங்களைப்(!!!) பேசுவதால் நம்பிப் பணம் கட்ட ஆரம்பித்தார்கள். UCன் கல்லா நிறைய ஆரம்பித்தது.



இந்த சர்ச்சில் தான் Shinzo Abeவின் தாத்தா ஒரு உறுப்பினராகச் சேர்கிறார். அப்போது அவர் ஜப்பான் பாராளுமன்ற உறுப்பினர். பின் Shinzo Abeவின் அப்பா ஜப்பானின் வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த காலத்தில் UC அவர்களின் LDP கட்சிக்காகப் பிரச்சாரமே செய்தது. இது Shinzo Abe பிரதமராக ஆகும் வரை தொடர்ந்தது. LDP கட்சியின் உறுப்பினர்கள், ஜப்பானிய அரசியல் தலைவர்கள் எனப் பலரையும் UCயின் தலைமையகத்துக்கு அனுப்பி "இறையியல்" பற்றிப் பாடம் படிக்க வைத்தார். அவர்களுக்குத் தேவ சாட்சியம் அளிக்க வைத்தார். அரசாங்கத்திற்குள் இந்த UCன் மூக்கு அதிகமாகவே நுழைந்தது. 



இந்த 70 ஆண்டுகளில் UCயை நம்பிப் பல மக்கள் தங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள். இவர்கள் வீடு புகுந்து, "உங்கள் கொள்ளுப்பாட்டியின் ஆத்துமா உங்களிடம் பேசத்துடிக்கிறது. குடும்ப ரகசியம் உள்ளதாம்" என ஆரம்பித்து, கொள்ளுப்பாட்டியிடம் பேச லட்சக்கணக்கில் கொள்ளையடித்தால் தெருவிற்கு வராமல் தேவலோகமா போவார்கள்? வீட்டில் கெட்ட ஆவிகளை (ஜப்பானியக் கடவுள்) ஓட்டுகிறோம் எனச் சொல்லி, அலங்காரப் பானைகள் & பொம்மைகளை ஆயிரக்கணக்கில் விற்றார்கள். 1980களிலேயே இந்த UC ஜப்பானின் மிகப்பெரிய nuisance என பொதுமக்களும் வக்கீல்களும் அங்கங்கு போராட்டம், வழக்கு என ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. படிப்படியாக வளர்ந்த UCயிடம் இப்போது கிட்டத்தட்ட 1.24லட்சம் கோடி சொத்து உள்ளது!! அதில் 70% ஜப்பானில் மட்டும்.


இந்த UCயில் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்டு, தன் சொத்து அனைத்தையும் தேவனுக்காக அழித்தார் ஒரு பெண்மணி. அவருடைய குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. குழந்தைகளின் எதிர்காலம் நாசமாய் போனது. அவருடைய பையன், தன் குடும்பம் அழியக் காரணமாய் இருந்த UC மேல் உருவான கோபத்தை, அது ஜப்பானில் வளர முக்கிய காரணமாக இருந்த Shinzo Abe மீது துப்பாக்கி குண்டு வழியே காட்டினான். அவர் செத்தார். இவன் ஜெயிலில். ஆனால் இது எதையுமே கண்டுகொள்ளாதது போல் UC எப்போதும் போல் "இறை சேவை" செய்து வருகிறது.


ஆனாலும் Abeவின் இறப்பு ஜப்பான் முழுவதும் UC மேல் மிகப்பெரிய வெறுப்பையும் அதன் செயல்பாடுகள் மீதான விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இருந்தாலும் அதெல்லாமே too late than. ஏனென்றால்,


ஜப்பானில் கட்டற்ற மத சுதந்திரம் உண்டு. இங்கு நீங்கள் ஒரு Shintoவாக (புத்த மதப்பிரிவு) இருந்து கொண்டே non religious/secular என்றும் சொல்லிக்கொள்ளலாம். பல பெரும்பான்மை புத்த மதத்தினரும் பெருமையாகத் தங்களை secular என அழைத்துக் கொள்கிறார்கள். சமீப நாட்களாக அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுவது, மேற்கத்திய பாணியில் திருமணம் செய்து கொள்வது எனப் பல விஷயங்களும் UC போன்ற அமைப்பினரால் "மதச்சார்பற்ற" சடங்குகளாக, திருவிழாக்களாக அந்த மக்களின் மீது திணிக்கப்படுகிறது. அது ஒரு ஃபேஷனாகவும் மாறி வருகிறது. ஜப்பானிய இளைஞர்கள் தங்கள் சடங்குகளை விட இந்த மதச்சார்பற்றச் சடங்குகளையே விரும்புகிறார்கள். ஒரு Shinzo Abe போனால் என்ன, மதத்தை எந்த வழியிலும் திணிக்கப் பல Abeக்களை அவர்களால் உருவாக்க முடியும் என UC நிரூபிக்கிறது. ரெக்கார்ட் படி ஜப்பானில் 1.5% - 2% தான் கிறிஸ்தவர்கள். ஆனால் நிஜத்தில் இதை விடப் பல மடங்கு இருக்கலாம் என்கிறார்கள். நான் முதல் பத்தியில் சொன்ன "டேய் நீங்க அங்கேயுமாடா?" என்பதன் அர்த்தம் இப்போது விளங்கியிருக்கும் உங்களுக்கு. 


கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள். கார்ப்பரேட்டுகளுக்கெல்லாம் அப்பன் தான் இந்த மதமாற்ற கும்பல். கடவுள் என்னும் தங்கள் காஸ்ட்லி பொருளை விற்க, கல்லா கட்ட அவர்கள் யாரையும் அழிக்கத் துணிவார்கள், எந்த கலாசாரத்தையும் கேவலப்படுத்துவார்கள், எத்தனைக் குடும்பஙகளையும் சீரழிப்பார்கள். தங்களுடைய சரக்கு விற்றால் சரி அவர்களுக்கு.


பல இறைக்கொள்கை கொண்ட Gondwanaவில் ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அடுத்த பலி ஜப்பானாகத் தான் இருக்கும் என்றால் அதை யாரால் மாற்ற முடியும்? அதன் பின் மிச்சம் இருப்பது "இந்தியா".

காவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா? நாங்களும் இருக்கிறோம்..

Saturday, January 9, 2016

இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசும் யாரும் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் தீவிரவாதத்தைக் கண்டுகொள்வதேயில்லை.. காரணம், முதல் இருவரின் தீவிரவாதம் வன்முறைகளால், துவேஷப் பேச்சுக்களால் நிரைந்தவை, குழு மனப்பான்மை கொண்டவை.. அதனால் எளிதாக வெளியில் தெரிந்துவிடும்.. ஆனால் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் டெக்னிக்கே வேறு.. அவர்களின் டார்கெட் ஒவ்வொரு தனி மனிதன் அல்லது ஒவ்வொரு சிறு குடும்பம்.. கும்பலாக உங்களை நெருங்க மாட்டார்கள், தங்களுக்கென்று இருக்கும் மதமாற்ற மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ் மூலம் அணுகுவார்கள்..

அன்பு, பாசம், பணம், வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கருணைப் பேச்சு என்கிற கேக்கிற்குள் தங்கள் தீவிரவாதக் குண்டை ஒளித்து வைத்து, அந்தத் தனி மனிதனுக்கோ, சிறு குடும்பத்திற்கோ ஊட்டுவார்கள்.. கேக்கிற்கு அலைபவன் அந்த குண்டையும் உட்கொண்டே ஆகவேண்டும்.. நாமே கூட அவர்களின் இது மாதிரியான அணுகுமுறைகளை பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களிலோ, பக்கத்து வீட்டுக்காரர் மூலமோ, உடன் வேலை செய்பவர் மூலமோ அடிக்கடி அனுபவப்பட்டுக் கொண்டிருப்போம்.. ஒரு மாதிரியான கண்மூடித்தனமான அமைதியான வெறித்தனம் இவர்களிடம் இருக்கும்.. தூண்டிலில் வேலையாய்ப்பு, படிப்பு என்கிற புழுவை மாட்டி நம்மிடம் நீட்டி, நம் வாழ்க்கையையே நிம்மதியில்லாமல் ஆக்கிவிடுவார்கள்.. சமீபத்தில் உ.பி.யில் நடந்த ஒரு சம்பவமும் அப்படித்தான்..

டெல்லியின் ஒரு ஆஸ்பத்திரியில் தன் மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு சோகமாக இருந்தப் பெண்மணியிடம், அந்த ஆள் வருகிறார்.. பார்த்தாலே தெரியும் அமைதியும் அன்பும் குடிகொண்டிருக்கும் முகம் என்று.. கருணைப் பார்வையுடன் அந்தப் பெண்ணைப் பார்த்து, ’உங்கள் பிள்ளைகளை என்னிடம் கொடுங்கள்.. அவர்களின் படிப்பு, சாப்பாடு, தங்குமிடம், உடை, ஆரோக்கியம் என அனைத்தையும் என்னுடைய ”இமானுவேல் சேவா குரூப்” பார்த்துக்கொள்ளும்.. அவர்கள் மூவரையும் ஐஏஎஸ் ஆக்காமல் விட மாட்டேன்.. உங்கள் வாழ்வின் முன்னேற்றம் மட்டுமே என் ஒரே குறிக்கோள்.. ஆனால் எனக்காக நீங்களும் உங்கள் கணவரும் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய வேண்டும்’ எனக்கூறி அவர்கள் கைகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் துண்டுப் பிரசுரங்களையும் பைபிள் வாசகங்களையும்  கொடுத்திருக்கிறார்..

‘இதை மக்கள் கூடும் இடங்களான தியேட்டர், கோவில், ரயில் நிலையங்களில் விநியோகியுங்கள்.. நீங்கள் விநியோகிக்கும் ஒவ்வொரு தாளும் உங்கள் பிள்ளைகளை ஐஏஎஸ் ஆக்குவதற்கான கருவிகள்’..

இவர்களும் தேவாதி தேவனின் துண்டுப் பிரசுரங்களை ஊர் முழுக்க விநியோகித்திருக்கிறார்கள், “தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாக”.. வேலை முடித்துத் தங்கள் பிள்ளைகளைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அங்கேயோ பிள்ளைகளைப் பார்க்க விடவில்லை.. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பார்க்க முடியுமாம்.. ஆம், பின்னே ஐஏஎஸ் ஆவது என்றால் சும்மாவா? மாய்ந்து மாய்ந்து படிக்க வேண்டாமா? முடவனை நடக்க வைக்கும் கூட்டம், குருடனைப் பார்க்க வைக்கும் கூட்டம், ஊமையைப் பேச வைக்கும் கூட்டம் ஏன் ஐஏஎஸ் ஆக்குவதற்கு மட்டும் அம்மா அப்பாவைக் கூட பார்க்கவிடாமல் படிக்கச் சொல்கிறது எனத் தெரியவில்லை.. ஜெபித்தே கலெக்டர் ஆக்கிவிட முடியாதோ? சரி விசயத்திற்கு வருவோம்..

அந்தப் பெற்றோர்களும் 15 நாட்களுக்கு ஒரு முறை தங்கள் பிள்ளைகளைப் பார்த்து வந்திருக்கிறார்கள்.. இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.. தங்கள் வாழ்விலும், பிள்ளைகளின் படிப்பிலும் எந்த மாற்றமும் இல்லையென்பது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தண்டனைகளைத் தாங்க முடியவில்லை என்றும் அடி, உதை படுவதாகவும் புலம்பி அழுதிருக்கிறார்கள்.. நம் கருணையே வடிவான ஆசாமியிடம் பெற்றோர்கள் இதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நேக்காகப் பேசி பெற்றோர்களை இன்னொரு 15 நாட்கள் தேவ ஊழியம் செய்ய அனுப்பிவிட்டார்.. ஊழியத்தை முடித்து வந்தப் பெற்றோர்களுக்கு இந்த முறை பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.. எவ்வளவு சண்டை போட்டும் கெஞ்சியும் கடைசி வரைப் பிள்ளைகளைக் கண்ணில் காட்டவில்லை.. “நீ எங்கேயும் போயிக்கோ, பிள்ளைகளைத் தர முடியாது” என்றிருக்கிறார்கள்..

என்ன செய்வது என்றறியாத பெற்றோர் கடைசியில் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.. போலீசார் அந்த இம்மானுவேல் சேவா குரூப்பை சோதனை செய்த போது தான் பல விசயங்கள் அம்பலம் ஆகியுள்ளன.. அங்கு இந்த மூன்று குழந்தைகள் மட்டுமல்லாது, மொத்தம் 23 பேர் இருந்திருக்கிறார்கள்.. அனைவரும் அறைகளில் அடைக்கப் பட்டு மெலிந்து போய், சோகை பிடித்த மாதிரி இருந்திருக்கிறார்கள்.. அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் சொன்னதையெல்லாம் கேளுங்கள்..

”அங்கு எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரே விசயம் பைபிள், பைபிள், பைபிள் மட்டும் தான்.. தினமும் அதை நாங்கள் படித்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். தவறாகச் சொன்னால் அடி விழும், பட்டினி போடுவார்கள்.. இரண்டு, மூன்று நாட்கள் கூட பட்டினி இருந்திருக்கிறோம்.. எருமைக் கறி திங்கச் சொல்லியும் எங்களை வற்புறுத்தினார்கள்.. திங்காவதர்களைக் கயிற்றில் தொங்க விட்டு அடித்தார்கள்..”

“தினமும் அழுக்கான கிழிந்த ஆடைகள் மட்டுமே உடுத்தியிருப்போம்.. எப்போதாவது தான் எங்களுக்குப் புதுத் துணி கொடுப்பார்கள். அன்று எங்களைப் பார்க்க வெளி ஆட்கள் யாரோ வருகிறார்கள் என அர்த்தம்.. அவர்கள் எங்களுக்கு மிட்டாய்கள் எல்லாம் கொடுப்பார்கள்.. நாங்கள் வரிசையாக நின்று அவர்களிடம் பைபிள் வசனத்தைச் சொல்ல வேண்டும்.. அவர்கள் சென்றதும் தப்பாக பைபிள் வசனம் சொன்னவர்களுக்கு பிரம்பாலும் பெல்ட்டாலும் அடிவிழும்.. எங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், மிட்டாய்கள், புதுத்துணிமணிகள் என அனைத்தும் பிடுங்கப்பட்டு, மீண்டும் அதே கிழிந்த ஆடைகள் கொடுக்கப்படும்.. ”

”எங்களது பெயர்கள் அனைத்தும் கிறிஸ்தவப் பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன.. எல்லோரும் புதுப்பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும்.. பழைய பெயரைச் சொல்லி அழைத்தாலும் தண்டனை கிடைக்கும். எங்கள் பெற்றவர்களைப் பார்க்கவே முடியாது.. எப்போதாவது பார்த்தாலும் கொஞ்ச நேரம் மட்டும் தான்”

இப்போது இந்தப் பிள்ளைகள் எல்லாம் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்த இம்மானுவேல் சேவா குரூப்பின் தலைவர் தேவ்ராஜ் மேல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.. அவனிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்டால், “ரெய்டு நடந்தது உண்மை.. மற்றதைப் பிறகு சொல்கிறேன்” என்கிறான்.. பிறகு என்றால் எப்போது? வெளிநாட்டுப் பணம் பல்க்காக வந்து இந்தக் கேஸே ஒன்றும் இல்லாமல் ஆன பிறகா? அல்லது சிறுபான்மையினர் உரிமை என்று எவனாவது சில்லறை அரசியல்வாதியும், விபச்சார மீடியாவும் மைக்கைக் கடித்துக் குதறிய பிறகா?

ஆர்.சி கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் இது மாதிரியான அசிங்கங்களில் ஈடுபடுவதில்லை.. ப்ரொடெஸ்டெண்ட், பெந்தெகொஸ்தே சபையினரின் ஆட்டமும் தனிநபர் வன்முறையும் தான் இதில் அதிகம்.. புதிதாக மதம் மாறும் ஒவ்வொருவரும் பிரமானம் எடுத்துக்கொள்கிறார்களாம், ‘நான் என் வாழ்நாளில் அட்லீஸ்ட் ஒருத்தரையாவது கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவேன்’ என்று.. என்னங்கடா இது, ஏதோ சேல்ஸ் மேனேஜர் அவருக்குக் கீழ் இருக்கும் ரெப்புகளுக்கெல்லாம் டார்கெட் கொடுப்பது மாதிரி கொடுக்குறீங்க? அந்தப் பிரமானத்தை எடுத்துக்கொண்ட சைக்கோக்கள் நம்மை பேருந்து, கோயில், சிக்னல், ரயில் நிலையம் என எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.. நித்திய சந்தோசம், தேவனின் சுவிசேஷம், என தமிழும் சமஸ்கிருதமும் கலந்து ஒரு மாதிரி கண்றாவியாகப் பேசிக் கடுப்பேற்றுகிறார்கள்.. அதிமுகவினருக்கு முன்பே ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் கடவுளைப் பிரமோட் செய்தவர்களும் இந்தக் கும்பல் தானே? நவீன கட்டணக் கழிப்பறையில் கூட, “இயேசுவே உண்மையான கடவுள்”ன்னு ஒட்டியிருக்காய்ங்க.. அடேய் அதச் சொல்றதுக்கு வேற இடமாடா இல்ல? 

சிறுபான்மையினர் உரிமை என்கிற பெயரில் எளிதாக ட்ரஸ்ட், பள்ளியெல்லாம் ஆரம்பித்துவிட்டு, இது போன்ற பைபிள் வசன வகுப்புகளும், மதமாற்ற நடவடிக்கைகளும் தான் பல இடங்களிலும் நடந்து வருகின்றன.. கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு இவர்களின் அணுகுமுறை நன்றாகத் தெரியும்.. வெளியுலக அசிங்கமே தெரியாமல், நான்கு வயதில் இவர்கள் பள்ளியில் சேரும் குழைந்தைகளுக்கு அப்போதிருந்தே மதவெறியையும் மத துவேஷத்தையும் ஊட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.. பிற மதக் கடவுள்கள் எல்லாம் சாத்தானாகவே காட்டப்படுகின்றன இவர்களின் பள்ளிகளில்.. இதற்கெல்லாம் சிறுபான்மையினர் உரிமை என ஆதரவு வேறு.. ஒரு நாட்டில் நடக்கும் எந்த ஒரு வன்முறைக்கும் அநீதிக்கும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஆதரவுக்கரம் நீட்டப்படும் ஒவ்வொரு முறையும், அந்தக் கரத்தைக் கருணையே இல்லாமல் வெட்ட வேண்டும்.. அப்போது தான் வன்முறை செய்பவனுக்குப் பயம் வரும், தப்பு செய்தால் தன் ஜாதியும், மதமும் காப்பாற்றாது என்று.. 

அசிங்கமாகப் பேசுவது, கையை வெட்டுவது, காலை வெட்டுவது, கொலை செய்வது மட்டுமே வன்முறை அல்ல.. உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனதில் அன்பு என்கிற போர்வையில் பிறரைப் பற்றிய துவேஷத்தை விதைப்பதும் கூட வன்முறை தான்.. அதைத் தான் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள்.. ஒரு தீவிரவாதக் கும்பலை அதன் தலைவனைப் பிடித்தால் அழித்து விடலாம்.. அட்லீஸ்ட் செயலற்றதாகவாவது ஆக்கிவிடலாம்.. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனையும் மூளைச்சலவை செய்து, மதத்தைப் பரப்புவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் அந்த உ.பி. இம்மானுவேல் ட்ரஸ்ட் மாதிரி ஆட்களை எப்படிக் கண்டுபிடிப்பது? மதம் மாற்றுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ”நம்பிக்கைத் தீவிரவாதிகளாக” ஆளுக்கு ஒரு பக்கம் சென்று, தங்களைப் போலவே இன்னொருவரையும் ”நம்பிக்கைத் தீவிரவாதியாக” மாற்றுவதான் இவர்களின் ஒரே குறிக்கோள்..

தலைவன் என்று யாரும் இல்லாமல், மதத்தைப் பரப்புவதை ஒரு வியாபாரமாகவும், தங்கள் கடவுளை சோப்புக்கட்டி போன்ற ஒரு பொருளாகவும் பாவித்து, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி விற்று, இவர்கள் அப்படி என்னத்தைத் தான் சாதிக்கப் போகிறார்கள்? ஊர் ஊராக எவன் வீட்டில் இழவு விழும், எவன் வீட்டில் கஷ்டம் நடக்கும், எவன் வீட்டில் நோய் வரும் எனக் காத்துக்கொண்டிருக்கும் இந்தக் கும்பல் நிஜமாகவே தங்கள் மதம் போதித்தக் கருத்து என்னவென்று ஒரு நாளாவது சிந்தித்திருக்குமா? பிறரின் கஷ்டத்தை மூலதனமாக்கிப் பிழைப்பை நடத்தும் நம்மை, நாம் வணங்கும் தேவன் என்ன செய்வார் என்கிற பயமாவது இருக்குமா? நிச்சயம் இருக்காது.. ஏனென்றால் மனம் முழுவதும் மழுங்கடிப்பட்டிருக்கும்.. இவர்களின் ஒரே குறிக்கோள் உலகமே கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும்.. அப்படி மாறிவிட்டால், பாவிகளே இருக்க மாட்டார்களாம்

இதே கிறிஸ்துவத்தைப் பின்பற்றும் எத்தனைப் பாவிகள், உலகையே போர்க்களமாக மாற்றும் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் எல்லாம் இருக்கிறார்கள்? அந்தப் பாவிகளை எல்லாம் எப்படி அழைப்பது? ஒரு வேளை கிறிஸ்தவராக இருப்பதால் அவர்கள் என்ன பாவம் செய்தாலும் அவையெல்லாம் கழுவப்பட்டுவிடுமா? இயேசுநாதர் சிலுவையில் அறையப்படும் போது, தன் இரத்தத்தால் பாவிகளின் பாவங்களைக் கழுவும் போது, ”இது கிறிஸ்தவர்களுக்கான ஸ்பெசல் ரத்தம், மற்றவர்களின் பாவம் கழுவப்படாது” என்று சொல்லவில்லையே? உலகின் அத்தனை ஜீவராசிகளின் பாவங்களையும் தான் கழுவினார்.. பின் நீங்கள் மட்டும் ஏனய்யா கிறிஸ்தவனாக மாறினால் மட்டுமே பாவங்கள் கழுவப்படும் என்கிறீர்கள்? அவர் மரித்த அன்றே உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அனைவரும் பரிசுத்தமானவர்களாக மாற்றப்பட்டு இருக்க வேண்டுமே? ஆனால் அதற்குப் பின்னும் பாவிகளால் தான் இந்த உலகம் சூழப்பட்டு இருக்கிறது என்றால், அது இயேசுநாதரின் தப்பு அல்ல.. அவரின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஆட்களின் தப்பு மட்டுமே.. 

உ.பி.யில் நடந்த இந்த வன்முறை பற்றி ஏதாவது மீடியா வாய் திறக்குமா என்று நானும் பார்த்தேன், ஒரு குஞ்சும் கண்டுகொள்ளவில்லை.. தந்தி டிவியில் மட்டும் காலையில் மேம்போக்காகச் சொன்னார்கள்.. “இம்மானுவேல் சேவா குரூப்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த 23 பிள்ளைகள் மீட்கப்பட்டார்கள்.. அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன” என்று மட்டும்.. கிறிஸ்தவ மதமாற்றம் பற்றியோ, வன்முறை பற்றியோ துளியும் குறிப்பிடப்படவில்லை.. இதுவே ஒரு இந்து அமைப்போ இஸ்லாமிய அமைப்போ செய்திருந்தால்? சரி மீடியாவை விடுங்கள் அவர்களின் பிழைப்பே கேடு கெட்ட பிழைப்பு தான்.. இந்த கிறிஸ்தவர்கள்? இந்துத்துவாவைப் பிடித்துத் தொங்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரை எதிர்க்கும் இந்துக்கள் உண்டு.. இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை எதிர்க்கும் இஸ்லாமியர்களும் உண்டு.. ஆனால் இது போல் ஊழியம் என்கிற பெயரில் உளவியல் வன்முறைகளை நிகழ்த்தும் ஆட்களை எந்தக் கிறிஸ்தவரும் இதுவரை எதிர்த்து நான் பார்த்ததில்லை.. அது போன்ற ஆட்கள் உங்கள் மதத்தின் மதிப்பைக் குறைக்கிறார்கள், உண்மையான சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களையும் தவறாகப் பார்க்க வைக்கிறார்கள் என்பதை உணருங்கள்.. ’அல்லேலூயா கோஷ்டி’ என்கிற கிண்டலுக்கு கிறிஸ்தவர்களைக் கொண்டு சென்றதும் அவர்களே..

சக மனிதனைத் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தாலே போதும், கடவுள் நமக்குத் துணை இருப்பார்.. அதனால் தயவு மதத்தை விற்காதீர்கள், கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தாதீர்கள், அப்படிப்பட்ட ஆட்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.. ஆனால் அந்த மதம் சொன்னதை வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.. அதுவே போதும்.. 

இவ்விடம் கடவுள் விற்கப்படும்...

Wednesday, September 17, 2014

இந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி ஆகிவிடும் என்பதாலும் நேரடியாக விசயத்துக்கு வந்துவிடுகிறேன்..


மேலே இருக்கும் இந்த கிறிஸ்தவ மத சம்பந்தப்பட்ட பேனரை சமீபத்தில் புதுக்கோட்டையில் பார்த்தேன்.. இது போல் இப்போது ஊர் முழுவதும் பார்க்க முடிகிறது என்றாலும் இது ஒரு சாம்பிள்.. இந்த பேனரைப் பார்த்ததும் என் மனதில் சில கேள்விகள் எழுந்தன.. அவை,

1. யாருக்கிட்ட இருந்து யாருக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப்போறீங்க?

2. ஒருவரின் பெயரை பெரியதாக 'ஆனந்தன் ஐயங்கார்' என்று போட்டு, அதற்கு கீழே ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தலைமை தீட்ஷர் மகன்” என்று போட்டிருக்கிறீர்களே? அதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்கள் கடவுளைப் பற்றிப் பேச மீனாட்சி அம்மன் கோயிலின் தீட்சிதர் பையனாக இருப்பது தான் பெரிய தகுதியா? 

3. வலது பக்கம் மேலே ஒரு டப்பாவில் சிறியதாக சிறப்பு சாட்சி என்று ஒரு பெண்ணின் பெயரைப் போட்டு, அதற்குக் கீழே “நரிக்குறவர் இனத்திலிருந்து ஒரு ஜீவனுள்ள சாட்சி” என்று அதை விடச் சிறியதாகப் போட்டிருக்கிறீர்கள்.. ஏன்யா ஜாதி வித்தியாசமே இல்லைன்னு சொல்லித்தான் மதமே மாத்துறீங்க.. ஆனா உங்க பேனர்லயே ஜாதி வித்தியாசம் பாத்துத் தான் பெயரை பெரியதாகவோ சிறியதாகவோ போடுகிறீர்கள்.. ஐயங்கார்னா பெருசு, நரிக்குறவர்னா இளப்பமா? இது தான் உங்கள் ஜாதி பேதம் இல்லாத மதமா?

4. சரி அது கூடப் பரவாயில்லை, அதென்ன ஜீவனுள்ள சாட்சி? அப்ப மேடையில் தேவன் மேல் உண்மையான நம்பிக்கையுடன் கண்ணீரோடு பேசும் மற்றவர்கள் எல்லாம் ஜீவனில்லாத போலி சாட்சிகளா?

என் மனதில் தோன்றிய இந்தக் கேள்விகளை ஃபேஸ்புக்கில் கேட்டேன்.. ஃபேஸ்புக்கில் மாய்ந்து மாய்ந்து மதத்தைப் பரப்பும் ஒரு கிறிஸ்தவர் கூட முழுமையாகப் பதில் சொல்லவில்லை.. ஒரு சிலர் வந்து “நீயெல்லாம் தீர்ப்பு நாளில் நல்லா அனுபவிப்படா” என்று சாபமெல்லாம் விட்டார்கள்.. இன்னும் சிலரோ அந்த ஆனந்தன் ஐயங்கார் என்பவர் முக்கியப் பேச்சாளராக இருப்பதால் அவர் பெயர் பெரியதாகவும், குறவர் இனத்தைச் சார்ந்த பிரேமா என்பவரின் பெயர் சிறியதாகவும் இருப்பதாகச் சொன்னார்கள்.. ஆனால் என் கேள்விகளுக்கு ஒருவரும் நேரடியாகப் பதில் சொல்லவேயில்லை.. ஜாதியே இல்லை என்று கூறி மதம் மாற்றுபவர்கள் ஏன் தங்கள் பேனரில் ஜாதியைக் குறிப்பிட வேண்டும்?

நான் ஃபேஸ்புக்கில் அந்த ஃபோட்டோவைப் பதிந்த போது கூட பலரும், “மீனாட்சி அம்மன் கோயிலில் ஏது தீட்சிதர்? அங்கு இருப்பது பட்டர் தானே? தீட்சிதர் என்றால் சிதம்பரத்தில் இருப்பவர் தான்.. அதுவும் போக இங்கு ஐயங்கார் என்று போட்டிருக்கிறதே? தீட்சிதர் என்னும் சைவ சமய ஆள் எப்படி ஐயங்கார் என்னும் வைணவராக இருக்க முடியும்?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருந்தார்கள்.. “இப்படி இந்து மதத்தைப் பற்றி ஒன்று கூடத்தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக மதம் மாற்ற எண்ணுகிறார்கள்” என்றெல்லாம் கோபப்பட்டார்கள்.. அவர்களுக்கு என் பதில் இது தான்.. 

ஐயா, அவங்களுக்கு தீட்சிதர், பட்டர், ஐயங்கார் பேதம் எல்லாம் தேவையில்லை.. இந்து மதத்தில் உயர்வானவர்களாக பிராமணர்கள் தான் கருதப்படுகிறார்கள்.. அவர் ஐயரோ, ஐயங்காரோ, தீட்சிதரோ, பட்டரோ, சாஸ்திரியோ - பெரும்பாலான இந்துக்களைப் பொறுத்தவரை கோயிலின் கருவறையில் தீபாராதனை காட்டுபவர் ஐயர் தான்.. பெருமாள் கோயிலில் தீபாராதனைக் காட்டினாலும் அவரை ஐயர் என்று தான் அழைக்கிறோம்.. ஒரு மதத்தின் உயர்வான நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ஒருவர், அந்த மதத்தை விட்டுவிட்டு தங்கள் மதத்துக்கு மாறிவிட்டதைப் பெருமையாகக் கூறி, “பார் உங்கள் மதத்தில் பெரிய ஆளாக நீ நினைக்கும் ஐயரே மாறிவிட்டார், நீ எப்போது மாறப்போகிறாய்?” என்று மறைமுகமாகக் கேட்பது தான் அது.. அந்த பேனரைப் பார்க்கும் பாமரனுக்கு ”மீனாட்சி அம்மன் கோயிலில் ஏதுடா தீட்சிதர் அதுவும் ஐயங்கார் தீட்சிதர்?” என்கிற கேள்வி எல்லாம் தோன்றாது.. “என்னது ஒரு ஐயரே மதம் மாறிட்டாரா?” என்கிற ஆச்சரியம் தான் தோன்றும்.. அந்த ஆச்சரியம் தான் மதம் மாற்ற நினைப்பவர்களின் முதல் வெற்றி..

எனக்கு ஒரு சந்தேகம்.. ஒரு காலத்தில் ஜாதியின் பெயரால் சீரழிந்து போயிருந்த இந்து மதத்தில், கீழ் நிலையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை, “நீ கர்த்தரைத் துதி.. எங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடெல்லாம் கிடையாது” என்று ஏமாற்றி மாரியம்மாள் கோயிலில் தீ மிதித்தவனை மேரியம்மாள் கோயிலில் சப்பரம் இழுக்க வைத்தார்கள்.. கோயில் தேரின் வடத்தில் தன் கை பட்டாலே தீட்டு என்று இத்தனை நாளாக ஒதுக்கப்பட்டு வந்த அவனுக்கு மாதா கோயில் சப்பரத்தை இழுக்கும் போது ஒரு நம்பிக்கை கிடைத்தது.. ஆனால் அதே சர்ச்சில் ஒரு கீற்றுக்கொட்டகை மூலம் அவன் உட்காரும் பகுதியை தனியாகப் பிரித்த போது அவன் நம்பிக்கை தவிடு பொடியாக ஆரம்பித்தது.. பின் அவன் தனக்கென்று தனி சர்ச்சை கட்டிக்கொண்டான் என்பது வேறு விசயம்.. ஆனால் மதம் விட்டு மதம் சென்றாலும் அவன் இழிவாகத் தான் பார்க்கப்படுகிறான்.. ஆனால் என்ன செய்வது? இரண்டு மூன்று தலைமுறைகளாக அவன் இந்தக்கடவுளைத் தானே கும்பிடுகிறான்? இப்போது கிட்டத்தட்ட அவன் சார்ந்த ஜாதியில் பாதி பேரை தங்கள் மதத்திற்கு மாற்றிவிட்டார்கள்.. அடுத்து தான் அதிர்ச்சி ஆரம்பித்தது..

இப்போது அவனின் இழிநிலைக்குக் காரணமானவர்களாகக் கருதப்படும் அந்த மேல் வர்க்கத்தை மதம் மாற்றத் தொடங்குகிறார்கள்.. அதாவது கீழ் நிலையில் இருப்பவனிடம் ஒரு காலத்தில் ’எங்கள் மதத்தில் ஜாதி பேதம் இல்லை’ என்று சொன்ன அதே வாய், இன்று மேல் சாதிகளை மதம் மாற்றும் போது, அவர்களின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு பெருமையாய்ச் சொல்லி பூரிப்படைந்து கொள்கிறது போஸ்டரிலும் ஃப்ளெக்ஸ் பேனர்களிலும்.. சாதியால் அவமானப்பட்ட அந்த தாழ்த்தப்பட்டவன் ”ங்யே” என்று இதையெல்லாம் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறான்.. அங்கும் ஒரு பிராமன அசோசியேசன் ஆரம்பிக்கப்படுகிறது.. இந்துப் பள்ளராக இருந்தவர், இப்போது கிறிஸ்தவப் பள்ளராக இருக்கிறார்.. வேறு பெரிய வித்தியாசம் இல்லை.. இந்து ஐயராக இருந்தவர், கிறிஸ்தவ ஐயராக ப்ரொமோசன் ஆகிறார்.. 

நானும் கூட தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் தான் இந்த மாதிரி சாதிப்பாகுபாடு எல்லாம் இருக்கிறது, அதனால் தான் கிறிஸ்தவத்தில் அதைத் தடுக்க முடியவில்லை என நினைத்துக்கொண்டிருந்தேன்.. ஆனால் இதே இந்தியாவில் இருக்கும் இஸ்லாத்தில் சாதிப்பாகுபாடு துளியும் இல்லையே? அவர்களால் முடியும் போது ஏன் இவர்களால் முடியவில்லை? காரணம் பைபிளிலேயே ஒரு கதை வருகிறது, அது இதற்கான பதிலைக் கொடுக்கும்.. அதாவது ஏசுநாதர் தன் சீடர்களுடன் ஒரு ஊர் வழியாக உபதேசம் செய்து கொண்டே செல்கிறார்.. அப்போது ஒரு கானானியப்பெண் (கீழ்சாதிப்பெண்), அவரிடம் வந்து, “தேவனே என் மகள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறாள். அவளை ஆசிர்வதிக்க எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்கிறாள்.. உடனே தேவன் சொல்கிறார், “எஜமானர்கள் சாப்பிடுவதற்காகத் தயார் செய்யப்பட்ட உணவை நாய்க்குட்டிகளுக்குத் தர முடியாது” என்று.. அதாவது மேல் ஜாதி எஜமானர்களுக்கான உணவு போன்றது தான் இவரின் போதனை மற்றும் ஆசிர்வாதம் என்றும், அது கீழ் ஜாதி நாய்களுக்கு கிடைக்காது என்றும் கூறுகிறார்.. இதைப் பின்பற்றி வருபவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுவதில் ஆச்சரியம் என்ன இருக்கப்போகிறது? கீழ்சாதி மக்களை லாபத்திற்காக தங்கள் மதத்திற்கு மாற்றிவிட்டு, பின் நாய் போலத்தானே நடத்துகிறார்கள்? எந்த கிறிஸ்தவப் பறையரும் கிறிஸ்தவ பிள்ளையோடோ, எந்த கிறிஸ்தவப் பள்ளரும் கிறிஸ்தவ நாடாரோடோ சம்பந்தம் செய்து கொண்டதை நான் பார்த்ததேயில்லை.. மதம் மாறும் வரை தான் ஜாதி இல்லாதது போன்ற பிம்பம், அதுவே மதம் மாறிய பின் பழைய குருடி கதவைத்திறடி கதை தான்..

”பிரமாண சகோதரியின் தேவ சாட்சி” என்று விளம்பரம் கொடுக்கிறார்கள், போஸ்டர் ஒட்டுகிறார்கள்.. அதில் அந்த பிராமண சகோதரி, மடிசார் கட்டிக்கொண்டு திருமணக்கோலத்தில் நிற்கும் படத்தைப் போட்டு “அன்று இருளில்” என்று குறிப்பிடுகிறார்கள்.. அருகிலேயே அவர் கைகளில் பைபிளை வைத்துக்கொண்டு நிற்கும் இன்னொரு படத்தைப் போட்டுவிட்டு “இன்று வெளிச்சத்தில்” என்று குறிப்பிடுகிறார்கள்.. கீழே இருக்கும் படத்தையும் பாருங்கள்..


இந்த போஸ்டரில் பார்த்தீர்களா? ஜாம்பஜார் சார்லஸ் என்பவர் நெற்றியில் விபூதி குங்குமத்தோடு இருக்கும் படம் இருளாம், அதுவே கையில் ஒரு பைபிளைப் பிடித்துக்கொண்டு இருக்கும் படம் வெளிச்சமாம்.. என் கேள்வி எல்லாம் இந்துக்களை குறி வைத்து, இந்து மதத்தை இருள் என்று பேசும் இவர்களால், இந்துக்களை மதம் மாற்றி காசு சம்பாதிக்கும் இந்த மத வியாபாரிகளால் ஏன் ஒரு இஸ்லாமியரைக் கூட மதம் மாற்ற முடியவில்லை? ஒரு வேளை கிறிஸ்தவ வெளிச்சத்தை விட இஸ்லாமிய வெளிச்சம் இன்னும் பளீர் என்று இருப்பதால் இவர்களால் அதனை நெருங்க முடியவில்லையோ? கொஞ்ச நாளைக்கு முன்பு கூட ஒரு கிசுகிசு வந்தது, கிறிஸ்தவர்களின் உலகத்தலைவராக இருக்கும் போப் ஆண்டவரே இஸ்லாத்தை தழுவிவிட்டார் என.. அதனால் தான் தன் போப் பதவியைக் கூட ராஜனாமா செய்தார் என்றும் சொன்னார்கள்.. இந்த லாஜிக்கை வைத்துப் பார்த்தால் கிறிஸ்தவத்தை விட இஸ்லாம் தானே பெரிய வெளிச்சம்? அப்படியானால் முதலில் இந்த மதம் மாற்றம் செய்யும் மதவியாபாரிகள் எல்லாம் இஸ்லாத்திற்கு மாறிவிட்டு, பின் இருளில் இருக்கும் இந்துக்களை மாற்ற நினைக்கலாம்.. அல்லது இஸ்லாமியர்களை உங்கள் வெளிச்சத்திற்கு இழுத்து வந்துவிட்டு இந்துக்களை இழுக்க நினைக்கலாம்.. ஆனால் செய்ய மாட்டீர்கள்.. ஏன்?

ஏனென்றால் அவர்கள் ஒற்றுமையானவர்கள்.. அவர்களின் ஒற்றுமையின் முன்னால் உலகின் அனைத்துமே அற்பம் தான்.. ஒரு தகவல் சடுதியில் தமிழ்நாடு முழுக்கப் பரவ வேண்டுமானால் எது சிறந்த சாதனம்? டிவி? இணையம்? செல்ஃபோன்? இவை எதுவும் இல்லை.. தமிழ்நாடு முழுக்க இருக்கும் கிட்டத்தட்ட 7500 பள்ளி வாசல்கள் தான் சிறந்த தகவல் பரப்பும் இடங்கள்.. சென்னையின் ஒரு பள்ளி வாசலில் சொல்லப்படும் கருத்து இம்மி பிசகாமல் கன்னியாகுமரியின் எல்லையில் இருக்கும் பள்ளி வாசலை சடுதியில் வந்து அடைந்துவிடும்.. ஒற்றுமை இல்லாவிட்டால் இது சாத்தியமாகாது.. அதே போல் இந்துக்கள் இருக்கும் தெருக்களில் அசால்ட்டாக வந்து பெண்களை குழப்புவது, நோட்டீஸ் கொடுப்பது, இந்துக் கடவுள்களையே மட்டமாகப் பேசும் புத்தகங்களைக் கொடுப்பது போல் இஸ்லாமியர்கள் மிகுதியாக வசிக்கும் தெருக்களில் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.. அங்கு இப்படி செய்ய ஆரம்பித்தால் அது மொத்த இஸ்லாமியர்களுக்கும் பள்ளி வாசல்கள் மூலம் தீ வேகத்தில் அடுத்த அரை மணிநேரத்திற்குள் தெரிவிக்கப் பட்டுவிடும். அவர்களும் இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்க வேண்டுமோ அப்படிச் சமாளிப்பார்கள்.. அந்த ஒற்றுமை இருப்பதால் தான் இந்த மாதிரி மத வியாபாரிகளால் இஸ்லாமியர்களை நெருங்கக் கூட முடியவில்லை.. அது போன்ற ஒற்றுமை இந்துக்களிடம் இல்லாததால் தான் இந்துக்களை ஏமாற்றி அவர்களிடம் மதத்தை விற்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள்..

”அப்பாஸ் கூட எங்கள் பினாயிலை வைத்துத் தான் கக்கூஸைக் கழுவுகிறார், நீயும் அதனால் எங்கள் பினாயிலை வாங்கு” என்கிறான் பொருளை விற்பவன்.. “ஐயரே எங்கள் மதத்துக்கு மாறிட்டான்.. அதனால் நீயும் எங்கள் மதத்துக்கு மாறிரு” என்கிறான் மதத்தை/கடவுளை விற்பவன்.. அதாவது ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் கிரிக்கெட் வீரர், நடிகர் போல் பிராமண மக்கள் மதத்தை விளம்பரப்படுத்தும் ஏஜெண்டுகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.. சிகரெட், ஷேவிங் க்ரீம், பினாயில், ஊறுகாய், தேங்காய் எண்ணெய் போல கடவுளையும் ஒரு சந்தைப் பொருளாக மாற்றிவிட்டார்கள்.. ஹ்ம் கடவுளை வைத்து பணம் பார்க்க நினைப்பவர்கள் கடவுளை ஒரு சந்தைப் பொருளாக்காமல் இருந்தால் தானே ஆச்சரியம்?

கடவுள் அதிசயத்தை நிகழ்த்தி விடுவார் என்றால் ஏன் கிறிஸ்தவ நாடுகளில் கூட ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும், காவல் நிலையங்களும் இருக்கின்றன? அட அவ்வளவு ஏன், தேவன், முடவரை நடக்க வைத்தார், இதய ஓட்டையை அடைத்தார், வயிற்று கேன்சரை சரி செய்தார் என்று மேடைக்கு மேடை சாட்சியங்களை செட் செய்து புழுகியே ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்த ஆள், ஏன் தன் கடைசிக் காலத்தில் தேவனிடம் தன்னை குணப்படுத்தச்சொல்லி வேண்டாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்? இன்னமும் எந்த தைரியத்தில் அவர் இறந்த பின்னும் அவரின் குடும்பத்தினர் ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்? "The Mummy" என்னும் படத்தில் அந்த மம்மியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் “Imhotep... Imhotep" என்று அந்த மம்மியின் பெயரை மட்டும் உச்சரித்துக்கொண்டே தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாய் அந்த மம்மியின் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவார்கள்.. மதவியாபாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தெருத்தெருவாய் மதமாற்றம் செய்ய வரும் அப்பாவிகளுக்கும், மம்மி படத்தில் "Imhotep" என்று பித்து பிடித்த மாதிரி கத்திக்கொண்டே வருபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது..

தெளிவாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. கடவுள் ஒன்றும் விற்பனைப் பொருள் அல்ல.. சாம்பிள் பல்பொடி விற்பவன் போல ஒருவன் தெருத்தெருவாய் வந்து கடவுளை விற்றுக்கொண்டிருந்தால் கொஞ்சமாவது யோசியுங்கள்.. வேலை, குடும்பம், குட்டியை விட்டுவிட்டு எந்தக் கிறுக்கனாவது கடவுளுக்காக இப்படியெல்லாம் செய்வானா என்று? எல்லாம் காசு படுத்தும் பாடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் நல்வாழ்க்கையில் உங்களை விட வேறு எவனும், ஏன் அந்தக் கடவுளே கூட அதிக அக்கறை காட்டிவிட முடியாது.. அதனால் நம் கஷ்டத்தில் பங்கேற்று, நம் மீது அக்கறை உள்ளது போல் நடிக்கும் கடவுளை விற்கும் ஆட்களைப் புறந்தள்ளுவோம்... மூளைச்சலவை செய்யப்பட்ட அந்தப் பைத்தியங்களை மாற்ற முடியாது.. அவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழி தான் உள்ளது.. ஒன்று, ஒதுங்கிச் செல்ல வேண்டும்.. இரண்டு, இஸ்லாமியர்கள் போல் ஒற்றுமையாய் நிற்க வேண்டும்.. இரண்டாவது வழி தான் நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும் என்பது என் கருத்து..

ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..

Friday, July 11, 2014

சென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு நாட்களாகத் தான் ஓய்ந்திருக்கிறது.. அடுத்த பதிவை ஒரு நகைச்சுவைக் கதையாகவோ, லேசான கட்டுரையாகவோ எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் ’அப்படியெல்லாம் லேசுல உன்ன விட்டுற முடியாது’ என்று இறைவன் நினைத்து விட்டார் போல.. இதோ மீண்டும் நாலாபுறத்தில் இருந்தும் என்னை அட்டாக் செய்ய ஏதுவான, அனல் பறக்கும் அடுத்த கட்டுரை.. முக்கியமான விசயம் என்னவென்றால், இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பதில் அளித்து என் நேரத்தையும், சக்தியையும் நான் வீணடிக்கப்போவதில்லை.. சரி விசயத்திற்கு வருகிறேன்..

ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்களின் இன்றைய நிலை குறித்து கேலியாக சொல்லிக்கொள்வார்களாம், “அவர்கள் (ஐரோப்பியர்கள்) இங்கே வந்த போது எங்கள் கையில் நிலமும் அவர்கள் கையில் பைபிளும் இருந்தது.. இப்போது எங்கள் கையில் பைபிளும் அவர்கள் கையில் நிலமும் மாறிவிட்டது”.. உண்மை தான், பெரும்பாலும் மதமாற்றம் என்பது ஒரு வியாபாரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது உலகம் முழுவதும்.. வளரும், ஏழை நாடுகளில் கிறிஸ்தவ இயக்கங்கள் இதை ஒரு பெரிய நெட்வொர்க்காகவே செய்துகொண்டு வருகின்றன.. ’இந்துக்கள், யாரையும் மதம் மாற்றுவது இல்லையா?’என்று சிலர் கேட்கலாம்.. ஆம், அமெரிக்காவில் சில இந்து இயக்கங்களும் இதைச் செய்கின்றன.. ஆனால் அவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவ இயக்கங்கள் செய்வது போல் ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடுவீடாக ‘ஊழியக்காரர்’களை நியமித்து எங்கு, யார் வீட்டில் துக்கம் நடக்கிறது, அதை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற அளவிற்கு குரூரமாக இறங்கவில்லை. இன்னொரு விசயம் ஒரு வளர்ந்த நாட்டில் மக்களை அவ்வளவு எளிதாகவெல்லாம் ஏமாற்றி மதம் மாற்றி விட முடியாது. ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற படிப்பறிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில் இல்லாத மூன்றாம் உலக நாடுகளில், மிக எளிதாக மக்களை மதம் மாற்றிவிடலாம்..

”மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு.. அதை மாற்றிக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா? அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்கலாம்.. நல்ல கேள்வி தான்.. வேறு ஒரு விசயத்தை இதே போன்று கேட்டுப்பார்ப்போம்.. இந்தி கற்றுக்கொள்வதென்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.. இந்தி படிக்க ஒருவருக்கு உரிமை இல்லையா? பின் ஏன் இந்தியை எதிர்க்கிறோம்? பதில், ரொம்ப சிம்பிள், மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம்.. இன்னொரு மொழியை திணித்தால் அந்த இனத்தில் அடையாளம் அழிந்து விடும்.. கிட்டத்தட்ட அதே போன்றது தான் மதமும்.. இந்தியா முழுவதும் மதம் சார்ந்து அமையப்பட்ட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம், சடங்குகள் இருக்கின்றன.. மதமாற்றத்தால் அவை அனைத்தும் சிதைந்து போகின்றன.. யோசித்துப்பாருங்கள், ஒரு இந்துவின் திருமணம் போன்ற சடங்குகள் அவர்களின் இடம், ஜாதி, மொழி சார்ந்து ஒவ்வொரு விதத்தில் அமையப்பட்டிருக்கும்.. ஒவ்வொன்றும் ஒரு வகையில் அழகாக இருக்கும். ஒரு மராத்திய பிராமணரின் திருமணம், நாயக்கர்களின் திருமணம், கேரள மக்களின் திருமணம் என இடம், ஜாதி, மொழி சார்ந்து இங்கு தான் எவ்வளவு சடங்குகள் உள்ளன? அதுவே அவர்கள் மதம் மாறிவிட்டால், அந்த சடங்குகள் எல்லாம் மொத்தமாக அழிந்து போய் ஐரோப்பியர்களின், வளைகுடாக்காரர்களின் கலாச்சாரம் தான் நம் கலாச்சாரம் என்பது போல் மாறிவிடும்.. பின் நமது அடையாளம் மொத்தமாக அழிந்து போகும்.. மதமாற்றத்தின் இறுதி நிலை என்பது மொத்தமாக நம் அடையாளத்தை இழக்கச்செய்வது தான்.. 

“ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. அதுக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்?” என்றும் சிலர் கேட்கலாம்.. இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா? அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள்? நாம் இன்று பேசும் தமிழை ஆதிகாலத் தமிழன் ஒருவனும் தமிழ் என்றே ஒத்துக்கொள்ள மாட்டான்.. ஆனால் நமக்கு இது தான் தமிழ்.. இந்தி என்கிற அந்நிய மொழி உள்ளே நுழைவதை பார்த்ததும் நாம் பேசும், பின்பற்றும் இந்தத் தமிழை ஆதரிக்க நினைக்கிறோமே, அது போல் தான் இதுவும்.. இப்போது நாம் பின்பற்றுவது தான் இந்து மதம்.. அதன் கலாச்சாரத்தை, பழக்க வழக்கத்தை ஒரு சிலர் வேற்று மதங்களை புகுத்தி அழிக்க நினைக்கும் போது நாம் ஒன்று கூடத்தான் வேண்டும்.

“ஆனால் இந்து மதங்களில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவே? இன்னமும் சில கோயில்களில் ஜாதியின் பெயரால் சிலர் அனுமதிக்கப்படுவதில்லையே? இன்னமும் சில ஊர்களில் இரட்டைக்குவளை முறைகள் எல்லாம் இருக்கின்றனவே?”. ஆம் உண்மை தான்.. ஆனால் மதம் மாறினால் இதுவும் மாறிவிடுமா? தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி சர்ச்சுகள் உண்டு.. சில இடங்களில் மற்ற சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காதவாறு கீற்றுக்கொட்டகையால் பிரிக்கப்பட்டிருப்பார்கள் சர்ச்சுகளில்.. அதனால் மதம் மாறிவிடுவதால் ஒருவர் மீது காட்டப்படும் துவேசம் எல்லாம் குறைந்து விடாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.. கிறிஸ்தவ பிராமண அசோசியன் என்றெல்லாம் ஆரம்பித்து “உயர்வான”வர்கள் எங்களிடமும் இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவ பிராமணர்களை வைத்து பைபிள் கதாகாலேட்சபம் நடத்துகிறார்கள் கிறிஸ்தவர்கள்.. அங்கு ஜாதி வித்தியாசம் இருக்காது என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.. இஸ்லாமியர்கள் கூட கீழ் சாதி இந்துக்களை மட்டமாக நடத்துவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. அவர்கள் மதத்திற்கு மாறிய பின் இஸ்லாமியர்கள் அப்படி செய்வதில்லை என்றாலும், ஒரு இந்து தாழ்த்தப்பட்டவரை அவர்கள் மதிப்பதில்லை.. அதாவது ஜாதி வெறி என்பது இஸ்லாமியர்களுக்குள்ளும் தான் இருக்கிறது.. 

“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா? அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா?”.. நிச்சயமாக இல்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்காக எத்தனை பிற மதத்தினர் குரல் கொடுத்திருக்கிறார்கள்? ஒருவரும் கிடையாது.. தங்கள் மதத்திற்கு மாறினால் ஜாதி பேதம் கிடையாது என்று புழுகுபவர்கள், ஏன் இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வித்தியாசத்திற்காக குரல் கொடுப்பதில்லை? அவர்கள் நம் ஏற்றத்தாழ்வுகளை தங்களுக்கு சாதகமாகத்தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இந்த ஏற்றத்தாழ்வு மறைய அவர்கள் ஒன்றுமே செய்ததில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மறையாமல் பார்த்துக்கொள்பவர்களே அவர்கள் தான்.. ஏனென்றால் இதை வைத்து தான் அவர்கள் பிழைப்பை ஓட்ட வேண்டும்.. மாறாக இந்துக்களில் பலர் தான், ராஜா ராம்மோகன் ராயில் இருந்து, விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், வைத்தியநாத ஐயர் என்று ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் சீரிய செயல்பாடுகளின் விளைவுகளால் தான் இந்த ஏற்றத்தாழ்வு குறைய ஆரம்பித்தது என்றால் மிகையாகாது.. அரசும் இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற பல செயல்களை செய்து வருகிறது.. இந்து மதத்தில் தான் ஒடுக்கப்பட்டவருக்கு சலுகைகள் கிடைக்கிறது அரசின் மூலம்.. 

நீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..  

இன்னொரு முக்கிய விசயம் இந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. அதற்கான ஆரம்பப்புள்ளி தான் இந்தப்பதிவு.. ஒத்தக்கருத்துள்ள, இணைந்து களப்பணியாற்ற விருப்பம் உள்ள நண்பர்கள் hindusagainstconversion@gmail.com என்னும் ஈமெயில் முகவரியில் உங்கள் விருப்பத்தினையும், கருத்துக்களையும் தெரிவிக்கவும்... இது வெறும் தொடக்கப்புள்ளி தான்.. :-)

தலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...

Tuesday, June 10, 2014

பதிவுலகிலும், ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி போன்றவைகள் எல்லாம்.. இதெல்லாம் அவர்கள் பாஷையில் எதிர்வினை.. அதாவது இப்போது அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும், அல்லது என்றோ அவர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பழி தீர்ப்பதற்குப் பெயர் தான் எதிரிவினை.. அதாவது என்னை இத்தனை ஆண்டுகளாக மட்டமாக, கீழ் நிலையில் பலரும் வைத்திருந்ததால் இன்று நான் அவர்களுக்கு எதிராக தான் செய்யும் வன்முறைக்குப் பெயர் தான் எதிர்வினை..

சரி இந்த எதிர்வினையால் என்ன தான் பிரயோஜனம் என்று கேட்டால், ஒன்றும் கிடையாது.. இவர்களின் எதிர்வினைக்கு அந்தப்பக்கம் இருந்து இன்னொரு எதிர்வினை வரும்.. அந்த எதிர்வினைக்கான எதிர்வினைக்கு இவர்களிடமிருந்து மற்றொரு எதிர்வினை வரும்.. இப்படியே மாறி மாறி வெட்டிக்கொண்டும், தூண்டிவிட்டுக்கொண்டுமே இருக்க வேண்டியது தான்.. முடிவு? இதனால் இவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை.. இது போன்ற விசயங்கள், படிப்பு, சமூக மதிப்பு என்னும் ஏணியில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும் தலித்துக்களை இன்னும் பின்னிழுக்கும் என்பது தான் உண்மை.. வன்முறையாலும், துவேசத்தாலும் எங்கும் எப்போதும் முன்னேற்றம் வராது என்பது உலக நியதி..

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. தாங்கள் உயர வேண்டுமானால் உயர் சாதி என்று கருதப்படும் பெண்களை காதலித்து, இழுத்துக்கொண்டு ஓடுவது தான் ஒரே வழி என்பது இவர்கள் மனதில் சிலரால் விதைக்கப்பட்டிருக்கும் எண்ணம். ஆனால் அப்படி ஓடிப்போகும் பலவும் பிரச்சனைகளை இன்னும் தான் பெரிதாக்கியிருக்கிறதே தவிர பிரச்சனையை குறைத்தோ, தலித்துகளின் நிலையை மாற்றியதாகவோ எங்கும் கேள்வி இல்லை.. உண்மையில் தலித் முன்னேற்றம் என்கிற பெயரில் அடங்க மறுத்து, அத்துமீறி, திருப்பி அடித்து, எதிர்வினை புரிந்து, இழுத்துக்கொண்டு ஓடி என இவ்வளவையும் செய்தாலும், தலித்துகளின் நிலை என்னவோ நம் நாட்டில் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதே கூட அவ்வளவு கஷ்டம் என அண்ணன் சதீஷ் கூட அடிக்கடி புலம்புவார். தங்களின் வாழ்வில் மாற்றத்தை கொடுக்கும் என அவர்கள் நம்பி செய்யும் இவ்வளவு ‘எதிர்வினை’களாலும் ஏன் அவர்களை சமூக அளவில் முன்னேற்ற முடியவில்லை? இன்னும் ஏன் அவர்கள்சரி சமமாக அங்கீகரிக்கப்படவில்லை? ரொம்ப சிம்பிள், அவர்கள் செல்லும் பாதை... ஆம், அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை அவர்களை இன்னமும் மக்கள் மத்தியில் மோசமாக சித்தரிக்கும் என்பது தான் உண்மை.. 

சரி இதற்கு என்ன தான் தீர்வு? ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது, எப்படி முன்னேறியிருக்கிறது என சில தமிழக வரலாற்று சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தலித்துகளின் நிலையை ஒத்திருந்த நாடார் சாதியை இதற்கு தகுந்த உதாரணமாகக் கொள்ளலாம். 

ஆரம்ப காலத்தில் நாடார்கள் திருநெல்வேலிக்கு தெற்கே தான் மிகுந்து காணப்பட்டார்கள். ”அவர்கள் வாழும் நிலம் பாலைவனத்தைக்காட்டிலும் சிறிது மேம்பட்டும், வெப்பமானதும், வெறுமையானதும், விரும்பத்தகாததாகவும் காணப்பட்டது” என்கிறார் கால்டுவெல். அதாவது விவசாயத்திற்கு சிறிது கூட உபயோகப்படாத தேரி என்று அழைக்கப்படும் செம்மண் பூமியை சுற்றி அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். 

மேலும் கால்டுவெல் தனது 1857ம் ஆண்டு எழுதிய கட்டுரை தொகுப்பான, “Lectures on the Tinnevelly Mission"ல் அன்றைய நாடார்களின் நிலை பற்றிச் சொல்கிறார். “நாடார்கள் ஆலயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆலயங்களில் வெளியில் நின்று தான் தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றங்களில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நீதிபதிகளிடம், நீதி மன்றத்தின் வெளியே நின்று தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். நாடார் பெண்கள் இடுப்புக்கு மேல் சேலை அணியலாகாது என்று வற்புறுத்தப்பட்டனர். பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. நாவிதரையோ, வண்ணார்களையோ பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலுள்ள நாடார்களின் பழக்க வழக்கங்கள், அவர்களைச் சூத்திரர்களை விடவும் தாழந்த சாதியினரின் நிலையுடன் இணைக்கிறது” என்கிறார்.. தமிழகத்தில் இன்றைய தலித்துக்களின் நிலையை விட அன்றைய நாடார்களின் நிலை மோசமாகத்தான் இருந்திருக்கிறது என்பது கால்டுவெல்லின் இந்த வார்த்தைகள் மூலம் தெரிய வருகிறது.

முழுக்க முழுக்க பனை மரத்தையும், கள்ளையும், பனை பொருட்களையும் நம்பியிருந்த நாடார்கள், எப்போதும் வறுமையில் தான் உழன்றார்கள். அவர்களது வறுமை, “நெல் பயிராகும் மாவட்டங்களில் அடிமைகளாக வேலை செய்யும் பள்ளர், பறையர்களுக்கிருந்த வறுமையின் தன்மையை ஒத்திருந்தது” என தனது இன்னொரு நூலான “திருநெல்வேலி சாணார்கள்”ல் கால்டுவெல் குறிப்பிடுகிறார். 

சாமுவேல் மட்டீர் என்னும் ஆங்கிலேயரும் தனது “The Land of Charity" என்னும் நூலில் நாடார்களின் அன்றைய நிலையை விளக்குகிறார். “நாடார் ஒருவர் நம்பூதிரி பிராமணரிடம் பேசும் போது 36 அடி தூரம் தள்ளி நின்று தான் பேச வேண்டும். நாயர்களிடம் 12 அடிகளுக்கு மேல் நெருங்கி வரக்கூடாது. நாடார்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்கிற முறையில் குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணங்கள் அணிதல், ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல் இருக்கக் கூடாது; பசுக்களில் பால் கறப்பத்தற்கு அனுமதிக்கப்படவில்லை; உயர் சாதி பெண்களைப்போல் நாடார்ப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது; தலையில் தான் சுமக்க வேண்டும்; மேலாடைகள் போர்த்திக்கொள்ளக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை”..

தங்கள் குடும்ப பெண்கள் சாலையில், பொது இடங்களில் திறந்த மார்புடன் வருவதை எத்தனை நாள் தான் ஒருவனால் சகித்துக்கொள்ள முடியும்? சட்டம் மூலம் தீர்வு கிடைக்குமெனெ நம்பி, மாராப்பு அணிவதற்காக கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் கூட கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார் பெண்கள் தாராளமாக தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளலாம் என்றும், இந்துவாக இருக்கும் பெண்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய முறைப்படி தான் இருக்க வேண்டும் என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.  இந்த சூழலில் தான் தோள் சீலை போராட்டம் வெடித்தது.. சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என முடிவு செய்த நாடார் குலப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். இது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாகர்கோயிலில், கடைத்தெருவில் மார்பை மறைத்து ஆடை உடுத்தியிருந்த நாடார் குலப்பெண்களை தாக்கி அவர்களின் மேலாடைகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து 1858ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நன்னாளில் கலவரம் மூண்டது.. கடைசியில் அன்றைய அரசு, 1859 ஜனவரி 27ம் தேதி ”தோள் சீலை பயன்படுத்துவதை தடை செய்வது தற்காலத்திற்கு ஒவ்வாதது” என்று நாடார்களுக்கு ஆதராவக ஒரு அரசாணையை வெளியிட்டது ஓரளவு உதவியாக இருந்தது.

சக மனிதர்களிடம் மரியாதை கிடையாது, அடிமை போன்ற வாழ்க்கை, பெண்களின் மாராப்பை மறைக்கவே கலவரம் செய்து தான் உரிமை பெற வேண்டிய சூழல். இப்படி ஒவ்வொன்றுக்கும் கலவரமும் போராட்டமும் செய்து தான் உரிமையை பெற வேண்டும் என்றால் கடைசி வரை கலவரமும், போராட்டமும் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியது தான், முன்னேறவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர்.. சமூகத்தில் எப்படி முன்னேறலாம் என்கிற தகிப்பு ஒவ்வொரு நாடாருக்குள்ளும் இருந்தது. பனங்காட்டில் கூலி வேலை செய்து கொண்டு திருநெல்வேலிக்கு தெற்கில் இருந்த நாடார்கள் வியாபாரத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி, பாலையம்பட்டி, சாத்தங்குடி, சிவகாசி போன்ற நகரங்களை சார்ந்து தங்கள் வியாபாரத்தை ஆரம்பித்தனர்.

பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் தங்களால் சமுதாயத்தில் ஒரு நிலையை அடைய முடியாது, பொருளாதார முன்னேற்றமே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை தெளிவாக அறிந்திருந்த நாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி தான் வியாபாரம்.. மாட்டு வண்டியில் ஊர் ஊராக சென்று கருப்பட்டி, கருவாடு, பருத்தி போன்ற பொருட்களைவிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு ஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்த அவர்கள், தங்கள் வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்கு “பேட்டை” என்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூட திருநெல்வேலி தெக்‌ஷண மாற நாடார் சங்கத்தின் கருவாட்டுப்பேட்டை இன்றும் உள்ளது). அந்த பேட்டையை நிர்வகிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது.. அப்போது தான் இந்திய வரி வரலாற்றில் புரட்சி ஏற்படுத்திய sales taxற்கு அச்சாரமான ஒரு விசயம் நடந்தேறியது..

நாடார்கள் தங்கள் பேட்டையை நிர்வகிக்க “நாடார் மகமை பண்டு” என ஒன்றை ஆரம்பித்தனர். ஒவ்வொரு ஊரிலும் பேட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு வியாபாரியும் தனது வருமானத்தின் ஒரு பகுதியை மகமை பண்டிற்கு கொடுத்து விட வேண்டும். அந்தப்பகுதியை கடந்து செல்லும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் குறிப்பிட்ட அளவு மகமை நிதி கொடுத்தாக வேண்டும் என்னும் விதியும் இருந்தது. இந்த மகமை நிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவும் எந்த அளவுக்கு தன் நிலையை உயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை.. 

அந்த மகமைப் பண்டில் ஒவ்வொரு வியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் கட்டும் பணமானது அந்த ஊரின், அந்த சமூகத்தின் நன்மைகளுக்காகப் பயன்பட்டன. வியாபாரத் திறமை மட்டும் போதாது, அதை நிர்வகிக்க படிப்புத்திறமையும் வேண்டும் என அறிந்து கொண்ட நாடார் சமுதாய மக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமை நிதியைக் கொண்டு பல ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். விருதுநகரில் 1885ம் ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்று அழைக்கப்படும் ஷத்ரிய வித்யா சாலா பள்ளி தான் அந்த மாதிரியான முதல் பள்ளி. பின் மருத்துவமனைகள், கோயில்கள் என தங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில் நல்வுற்றோர்களுக்கு உணவும், ஆடையும், வலிமையுள்ளோர்களுக்கு வேலையும் தரப்பட்டன. போதுமான நிதியை பயன்படுத்தி வியாபார நஷ்டங்கள் சரி செய்யப்பட்டன. சமூகத்திற்காக கிணறுகளும், பொதுக்கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதிகமான நிதி கல்விக்கூடங்களுக்கு தான் ஒதுக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். அதாவது எந்த ஒரு சூழலிலும் பிறரை சார்ந்தோ, அரசு உதவிகளை எதிர்பார்த்தோ அவர்கள் எதற்கும் காத்திருக்கவில்லை. தங்களுக்கு வேண்டியதை தாங்களே செய்து கொண்டார்கள்.


நாடார்களின் இந்த மகமை பண்டு செயல்பாடுகளை கவனித்த அன்றைய முதல்வர் ராஜாஜி இதனை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை வரி என்னும் salestax ஐ அறிமுகப்படுத்தினார் என்பதே சொல்லும் இந்த மகமை பண்டு என்னும் நிதி மேலாண்மையின் மேன்மையை..

ஒரு காலத்தில் தங்களது சாதியை காட்டி என்னவெல்லாம் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அவை அனைத்தையும் பிறரை சார்ந்திருக்காமல் தாங்களே அடைந்து கொண்டனர். கிணற்றில் தண்ணீர் எடுக்க உரிமை இல்லையா? நானே ஒரு கிணறு வெட்டிக்கொள்கிறேன்.. கோயிலுக்குள் விட மாட்டாயா? எனக்கான கடவுளுக்கு நானே கோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா? வா நான் ஆரம்பிக்கும் பள்ளியில் என்னோடு சேர்ந்து உன் பிள்ளைகளும் படிக்கட்டும் என்று ஒவ்வொன்றையும் ஒற்றுமையாக செயல்படுத்தினர். எந்தக் கோயில்களில் எல்லாம் ஒரு காலத்தில் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லையோ அந்த கோயில்களுக்கும் அள்ளி அள்ளி நிதி வழங்கினார்கள். மூடிய கோயில்க் கதவுகள் எல்லாம் தன்னால் திறந்தன. ஒரு காலத்தில் நாடார்களை உள்ளேயே விடாத கோயில்களில் கூட, இன்று நாடார்கள் இல்லாமல் எந்த பண்டிகைகளும் நடப்பதில்லை என்பது கண் கூடாகத்தெரியும் உண்மை.


இது போக தாழ்த்தப்பட்டவர்கள் என்று இருந்த தங்களின் நிலையை சுதந்திரத்திற்கு முந்தைய அன்றைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது போராடி, பிற்படுத்தப்பட்டோர் என மாற்றிக்கொண்டனர். தாங்கள் தாழந்தவர் இல்லை, அத்தகைய சொல் பிரயோகம் தங்களுக்கு தேவையில்லை என்று தூக்கி வீசினர். மகமை பண்டு ஒரு புறம் என்றால், 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கம் இன்னொரு புறம்.. இவர்களின் முக்கிய குறிக்கோளும் கல்வி தான். 1921ம் ஆண்டில் இருந்து 1964 வரையில் சுமார் மூவாயிரம் மாணவர்களுக்கு, அன்றைய மதிப்பில் நான்கு லட்ச ரூபாய் வரை கல்விக்கான உதவியாக மட்டும் செய்துள்ளனர். இது கடனாகத்தான் கொடுக்கப்பட்டது.. வட்டியில்லாக்கடன். படித்து முடித்ததும் அந்த மாணவன் அதைத் திருப்பி செலுத்திவிட வேண்டும். வெளிநாடுகள் சென்று படிப்பதற்கும் கூட உதவிகள் செய்யப்பட்டன. பள்ளிகளில் இருந்து கல்லூரிகள் பக்கமும் தங்கள் கவனத்தை செலுத்தினார்கள். இன்று இருப்பது போல் பொறியியல் கல்லூரிகளை ஆரம்பிக்காமல் ஒவ்வொரு ஊரிலும் கலை, அறிவியல் கல்லூரிகளை ஆரம்பித்து சமுதாய மாணவர்களை பட்டதாரிகளாக்க முழுமுனைப்புடன் இருந்தன இந்த சங்கங்கள்..

பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும், ஆதிக்க சாதியினரான மறவர், வேளாளர் போன்றோர்களின் எதிர்ப்பு நாடார்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்து வந்தது. ஆனால் தங்களின் பள்ளி, கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்து, தங்கள் நிறுவனங்களில் பிற சாதியினருக்கும் வேலை கொடுத்து, ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொண்டார்கள். இன்று சிவகாசி, விருதுநகர் போன்ற நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி, எண்ணெய் நிறுவனங்கள், தீப்பெட்டி, அச்சு நிறுவனங்கள், பட்டாசுத்தொழிற்சாலைகளில் இதை வெகு சகஜமாக காணலாம். அதாவது ஜாதியால் தன்னை தாழ்ந்தவன் என்று மட்டமாக நினைத்த உயர் ஜாதி ஆட்களைக் கூட தங்கள் ஒற்றுமையால் தங்களை சார்ந்து வாழ வைத்தது தான் நாடார்களின் வெற்றி.

இது தான் நாடார்களின் சுருக்கமான முன்னேற்ற வரலாறு. இதில் எத்தனையை இன்றைய தலித் சங்கங்களோ, அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளோ செய்திருக்கிறார்கள்? நாடார்கள், எதிர்வினை என்னும் பெயரில் எவனெல்லாம் தங்கள் வீட்டுப்பெண்களின் மாராப்பை கிழித்தெறிந்தானோ, அவன் வீட்டுப்பெண்களின் மாராப்பையும் கிழித்து எறிந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தங்களின் இழி நிலை ஒழிய வேண்டுமானால் உயர் ஜாதி பெண்களை இழுத்து ஓடுவது தான் ஒரே வழி என்றும் அவர்கள் நினைக்கவில்லை.. ஒற்றுமையும், முன்னேற்றமுமே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய இட ஒதுக்கீடு ஒரு மனிதனை மட்டும் தான் முன்னேற்றும். அவன் தனக்குப் பின் தன் பிள்ளைகளுக்கு தான் அதை பெற்றுத்தர முனைவானே ஒழிய, தன் சமூகத்தை சார்ந்த, இன்னும் கீழ் நிலையில் இருக்கும் பிறர் அதை அனுபவிக்க விடுவதில்லை பெரும்பாலும். ஆனால் இடஒதுக்கீட்டையும் தாண்டி ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் அதற்கு ஒற்றுமை அவசியம். பிறர் நம்மை மட்டமாக பேசுகிறார் என்பதற்காக அதை நினைத்து வருந்தாமல், சண்டை போடாமல், வைராக்கியமாக தன் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால், தன்னை பேசியவனையும் தாண்டி ஒரு காலத்தில் வளர்ந்து நிற்கலாம்.. அல்லது கடைசி வரை சண்டை போட்டுக்கொண்டு தானும் முன்னேறாமல், அவனையும் முன்னேற விடாமல் இழி நிலையிலேயே இருக்கலாம்.. இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது சில தலித் சங்கங்களின் கைகளில் தான் உள்ளன..

இன்னொரு முக்கியமான விசயம், நாடார்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கென்று ஒரு அரசியல் தலைவரை உருவாக்கிக்கொண்டதில்லை, உருவாக விட்டதும் இல்லை.. என்று ஜாதியத்திற்குள் ஓட்டு அரசியல் வருகிறதோ, அன்றே அது அந்த ஜாதியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, அந்த ஜாதியை வளர விடாமல் செய்து விடும்.. அப்போது தானே அந்த ஜாதிய தலைவர்களால் வெற்றிகரமாக அரசியல் செய்ய முடியும்? முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே? இன்று தங்களை தலித்துகளின் அரசியல் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் செய்வது இதைத்தான்.. அதனால் அரசியல் தலைவர்களையும், இட ஒதுக்கீட்டையும், நம்புவதை விட தலித்துகள் தங்களுக்குள் ஒற்றுமையாக சிறு சிறு குழுக்கள் அமைத்துக்கொண்டு நாடார்களின், “மகமை பண்டு” போன்ற விசயங்களை அதில் செயல்படுத்தி முன்னேறலாம்..

அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி, அடுத்தவன் வீட்டுப் பெண்ணை கையப்பிடித்து இழு, எதிர்வினை செய் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு அன்றாட பிழைப்பை ஓட்டத்தான் பயன்படுமே ஒழிய, அந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் அது பயனைக்கொடுக்காது.. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் படிப்பும், பணமும் தான் பிரதானம். அரசு கொடுக்கும் இடஒதுகீட்டை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் அந்த படிப்பும் பணமும் அனைவருக்கும் கிடைக்க இன்னும் 200 ஆண்டுகள் கூட ஆகலாம்.. அதுவே தங்கள் சொந்தக்காலில் ஒற்றுமையாக நின்று முன்னேறும் போது, சீக்கிரத்தில் பொருளாதார நிலையில் வளர்ச்சியை அடைந்து விடலாம்.. பொருளாதார வளர்ச்சி மட்டும் தான் ஒரு ஜாதியை அதன் கீழ் நிலையில் இருந்து மேலே உயர்த்தும் முக்கிய காரணி.. அதனால் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன மாதிரியான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும் என தலித் மக்கள் சிந்திப்பதே அவர்கள் முன்னேற்றத்துக்கான ஆரோக்கியமான முதல் படியாக இருக்கும்..

இல்லை இன்னமும் நாங்கள் எங்கள் அரசியல் தலைவர்கள் வகுத்துக்கொடுத்த சீரிய பாதையில் தான் செல்வோம் என்றால், தலித்துகளுக்கு சமூகத்தில் இன்று இருக்கும் மதிப்பு மாற வெகு காலம் பிடிக்கும் என்பது மட்டும் உறுதி...


 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One