காவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா? நாங்களும் இருக்கிறோம்..

Saturday, January 9, 2016

இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசும் யாரும் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் தீவிரவாதத்தைக் கண்டுகொள்வதேயில்லை.. காரணம், முதல் இருவரின் தீவிரவாதம் வன்முறைகளால், துவேஷப் பேச்சுக்களால் நிரைந்தவை, குழு மனப்பான்மை கொண்டவை.. அதனால் எளிதாக வெளியில் தெரிந்துவிடும்.. ஆனால் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் டெக்னிக்கே வேறு.. அவர்களின் டார்கெட் ஒவ்வொரு தனி மனிதன் அல்லது ஒவ்வொரு சிறு குடும்பம்.. கும்பலாக உங்களை நெருங்க மாட்டார்கள், தங்களுக்கென்று இருக்கும் மதமாற்ற மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ் மூலம் அணுகுவார்கள்..

அன்பு, பாசம், பணம், வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கருணைப் பேச்சு என்கிற கேக்கிற்குள் தங்கள் தீவிரவாதக் குண்டை ஒளித்து வைத்து, அந்தத் தனி மனிதனுக்கோ, சிறு குடும்பத்திற்கோ ஊட்டுவார்கள்.. கேக்கிற்கு அலைபவன் அந்த குண்டையும் உட்கொண்டே ஆகவேண்டும்.. நாமே கூட அவர்களின் இது மாதிரியான அணுகுமுறைகளை பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களிலோ, பக்கத்து வீட்டுக்காரர் மூலமோ, உடன் வேலை செய்பவர் மூலமோ அடிக்கடி அனுபவப்பட்டுக் கொண்டிருப்போம்.. ஒரு மாதிரியான கண்மூடித்தனமான அமைதியான வெறித்தனம் இவர்களிடம் இருக்கும்.. தூண்டிலில் வேலையாய்ப்பு, படிப்பு என்கிற புழுவை மாட்டி நம்மிடம் நீட்டி, நம் வாழ்க்கையையே நிம்மதியில்லாமல் ஆக்கிவிடுவார்கள்.. சமீபத்தில் உ.பி.யில் நடந்த ஒரு சம்பவமும் அப்படித்தான்..

டெல்லியின் ஒரு ஆஸ்பத்திரியில் தன் மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு சோகமாக இருந்தப் பெண்மணியிடம், அந்த ஆள் வருகிறார்.. பார்த்தாலே தெரியும் அமைதியும் அன்பும் குடிகொண்டிருக்கும் முகம் என்று.. கருணைப் பார்வையுடன் அந்தப் பெண்ணைப் பார்த்து, ’உங்கள் பிள்ளைகளை என்னிடம் கொடுங்கள்.. அவர்களின் படிப்பு, சாப்பாடு, தங்குமிடம், உடை, ஆரோக்கியம் என அனைத்தையும் என்னுடைய ”இமானுவேல் சேவா குரூப்” பார்த்துக்கொள்ளும்.. அவர்கள் மூவரையும் ஐஏஎஸ் ஆக்காமல் விட மாட்டேன்.. உங்கள் வாழ்வின் முன்னேற்றம் மட்டுமே என் ஒரே குறிக்கோள்.. ஆனால் எனக்காக நீங்களும் உங்கள் கணவரும் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய வேண்டும்’ எனக்கூறி அவர்கள் கைகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் துண்டுப் பிரசுரங்களையும் பைபிள் வாசகங்களையும்  கொடுத்திருக்கிறார்..

‘இதை மக்கள் கூடும் இடங்களான தியேட்டர், கோவில், ரயில் நிலையங்களில் விநியோகியுங்கள்.. நீங்கள் விநியோகிக்கும் ஒவ்வொரு தாளும் உங்கள் பிள்ளைகளை ஐஏஎஸ் ஆக்குவதற்கான கருவிகள்’..

இவர்களும் தேவாதி தேவனின் துண்டுப் பிரசுரங்களை ஊர் முழுக்க விநியோகித்திருக்கிறார்கள், “தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாக”.. வேலை முடித்துத் தங்கள் பிள்ளைகளைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அங்கேயோ பிள்ளைகளைப் பார்க்க விடவில்லை.. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பார்க்க முடியுமாம்.. ஆம், பின்னே ஐஏஎஸ் ஆவது என்றால் சும்மாவா? மாய்ந்து மாய்ந்து படிக்க வேண்டாமா? முடவனை நடக்க வைக்கும் கூட்டம், குருடனைப் பார்க்க வைக்கும் கூட்டம், ஊமையைப் பேச வைக்கும் கூட்டம் ஏன் ஐஏஎஸ் ஆக்குவதற்கு மட்டும் அம்மா அப்பாவைக் கூட பார்க்கவிடாமல் படிக்கச் சொல்கிறது எனத் தெரியவில்லை.. ஜெபித்தே கலெக்டர் ஆக்கிவிட முடியாதோ? சரி விசயத்திற்கு வருவோம்..

அந்தப் பெற்றோர்களும் 15 நாட்களுக்கு ஒரு முறை தங்கள் பிள்ளைகளைப் பார்த்து வந்திருக்கிறார்கள்.. இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.. தங்கள் வாழ்விலும், பிள்ளைகளின் படிப்பிலும் எந்த மாற்றமும் இல்லையென்பது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தண்டனைகளைத் தாங்க முடியவில்லை என்றும் அடி, உதை படுவதாகவும் புலம்பி அழுதிருக்கிறார்கள்.. நம் கருணையே வடிவான ஆசாமியிடம் பெற்றோர்கள் இதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நேக்காகப் பேசி பெற்றோர்களை இன்னொரு 15 நாட்கள் தேவ ஊழியம் செய்ய அனுப்பிவிட்டார்.. ஊழியத்தை முடித்து வந்தப் பெற்றோர்களுக்கு இந்த முறை பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.. எவ்வளவு சண்டை போட்டும் கெஞ்சியும் கடைசி வரைப் பிள்ளைகளைக் கண்ணில் காட்டவில்லை.. “நீ எங்கேயும் போயிக்கோ, பிள்ளைகளைத் தர முடியாது” என்றிருக்கிறார்கள்..

என்ன செய்வது என்றறியாத பெற்றோர் கடைசியில் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.. போலீசார் அந்த இம்மானுவேல் சேவா குரூப்பை சோதனை செய்த போது தான் பல விசயங்கள் அம்பலம் ஆகியுள்ளன.. அங்கு இந்த மூன்று குழந்தைகள் மட்டுமல்லாது, மொத்தம் 23 பேர் இருந்திருக்கிறார்கள்.. அனைவரும் அறைகளில் அடைக்கப் பட்டு மெலிந்து போய், சோகை பிடித்த மாதிரி இருந்திருக்கிறார்கள்.. அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் சொன்னதையெல்லாம் கேளுங்கள்..

”அங்கு எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரே விசயம் பைபிள், பைபிள், பைபிள் மட்டும் தான்.. தினமும் அதை நாங்கள் படித்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். தவறாகச் சொன்னால் அடி விழும், பட்டினி போடுவார்கள்.. இரண்டு, மூன்று நாட்கள் கூட பட்டினி இருந்திருக்கிறோம்.. எருமைக் கறி திங்கச் சொல்லியும் எங்களை வற்புறுத்தினார்கள்.. திங்காவதர்களைக் கயிற்றில் தொங்க விட்டு அடித்தார்கள்..”

“தினமும் அழுக்கான கிழிந்த ஆடைகள் மட்டுமே உடுத்தியிருப்போம்.. எப்போதாவது தான் எங்களுக்குப் புதுத் துணி கொடுப்பார்கள். அன்று எங்களைப் பார்க்க வெளி ஆட்கள் யாரோ வருகிறார்கள் என அர்த்தம்.. அவர்கள் எங்களுக்கு மிட்டாய்கள் எல்லாம் கொடுப்பார்கள்.. நாங்கள் வரிசையாக நின்று அவர்களிடம் பைபிள் வசனத்தைச் சொல்ல வேண்டும்.. அவர்கள் சென்றதும் தப்பாக பைபிள் வசனம் சொன்னவர்களுக்கு பிரம்பாலும் பெல்ட்டாலும் அடிவிழும்.. எங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், மிட்டாய்கள், புதுத்துணிமணிகள் என அனைத்தும் பிடுங்கப்பட்டு, மீண்டும் அதே கிழிந்த ஆடைகள் கொடுக்கப்படும்.. ”

”எங்களது பெயர்கள் அனைத்தும் கிறிஸ்தவப் பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன.. எல்லோரும் புதுப்பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும்.. பழைய பெயரைச் சொல்லி அழைத்தாலும் தண்டனை கிடைக்கும். எங்கள் பெற்றவர்களைப் பார்க்கவே முடியாது.. எப்போதாவது பார்த்தாலும் கொஞ்ச நேரம் மட்டும் தான்”

இப்போது இந்தப் பிள்ளைகள் எல்லாம் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்த இம்மானுவேல் சேவா குரூப்பின் தலைவர் தேவ்ராஜ் மேல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.. அவனிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்டால், “ரெய்டு நடந்தது உண்மை.. மற்றதைப் பிறகு சொல்கிறேன்” என்கிறான்.. பிறகு என்றால் எப்போது? வெளிநாட்டுப் பணம் பல்க்காக வந்து இந்தக் கேஸே ஒன்றும் இல்லாமல் ஆன பிறகா? அல்லது சிறுபான்மையினர் உரிமை என்று எவனாவது சில்லறை அரசியல்வாதியும், விபச்சார மீடியாவும் மைக்கைக் கடித்துக் குதறிய பிறகா?

ஆர்.சி கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் இது மாதிரியான அசிங்கங்களில் ஈடுபடுவதில்லை.. ப்ரொடெஸ்டெண்ட், பெந்தெகொஸ்தே சபையினரின் ஆட்டமும் தனிநபர் வன்முறையும் தான் இதில் அதிகம்.. புதிதாக மதம் மாறும் ஒவ்வொருவரும் பிரமானம் எடுத்துக்கொள்கிறார்களாம், ‘நான் என் வாழ்நாளில் அட்லீஸ்ட் ஒருத்தரையாவது கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவேன்’ என்று.. என்னங்கடா இது, ஏதோ சேல்ஸ் மேனேஜர் அவருக்குக் கீழ் இருக்கும் ரெப்புகளுக்கெல்லாம் டார்கெட் கொடுப்பது மாதிரி கொடுக்குறீங்க? அந்தப் பிரமானத்தை எடுத்துக்கொண்ட சைக்கோக்கள் நம்மை பேருந்து, கோயில், சிக்னல், ரயில் நிலையம் என எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.. நித்திய சந்தோசம், தேவனின் சுவிசேஷம், என தமிழும் சமஸ்கிருதமும் கலந்து ஒரு மாதிரி கண்றாவியாகப் பேசிக் கடுப்பேற்றுகிறார்கள்.. அதிமுகவினருக்கு முன்பே ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் கடவுளைப் பிரமோட் செய்தவர்களும் இந்தக் கும்பல் தானே? நவீன கட்டணக் கழிப்பறையில் கூட, “இயேசுவே உண்மையான கடவுள்”ன்னு ஒட்டியிருக்காய்ங்க.. அடேய் அதச் சொல்றதுக்கு வேற இடமாடா இல்ல? 

சிறுபான்மையினர் உரிமை என்கிற பெயரில் எளிதாக ட்ரஸ்ட், பள்ளியெல்லாம் ஆரம்பித்துவிட்டு, இது போன்ற பைபிள் வசன வகுப்புகளும், மதமாற்ற நடவடிக்கைகளும் தான் பல இடங்களிலும் நடந்து வருகின்றன.. கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு இவர்களின் அணுகுமுறை நன்றாகத் தெரியும்.. வெளியுலக அசிங்கமே தெரியாமல், நான்கு வயதில் இவர்கள் பள்ளியில் சேரும் குழைந்தைகளுக்கு அப்போதிருந்தே மதவெறியையும் மத துவேஷத்தையும் ஊட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.. பிற மதக் கடவுள்கள் எல்லாம் சாத்தானாகவே காட்டப்படுகின்றன இவர்களின் பள்ளிகளில்.. இதற்கெல்லாம் சிறுபான்மையினர் உரிமை என ஆதரவு வேறு.. ஒரு நாட்டில் நடக்கும் எந்த ஒரு வன்முறைக்கும் அநீதிக்கும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஆதரவுக்கரம் நீட்டப்படும் ஒவ்வொரு முறையும், அந்தக் கரத்தைக் கருணையே இல்லாமல் வெட்ட வேண்டும்.. அப்போது தான் வன்முறை செய்பவனுக்குப் பயம் வரும், தப்பு செய்தால் தன் ஜாதியும், மதமும் காப்பாற்றாது என்று.. 

அசிங்கமாகப் பேசுவது, கையை வெட்டுவது, காலை வெட்டுவது, கொலை செய்வது மட்டுமே வன்முறை அல்ல.. உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனதில் அன்பு என்கிற போர்வையில் பிறரைப் பற்றிய துவேஷத்தை விதைப்பதும் கூட வன்முறை தான்.. அதைத் தான் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள்.. ஒரு தீவிரவாதக் கும்பலை அதன் தலைவனைப் பிடித்தால் அழித்து விடலாம்.. அட்லீஸ்ட் செயலற்றதாகவாவது ஆக்கிவிடலாம்.. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனையும் மூளைச்சலவை செய்து, மதத்தைப் பரப்புவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் அந்த உ.பி. இம்மானுவேல் ட்ரஸ்ட் மாதிரி ஆட்களை எப்படிக் கண்டுபிடிப்பது? மதம் மாற்றுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ”நம்பிக்கைத் தீவிரவாதிகளாக” ஆளுக்கு ஒரு பக்கம் சென்று, தங்களைப் போலவே இன்னொருவரையும் ”நம்பிக்கைத் தீவிரவாதியாக” மாற்றுவதான் இவர்களின் ஒரே குறிக்கோள்..

தலைவன் என்று யாரும் இல்லாமல், மதத்தைப் பரப்புவதை ஒரு வியாபாரமாகவும், தங்கள் கடவுளை சோப்புக்கட்டி போன்ற ஒரு பொருளாகவும் பாவித்து, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி விற்று, இவர்கள் அப்படி என்னத்தைத் தான் சாதிக்கப் போகிறார்கள்? ஊர் ஊராக எவன் வீட்டில் இழவு விழும், எவன் வீட்டில் கஷ்டம் நடக்கும், எவன் வீட்டில் நோய் வரும் எனக் காத்துக்கொண்டிருக்கும் இந்தக் கும்பல் நிஜமாகவே தங்கள் மதம் போதித்தக் கருத்து என்னவென்று ஒரு நாளாவது சிந்தித்திருக்குமா? பிறரின் கஷ்டத்தை மூலதனமாக்கிப் பிழைப்பை நடத்தும் நம்மை, நாம் வணங்கும் தேவன் என்ன செய்வார் என்கிற பயமாவது இருக்குமா? நிச்சயம் இருக்காது.. ஏனென்றால் மனம் முழுவதும் மழுங்கடிப்பட்டிருக்கும்.. இவர்களின் ஒரே குறிக்கோள் உலகமே கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும்.. அப்படி மாறிவிட்டால், பாவிகளே இருக்க மாட்டார்களாம்

இதே கிறிஸ்துவத்தைப் பின்பற்றும் எத்தனைப் பாவிகள், உலகையே போர்க்களமாக மாற்றும் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் எல்லாம் இருக்கிறார்கள்? அந்தப் பாவிகளை எல்லாம் எப்படி அழைப்பது? ஒரு வேளை கிறிஸ்தவராக இருப்பதால் அவர்கள் என்ன பாவம் செய்தாலும் அவையெல்லாம் கழுவப்பட்டுவிடுமா? இயேசுநாதர் சிலுவையில் அறையப்படும் போது, தன் இரத்தத்தால் பாவிகளின் பாவங்களைக் கழுவும் போது, ”இது கிறிஸ்தவர்களுக்கான ஸ்பெசல் ரத்தம், மற்றவர்களின் பாவம் கழுவப்படாது” என்று சொல்லவில்லையே? உலகின் அத்தனை ஜீவராசிகளின் பாவங்களையும் தான் கழுவினார்.. பின் நீங்கள் மட்டும் ஏனய்யா கிறிஸ்தவனாக மாறினால் மட்டுமே பாவங்கள் கழுவப்படும் என்கிறீர்கள்? அவர் மரித்த அன்றே உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அனைவரும் பரிசுத்தமானவர்களாக மாற்றப்பட்டு இருக்க வேண்டுமே? ஆனால் அதற்குப் பின்னும் பாவிகளால் தான் இந்த உலகம் சூழப்பட்டு இருக்கிறது என்றால், அது இயேசுநாதரின் தப்பு அல்ல.. அவரின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஆட்களின் தப்பு மட்டுமே.. 

உ.பி.யில் நடந்த இந்த வன்முறை பற்றி ஏதாவது மீடியா வாய் திறக்குமா என்று நானும் பார்த்தேன், ஒரு குஞ்சும் கண்டுகொள்ளவில்லை.. தந்தி டிவியில் மட்டும் காலையில் மேம்போக்காகச் சொன்னார்கள்.. “இம்மானுவேல் சேவா குரூப்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த 23 பிள்ளைகள் மீட்கப்பட்டார்கள்.. அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன” என்று மட்டும்.. கிறிஸ்தவ மதமாற்றம் பற்றியோ, வன்முறை பற்றியோ துளியும் குறிப்பிடப்படவில்லை.. இதுவே ஒரு இந்து அமைப்போ இஸ்லாமிய அமைப்போ செய்திருந்தால்? சரி மீடியாவை விடுங்கள் அவர்களின் பிழைப்பே கேடு கெட்ட பிழைப்பு தான்.. இந்த கிறிஸ்தவர்கள்? இந்துத்துவாவைப் பிடித்துத் தொங்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரை எதிர்க்கும் இந்துக்கள் உண்டு.. இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை எதிர்க்கும் இஸ்லாமியர்களும் உண்டு.. ஆனால் இது போல் ஊழியம் என்கிற பெயரில் உளவியல் வன்முறைகளை நிகழ்த்தும் ஆட்களை எந்தக் கிறிஸ்தவரும் இதுவரை எதிர்த்து நான் பார்த்ததில்லை.. அது போன்ற ஆட்கள் உங்கள் மதத்தின் மதிப்பைக் குறைக்கிறார்கள், உண்மையான சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களையும் தவறாகப் பார்க்க வைக்கிறார்கள் என்பதை உணருங்கள்.. ’அல்லேலூயா கோஷ்டி’ என்கிற கிண்டலுக்கு கிறிஸ்தவர்களைக் கொண்டு சென்றதும் அவர்களே..

சக மனிதனைத் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தாலே போதும், கடவுள் நமக்குத் துணை இருப்பார்.. அதனால் தயவு மதத்தை விற்காதீர்கள், கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தாதீர்கள், அப்படிப்பட்ட ஆட்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.. ஆனால் அந்த மதம் சொன்னதை வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.. அதுவே போதும்.. 
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One