எச்சரிக்கை:
இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான பதிவு.. யாராவது வந்து லாஜிக், கூஜிக் என்று ஆராய்ச்சி செய்ய நினைத்தால் ப்ளீஸ் ஒன் ஸ்டெப் பேக்..
எனக்கு ஒரு கப்பித்தனமான ராசி உண்டு.. ஒரு படம் ரிலீஸ் ஆன முதல் நாளே நான் அந்த படத்தை பார்த்தால் அது கண்டிப்பாக ஒரே வாரத்தில் டப்பாவில் தூங்கப்போய் அடுத்த வெள்ளியில் வேற படத்தை தியேட்டரில் போட்டு விடுவார்கள்.. அப்படி ஒரு செம ராசி.. அன்பே சிவம், சச்சின், குசேலன், மதுர, சுள்ளான், எதிரி, மரியான், வல்லவன், மன்மதன் அம்பு, பில்லா 2 என என் ராசியால் பஞ்சர் ஆன படங்கள் என ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்டே உண்டு.. ஆனால் வில்லன் குரூப்பை அடித்து நொறுக்கி பட்டையை கிளப்புவது போல், என் ராசியை அடித்து துவம்சம் செய்து விட்டார் தல இந்த ஜனவரி 10, 2014ல்..
கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை பெரிதாக என்ன பெரிதாக, எலிப்புழுக்கை அளவுக்கு கூட ஒன்றும் கிடையாது. காதலுக்காக அடிதடியை விட நினைக்கும் ஒருவன், அதே காதலியின் குடும்பத்தை காக்க அடிதடியில் பின்னி பெடலெடுக்கும் படம் தான் ‘வீரம்’.. என்ன? தமிழ், தெலுங்கு, கன்னடம், என பல மொழிகளில் கேட்ட கதை மாதிரி இருக்கிறதா? ஆனால் அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? தல இருக்காரு, அதுவும் வேஷ்டி சட்டை கெட்டப்பில், பத்த வச்ச ராக்கெட் மாதிரி ஒரு திரைக்கதை... இதற்கு மேல் என்ன வேண்டும்? அந்த ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ், மாஸ் இது போதாதா? துப்பாக்கி விமர்சனத்தில் சொல்லியிருந்தேன், விஜய் விஜய் விஜய் தான் எல்லாம் என்று.. ஹா ஹா, அதை விட மாஸாய் அஜித் கலக்கியிருக்கும் ஒரு படம் இது.. திரையில் இத்தனை நாட்களாக (in fact வருடங்களாக) ’தல’யை எப்படி பார்க்க வேண்டும், படம் எந்த மாதிரியான mass entertainerஆக இருக்க வேண்டும் என ஒவ்வொரு ரசிகனும் ஆசைப்பட்டானோ அப்படி ஒரு படம் இது.
முதல் பாதி முழுக்க லோக்கல் தாதாவோடு சண்டை, சந்தானம் காமெடி, தமன்னாவோடு காதல் ஆரம்பிக்கும் படலம் என்று செல்கிறது.. கிடைக்கும் கேப்பில் எல்லாம் தவறாமல் அஜித்திற்கு மாஸ் ஏற்றுகிறார்கள்.. பயங்கர ஸ்பீடான திரைக்கதை.. இரண்டாம் பாதி தமன்னாவின் குடும்பம், அதன் செண்டிமெண்ட், வில்லனை அழிக்கும் படலம் என ஒரு கமர்ஷியல் சினிமாவின் இலக்கணத்தை இம்மி பிசகாமல், தூக்கலான ஆந்திர வாடையுடன் விருந்து வைத்திருக்கிறார்கள்.. முதல் பாதியோடு ஒப்பிடும் போது இரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் கம்மி தான் என்றாலும், குடும்பம்,. செண்டிமெண்ட் என்று அதையும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள்.. ஒரு படத்தின் வெற்றி அதன் க்ளைமேக்ஸ் எந்த அளவுக்கு திருப்திகரமாக இருக்கிறது என்பதை பொறுத்தது. அந்த வகையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை கண்டிப்பாக எல்லோரையும் திருப்திப்படுத்தும்.. இதுவரை தல எந்த படத்திலும் இப்படி ஒரு ஃபைட் போட்டதில்லை.. எல்லோரையும் நாயடி, பேயடி அடித்திருக்கிறார்.. படத்திற்கு சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ்..
தமன்னா அஸ் ஆல்வேய்ஸ் அழகு. நான்கு தம்பிகளில் ரெண்டு பேருக்கு நடிக்க சிறிய ஸ்கோப் கிடைத்திருக்கிறது. மீதி ரெண்டு பேர் கணக்குக்கு.. ஒரு தம்பியின் காதலியாக நம்ம நாடோடிகள் அபிநயா.. பாவம், அந்த திறமையான புள்ளைய இப்படிப்பட்ட டம்மி கதாபாத்திரத்துக்கு கொண்டு வந்துவிட்டார்களே? ரொம்ப நாளைக்கு பிறகு சந்தானம் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார். “ஆடத்தெரியாத சிலுக்கு காலுல சுழுக்குனு சொன்னாளாம்” - ஒரு சாம்பிள் சந்தானம் வசனம். இரண்டாம் பாதியில் வரும் தம்பி ராமையா வேஷ்டி அவிழும் காட்சியிலும், சரக்கு அடித்துவிட்டு ஹீரோவும் நானே ஹீரோயினும் நானே என பண்ணும் அலம்பலும் நேரத்தை கடத்த உதவுகின்றன.. இவர்களுக்கு மேலும் முப்பத்தி சொச்சம் பாத்திரங்கள் படத்தில் இருப்பதால் எல்லோரையும் குறிப்பிட்டெல்லாம் சொல்ல முடியாது, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.. ஏனா? ஏன்னா அவர் ஒருத்தரு இருக்காரு.. அது மட்டும் போதுமே?.. ’என்னடா இவன் ஓவர் பில்ட்-அப் கொடுக்குறானே’ன்னு நெனைக்குறீங்களா?
ஒரு சின்ன டெஸ்ட் உங்களுக்கு.. மேலே இருக்கும் காட்சியை நீங்கள் படத்தில் பார்க்கும் போது உங்கள் முகத்தில் தன்னால் ஒரு புன்னகை வரும். அப்போது உங்களுக்கு தெரியும் நான் ஏன் இப்படி வரிந்து கட்டி புகழ்கிறேன் என்று. தம்பிகளோடு சேர்ந்து ’சண்டை பாடம்’ நடத்திக்கொண்டே லோக்கல் தாதாவை பந்தாடுவது ஆகட்டும், ரயில் சண்டையில் அனல் பறப்பது ஆகட்டும், வடிவேலின் காமெடி பாணியை உல்டா செய்து பாட்ஷா ரேஞ்சில் வில்லனிடம் பவ்யம் காட்டும் போது ஆகட்டும், குழந்தையோடு ஆடும் கண்ணாமூச்சி ஆகட்டும், கலகலவென ‘தல’ பண்ணும் ஒவ்வொன்றும் அழகு.. இவ்ளோ லோக்கல் விசயங்களை வைத்துக்கொண்டு ஏன் தல இவ்ளோ நாளா கம்முனு இருந்தீங்க? இனி இதே போல் இறங்கி விளையாடுங்கள்..
ஆனால் கண்டிப்பாக இந்தப்படத்தை அஜித் முழு மனதோடு ஒத்துக்கொண்டிருக்க மாட்டார் என்பது என் கருத்து.. அவருக்கு என்று ஒரு comfort zoneஐ உருவாக்கிக்கொண்டு, ரெண்டு கோட்டு, நாலு சன் கிளாஸு, அதை அணிந்த ஒரு உம்மனாமூஞ்சி, கார், பைக்கில் ஒரு சேசிங், முகத்திற்கும், வாயிற்கும் வலிக்குமோ என எண்ணும் அளவிற்கு மெதுவான வசன உச்சரிப்பு என அடைபட்டிருந்தவரை எப்படி சிவா அதை விட்டு வெளியே இழுத்து வந்தார் என தெரியவில்லை. அஜித்தும் இப்படி இறங்கி அடிப்பார் என நான் எதிர்ப்பார்க்கவில்லை.. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், பில்லா 2வில் ஒரு அரசியல்வாதி கேரக்டர் அஜித்திடம் சொல்லும், “நான் ஊன்னு சொன்னா எனக்காக உயிர கொடுக்க லட்சம் பேரு இருக்காங்க”னு.. அஜித் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோ அந்த இடத்தில் என்ன சொல்ல வேண்டும்? ஸ்க்ரீனை க்ளோஸ் அப்பில் பார்த்து, ஹை பிட்ச்சில், “ஆனா நான் ஊன்னு சொன்னா கோடி பேர் உசுர கொடுப்பாங்கடா” என்று சொல்வது தான் aptஆக இருக்கும்.. ஆனால் அஜித் ரொம்ப சர்வசாதாரணமாக, நிதானமாக, “நீ சொன்னா ஓட்டு வேணா போடுவாங்க, உசுர கொடுக்க மாட்டாங்க” என்பார்.. தியேட்டரில் மயான அமைதி நிலவியது.. இது தான் பழைய அஜித்.. அப்படி ஒரு காட்சி வீரத்தில் இருந்திருந்தால் நான் முதலில் சொன்ன வசனம் தான் வந்திருக்கும், தியேட்டர் அதகளம் ஆகியிருக்கும்.. அந்த அளவுக்கு இந்த படத்தில் ஒரு மாஸ் ஸ்டாராக, அஜித்திற்கு இருக்கும் இமேஜை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கும்மாளம் போட்டிருக்கிறார் சிவா..
ஒரு இடத்தில் வில்லன் அஜித்திடம், “நீ என்ன ஜாதிடா?” என்பார்.. “நீ என்ன தேவன்னு நெனச்சா தேவன், நாடாருன்னு நெனச்சா நாடாரு, தலித்துனு நெனச்சா தலித்து.....” என வரிசையாக எல்லா ஜாதியையும் சொல்வார்.. இது போன்ற ராவான வசனங்கள் எல்லாம் அஜித் படத்திற்கு மிகப்புதிது.. அஜித்தும் பொதுவாக இது போன்றவைகளை தவிர்த்து விடுவார். ஆரோக்கியமான சினிமாவிற்கு இது போன்ற விசயங்கள் தேவை இல்லை என்றாலும், அந்த வசனத்தை அஜித் சொல்லும் போது தியேட்டரில் விழும் விசில் சவுண்ட் காதை கிழிப்பதென்னவோ உண்மை தான்... ரசிகர்கள் இது போன்ற ஒரு காரக்குழம்பை தான் அவரிடம் எதிர்பார்க்கிறோம், பீட்சா பர்க்கரை அல்ல..
ஒரு இடத்தில் வில்லன் அஜித்திடம், “நீ என்ன ஜாதிடா?” என்பார்.. “நீ என்ன தேவன்னு நெனச்சா தேவன், நாடாருன்னு நெனச்சா நாடாரு, தலித்துனு நெனச்சா தலித்து.....” என வரிசையாக எல்லா ஜாதியையும் சொல்வார்.. இது போன்ற ராவான வசனங்கள் எல்லாம் அஜித் படத்திற்கு மிகப்புதிது.. அஜித்தும் பொதுவாக இது போன்றவைகளை தவிர்த்து விடுவார். ஆரோக்கியமான சினிமாவிற்கு இது போன்ற விசயங்கள் தேவை இல்லை என்றாலும், அந்த வசனத்தை அஜித் சொல்லும் போது தியேட்டரில் விழும் விசில் சவுண்ட் காதை கிழிப்பதென்னவோ உண்மை தான்... ரசிகர்கள் இது போன்ற ஒரு காரக்குழம்பை தான் அவரிடம் எதிர்பார்க்கிறோம், பீட்சா பர்க்கரை அல்ல..
படத்தில் இருக்கும் ஒரே ஒரு குறை, அதை குறை என்பதை விட திருஷ்டி என்று சொல்லலாம், அது நம்ம ’சரிகமபதநிசா ஏ கமான் கமான் ஏ சல்சா’ புகழ் அண்ணன் DSPயின் இசை தான்.. பின்னணி இசை கலக்கலாக இருந்தாலும் முதல் பாடலைத் தவிர வேறு ஒரு பாடலும் உருப்படி இல்லை. இன்னொரு சிறு நெருடல் ரெண்டாம் பாதியில் தல தன் தாடியை ட்ரிம் செய்து வருவது.. சால்ட் அண்ட் பெப்பர் லுக் தலையில் மட்டும் இருந்தால் ஓகே.. மீசையும் அப்படி ஆகி, தாடியையும் மழித்து விட்டுப்பார்த்தால் ஏதோ பக்கத்து வீட்டு சேட்டு மாமா மாதிரி இருக்காரு.. எப்படி கோட் சூட்டை விட்டாரோ, அதே போல் சால்ட் & பெப்பர் லுக்கையும் விட்டால் தேவலை.. பார்க்கலாம் அடுத்த படத்தில் எப்படி என்று..
அது 2002ம் வருட தீபாவளி.. தல படமும் (வில்லன்), தளபதி படமும் (பகவதி) ஒரே நாளில் ரிலீஸ் ஆகி, அதில் தல வென்றிருந்தார்.. அதற்கு பின் வரிசையாக நான்கு முறை இருவரும் மோதிக்கொண்ட போதெல்லாம் ’தல’யை விட அவரது ரசிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டோம், ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா என்று.. பரமசிவனும், ஆதியும் 2006 பொங்கலில் மோதிய போது ரெண்டுமே ஃப்ளாப் ஆகின என்பது ஒரு கொசுறு என்றாலும், 2007 பொங்கலில் அது ‘போக்கிரி’ பொங்கலாகவும், எங்களுக்கு ஆழ்வார் என்னும் டொக்கு பொங்கலாகவும் இருந்தது.. அதற்கு பின் ஏழு வருட காத்திருப்புக்கு பின் இப்போது மீண்டும் அஜித்தும், விஜய்யும் மோதியிருக்கிறார்கள் இப்போது.. கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து அஜித் இந்த நேருக்கு நேர் மொதலில் வென்றிருக்கிறார். ஒரு ரசிகனாக இந்த 12 வருட காத்திருப்பு சோர்வை கொடுத்தாலும், இன்றைய வெற்றி அனைத்தையும் ப்பூவென ஊதித்தள்ளிவிட்டது.. விஜய் தொடர்ச்சியாக ரெண்டு ஃப்ளாப் கொடுத்தால் அவர் ரசிகர்களே அவரை கிண்டல் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.. ஆனால் அஜித் ரசிகர்கள் என்றுமே அவரை விட்டுக்கொடுத்ததில்லை. அஜித் என்னும் நடிகன், தன் சக போட்டியாளரோடு மோதிய கடைசி நான்கு முறையும் மண்ணைக்கவ்வினாலும், நம்பிக்கையோடு ‘ஜெயிப்பான்டா என் தல’ என காத்திருந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த முறை தலை வாழை இலையில் கெடாய் வெட்டி விருந்தே படைத்துவிட்டார்..
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், ஹை கிளாஸ் நடிகராக இருந்த அஜித்தை ஒரு ரசிகனாக நாம் எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு அஜித்தை இதில் பார்க்கலாம்.. ரசிகர்கள், நமக்கு அந்த ஒரு காரணம் போதும்.. மற்றவர்களுக்கு? அவர்களுக்கும் மாஸாக, ஒரு ஆக்ஷன் - குடும்ப செண்டிமெண்ட் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.. அவர்களும் ஆச்சரியாக சொல்வார்கள், ‘அட அஜித் படமா இது?’ என்று.. மீண்டும் ’பழைய குருடி கதவை திறடீ’ என்பது போல் கோட்டு சூட்டுக்குள் நுழைந்து கொள்ளாமல் ‘தல’ இது போன்றே தொடர வாழ்த்துக்கள்.. தல தீபாவளி பாத்துட்டோம், இது தல பொங்கல்.. என்ன நான் சொல்றது?
உங்களை தல விடிய விடிய எழுத வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி
ReplyDeleteநைட் செக்ண்ட் ஷோ பாத்தா விடிய விடிய தான எழுதணும் நண்பா? சீனுவும் அர்த்த ஜாமத்துல தான் எழுதிருக்காப்ல...
Deleteரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...தனி மனித துதி பாடல் இல்லாததும் பெரிய ஆறுதல்... :-)
ReplyDeleteநன்றிங்க :)
Deleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள் ராம்குமார்.
ரொம்ப நன்றி சார் :)
Delete// தல இருக்காரு, அதுவும் வேஷ்டி சட்டை கெட்டப்பில், பத்த வச்ச ராக்கெட் மாதிரி ஒரு திரைக்கதை... இதற்கு மேல் என்ன வேண்டும்...? // வேறு எதுவுமே வேண்டாம்...!
ReplyDeleteஹா ஹா அண்ணே ஆனால் எங்களுக்கெல்லாம் ஆதரவளிக்கும் உங்கள் கமெண்ட் வேண்டும் :)
Delete‘ஜெயிப்பான்டா என் தல’ என காத்திருந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த முறை தலை வாழை இலையில் கெடாய் வெட்டி விருந்தே படைத்துவிட்டார்..
ReplyDeleteSema mass nanba
Thanks nanba :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete’தல’யை எப்படி பார்க்க வேண்டும், படம் எந்த மாதிரியான mass entertainerஆக இருக்க வேண்டும் என ஒவ்வொரு ரசிகனும் ஆசைப்பட்டானோ அப்படி ஒரு படம் இது.
ReplyDeletecorrect ah sollitenga thala!!!
ஆக மொத்தம் இது 'தல பொங்கல்'. பகிர்வுக்கு நன்றி பாஸ்.
ReplyDeleteஅருமையான விமர்சனம் நண்பா...படம் நல்லா வந்திருக்கு என்று சொல்றாங்க..ஒரு தல ரசிகனுக்கு இதவிட பெரிய சந்தோசம் வேறு எதுவுமில்லை.......!!!
ReplyDelete'ஜெயிப்பான்டா என் தல'........!!!
ஹா ஹா உண்மை தான்
DeleteSariyana mokai ithuku vera oru review
ReplyDeletethanks :) ovvorutharukum ovvoru taste..
Deletegood review nanba... but not only thala mattum win pannala, jilla also superb... both r equal and wins the race...
ReplyDeleteif both win, its good for both the fans
DeleteTHIS REVIEW IS MARANA CLASSSS NANBAAAAA
ReplyDeleteboss veeram nice only.. but jilla is also so good.. this pongal is for both vijay and ajith...
ReplyDeleteநல்ல விமர்சனம் நண்பா!
ReplyDeleteநடுநிலமையில் விமர்சனம்.
ReplyDeletenice
ReplyDeleteஜெயிப்பான்டா என் தல'...atu
ReplyDeleteஜெயிப்பான்டா என் தல'...atu
ReplyDeleteஇந்த கார குழம்புதான் உங்ககிட்ட எதிர்பார்த்தோம் ..எதார்த்தமான வரிகள்..தலப்பொங்கல் வாழ்த்துக்கள்...
ReplyDeleteThala commits his projects for some commitment or for friendship only.
ReplyDelete(Like- asal for shivaji family, aegan for raju sundaram , mankatha for venkat prabhu and aarambam for am.rathnam's situation. . Next project also for goutham's bad situation)
He believes himself. Even if the film is failed he can survive as like same.
Veeram is really a mass entertainer.
Good film, nice experience and nice review.
Thanks boss..
நல்ல விமர்சனம் ராம் குமார்...
ReplyDelete