சேரன் செய்தது மட்டும் தான் தவறா?

Friday, August 21, 2009

சமீப நாட்களாக பதிவுலகில் சேரனை பற்றியும் பொக்கிஷம் திரைப்படத்தை பற்றியும் பலரும் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதினார்கள். நானும் எனக்கு தோன்றுவதை எழுதுறேன்.
.
.
திரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறதாம். சேரனின் எந்த படம் அய்யா கில்லி போன்ற வேகமான திரைக்கதை உடையது? அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது? வாழ்வை அவசரமாக வாழும் நாம் மூன்று மணிநேரம் அமைதியாக ஒரு படம் பார்ப்பதற்கு கூட பொறுமை இல்லாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டுமே தவிர பிறர் மேல் கோபப்படக்கூடாது.
.
.
அதே போன்று ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 'எனக்கு இந்த இந்த காட்சிகள் பிடிக்கவில்லை, அல்லது மொத்த படமுமே எனக்கு பிடிக்கவில்லை' என்று கூறுங்கள். ஏதோ நீங்கள் தான் உலகின் தலை சிறந்த விமர்சகர் போன்று 'இந்த படம் நல்லா இருக்கு, இந்த படம் கேவலமா இருக்கு' என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா? உங்களுக்கு பிடித்த படம் தான் சிறந்த படமா?
.
.
மற்றொரு குற்றச்சாட்டு 'சேரனுக்கு நடிக்கத்தெரியவில்லையாம்'. இதை அவர் சொல்ல மறந்த கதை நடித்த போதே சொல்லியிருக்கலாம் அல்லவா? அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட்டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்தை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே? இன்னும் சில வருடங்களில் உங்களுக்கு சசிகுமார் நடிப்பும் பிடிக்காது, அப்போதும் இதே போன்று 'சசிகுமார் நடிப்பதை நிறுத்தி விட்டு இயக்குனராக மட்டும் இருப்பது நல்லது' என்று நீங்கள் ஆலோசனை சொல்வீர்கள்.
.
.
தானே இழைத்து இழைத்து செதுக்கிய கதைக்கு யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். தயாரிப்பாளர் சிறிது தலையிடலாம். நீங்கள் நான் எல்லாம் யார் இதில் தலையிட? உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது? நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம்? 'மழை வெளுத்து வாங்கிருச்சு அதான் படம் பாக்க முடியல' என்று நீங்கள் தவமாய் தவமிருந்து வந்த பொது சொல்லி ஒரு தரமான படத்தை ஓட விடாமல் செய்தீர்களே அதற்கு சேரன் உங்கள் மீது பலி போடலாமா?
.
.
இயக்குனர் சேரனுக்கு நடிகர் சேரனால் அவமானம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நடிகர் கமலுக்கு இயக்குனர் கமலால் அவமானம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பிற மொழிப்பட டிவிடிகள் தமிழ் நாட்டிற்குள் இப்போது இருப்போது போல் பரவலாக கிடைக்காத காலத்தில் பல பிறமொழி படங்களின் கதைகளையும், கதாப்பாத்திரங்களையும், அவர்களின் பாவனைகளையும் சுட்டு இயக்குனர் கமல் நடிகர் கமலை தமிழக அளவில் ஒரு உலக நாயகனாக மாற்ற எண்ணினார். இப்போது தான் அவரின் அன்பே சிவம் படமே ஒரு ஈ அடிச்சான் காப்பி என்று தெரிகிறது. தனது குட்டு வெளிப்பட்ட உடன், தான் ஒரு நல்லவன் என்று காண்பிப்பதற்காக வசூல் ராஜா, உன்னைப்போல் ஒருவன் என்று வெளிப்படையாக காப்பி அடிக்கிறார் உங்களின் தமிழ் நாட்டு உலக நாயகன்.
இந்த விதத்தில் சொந்த கதையை மட்டுமே படம் எடுக்கும் சேரன் எவ்வளவோ சிறந்தவர் சார்.
.
.
இதில் ஒருவர் பின்னூட்டம் என்ற பெயரில், 'பீல்ட் அவுட் ஆனவர்கள் தான் மதவாதத்தை கையில் எடுப்பார்கள்' என்று சேரனை சாடியிருக்கிறார். அவர் கோணத்தில் அவர் இந்த படத்தை அணுகியிருக்கிறார். யார் மதவாதி என்பது அவரது பின்னூட்டத்தின் மூலம் நன்கு தெரிகிறது. அவர் பெயர் ஷாஜகான்.
.
.
பின்குறிப்பு:
எனக்கு பொக்கிஷம் படம் மிகவும் பிடித்துள்ளது. தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் அளவிற்கு இல்லை என்றாலும் இப்போது வந்துள்ள படங்களின் மத்தியில் பொக்கிஷம் ஒரு நல்ல படமாகவே எனக்கு படுகிறது.
.
.
நான் கமலின் தீவிரமான ரசிகன். சாரி தலைவா உங்களின் உண்மைகளை பேச தயங்காத ரசிகன் நான்.
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One