உடனடி தேவை!!!

Monday, March 30, 2009

ஆட்கள் தேவை
படிப்பு தகுதி : தேவை இல்லை.

உடல் தகுதி : அவசியம் இல்லை.

முன் அனுபவம் : வேண்டவே வேண்டாம்.

உங்களுக்கு வயது 21க்கு மேலா?

உங்கள் தோல் கடினமாக இருக்குமா?

உங்களை பெற்றவர்களும் மற்றவர்களும் உதவாக்கரை என்று திட்டுகிறார்களா?

உங்களை தண்டச்சோறு என்பது ஜீரணிக்க கடினமாக உள்ளதா?

உங்களுக்கு மூன்றுவேளை சோறும் இரண்டு மாதங்களுக்கு தங்கும் இடமும் இலவசமாக தேவை என்றால், தொடர்பு கொள்ளுங்கள்:

அடுத்த மாதம் முதல் இந்திய அளவில் நடக்கும் மிகப் பெரும் சர்கஸ் ஆட்டத்துக்கு தமிழ் நாட்டில் என்னுடைய கட்சிக்கு நாப்பது பேர் தேவை.

இவண்,
தலைவர் / துணைத்தலைவர் / உப தலைவர் /பொது செயலாளர் / செயலாளர் / உப செயலாளர் / பொருளாளர் / துணைப் பொருளாளர் / கொ.ப.செ / துணை கொ.ப.செ.
அகில இந்திய காடாளும் மக்கள் கட்சி.

பின் குறிப்பு: வெத்திலை போட்டுக் கொண்டு தொப்பி அணிந்து வருபவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப் படும்.
By
Amaran Groups (எங்க ஊர்ல பல பக்கிங்க இன்னும் இப்படி சொல்லிக்கிட்டு தான் அலையுதுங்க....... So, நானும்)

கலாச்சாரம்

Wednesday, March 18, 2009

முன்குறிப்பு:
காலத்துக்கு ஏற்றவாறு தனது சாரத்தை மாற்றிக்கொள்வதே கலாச்சாரம் என்ற கருத்து உடையவர்கள், மற்றும் என் கருத்துக்கு எதிர் கருத்து உடையவர்கள் தயவுசெய்து கமென்ட் போடவும்....

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேசவே பயந்த, செயல்படவே மறுத்த பல விஷயங்கள் இன்று நம் கன்ன்முன்னே பரவலாக நடக்கின்றன! அந்தரங்கங்கள் எல்லாம் அம்பலங்கள் (அம்மணம் என்றும் சொல்லலாம்) ஆகின்றன. இன்று நம் நாட்டில் நடப்பது கலாச்சார சீரழிவு இல்லை, கலாச்சார கற்ப்பழிப்பு! இதெற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்த போது, என்னால் உணரப்பட்ட சில காரணங்கள் இங்கே....


முதல் காரணம், வழக்கம் போல தகவல் தொழில்நுட்பத்துறை. ஐயா, உங்களை பெஞ்ச் மார்க்காக வைத்து தான் இந்த விலைவாசி உயர்வெல்லாம் நடக்கிறது. ஐயாயிரத்துக்கும் கீழே சம்பளம் வாங்குபவர்களை எல்லாம் ஏற்கனவே அழவைத்து விட்டீர்கள். (இப்போ உங்களுக்கும் ஆப்பு.. வாழ்க அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி). விலைவாசியில் மட்டுமல்ல கலாச்சாரத்திலும் இப்போது உங்களைத்தான் பலர் பெஞ்ச் மார்க்காக நினைக்கிறார்கள்.


தமிழின காவலர். கலைஞர். முதல்வர்.டாக்டர். (அம்மாடி எவ்ளோ பட்டம்!) கருணாநிதி, ஹெல்மெட் அணிய சொன்னது யாருக்கு பயனளித்ததோ இல்லையோ, உங்களுக்கு நல்லா பாதுகாப்பு கொடுக்குது! நீங்க கீழ விழக்கூடாதுன்னு ஹான்ட் பார புடிச்சுக்கிறீங்க, உங்க பின்னாடி இருக்குற பொண்ணு கீழ விழாம இருக்க, உங்கள இறுக்கமா கட்டிபுடிச்சுட்டு வருது. வண்டில நீங்க எங்க போறீங்க என்ன பண்ணுரிங்கனு எழுதுனா, இந்த பதிவு செக்ஸ் கதை மாதிரி இருக்கும். எனக்கு ஒரு சந்தேகம், இந்த பெவிகால் விளம்பரத்துக்கு ஏன் இவ்ளோ செலவு பண்றாங்களோ? பேசாம OMR ரோட்டுல போற ஒரு ஐ.டி. ஜோடிய படம் புடிச்சு போடலாம்! எங்கேயோ ஒன்னு ரெண்டு முறைதவறிய உறவுகள் இருந்தது, இப்போ உங்கள பாத்ததும், வைரஸ் கிருமி மாதிரி வேகமா சாதாரண மக்கள்கிட்டயும் பரவி வருது. கூட வேல செய்ற பொண்ணுக்கு இந்த உதவி கூட பண்ண கூடாதான்னு கேக்குறவங்களுக்கு பதில் கடைசியில இருக்கு.


இதாவது பரவாயில்லை, இப்பல்லாம் ஒருசில கல்லூரிகள்ல இதுக்கு மேல நடக்குது! சின்ன வயசுல தூர்தர்ஷன்ல காண்டம் விளம்பரம் பாத்தது இவங்களுக்கு எவ்ளோ உதவியா இருக்கு தெரியுமா? பல கல்லூரிகள்ல இப்போ காண்டம் வழங்கும் மிஷின் வச்சுருக்காங்க! தன்னோட ஆண்மையை நிலைநாட்டிய தருணத்தை பெருமையுடன் படம் புடித்து தன் நண்பர்களுக்கு காட்டுவது தான் இப்போ டிரண்டு! நம்ம அரசாங்கமும் வெக்கமே இல்லாம, "பாதுகாப்பான உடலுறவு" னு காண்டம் போட்டு போட சொல்லுது! காண்டம் கண்டுபுடிச்ச பர்பஸெ மாறிப்போச்சே?! இந்த லட்சணத்துல செக்ஸ் கல்வி வேற?


ரெண்டாவது காரணம், சினிமா.... நான் பத்தாவது படிக்கும் போது சாகலேட்னு ஒரு படம் வந்தது. அந்தப்படத்துல ஜெயாரே & மும்தாஜ் போட்டு வர டிரஸ் எல்லாம் ரொம்ப செக்ஸ்சியா இருக்கும், அன்றைய காலகட்டத்தில் (ஏழு வருஷம் முன்னாடி தான்)... ஆனால் இப்போது எல்லா படத்திலும் எல்லா கதாநாயகியும் அப்படித்தான் வருகிறார்கள். கொஞ்சநாளைக்கு முன்னாடி 'வில்லு' னு ஒரு உலகத்தரமான குப்பையை பார்க்க நேர்ந்தது! அதில் நயன்தாரா, படம் முழுதும் ஆண்கள் அணியும் கலர் பனியன் தான் போட்டு வந்தார்! அதாவது பரவாயில்லை, அவர் பல படங்களில் அணிந்து வரும் பாவாடையை பார்க்கும் போது "எப்போது அவிழ்ந்து விழுமோ?" என்று எனக்கு பயமாக இருக்கிறது! இந்த மாதிரி, படத்துல நடிகைகள் அணியும் உடைகள், ரெண்டே வருசத்துல, "இது வில்லு (ல நயன்தாரா போட்ட) பனியன்" அப்படின்னு மார்கட்டுக்கு வரும். பெண்களும் அதை பந்தாவாக வாங்கி தங்கள் அழகை வெளிப்படுத்துவார்கள்! பெண்களே, தயவுசெய்து சினிமா மோகத்தால், குழந்தைகளுக்கு பசியாற்ற இறைவன் படைத்த உறுப்பை காட்ச்சிபொருள் ஆக்காதீர்கள்!


அப்பறம், வருங்கால செவ்வாய் கிரக ஜனாதிபதி நம்ம தமிழ் சினிமால தான் நடிச்சுட்டு இருக்காரு, பேரு விஜய்னு சொல்றாங்க. தமிழ் நாட்ல பாதிப்பயபுள்ளைக காதல்னா என்னனே தெரியாம அரைவேக்காட்டுத்தனமா பொண்ணுங்க பின்னாடி சுத்துறதுக்கு இந்த இளைய தளபதி ஒரு முக்கிய காரணம்! இவர் ஆரம்ப காலங்கள்ல நடிச்ச, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் போன்ற பல படங்களால் தான் தமிழ் நாட்டில் காதலிப்போர் எண்ணிக்கை அதிகமானது என்று சொன்னால் மிகையில்லை.



காதலுக்கு நான் எதிரி இல்லைங்க. இந்த ஜாதி மதம்லாம் ஒழியனும்னா, அது காதலால மட்டும் தான் முடியும். ஆனால் இன்னைக்கு காதல்ன்ற பேர்ல மக்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க? சினிமால காட்டுறது தான் உண்மைக்காதல்னு சாமி சத்தியமா நம்புறாங்க! அட, அதாவது பரவால்லையே, படத்துல வார மாதிரியே தான் லவ் பண்ணுவாங்களாம்! இந்த ரெயின்போ காலனி படத்த பாத்து பலபேர் நாசமா போனதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்! அந்த படத்தோட டைரக்டர் மட்டும் என் கையில் சிக்குனார்னா, நாக்கப்புடுங்குற மாதிரி கேள்வி கேட்பேன். ஒரு (பல) பேட்டியில அவர் சொல்லுறாரு, "உலகத்துல நடக்காததை நான் படமாக எடுக்கவில்லை. என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் தான் என் கதையின் கரு". இவர்ட்ட நான் ஒரு கேள்வி கேட்கணும். அது முடிவில்.



மூன்றாவது காரணம் பெண்கள்! ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்ற கருத்தில் ஆழமான நம்பிக்கை உடையவன் நான். கலாச்சாரம் என்பதில் பெண்களின் பங்கு மிக அதிகமானது. அதனால் தான் அந்தக்காலங்களில், படையெடுக்கும் போது, பெண்களை கற்பழித்து விடுவர். இது தான் மிகப்பெரிய அவமானம் என்று கருதப்பட்டது. அப்படி மாற்றானிடம் தன் கற்பை இழந்த பெண் உயிருடன் வாழ மாட்டாள். ஆனால் இன்று??????? பெண்கள், தங்கள் கற்பை தாங்களே வலிய போய் அழித்து கொள்கின்றனர். பெண் சுதந்திரம் (உரிமை) என்ற பெயரில், ஆண்களை பார்த்துப்பார்த்து அவர்களைப்போலவே உடை அணிந்து, அவர்களைப்போலவே தண்ணி தம் அடித்து, இப்படி எல்லா விஷயத்திலும் ஆண்களைப்போலவே நடப்பது தான் பெண் சுதந்திரம் என்று நினைக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் அவர்கள் அவர்களையே அறியாமல் தங்களை ஆண்களிடம் அடிமைப்படுத்தும் செயல் தான்!



பெண்களே உங்களிடம், சில கேள்விகள்..
ஒரு பையனை கட்டிப்புடிச்சுட்டு தான் உங்களால் பைக்ல போக முடியுமா?
உடல் அங்கங்களை வெளிப்படுத்துவது போல் உடை அணிந்தால் தான் உங்களுக்கு ______________முடியுமா?
ஆண்களோடு போட்டி போடுவதால் நீங்கள் அடைந்தது அதிகமா? இழந்தது அதிகமா?


சுரிதார்னு ஒரு அருமையான உடை, அது பெண்கள்ட்ட சிக்கிட்டு படுற பாட்ட பாத்தா, பாவமா இருக்கு. லோ நெக், ஸ்லீவ் லெஸ், அப்டின்னு தினுசு தினுசா போடறாங்க. அதுவும் அந்த துப்பட்டாவ அவங்க படுத்துற பாடு இருக்கே... அதுஏன் துப்பட்டாவ கழுத்துல சுத்துன பாம்பு மாதிரியே போடுறாங்க? துப்பட்டா எத மூட கண்டுபுடிச்சாங்க? கழுத்த மூடவா? பெண்கள் ஒழுங்கா உடை உடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.


பெண்களே, தப்பெல்லாம் உங்க மேல வச்சுகிட்டு பையன குத்தம் சொன்ன என்ன அர்த்தம்? T-shirts ல "curves make many things stright", "objects here are bigger than they appear" னு எழுதுனா பையன் பாக்கத்தான் செய்வான், தொடணும்னு தான் நெனப்பான்! கறியை ஒழுங்காக பாத்திரத்தில் மூடி வைத்தால் பூனை ஏன் தொடுகிறது? முதலில் கறியை மூடி வையுங்கள், பிறகு பூனை மேல் பழி போடலாம்!


மங்களூர் பப்பில் ஸ்ரீராம் சேனா செய்ததைத்தான் மீடியா பெரிதுபடித்தின. ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் அப்படி செய்ததன் காரணத்தை யாரும் யோசிக்க வில்லை. அந்த பப்பில் உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ, இல்லை அம்மாவோ இருந்திருந்தால் நீங்கள் பெண்ணுரிமை பேசிக்கொண்டு இருக்க மாடீர்கள். நான்கு சுவர்களுக்குள் பண்ணவேண்டியதை பொது இடத்தில் (பப் என்றால் பப்ளிக் ஹவுஸ் என்று பொருள்) செய்தால் அடி விழத்தான் செய்யும். தவறுகளை தட்டி கேட்க அதிகாரமோ பதவியோ தேவையில்லை. "ஸ்ரீராம் சேனா என்ன கலாச்சார காவலர்களா?" என்று நீங்கள் கேட்டால், "நீங்கள் கலாச்சார கயவர்களாக இருக்கும் போது அவர்கள் காவலர்களாக இருப்பதில் தப்பில்லை என்பேன்!".



நம் நாட்டில் இந்த அளவுக்கா செக்ஸ் வறட்சி இருக்கிறது? இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் தாராளமயமாக்கல் உலகமயமாக்கால் என்னும் பெயரில் நம் தேசத்துக்குள் சாக்கடைகளை நுழைய விட்டது தான் காரணம். தாய் நாட்டையே ஏலம் விடும் இவர்கள், நாட்டு பெண்களின் கற்பை பற்றியும் கலாச்சாரம் பற்றியுமா யோசிக்கப்போகிறார்கள்? யாரவது ஒரு நல்ல மனசுக்காரர் பேசினாலும் அவரை பெண்ணடிமைவாதி, பிற்போக்குவாதி என்று பட்டம் கொடுத்து முடக்கி விடுகின்றனர்!


ஆரம்பத்தில் சொல்லுவதாக குறிப்பிட்ட அந்த பதிலும், கேள்வியும்...

"colleagues கூட டேட் பண்றது தப்பா?" என்ற கேள்விக்கு இதோ பதில். "உன் அம்மா வேலை செய்யும் இடத்தில் அவளுக்கும் colleagues உண்டு; 'வேலைக்கு போகும் மனைவி தான் வேண்டும்' என்று தேடி நீ மணம் புரியும் பதிபத்தினிக்கும் colleagues உண்டு". அப்படியெல்லாம் உன் அம்மா அன்று colleagues உடன் சென்றிருந்தால் இன்று உனக்கு என்ன பெயர்? உன் மனைவியோ காதலியோ சென்றால் உன் குழந்தைக்கு என்ன பெயர்?

டைரக்டர் செல்வராகவன் கிட்ட ஒரு கேள்வி. "நாட்டுல எவ்வளவோ நல்ல விசயங்கள பத்தி படம் எடுக்காம, யாரோ யாருடனோ படுத்த ஒரு கதையை 'உன்னதமான காதல் கதை, உலகத்துல நடக்குறதத்தான் காட்டிருக்கேன்' என்று சொல்கிறீர்களே? இதனால் ஒரு சில பேருக்கு தெரிஞ்ச ஒரு கலாச்சார சீரழிவான விசயத்த கோடிக்கணக்கான மக்களுக்கு 'அதுல ஒரு தப்பும் இல்ல' அப்டின்னு எடுத்து சொல்றிங்களே இது ஞாயமா? ரெயின்போ காலனி பாத்துட்டு செக்ஸ் வச்சுகிட்ட லவ்வேர்ஸ் பல பேர எனக்கு தெரியும். ஆனா இப்போ அவங்க வேற யாருக்கோ கணவனாவும் மனைவியாவும் வாழ்ந்துட்டு இருக்காங்க! அப்போ அவர்களை மணம் புரிந்த பெண்களும் ஆண்களும் கேனா கூனாவா? 'என் வாழ்க்கைல நடக்குற விசயத்த தான் படமா எடுக்கிறேன்' னு இனி சொன்னால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நாலு சுவருக்குள் நடந்த புணர்ச்சி விளையாட்டும் உங்களிடமிருந்து படமாக வரும் என்பது என் எதிர் பார்ப்பு! நிறைவேற்றுவீர்கள?"


பின் குறிப்பு:
காதலின் முடிவு தான் காமமே அன்றி காமத்தின் தொடக்கம் காதல் இல்லை...
நான் இந்த விஷயத்தில் ஒரு பிற்போக்குவாதி தான்.

தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....

Friday, March 13, 2009

பாலிவுட் இன் எவேர்க்ரீன் ஜோடி சாருக்கான் மற்றும் கஜோல் நடித்த வெற்றி படம் தான் இந்த தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே (வீரமான ஆண்மகன் காதலியின் கைபிடிப்பான்)... அக்டோபர் 20, 1995 இல் வெளியான இந்த படம் இன்று வரை மும்பை இல் உள்ள மராத்தா மந்திர் என்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது!! தொடர்ந்து 700 வாரங்கள் ஓடி இந்த திரைப்படம் சாதனை புரிந்துள்ளது....

ஹிந்தி சினிமா வின் சிறந்த படங்கள் மற்றும் அதிக வசூலான படங்களில் இதற்கு ஒரு மரியாதையான தனி இடம் உண்டு... கதையில் ஒன்னும் பெரிய புதுமை எல்லாம் இல்லை... மோதலில் ஆரம்பிக்கும் காதல், குடும்ப எதிர்ப்பை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதே கதை... ஆனால் அதில் சாருக்கான், கஜோல் மற்றும் அம்ரிஸ் பூரி இன் நடிப்பும் திரைக்கதையும் பாடல்களும் இசையும் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்... எத்தனை ஜோடி சினிமாவில் வந்தாலும் ஷாருக், கஜோல் ஜோடி போல் சத்தியமா வராது...

பின் குறிப்பு:
இந்த படம் தான் "ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது (உண்மையில் அருமையான கிளைமாக்ஸ்)....
இவ்ளோ பெரிய ஹிட் அடிச்ச படத்த நம்ம மக்கள் விட்டு வச்சுருப்பாகளா? ஒரு தடவையா? ரெண்டு தடவையா? பல தடவை இந்த படத்த நம்ம தமிழ் சினிமால எடுத்து தள்ளிட்டாங்க.... தல நடிச்ச 'உன்னை தேடி' அப்டியே இந்த படத்தோட ஜெராக்ஸ் தான்... நம்ம தனுஷ் நடிச்ச 'யாரடி நீ மோகினி' படத்தோட ரெண்டாம் பாதியும் இதே படம் தான்...

வாழ்க தமிழ் சினிமா.....

தமிழா!!!

இவன் நம்முள் ஒருவன்
பத்தாவது படித்து விட்டு
பட்டத்தையும் முடித்து விட்டு
பரதேசம் போனான்
வேலை தேடி...
கண்ணீரில் மிதக்கிறது
குடும்பமே வாடி....

அயல் நாட்டில்
அநாதை போல் அழைந்து
வெயிலிலும் பனியிலும் மழையிலும்
கருகி இருகி கரைந்து
நீ சம்பாதிக்கும்
அந்த காகிதத்தால்
உதடு இளித்தாளும்
உள்ளம் வலிக்கிறது...

எந்திர பறவை நிலையத்தில்
நீ கொண்டு வரும்
தொலைக்காட்சி பெட்டி
கணிப்பொறி பெட்டி
இதர பல பொருட்களின் இடையிலும்
கண்கள் உன்னை தான்
தேடுகின்றன முதலில்...

நீ கொடுத்த சென்டிலும்
உன் வியர்வையை நுகரும் மனைவி...
வெளிநாட்டு ஆடையிலும்
உன் உதிரம்அறியும் உடன்பிறந்தோர்..
பத்து கிலோ பெருத்தாலும்
"என்னப்பா இப்டி இளச்சுட்ட?"
என்று கேட்கும் தாய்...
இவர்களை எல்லாம் விட
உனக்கு அந்நிய மண்ணில்
கிடைத்து விடபோவது என்ன??
பணமா? பொருளா?

நீ அங்கிளா, அப்பாவா
என்று உன்
மகனுக்கு தெரியச்செய்ய
அந்த பணமும் பொருளும்
போதாது உனக்கு!
பாசம்-
உலகில் நிலையானது இது தான்...

அந்நியனின் அடிவருடியாய்
அங்கே காட்டிய அதே முனைப்பை
இங்கு இந்தியாவில் காட்டு..
அன்பின் அருமையும்
காதலின் கருணையும்
அருகில் இருக்க
பணம் ஒரு பொருட்டா?

சற்றே சிந்தி...
என்ன இல்லை இங்கு?
தொழில் இல்லையா?
வேலை இல்லையா?
நிம்மதி இல்லையா?
இருக்கிறது
இங்கே எல்லாம் இருக்கிறது...
இருப்பதைஎல்லாம் இங்கே விட்டுவிட்டு
நீ இருட்டில்
வெளிநாட்டில்
தேடுவது எதை?

உலகிற்கே கணிதத்தையும் வான சாஸ்திரத்தையும்
கொடையளித்த இந்த தேசம்
ஆயிரம் ஆண்டுகள் வன்கொடுமையால்
கொள்ளையடிக்கப்பட்ட இதே தேசம் தான்
இன்று
உனக்கு இருக்க இடமும்
உயர படிப்பும் கொடுத்தது...

செய்நன்றி மறந்தவனுக்கு
உய்வில்லை என்று
சபிக்கிறான் வள்ளுவன்...
செய்நன்றி மறவாதே...
உன்னை உயர்த்திய தேசத்தை
நீ உயர்த்த வேண்டாமா?
வெளிநாட்டான்,
வேலைக்கு நம்மை நாட வேண்டாமா?
உலகின் தலைஎழுத்தை
நிர்ணயிப்பவர்களாக நாம்
மாற வேண்டாமா?
வேண்டும்.. எல்லாம் வேண்டும்...
அதற்கு
சேர்ந்து உழை, இந்திய மண்ணில்
நம் புகழை பொறி உயர விண்ணில்...

சொர்க்கமே என்றாலும்
தமிழா!
அது நம்மூர போல வருமா?!?!?!

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One