விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Monday, March 15, 2010

எங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் நம்ம கோபிநாத் தெரிஞ்சார். பய இன்னைக்கு நம்மள எப்பிடி கடுப்படிக்குரான்னு பாக்கலாமேனு அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதன் பெயர் நிஜமா, குற்றமா என்று தெரியவில்லை. பெயர் தெரியாதது நிஜம்; ஆனால் அது ஒன்றும் குற்றமில்லையே?! மறு ஒளிபரப்பு என்று நினைக்கிறேன்.

வழக்கம்போல நித்யானந்தர் பற்றிய ஒரு கேவலமான வணிகரீதியான நிகழ்ச்சி. ஐந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பொறுமையாக பார்க்க முடிந்தது. நித்யானந்தர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், எல்லாரும் சுற்றி சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் ஒரு விஷயம் 'ஹிந்து மதம் ஏமாற்றுக்காரர்களின் கூடாரம்' என்பதை தான். மதம் என்பதே ஏமாற்றுக்காரர்களின் கண்டுபிடிப்பு தான். அதில் ஹிந்து மதத்தை மட்டும் இணைத்து கிறித்துவமும் இஸ்லாமும் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்கிறது என்று தெரியவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் சொன்ன ஒரு வாசகம், "ஏசுநாதரும் புத்தரும் மக்களை வழி நடத்தி சென்றார்கள்; ஆனால் அவர்கள் ஆன்மிகத்தை வைத்து யாரையும் ஏமாற்றவில்லை" என்று. என்ன ஒரு ஒப்பீடு பாருங்கள்? இப்போது உள்ள சாமியார்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாமியார்களை இணைக்கிறார்கள்! அதுவும் பிற மத ஆட்களை தான் இணைக்கிறார்கள்; அப்போது இவர்களுக்கு ஹிந்து மதம் கண்ணுக்கு தெரியவில்லை போலும். ஏன் அதே காலகட்டத்தில் தானே தன் மன்னன் பதவியை துறந்து ஆன்மிகத்துக்கு வந்தார் இளங்கோ? புட்டபர்த்தி சாய்பாபாவை கண்கட்டி வித்தைக்காரர் என்று சொல்கிறார்கள்; அவர் செய்ததை போல தானே அன்று ஒரு தட்டு மீனையும் அப்பத்தையும் ஒரு ஊரே உபயோகப்படுத்த தானும் கண்கட்டி வித்தை செய்தார்? அப்படியென்றால் அவரும் ஒரு சாமியார் தானே?

கோபிநாத்தின் அடுத்த வாக்கியம் :"நீதிபதிகள் போல ஆன்மிகவாதிகளின் சொத்து கணக்கையும் கேட்க வேண்டும்". அது ஹிந்து ஆன்மிகவாதிகளுக்கு மட்டும் தானா, இல்லை தினகரன் குடும்பத்தார், மோகன்.சி.லாசரஸ் போன்றோர்களுக்குமா? அவர்கள் சொத்துக்கணக்கை கேட்டால் அது மைனாரிட்டி மக்களின் உரிமைகளில் தலையிடுவது போலாகாதா? ஐயோ, அப்போ நமது மத்திய மாநில அரசுகளின் இறையாண்மை என்னவாவது?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஊழலைப்பற்றி எந்த டிவியிலாவது இப்படி வாய் கிழிய பேசினார்களா? இதே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கல்லூரியில் நடந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? ம்ம்ம் சொல்ல மறந்துவிட்டேனே, விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பெயர் அந்தோனியாம். ஏதோ தான் ஒரு நடுநிலைவாதி மாதிரி காட்டிக்கொள்கிறார். சென்ற மாதம் நாடார் (அவர் சார்ந்த ஜாதி) மக்கள் நடத்திய கூட்டத்திற்கு சென்று ஜாதி முன்னேற்றத்திற்கு உரை நிகழ்த்தியுள்ளார். ஏன் இந்த வெளி வேஷம்?

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் கலைஞர்களுக்கு தமிழ் மதம் என்று ஏதும் கிடைக்கவில்லையோ? ஆமாம், தமிழனின் வாழ்கை முறையே தெரியாமல் இங்கு ஒருவர் புத்தாண்டை தை மாதத்தில் கொண்டாட வழியுறுத்தும் போது நான் என்ன செய்ய? அறுவடை நேரத்தை பொங்கலிட்டு கொண்டாடியும், பயிர் செய்து தொழிலை ஆரம்பிக்கும் போது அதை புது ஆண்டாக கொண்டாடுவதும் தான் தமிழனின் வாழ்க்கை முறை. அதுவே தெரியாமல் இங்கு இருக்கிறார் ஒரு தமிழின தலைவர்.

எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன:
ஏன் நிஜம், குற்றம் போன்ற நிகழ்ச்சிகளில் ஊழல் செய்யும் பிற மதத்தலைவர்களையும், வீடு வேலைக்காரி முதல் கர்த்தருக்கும் ஊழியம் செய்யும் பெண் வரை கற்பழிக்கும் பாதரியையும் பற்றி செய்திகள் போடுவதில்லை?
பல ஹிந்து மத கோவில்களை (வருமானம் அதிகம் என்பதற்காக) அரசுடைமையாக்கியவர்கள், ஏன் புகழ் பெற்ற பிற மத புனிதத்தலங்களை அரசுடைமையாக்கவில்லை?
மூட நம்பிக்கை (ஹிந்து மதத்தில் உள்ளவை மட்டும்) பற்றி இவளவு பேசும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் தங்கள் சேனலில் தினமும் ஜோசியக்காரனையும், சாமியார்களையும் காலையில் அழைத்து பேச வைக்கிறார்கள்? (நித்யானந்தா சிக்கியதே இந்த மாதிரி ஒரு பிரச்சனையால் தான் என்பது கேள்வி!)

பின்குறிப்பு:
என்னை ஹிந்து மத அனுதாபியாக நீங்கள் நினைத்தால் அது ஓரளவிற்கு சரி, அதே நேரத்தில் நான் சாமியார்களுக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. தவறு என்பது எல்லா இடங்களிலும் உண்டு, அதையும் சுட்டிக்காட்டுங்கள் என்பதே என் வாதம்.


38 comments

  1. அசத்துங்க . நான் உங்க கட்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள் என நினைக்க கூடாது. ஒரு புறம் பழனி மலையின் ரகசியத்தை தொடராக வெளியிடுவார்கள், மறுபுறம் அவனின் கோவணத்தையே உருவி விடுவார்கள்.

    அவர்களுக்கு பணம் முக்கியம். எல்லோரும் மதிக்கும் மதத்தினைப் பற்றி விவாதம் செய்ய போது எதிர்ப்போ ஆதாரவோ அவர்களின் வருமானத்தை கூட்டிடும்.

    வருமானமில்லாத அதை எதிர்ப்பார்க்காத பத்திரிக்கையாளர்கள் நாம். எனவே அந்தப் பணிகளை நாம் செய்வோம். ஜிகாத், சவுக்கடி, மரணதண்டனை, குண்டுவீச்சு, இனவெறி என மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது. உங்களால் முடிந்தவரை அம்பலப் படுத்துங்கள்.

    அன்பே சிவம்.

    ReplyDelete
  3. காலத்தே தேவையான முக்கியப் பதிவு, வாழ்த்துக்கள்
    சில காவியுடை அணிந்த பொறுக்கிகளால் இந்து மதமே இப்படியானதுதான் என மீடியாக்கள் மட்டும் அல்ல,பதிவுலகில் உள்ள பலருமே தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிச்சப்படுத்தி வரும் வேளையில் உங்களின் பதிவு முக்கியமானதே.

    இவர்கள் நடுநிலை வாதிகளாம்? அநியாயத்தை எதிர்ப்பவர்களாம்,நாத்திக வாதிகளாம் இன்னும் பல பல போலி முகத்திரை அணிந்து இந்து மதத்தை மட்டுமே தாக்கும் களவாணிகள்.
    இவர்கள் கண்களுக்கு வேறு தவறுகள் தெறியாது,உதாரணமாக
    1950 களில் தொடங்கி 1990வரை ஜெர்மானிய கத்தோலிக்க ஆலயங்களில் சிறுவர்கள் மீது பாதிரிகளால் நடத்தப்பட்ட செக்ஸ் புணர்ச்சிகள் பற்றிய செய்திகள்,அதில் இன்றைய போப் பெனடிக்டின் சகோதரரே சம்பந்தப்பட்டிருப்பது.

    கிருஸ்துவத்தின் தலைமைப்பிடமான ரோமில்,பாதிரிகளுக்குள் நடக்கும் ஓரின சேர்க்கைகள்,தலைமைப் பாதிரிகளின் இச்சையை தீர்க்க இளம் வாலிபர்களை தேர்வு செய்து அவர்களை விருந்தளிப்பது.

    இவையெல்லாம் என் கற்ப்பனையில் வடித்தவை அல்ல,பிரபல த நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வந்து பரபரப்பாக பேசப்படும் செய்திகள்.

    இந்த செய்திகளைப் பற்றிய பதிவை விரைவில் விரிவாக என்னுடைய தளத்தில் எழுத இருக்கிரேன்

    ReplyDelete
    Replies
    1. Krithava naadana americavil ivaru seithi veliyida mudium.. .aanal ingu sai babavin homosex patri seithi veliyida mudiuma.. this is the difference

      Delete
  4. இந்து மதத்துக்கு வக்காலத்து நானும் வரேன்.
    அது ஏன் எந்த ஒரு விசயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கிறது உங்களுக்கு தெரிய மாட்டேன்கிறது?

    ReplyDelete
  5. காலத்தே தேவையான முக்கியப் பதிவு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி மதுரை சரவணன்.. கை கோர்ப்போம் நாம்..

    ReplyDelete
  7. அப்படியா ஆனந்தன்? அதைப்பற்றி நீங்களும் கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டுங்கள், இந்த மரமண்டைகளுக்கு.

    ReplyDelete
  8. சகிப்பு தன்மை மிக்க ஹிந்து மதம் , சாமியார்களோடு , விஜய் டிவி யையும் சகித்து கொள்ளும்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!
    அஹோரியின் கருத்தை ஆமோதிக்கிறேன்...

    விவேகானந்தரைப் படியுங்கள் - இந்த விடயம் பற்றியெல்லாம் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
  10. nanum unga katchi than thalaivare! kalakitinga!

    ReplyDelete
  11. நல்ல அலசல்.. இங்கே யாரும் நடுநிலை வாதிகள் இல்லை நண்பரே.. பாவம் அந்த சேனலின் வியாபார வட்டத்திற்குள் கோபி சிக்கி விட்டாரே... அவரும் என்ன செய்வார்..? அது அவர் தொழில்.. அவரை வளர்த்து விட்டதும் அதே சேனல் தானே.. விசுவாசம் யாரை விட்டது..

    ReplyDelete
  12. ஒரு திருட்ன் மற்றவர்களை பார்த்து அவர்களும் திருடுகிறார்கள் அதலால் நான் செய்வது ஞாயம்
    என்பதுபோல் இருக்கிறது உங்கள் கூற்று,,ஒரு அயோக்கியன் ஒரு புனிதமான சாந்தமான இந்து மதத்தையெ கேவலப்படுத்துகிறான்,,,அதை நான்
    துடைதெறிவேன் என்று சொல்லுங்கள்,,உங்கள் மதத்தில் தவறுகள் நடக்காதவாறு,,,தவறு செய்பவனுக்கு சரியான செருப்படி கொடுங்கள்,,
    அப்படி செய்தால் மற்ற மதத்தவனும் வறிந்து கட்டிக் கொண்டு உங்கள் மதத்தை பேணி பாதுகாப்பான் அதை விடுத்து அங்கே அது நடக்கவில்லையா?!! இங்கே இது நடக்கவில்லையா?!!! என்று வீண்விவாதம்
    நடுத்துவதில் யாருக்கு என்ன லாபம்,,இல்லை
    இதனால் உங்கள் மத்த்தின் மேல் விழுந்த கறை ம்ரைந்து,,மதம் வாளர்ழ்து விடப்போகிற்தா,,
    ஒரு மதத்தின்மேல் உள்ள கறையை அந்த மதமேதான் பொறுப்பேற்று களைய வேண்டுமே
    தவிற மற்ற மதத்தில் உள்ள்க் குறைகளை சொல்லி வாதமிடுவதால் அந்த மதம் வளர்ந்துவிடப்போவது இல்லை,,அது எந்த மதமாக இருந்தாலும் சரி,,

    ReplyDelete
  13. நண்பா நூற்றுக்கு நூறு உண்மை. நாங்க நெனச்சதை நீங்க சொல்லிடிங்க

    ReplyDelete
  14. No Mydear friends,I respect ur feelings,It was happened.so they showed.Once if it happened in Muslim or christian community,then u see how they tearing the trouser.,Their ambition is to make trp rate high and money and money only.

    ReplyDelete
  15. Well said Mr.moulefrite!!!!!!!

    ReplyDelete
  16. நன்றி moulefrite .. நான் நித்தியானந்தாவிற்கு வக்காலத்து வாங்கவில்லை, அவன் (அவர்) செய்தது சரி என்றும் சொல்லவில்லை. ஹிந்து மதத்தில் நடக்கும் சிறு விஷயங்களையும் ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள் மற்ற மதத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
    //"அங்கே அது நடக்கவில்லையா?!! இங்கே இது நடக்கவில்லையா?!!! என்று வீண்விவாதம்
    நடுத்துவதில் யாருக்கு என்ன லாபம்" //
    நல்ல கேள்வி. என் நாட்டின் முதல்வர் செய்வதை தான் நானும் செய்கிறேன். அவர் மட்டும் கேரளம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என்று ஒப்பிடும் போது ஒரு சாதாரண குடிமகன் நான் அப்படி செய்ய கூடாதா?: அவர நிறுத்தி தன் தவறை திருத்த சொல்லுங்க, நான்திருந்துறேன்...

    ReplyDelete
  17. இந்த செய்தியை பாத்து எனக்கு கோபம்கோபம்மாக வருது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!தயவு செய்து இந்த செய்தியை மக்களுக்கு கொண்டு சென்று போராடவைக்கணும்?

    ReplyDelete
  18. //இவளவு பேசும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் தங்கள் சேனலில் தினமும் ஜோசியக்காரனையும், சாமியார்களையும் காலையில் அழைத்து பேச வைக்கிறார்கள்?

    இது ரொம்ப நாளாவே எனக்கு மனதில் இருக்கு. நாளைக்கே பெரும் பணம் கிடைக்கும் என்றால் இதே நித்யானந்தாவை தங்கள் நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள்.

    ரொம்ப நெருங்கிடீங்க. நான் விருதுநகர்.

    படிச்சு பாருங்க
    http://balapakkangal.blogspot.com/2010/03/blog-post_06.html

    ReplyDelete
  19. //என்னை ஹிந்து மத அனுதாபியாக நீங்கள் நினைத்தால் அது ஓரளவிற்கு சரி, அதே நேரத்தில் நான் சாமியார்களுக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. தவறு என்பது எல்லா இடங்களிலும் உண்டு, அதையும் சுட்டிக்காட்டுங்கள் என்பதே என் வாதம். //

    நம்ம நினைப்பும் இதுவே!

    ReplyDelete
  20. your view and post is right.
    we have nithyanadhas in print media, visual media too.

    ReplyDelete
  21. you opinion is strongly right.i joint with you

    ReplyDelete
  22. சாட்டையடி பதிவு தோழரே...

    இந்த கேள்விகளை கேட்கும் யாரும் இந்து மதவாதி, போலி ஆத்திகன் என்ற முத்திரை குத்தப்படுவர்...

    அவர்கள் உங்களை நோக்கி வீசும் கேள்விக்கணைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்... தவறி போய், நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டால், தொலைந்தீர்கள்...

    கடவுள் மறுப்பு என்பது தற்போது இந்து கடவுள்களுக்கு மட்டுமே உரித்தாகுகிறது...

    இது வேதனை...

    www.jokkiri.blogspot.com

    www.edakumadaku.blogspot.com

    ReplyDelete
  23. nalaike publisityum panamum kidaikum endral intha tv channels, news pappers, nakkeran ,juniour vikatan ,reporter pondra bussiness magnetlam petra ammavaiye video eduthu podum alavirku panapaithiyam pidithavarkal.

    ReplyDelete
  24. kovilkal koodathenru solla villai
    kovilkal kodiyavarkalin koodaram ahi vida koodathu enru than solkiren.......

    Engo epotho ketathu

    ReplyDelete
  25. SABAS UNKAL KARUTHTHU SARIYE THODARUNKAL VAZHTHTHUKAL
    KRISHNA

    ReplyDelete
  26. சரி வாதம்.தோழரே...

    roja

    ReplyDelete
  27. well done my friend.

    ReplyDelete
  28. jeyandran kolai vazhakku, devanathan attuzhiyam, ithil inaithu hindhuvai ninaivutti irukkalam. arunagiri cbe.

    ReplyDelete
  29. நம்ம கமெண்ட்ஸ்'க்கு இடம் பத்தாது.. நம்ம பேஜ்'அ விசிட் பண்ணிடுங்க..

    http://sohndesmonds.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  30. Hi friend,
    I fully accept what Mr.Moulefrite said earlier.
    Friend , i dont know, What is ur anger against other religion?????.
    I wish to quote what u said"
    'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே,"

    What u have said in the post is similar to the above words u said.

    Please dont show your finger pointing to the otherside. Onething, you please dont forget, if u show ur finger pointing to the otherside u can see 3 fingers pointing towards you.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. சிவகாசி நண்பரே!!!நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.

    ReplyDelete
  33. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி


    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Utube videos:
    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    www.youtube.com/watch?v=FOF51gv5uCo


    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One