ஜாதி வேண்டும்...

Tuesday, February 19, 2013

தலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்துல நமக்கு ஆதரவா ஒரு புள்ள கொரல் குடுக்குது?’ என ஆர்வத்தோடு வந்திருக்கும் என்னைப்போன்ற உண்மையான பிற்போக்குவாதிகளுக்கும், ‘கொஞ்ச நாளா ஓஞ்சிருந்த பிரச்சனைய திரும்ப ஆரம்பிக்கப்போறானா?’ என ஆர்வக்கோளாறில் வந்திருக்கும் நட்டநடுநிலைவாதிகளுக்கும் வணக்கம்.. நான் இங்கு ஜாதி ஏற்றத்தாழ்வு, இட ஒதுக்கீடு என எதைப்பற்றியும் பேசப்போவதில்லை!!! ஜாதிய கோட்பாடுகளில் இருக்கும் நன்மையை (அது உங்களுக்கு நன்மையாக தெரியவில்லை என்றால் ஜாதிய கோட்பாடுகளில் எனக்கு சரி என்று படுபவைகளைப் பற்றி என நினைத்துக்கொள்ளுங்கள்) பற்றி சொலல்விருக்கிறேன்.

ஜாதி என்றால் என்ன? அது எப்படி அமைக்கப்பட்டது? தலையில் துவங்கி கால் வரை ஒவ்வொரு பார்ட்டிலும் இருந்து ஒரு ஜாதியை நாரதர் உருவாக்கினார் என ஜாதியின் ஹிஸ்ட்ரி & மிஸ்ட்ரி பற்றி எல்லோருக்கும் ஏற்கனவே ஓரளவுக்கு தெரிந்திருப்பதால் அதற்குள் போகாமல் கம்முனு டைரக்ட்டா கட்டுரைக்குள் போகலாம். இன்று ஜாதியை எதிர்க்கும் பலரும் சொல்வது, ஜாதி என்றாலே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என பல தீய விசயங்களைத்தான். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். என் கேள்வி, எதில் தான் வேறுபாடு இல்லை? பிறப்பிலேயே ஆண் பெண் வேறுபாடு இருக்கிறது.. அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒழித்துவிட்டு ஒரே இனமாக கொண்டு வந்துவிடலாமா? சொத்தின் மூலமும் செல்வத்தின் மூலமும் வேறுபாடு இருக்கிறது.. அதனால் யாருமே சொத்து வைத்திருக்க கூடாது என சொல்லலாமா? மதத்தின் மூலம் உலகமே ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு குண்டு வீசும் சூழலில் இருக்கிறது.. மதமே வேண்டாம் என சொல்லிப்பாருங்கள்..

  

நான் இங்கு ஜாதிய வேறுபாடு வேண்டும் என சொல்ல வரவில்லை. பிறப்பு, மதம், செல்வம் இவற்றில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு இருந்தாலும் மதமே வேண்டாம் என்றும், ஆண் பெண் என இல்லாமல் நியூட்ரலாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் சொல்லாமல், மக்களின் மனதை ’எதிலும் வேறுபாடு இல்லை’, என ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம், வர முயற்சி செய்கிறோம்.. அப்படி இருந்தும் சில இடங்களில் பெண் சிசுக்கொலை நடக்கத்தான்  செய்கிறது. போன மாதம் டைம் ஆன்லைன் கட்டுரையில்இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு பெண் சிசுக்கொலைகளும் முக்கிய காரணம் என சொல்கிறார்கள். (http://ideas.time.com/2013/01/04/rape-in-india-a-result-of-sex-selection/?iid=obinsite)..  அதே போல் இப்போதும் பல இடங்களில் ஜாதி வன்முறை நடக்கத்தான் செய்கிறது, பெண் சிசுக்கொலைகள் போல சரியான வழிகாட்டுதல் இல்லாததால்.. அதற்காக ஜாதியே கூடாதென்று சொல்லாமல் ஜாதிய வேறுபாடு பார்க்கக்கூடாது என மக்களுக்கு புரியவைக்கலாம்.

என்ன தான் பேசினாலும் ஜாதியை ஒழித்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் ஜாதி வெறியை இன்னும் தான் அதிகரிக்கும். அதிலும் இந்த பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர், ஜாதி எதிர்ப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே எப்போதும் தாக்குவர். சமீபத்தில் நடந்த விஸ்வரூபம் பிரச்சனையில் ரஜினி அவர்கள் கமலுக்கு செய்த உதவியில் கூட, “பார்ப்பனீயம்” இருக்கிறது என நோண்டி ஆராய்ந்தவர்கள் அவர்கள். அந்த தாக்குதலில் இல்லாத ஜாதி வெறியா பிறரிடம் வந்துவிடப்போகிறது? அப்படி வசைபாடுவதை விட்டுவிட்டு, எளிதாக “மதம் என்பது வீட்டு பூஜை அறை வரை; ஜாதி என்பது வீட்டு வாசல் வரை” (courtesy: Paul Pown Raj) என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடுமே? ஆனால் செய்ய மாட்டார்கள். கலகம் முடித்துவிடவில்லை எனில் பகுத்தறிவுக்கு மதிப்பு இல்லையே?


இங்கு பகுத்தறிவாளர்கள் பலரும் சொல்வது என்ன? ஜாதி மனிதனை பிரிக்கிறது என்கிறார்கள். ஜாதியால் ஒற்றுமை இல்லை என்கிறார்கள். இன்னும் இது போல் பல காரணங்கள். இவர்கள் ஒற்றுமை என எதை சொல்ல வருகிறார்கள் என தெரியவில்லை. ஒற்றுமை தான் எல்லாரிடமும் இருக்கிறதே.. என் நண்பர் குழுவில் பலரும் என் ஜாதியோ என் மதமோ கிடையாது. ஆனாலும் இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது அவர்கள் தான். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். நண்பன் புகைத்த தம்மை தான் ஒரு ஃபப் வாங்கி இழுக்கும் நட்புக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது. என் வேற்றுமத & வேற்று ஜாதி நண்பர்களின் அம்மா, அப்பா, சகோதரி எல்லோரையும் நானும் அம்மா, அப்பா, தங்கச்சி என்று தான் சொல்கிறேன். அவர்களும் அப்படியே. பின் எப்படி ஜாதிகளுக்குள் ஒற்றுமை  இல்லை என இவர்கள் சொல்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை ஒற்றுமை என்பது, இன்னொரு ஜாதியில் திருமண பந்தம் கொண்டிருப்பது தான் போல.. நீங்கள் வேறு ஜாதிக்காரரோடு வித்தியாசம் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் பகுத்தறிவுக்கு போதாது. உங்கள் வீட்டு பிள்ளைகளையும் அவர்களுக்கு கட்டி வைத்தால் தான் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதாக இந்த பகுத்தறிவு செம்மல்கள் ஒத்துக்கொள்வார்கள். பகுத்தறிவு என்பதே திருமணத்தை மறுக்கிறது.. ஆனால் அதே பகுத்தறிவு தான், திருமணத்தின் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும் என்கிறது. என்ன ஒரு விந்தை இது?

அதே போல் ஜாதி இல்லை, மதம் இல்லை என கோசம் போடுபவர்களில் தான் பெரும்பான்மையோர் மொழி வெறியர்களாகவும், இனத்தீவிரவாதியாகவும் இருக்கிறார்கள்.. ஜாதியும் மதமும் சக மனிதன் மேல் துவேசத்தை வளர்க்கிறது என்று சொல்லும் இவர்கள் தான், மொழி வேறுபாட்டாலும் இன வேறுபாட்டாலும் பிறரை தூற்றுகிறார்கள். வேற்று மதத்திலோ ஜாதியிலோ திருமணம் செய்து கொண்டால் ஜாதியும் மதமும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் ஒழியும் என்று சொல்லும் இவர்கள் தான் இலங்கையில் வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒரே இனமாக இருக்க தமிழர்களையும் சிங்களவர்களையும் கலக்க அந்த அரசு செய்யும் முயற்சிகளை எதிர்க்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் பகுத்தறிவு இலங்கையில் அதே கலப்பு திருமணத்தை எதிர்க்கிறது.. அதற்காக இலங்கையில் நடப்பதற்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என அர்த்தம் இல்லை. இலங்கையில் நடப்பதை தப்பு என சொல்லும் இவர்கள் இங்கு மட்டும் அதே தவறை சரி என எப்படி சொல்கிறார்கள் என கேள்வி தான் கேட்கிறேன்.



அதே போல் இவர்களின் ஜாதி வித்தியாசம் எல்லாம் இந்து மதத்திற்குள் மட்டும் தான்.. சர்ச்சுகளில் நடக்கும் ஜாதி பேதங்களைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.. திறந்தால்? சிறுபான்மையினர் உரிமை என்னாவது? மதுரைக்கு தெற்கே கிறிஸ்தவர்கள் தங்கள் ஜாதிக்குள் தான் திருமணம் செய்துகொள்வார்கள். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியின் கிராமங்களில் ஜாதிவாரியாக சர்ச் இருந்ததாக கூட சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிருக்கிறேன்.. சில சர்ச்சுகளில் தலித்துக்களை கூரை போட்டு தனியாக அமர வைத்திருப்பார்களாம்.. மதுரைக்கு வடக்கே கிறிஸ்தவர்களிடம் இந்த அளவுக்கு ஜாதி பேதம் இல்லையென்றாலும், ஒரு பிறபடுத்தப்பட்ட கிறிஸ்தவர் தாழ்த்தப்பட்டவருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கிறிஸ்தவ மதம் இன்னும் பக்குவப்படவில்லை. அதே போல் தான் இஸ்லாமும்.. ராவுத்தரை பொறுத்தவரை லெப்பை மட்டம் தான்.. பட்டானிக்கு, ராவுத்தர் லெப்பை இருவரும் மட்டம் தான்.. லெப்பை, ராவுத்தர், பட்டானிக்கு இடையில் திருமண பந்தம் கிடையாது. ஒரே ஜாதியில் கல்யாணம் செய்தால் குதிக்கும் இவர்கள், ஒரே குடும்பத்தில் ஒன்று விட்ட சகோதரியை சகோதரனை கல்யாணம் செய்துகொள்பவர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏனென்றால் சிறுபான்மையினர் நம் நாட்டில் மருமகள்கள் போல்.. மண்சட்டியும் அவர்கள் கை பட்டால் பொன் சட்டி தான்..

சரி, நான் முந்தைய பத்தியில் கலப்பு திருமணத்தை தவறு என்று சொன்னதால் சிலருக்கு கேள்வி எழலாம், ‘அதெப்படி கலப்பு திருமணத்தை தவறு என நீ சொல்லலாம்?’ என்று.. நான் முதலிலேயே ஒன்றை சொல்லிவிட்டேன். ஜாதி என்பது என் வீட்டு வாசல் வரை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் அந்த எண்ணத்துடன் நான் அடுத்து சொல்லப் போவதை படியுங்கள். என் வீட்டு வாசலை நான் தாண்டியவுடன், என் நண்பனை, என் தொழில் நிமித்த ஆட்களை பார்க்கும் போது எனக்கு ஜாதி, மதம் எல்லாம் ஞாபகம் வராது. ’சரி, அவர்களிடம் தான் நீ ஜாதி பார்ப்பதில்லையே, பின் ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்வதில்லை?’ எனக்கேட்டால், என் பதில், “ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும்?” என பதில் கேள்வியாகத் தான் இருக்கும்.. இலங்கையில் தமிழனுக்கு என்று சில பழக்க வழக்கம் , சடங்கு, கலாச்சாரம் இருக்கிறது. அவனை சிங்களவனோடு கலக்கும் போது தமிழனின் அடையாளமும் பழக்க வழக்கமும் சிதைந்து போகும் என நினைப்பது சரி என்றால், இங்கு நானும் அப்படி நினைப்பது சரியே.

என் வீட்டிற்கு என்று என் குடும்பத்திற்கு என்று சில பழக்க வழக்கங்கள் இருக்கும். எங்கள் குடும்பங்களில் பெண் ஊரில் தான் திருமணம் நடக்கும். பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். சில ஜாதிகளில் மாப்பிள்ளை வீட்டில் தான் இந்த சடங்குகள் எல்லாம் நடக்கும். ஒரு சில ஜாதிகளில் மணமக்களின் பெற்றோர் மேடையில் அமர்ந்து மாற்றி மாற்றி மரியாதை செய்துகொள்வர். சில சமூகங்களில் மணமக்களின் தாய்மாமன்கள் இதை செய்வர். மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்து கொண்டு தாலி கட்டும் ஜாதியும் இருக்கின்றன, மாப்பிள்ளைக்கு மிஞ்சி (மெட்டி) போடும் ஜாதியும் இருக்கின்றன. சிலர் மஞ்சள் கயிரில் தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மூன்று முடிச்சு போடுவார்கள். சில ஜாதிகளில் தங்க சங்கிலியில் தாலியை கோர்த்து, அதை கட்டாமல் அணிவிப்பார்கள். முக்குலத்தோர் இல்ல திருமணங்களில் கெடாய் விருந்து இருக்கும். வேறு சில ஜாதி திருமணங்களில் சைவம் மட்டுமே பிராதானம். அதுவும் நகரத்தார் வீட்டு கல்யாணங்களில் நுங்கில் பாயாசம், இளநீரில் மோர் என நாம் கற்பனையே செய்து பார்த்திராத ரகங்களில் 16 வகை 18 வகை என பதார்த்தங்கள் இருக்கும். பிராமணர் வீட்டு திருமணங்கள் அவர்களுக்குரிய நலங்கு, ஜானவாசம் என 6, 7 விசேசங்களோடு நடக்கும். எங்கள் குடும்ப கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் போது பெண் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்பது அவ்வளவு அழகு. 26, 51 என ஆரத்தியிலேயே மாப்பிள்ளையை மயக்கம் அடையச்செய்யும் ஆட்கள் எல்லாம் உண்டு. இதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இரு வீட்டினரும் மிகுந்த சந்தோசத்தோடு பகை, கவலை, வஞ்சகம் என அனைத்தையும் மறந்து தங்கள் இல்ல திருமணத்திற்காக மாய்ந்து செய்வது இதெல்லாம்.



கலப்பு திருமணத்தில் இதெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாது.. சரி, கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் இரு வீட்டு சடங்குகளையும் செய்யலாமே என்றால் அதுவும் சரி வராது. ஒத்த கருத்துள்ள, ஒரே மாதிரியான சடங்குகள் கொண்ட இரு குடும்பங்கள் திருமணம் செய்யும் போதே எவ்வளவு களேபரங்கள்? இதில் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் என்றால் மனஸ்தாபம் தான் மிஞ்சும். அப்படி மனஸ்தாபம் இல்லாமல் எல்லாம் சுபமாய் முடிந்தாலும், இரண்டு சடங்குகளும் கலந்து, திரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்று ஆகிவிடும். இந்து கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஜாதியிலும் ஒவ்வொரு வரைமுறை செயல்முறை இருக்கிறது. கலப்பு திருமணம் மூலம் அந்த வரைமுறையும் செயல்முறையும் போய் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்னும் புள்ளியில் வந்து நிற்கும். வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்றால், எதற்கு காலம் காலமாக இவ்வளவு உறவினர்களும் கொண்டாட்டங்களும், மகிழ்ச்சிகளும்? உறவினர்கள் நம் கல்யாண செலவை பகிர்ந்து கொள்ள, கொண்டாட்டங்கள் உறவை இன்னும் பலமாக்க, இப்படி ஒற்றுமையாக அனைவரும் கூடும் போது வரும் மகிழ்ச்சி தான் உண்மையான சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கொடுக்கும்.



திருமணத்தில் மட்டும் அல்ல. குல தெய்வ வழிபாட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. சிலர் ஆடு வெட்டுவார்கள், சில குல தெய்வம் சைவமாய் இருக்கும். சில குல தெய்வங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு பொதுவானவையாய் இருக்கும். எங்கள் குல தெய்வம் 4 ஜாதிகளுக்கு உரியது. அதில் தலித் சமுதாயமும் ஒன்று. அங்கெல்லாம் நாங்கள் ஒற்றுமையாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம். 

சரி நான் ஏன் இவ்வளவு பேசுகிறேன் என்றால் கலப்புத்திருமணங்களால், ஜாதியை ஒழிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. கலப்புத் திருமணம் என்று மட்டும் அல்ல, எதனாலும் ஜாதியை ஒழிக்க முடியாது. ஒரு முதலியார் பையன் செட்டியார் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் எப்படி ஜாதி ஒழியும்? அவர்களின் குழந்தை முதலியாராகவோ செட்டியாராகவோ தான் இருக்கும். ஒரு நாடார் வீட்டு பெண் தலித் ஆணை மணந்து கொண்டால் அவர்களின் குழந்தை ஜாதி அடையாளம் இல்லாமல் வளர்க்கப்படுமா? அதனால் கலப்புத்திருமணங்கள் ஜாதியை என்றும் ஒழித்துவிடாது. மாறாக நான் சொன்னது போல் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளை ஜாதி வித்தியாசம் பார்க்காமல் நண்பர்களோடு பழக விட வேண்டும். சில நேரங்களில் அந்த நட்பில் காதலும் வரலாம். அப்போது தன் பிள்ளை அந்த காதலின் மூலம் வருங்காலத்தில் நன்றாக இருப்பான்/ள் என பெற்றோர்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக செய்யலாம். ஆனால் மீண்டும் சொல்கிறேன் அதனால் ஜாதி ஒழியாது. ஜாதி வேறுபாடு வேண்டுமானால் மறையும். ஜாதி வேறுபாடு மறைய கலப்புத்திருமணம் என்பது கொஞ்சம் ரிஸ்க்கான தேர்வு தான். ஒழுங்கான பழக்க வழக்கங்கள் மூலமாகவே ஜாதி வேறுபாட்டை கலையலாம்.

ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கலைந்து ”நான் ஒரு மனிதன், மனிதாபிமானி” என எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒருவன் அப்படி வாழ நினைத்தால் அவனை இத்தனை வருடம் ஆளாக்கி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது சங்கடத்தை கொடுக்கலாம். அவன் ஒருவனின் புரட்சிக்காக அவர்களை ஏன் அவன் சங்கடப்படுத்த வேண்டும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் ஜாதி வேறுபாடு பார்க்காமல் வளர்வதில் என்ன வந்துவிடப்போகிறது? தனி மனிதனாக, ‘இது என் பெர்சனல் யாரும் இதில் தலையிடாதீர்கள்’ என எல்லோரும் வாழ ஆரம்பித்தால் யாருக்குள்ளும் ஒற்றுமை இருக்காது. ஜாதி என்பது ஒரு சிறு குழுவாக மக்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுவும் இல்லை என்றால் மக்கள் இன்னும் அதிகமாக அடித்துகொண்டு தான் இருப்பார்கள்.

அதே போல் நம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கிறது. அது நமது பாரம்பரியம். உலக நாடுகள் இந்தியர்களையும் இந்திய கலாச்சாரத்தையும் உயர்ந்தது என இது போன்ற நமது பழக்க வழக்கங்களை வைத்து தான் சொல்கிறது. அந்த அடையாளங்களை எல்லாம் இழந்து நாம் வெறும் புரட்சி மட்டும் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு தெரிந்து புரட்சி பேசிய யாரும் தங்கள் குடும்பத்தை சந்தோசமாக வைத்திருந்தது இல்லை, அன்றைய சாக்ரடீஸ், ஹிட்லர், பகத்சிங்கில் இருந்து இன்றைய என் நண்பர்கள் சிலர் வரை. அதே போல் மக்களை பகுத்தறிவு என்னும் பெயரில் தூண்டி விடும் எவராலும் தன் வீட்டில் கூட அந்த பகுத்தறிவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.



முடிவாக, உலகில் இருக்கும் எல்லோருக்கும் தான் சார்ந்த தன் இனம்/மதம்/குலம் சார்ந்த பெருமை இருக்கத்தான் செய்யும். தமிழன் என்றால் சிலருக்கு சிலிர்க்கும், யாராவது கிறிஸ்தவ பாடல் பாடுவதை கேட்டாலே சிலருக்கு கண்ணீர் வரும், ரோட்டில் திருமண ஊர்வலம் செல்லும் கூட்டத்தை பார்த்தால் தன் சொந்த பந்த ஞாபகம் வரும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் தன் ஜாதி, மொழி, மதம் சார்ந்த அபிமானம் இருக்கத்தான் செய்யும், ஒரு நாத்திகனுக்கு இன்னொரு நாத்திகன் மேல் அபிமானம் இருபப்தைப்போல. அதனால் கலப்புத்திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கான வழி அல்ல. மக்களுக்குள் ஒற்றுமை இருந்தாலே போதும். அந்த ஒற்றுமை என்பதை நம் குடும்பத்திற்குள் இருந்து ஆரம்பிப்போம். நம் பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்காமல் பழைமையை மறக்காமல் வாழ்வோம். ஜாதி, மதம் என்பதை நம் வீட்டு வாசல் வரை மட்டும் வைத்திருப்போம். முன்பே சொன்னது போல் ஜாதி என்பது சிறு குழுக்களுக்குள் ஒற்றுமையாக வாழ படைக்கப்பட்டவை. அந்த சிறு குழுக்கள் தன்னை போன்ற இன்னொரு சிறு குழுவின் மீது ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அதே நேரத்தில் தன் பழக்க வழக்கத்தையும் விடாமல் நட்போடு பழக ஆரம்பித்தாலே போதும், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நாமும் நம் சுற்றமும் பிள்ளைகளும் ஜாதி மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவோம்.. ஜாதிகள் வேண்டும் நம் பழக்க வழக்கங்கள் நம்மை விட்டுப்போகாமல் இருக்க...

தொடர்புடைய இந்த பதிவுகளையும் நீங்கள் ரசிக்கலாம்..

சசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க?

சரத்குமாரும் நாடார்களும் ஜாதியும் பின்ன ஞானும்..

வம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..

 

 


105 comments

  1. ***என்ன தான் பேசினாலும் ஜாதியை ஒழித்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.***

    மறைந்த ஐயா டோண்டுவும் இதையேதான் சொல்லிண்டு இருந்தார்.

    ***ஜாதி, மதம் என்பதை நம் வீட்டு வாசல் வரை மட்டும் வைத்திருப்போம்.***

    இப்போ வீதிக்கு ஏன் இழுத்து வந்தீர்? தமிழ்மணம் வீடுவோ உம் தெருவோ அல்ல! அது உலகம்! ஜாதியை வீதிக்கு இழுந்து வந்ததுகூட புரியாமல் பேசிக்கொண்டு இருக்கீர்!

    ReplyDelete
    Replies
    1. //மறைந்த ஐயா டோண்டுவும் இதையேதான் சொல்லிண்டு இருந்தார். // இப்போது தான் பதிவுலக அறிமுகம் கிடைத்துக்கொண்டிருப்பதால் எனக்கு ஐயாவை பற்றி தெரியாது..
      //இப்போ வீதிக்கு ஏன் இழுத்து வந்தீர்? தமிழ்மணம் வீடுவோ உம் தெருவோ அல்ல! அது உலகம்! ஜாதியை வீதிக்கு இழுந்து வந்ததுகூட புரியாமல் பேசிக்கொண்டு இருக்கீர்!// நான் எந்த ஜாதியையும் இங்கு தூக்கி வைத்துக்கொண்டு பேசவில்லை. நீங்கள் சக்கரை என்று பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு, அதை நக்கி நக்கி “இனிப்பாக இருக்கிறது” என்று சொல்பவர் போல.. தமிழ்மணத்திலோ எங்கோ என் கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.. அந்த கருத்திற்கு பதில் சொல்லுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் கருத்து சுதந்திரத்திற்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்.. என்னமோ நான் ஜாதி வேறுபாட்டை ஆதரிப்பது போல் பேசிக்கொண்டிருக்கிறீகள்? முழுதாக படித்தீர்களா?

      Delete
  2. நல்ல பதிவு.உங்களின் உள்ளக்குமுறல் புரிந்துகொள்ள முடிகிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன் :-)

      Delete
  3. ***ஒரு நாத்திகனுக்கு இன்னொரு நாத்திகன் மேல் அபிமானம் இருபப்தைப்போல***

    கமலஹாசன் ஒரு நாத்திகன். அவர் மேலே எனக்கு எந்தவித நல்ல அபிப்பிராயமும் கெடையாது. நானும் நாத்திகன் தான். ஒருத்தன் நாத்திகன் என்பதால் இன்னொரு நாத்திகனுக்கு அபிமானமெல்லாம் வராது!

    அதேபோல் ஒரே சாதியை சேர்ந்து இருந்தாலும், ஒருவன் கழிவுபட்டவனாக, தரங்கெட்டவனாக இருந்தால், அவனை அந்த சாதிக்காரங்களே வெறுக்கத்தான் செய்வாங்க!

    உண்மை ஒருபுறமிருக்க, நீங்க என்னத்தையோ ஒளறிக்கிட்டு இருக்கீங்க.

    காமராஜை சாதியை மட்டும் பார்த்து தமிழ் மக்கள் அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தால், அவர் முதல்வராகவே ஆயிருக்க முடியாது. காமராஜ் ஒரு மைனாரிட்டி சாதியைச் சேர்ந்தவர். பிற சாதிக்காரங்க, காமராஜின் சாதியைப் பார்க்காமல் ஓட்டுப் போட்டதால்தான் அவர் முதல்வரானார். அதைப் புரிந்து கொள்ளும்.

    ReplyDelete
    Replies
    1. நான் எந்த இடத்திலும் தவறு செய்தாலும் சொந்த ஜாதிக்காரன் என்றால் அவனை ஆதரிக்க வேண்டும் என சொல்லவில்லையே? உங்கள் பகுத்த்றிவுக்கு மட்டும் நான் சொல்லாததெல்லாம் தெரிந்திருக்கிறது போல.. வாழ்க பகுத்தறிவு..

      இன்னும் காமராஜர் கால அரசியலையே பேசிக்கொண்டிருக்கிறீகளே? காமெடி தான்.. //காமராஜ் ஒரு மைனாரிட்டி சாதியைச் சேர்ந்தவர்// அந்த ஜாதிக்காரர்களிடம் சொல்லிவிடாதீர்கள், பொங்கி விடுவார்கள்.. தமிழகத்தில் அந்த ஜாதியினர் ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. //காமராஜின் சாதியைப் பார்க்காமல் ஓட்டுப் போட்டதால்தான் அவர் முதல்வரானார். அதைப் புரிந்து கொள்ளும்.// காமராஜர் என்ன 2011 தேர்தல்ல ஜெயிச்சா முதல்வர் ஆனாரு? 1950கள்ல நடந்ததையே இன்னும் உளறாமல் நிதர்சனத்தை புரிந்துகொண்டு சுயநினைவுக்கு திரும்புங்க பாஸ்...

      Delete
    2. //கமலஹாசன் ஒரு நாத்திகன். அவர் மேலே எனக்கு எந்தவித நல்ல அபிப்பிராயமும் கெடையாது.// - சாதி வேண்டும் என்று சொல்பவர்கள் கூட பிற பிரிவினரிடம் சுமூகமாக பழகிவிடுவார்கள்.. நாத்திகவாதிகள் தான் நாத்திகத்தை தாண்டி அவன் என்ன சாதி என்று பார்க்கிறார்கள்.. கமல் மேல் அபிமானம் வராததற்கு காரணம் அவரின் நாத்திகத்தை தாண்டி அவரை ஐயங்கார் born ஆகப்பார்ப்பதுதான்..

      Delete
    3. //கமல் மேல் அபிமானம் வராததற்கு காரணம் அவரின் நாத்திகத்தை தாண்டி அவரை ஐயங்கார் born ஆகப்பார்ப்பதுதான்..// இது வேறயா? ஆனா இந்த நாத்திகர்கள் தாங்க மொத ஆளா எவன் என்ன ஜாதின்னு கண்டு புடிச்சு ஊருக்கு சொல்லுவாங்க.. நீங்கள் சொல்வதும் உண்மை தான்.. நாத்திகர்கள் பலரும் கமல் என்ன தான் தன் படங்களில் இந்துக்களையும் தான் சார்ந்த ஜாதியையும் அசிங்கமாக பேசினாலும் அவரை மதிக்கவே மாட்டார்கள்..

      Delete
    4. ****சாதி வேண்டும் என்று சொல்பவர்கள் கூட பிற பிரிவினரிடம் சுமூகமாக பழகிவிடுவார்கள்.. நாத்திகவாதிகள் தான் நாத்திகத்தை தாண்டி அவன் என்ன சாதி என்று பார்க்கிறார்கள்.. கமல் மேல் அபிமானம் வராததற்கு காரணம் அவரின் நாத்திகத்தை தாண்டி அவரை ஐயங்கார் born ஆகப்பார்ப்பதுதான்..***

      அப்போ பல அய்யங்கார் வகுப்பை சேர்ந்தவா, கமலஹாசன் வாழ்க்கை முறை, ஒளறும் வியாக்யாணங்கள் பிடிக்காமல் அவரை வெறுத்தால் என்ன சொல்லுவீர்?

      அவன் நாத்திகன் என்பதால் அய்யங்காருக்கு பிடிக்கவில்லை என்றா?

      ஏதாவது மாத்தி மாத்தி (நாத்திகன், அய்யங்கார்னு) ஒளறிக்கிட்டே திரிய வேண்டியதுதான்!

      Delete
    5. ***இன்னும் காமராஜர் கால அரசியலையே பேசிக்கொண்டிருக்கிறீகளே? காமெடி தான்.***

      இதிலென்ன காமெடி? இன்னைக்கு இருக்க சாதி அன்று இல்லையா? முதுகுளத்தூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடந்த சாதிக்கலகங்களை உங்க "ஐயா'ட்ட கேட்டு தெரிந்து கொள்ளும்! அப்போவும்தான் சாதி வெறி தலை விரித்தாடியது.

      Delete
    6. ///தமிழகத்தில் அந்த ஜாதியினர் ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்..///


      We all know the strength of nadar community in TN. Do your math and get back here! They are minority when you compare them with mukkulathOr and vanniyar and even dalits as a whole. If they all looked at Kamaraj as a "nadar" and "not belonging to their community" and DID NOT VOTE for him, he never would have become a CM!

      Delete
    7. நீங்கள் ஏன் என் பதிவை புரிந்துகொள்ளாமல் காள் காள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? எனக்கு திருநெல்வேலி முதுகுளத்தூரில் நடந்தவையும் தெரியும்.. எங்கள் ஊரில் நடந்ததும் தெரியும்.. இப்போது அந்த விசயங்களை ஏன் பேச வேண்டும் என்று தான் கேட்கிறேன்.. ஜாதி சண்டை போட்டவன் கூட அதை மறந்து ஒற்றுமையாக பழகினால் உங்களைப்போன்றவர்கள் விட மாட்டீர்கள் போல.. பழையதை கிண்டி நன்றாக சண்டை மூட்டி விடுவீர்கள்.. வாழ்த்துக்கள்..
      //We all know the strength of nadar community in TN. Do your math and get back here!// நான் சொல்வதை முழுசா புரிஞ்சிக்கிட்டே பேச மாட்டீங்களா பாஸ்? நானா அந்த கணக்கை சொன்னேன்? ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாக சொல்கிறார்கள் என்று தான் சொல்கிறேன்.. முதலில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள்.. எந்த ஜாதியில் எத்தனை பேர் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டிருப்பது என் வேலை இல்லை.. அதையெல்லாம் உங்களைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் நன்றாக கணக்கு பார்த்து சிண்டு முடித்துவிடுவீர்கள்.. செய்யுங்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்க கூடாது என்று தான் நானும் சொல்கிறேன்.. இதற்கு மேலும் என் பதிவில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை முழுதும் புரியாமல் உளறிக்கொட்டி என் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்..

      Delete
  4. ஜாதிகள் இருப்பது தவறில்லை. நான் உன்னை விட உயர்ந்த ஜாதி என்று நினைக்கும்போது தான் பிரச்சினை ஆரம்பம் ஆகிறது.

    ReplyDelete
    Replies
    1. அதே தான்.. அதையே தான் நானும் சொல்கிறேன்.. நான் மற்ற ஜாதிக்காரனோடு ஒற்றுமையாகத்தான் இருக்கிறேன்.. அந்த ஒற்றுமையை நான் அவனோடு சம்பந்தம் செய்து தான் நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை.. ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் வேறுபாடு பார்க்காமல் பழகினாலே ஜாதி வேறுபாடு குறைந்துவிடும்..

      Delete
    2. அருமை நண்பரே உங்களுடைய நிலைப்பாடு மிகசரியானது

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சரியான மற்றும் வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்ட வரவேற்க்கப்படவேண்டிய பதிவு..

    //* அதிலும் இந்த பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர், ஜாதி எதிர்ப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே எப்போதும் தாக்குவர். *// ரொம்ப சரி..

    //* ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளை ஜாதி வித்தியாசம் பார்க்காமல் நண்பர்களோடு பழக விட வேண்டும் *// சாதிய வேறுபாடுகளை களைய சரியான தீர்வு.. இப்படி நடந்தால் சாதியம் தன்னால் ஒழியும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்பு :-) நீங்களாவது நான் சொல்ல வருவதை ஓரளவு புரிந்து கொண்டீர்களே

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஒரு "நட்டநடுநிலைவாதி" யாகத்தான் வாசிக்க வந்தேன்.வாசிச்சு முடிச்சவுடன் "நட்டநடுமத்திசென்டர்நிலைசன்னல்கதவுபயங்கரதீவிரவாதி" யா மாறிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஏங்க அப்படி? அவ்ளோ கடுப்பாவா இருக்கு?

      Delete
    2. "நட்டநடுமத்திசென்டர்நிலைசன்னல்கதவுபயங்கரதீவிரவாதி"

      ##
      :) :) :D :D

      Delete


  9. சாதி எனபது செய்யும் தொழில்,வாழும் இடம்,யாரோடு பழக வேண்டும்,யாரோடு பழக கூடாது,யாரை மதிக்க வேண்டும்,யாரை மதிக்க கூடாது என்ற பல விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று.அதை வெறும் திருமனதிர்க்குள் அடைப்பது சரியா.ஒரே சாதிக்குள் தான் ஆன்,பெண் தொடர்பு இருக்க வேண்டும் என்று எப்போதும் இருந்தது கிடையாது.அதனால் தான் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகள்.
    வர்ணத்தை வைத்து திருமணம் இருந்தது.அதிலும் தனக்கு கீழ் உள்ள வர்ணங்களில் இருந்து ஆண்கள் பெண் எடுக்க எந்த தடையும் கிடையாது.
    சாதியின் அடித்தளமே செய்யும் தொழில் தான். அது ஆட்டம் கண்டு உடையவில்லையா. இப்போது இருப்பது சாதிகளை வைத்து குழுக்கள் உருவாக்கி அரசியல் சக்தி பெற நடக்கும் விளையாட்டு தான்.


    http://www.namboothiri.com/articles/bhrashtu.htm

    எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்
    அவர் தந்தை சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்
    அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.
    One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.

    http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

    சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்

    அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்
    அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்
    சாதியை விட்டு விலக்கப்பட்டாலும்,ஊரை விட்டு ஒதுக்கப்பட்டாலும் அவருக்கு கீழ் சாதியில் பெண் கிடைப்பது எளிது தான்

    இது தான் சாதி
    சாதி என்பதே அடக்குமுறை தான்
    உயர்ந்த சாதி தனக்கு கீழ் உள்ள சாதிகளை அடிமைகளாக நடத்தும் உரிமை உள்ளது
    அதற்கான சட்டங்களும் அன்று இருந்தன

    ReplyDelete
    Replies
    1. //உயர்ந்த சாதி தனக்கு கீழ் உள்ள சாதிகளை அடிமைகளாக நடத்தும் உரிமை உள்ளது
      அதற்கான சட்டங்களும் அன்று இருந்தன// நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் சொல்கிறேன் சார்... ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு நானும் வக்காலத்து வாங்கவில்லை.. எல்லோரு வேறுபாடு பார்க்காமல் அவரவர் பாதையில் அமைதியாக சென்றாலே பிரச்சனை இருக்காது என்று தான் சொல்கிறேன்

      Delete
  10. பல நூற்றாண்டுகளாக சாதிக்குள்ளயே திருமணங்கள் நடந்தது போல பலர் பேசுவது வியப்பளிக்கிறது
    அந்த வழக்கம் வெறும் உயர்சாதி பெண்களுக்கு மட்டும் தான்
    தன வர்ணத்திற்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்தவர்களை ஆண்கள் மணந்து கொள்ள எந்த தடையும் இருந்தது இல்லை
    தனக்கு கீழ் உள்ள சாதிகளில் இருந்து பெண்களை மூன்றாவது தாரமாக,இல்லை வைத்து கொள்வதோ சில வருடங்கள் முன் வரை சாதாரணமான வழக்கம்

    ஜெமினி கணேசனும் கலைஞரும் உறவினர்கள்.ஜெமினியின் தாத்தா புதுகோட்டை திவான் மனைவி இறந்ததும் கலைஞரின் அத்தையை குழந்தைகளை பார்த்து கொள்ள வைத்து கொண்டார்.அவர் மகள் தான் தேவதாசி தடை சட்டத்திற்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    எந்த சாதி பெண்ணை வேண்டுமானாலும் வைத்து கொள்வது உயர்சாதியினருக்கு மிகவும் சுலபமாக இருந்த ஒன்று

    இசை மூவர் என்று அழைக்கப்பட்ட மூவரில் D K பட்டம்மாள் பற்றி படியுங்கள்.

    damal krishnasamy pattammaal /madurai shanumugavadivu subbulakshmi /madras lalithaangi vasanthakumaariPattammal was born in an orthodox Brahmin family in Kancheepuram of Tamil Nadu, India.[4] She was named as Alamelu, but fondly called “Patta” as a child prodigy.[5][6] Her father, Damal Krishnaswamy Dikshithar, who was deeply interested in music, inspired her to learn Carnatic music.[7] Her mother, Kanthimathi (Rajammal), although a talented singer herself, was not permitted to sing even for friends or relatives in line with strict orthodox tradition.[7] Despite her orthodox background, Pattammal sang and showed considerable music talent at an early age.[4]

    மெட்ராஸ் லலிதாங்கி /மதுரை சண்முகவடிவு /முத்துலட்சுமி ரெட்டி எல்லாம் சம காலத்தவர்.அவர்களின் தந்தை பிறந்த சமூகத்திலா அவர்கள் வந்தனர்.
    இவர்கள் பெரிய கலைஞராக விளங்கிய அதே காலததவரான DK பட்டம்மாள் அவர்களின் தாயார் பாட கூட அனுமதியில்லாத நிலை ஏன்.
    திராவிட இயக்கம் வந்ததால் இவர்களின் தந்தை என்று google செய்தால் ஒரு பெயர் வருகிறது.
    மதுரை ஷண்முக வடிவுவின் தாயார் அக்கம்மாள் என்று தானே எவ்வளவு google செய்தாலும் வருகிறது

    திரு எம் எஸ் அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தாரே அவர் எந்த சாதியில் வருவார்

    ReplyDelete
    Replies
    1. அந்தக்காலத்தில் ஜாதிய வன்முறையும் ஒடுக்குமுறையும் இருந்தன.. இன்னும் அதை பேசியே பகைமை பாராட்டிக்கொண்டிருந்தால் யாருடனும் நாம் பழகவே முடியாது சார்

      Delete
    2. ஒரே சாதிக்குள் தான் திருமணம் செய்தார்கள் என்று நீங்கள் தானே கூறுகிறீர்கள்.அப்படி ஒரே சாதிக்குள் திருமணம் எனபது கடந்த இரு தலைமுறைகளில் தான் எனபது தானே உண்மை.இப்போது இருக்கும் சாதிகளுக்கும் சென்ற நூற்றாண்டில் இருந்த சாதிகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
      எண்ணிக்கைகாக பல சாதிகள் நாம் ஒன்று தான் என்று ஒன்றாக இணைவது கடந்த இருவது வருடங்களில் நடைபெறும் ஒன்று.பெண் எடுத்து பெண் கொடுக்காத சாதிகள் கூட நாம் ஒரே இனம் என்று கூகுரைல்டுவது எதற்காக
      உட்பிரிவுகள் பார்க்காதே எனபது எதற்காக

      தனக்கு கீழ் உள்ள சாதியை/வர்ணத்தை சார்ந்த பெண்களை மணக்க எப்போதும் தடை இருந்தது இல்லை. அதனால் தான் எல்லா சாதியிலும் கருப்பு,சிவப்பு,மாநிறம்,வெள்ளை எல்லாம்
      நல்ல விஷயங்களை அந்தந்த சாதிகளுக்கு மட்டும் தனித்தன்மையாக பார்ப்பது சரியா.நல்லது என்றால் அனைவருக்கும் தானே பொதுவாக வேண்டும்.மருத்துவமோ ,இளநீர் மோரோ

      Delete
  11. சாதிகள் ஏதோ ஏற்ற தாழ்வுகள் இல்லாத ஒரே அலுவலகத்தில் இயங்கும் பல பிரிவுகள் போன்ற ஒன்று,அவசியமானது என்று எழுதும் போது,சாதிக்கும் போது எதிர்வினையாக சாதியின் கொடுமைகளை பட்டியலிடுவது தவறா
    உயர் சாதி ஆணுக்கு பெண்களை தூக்கி செல்ல சாதி தடை கிடையாது எனபது சாதி உருவாகிய காலத்தில் இருந்து உண்டு.

    பல தார மணம்(நாலு ,ஆறு என்று எந்த வித கட்டுப்பாடு கூட கிடையாது )என்பதும் வெகு சமீபத்தில் தான் அம்பேத்கர் புண்ணியத்தில் தவறு என்று ஹிந்டுத்வர்கள் எதிர்ப்புகளை மீறி சட்டத்தில்
    சேர்க்கப்பட்டது
    திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக வைத்து கொள்வது (இப்போது தான் நீதி மன்றங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் உரிமைகள் உண்டு,குழந்தைகள் திருமணமாகாமல் பிறந்தவர்களாக இருந்தாலும் உரிமை உடையவர்கள் என்று தீர்ப்பு வழங்க துவங்கியுள்ளன )உயர்சாதி ஆண்களுக்கு சாதி வழங்கிய உரிமை

    கேப்மாரி,சூரமாரி,பறையன்,பல்லன்,பள்ளி,சாணான்,பங்கி .சக்கிலியன்,கள்ளன் போன்ற சாதி பெயர்கள் உயர்சாதியினரால் வசவு சொற்களாக பயன்படுத்தப்பட்டவை ,பயன்படுத்தபடுகிரவை .
    இப்படி இருக்கும் போது எல்லா சாதியையும் ஒன்று தான்,ஏற்ற தாழ்வு இல்லை என்று எழுவது தவறல்லவா

    ReplyDelete
    Replies
    1. ஏற்றத்தாழ்வு இல்லை என நாம் வேறுபாடு பார்க்காமல் இருந்தால் தான் முன்னேற முடியும் என நான் நினைக்கிறேன் சார்.. இன்னும், ‘இவன் ஐயர், உயர்ந்தவன், இவன் சக்கிலியன் தாழ்ந்தவன்’ என நினைத்து பழகிக்கொண்டிருந்தோமானால் நம்மை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.. அவர்களையும் நமக்கு சமமாக நினைக்க வேண்டும்.. அதே நேரத்தில் எனக்கென்று என் குடும்பத்திற்கென்று இருக்கும் பழக்க வழக்கங்களையும் நான் பின்பற்றுவேன் என் வீட்டிற்குள் மட்டும்.. இது தான் என் கருத்து சார்

      Delete
  12. nice article .. இந்து நாடாரும் கிறித்தவ நாடாரும் திருமண உறவு வைத்துக்கொள்கிறார்கள்.. நாடாராக இருந்தால் போதும்.. மதத்தை பார்ப்பதில்லை.. சாதியை ஒழித்தால் மதத்தை ஒழித்துவிடலாம் என்கிற பெரியாரின் வாதம் தோற்றுப்போயிருப்பதையும் சொல்லி இருக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.Ajith M S.. // சாதியை ஒழித்தால் மதத்தை ஒழித்துவிடலாம் என்கிற பெரியாரின் வாதம் தோற்றுப்போயிருப்பதையும் சொல்லி இருக்கலாம்..// சாதியையும் ஒழிக்க முடியாது.. மதங்களையும் ஒழிக்க முடியாது.. மக்கள் அதை துவேஷமாக வளர்க்காமல் இருக்கும் வரை எல்லாமே நல்லது தான்..

      Delete
    2. பல மதங்கள் மறைந்திருக்கின்றன,பல புதிதாக தோன்றி இருக்கின்றன
      பல சாதிகள் ஒன்றாகி உள்ளன.பல சாதிகள் ஒன்றிலிருந்து பிரிந்திருக்கின்றன
      இவை அனைத்தையும் அறியாமல் பேசுவது வியப்பு தான்
      அடுத்த கிராமத்தை கூட வெளிநாடாக பார்த்த நிலை சில ஆண்டுகள் முன் வரை இருந்தது.குறிப்பிட்ட சில மைல்களுக்குள் மட்டும் வாழ்ந்து ,அதை தாண்டி நண்பன்,உறவினர் யாரும் இல்லாத நிலை தான் பெரும்பாலான மக்களின் நிலையாக இருந்தது .இன்று அப்படியா .

      Delete
    3. சார் ஒன்னும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு கொடி பிடிக்கவில்லை.. நீங்கள் அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் ப்ளீஸ்.. எனக்கென்று சில சடங்குகள் இருக்கின்றன.. அது எனக்கு பிடித்திருக்கிறது.. அதை நான் பின்பற்றுவது எப்படி நான் மற்ற ஜாதிகளை மட்டமாக பார்ப்பது போலாகும்?

      Delete
  13. I didn’t know all the cultural elements attached to the caste starting with food to several other things.
    Diversity is in our culture, and we have to feel lucky about it.

    However, I knew that few characters / behaviors are often associated with certain communities.
    Well all of them are not necessarily bad, but we don’t really have to be bound by it, if they are bad.

    And yes I agree with Ram, to set good examples for kids and should not restrict kids in to a circle of single caste or religion

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Sam அவர்களே.. அதாவது நம்மை போன்ற ஆத்திகரள் புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருக்க நினைத்தாலும் நாத்திகரகளுக்கு அது பிடிக்காது.. ஏனென்றால் அவர்கள் பிழைப்பு அடுத்து நடக்காது அதான்.. நம் ஒவ்வொருவரின் கலாச்சாரமும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தது தான்.. நாம் அதை இன்னொருவரின் மேல் திணிக்காமல், வேறொருவரோடு ஜாதி பேதம் பார்க்காமல் பழகுவதே நாம் சக மனிதனுக்கு செய்யும் மரியாதை.. சக மனிதனுக்கு அந்த மரியாதை என்றால், நம் குடும்பத்துக்கு நம் பாரம்பரியங்களை மதித்து மரியாதை கொடுக்க வேண்டும் அவ்வளவு தான் :-)

      Delete
  14. இந்த பதிவு நீங்கள் நிச்சயமாக தான் பிறந்த சாதி பற்றி உயர்வாக நினைப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது . நீங்கள் உங்களை பற்றி உயர்வாக நினைப்பதற்கு காரணம் . தன்னை விட கீழான சாதி இந்த நாட்டில் இருக்கிறது என்று நம்புவதால்தான். அந்த எண்ணம் அந்த வேற்றுமை கட்டிகாக்க படவேண்டும் என்று சொல்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் பழக்க வழக்கங்கள் மாறுபடும் என்று சொல்லும் நீங்கள் . 50 வருடங்களுக்கு முந்தைய அதே பழக்க வழக்கங்களையா இன்று நடைமுறைப்படுத்துகிறார்கள் . உண்மை என்னவென்றால் உடை, பேச்சு, என பல விசயங்களில் தங்களுக்கு சௌகரியமான மாற்றங்களை கொண்டுவந்துவிட்டார்கள். சொல்லப்போனால் ஒரே சாதியில் ஏழைகள் ஒரு மாதிரியும் பணக்காரன் ஒரு மாதிரியும் சடங்குகள் செய்வார்கள் தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல், அடுத்த சாதியை சேர்ந்த ஆணையோ பெண்ணையோ திருமணம் செய் என்று கட்டயபடுதுவதுபோல் உள்ளது உங்கள் கருத்து . அந்த திருமணத்தை எதாவது ஒரு காரணம் சொல்லி தடுக்காதீர்கள் என்கிறேன் நான், வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் அவர்கள் குழந்தை என்ன சாதி ? அங்கு எதற்கு சாதி? தேவை இல்லை. இதுதான் பெரிய பிரச்சினை என்பது போல் உள்ளது உங்கள் வாதம். உங்கள் வாதம் பணம் பணத்தோடு சேர வேண்டும் என்று சொல்லும் வாதம் போல் உள்ளது. தன் சுய சாதி, மதம் குறித்த பெருமை மாற்று சாதி, மதம் இழிவானது என்று நினைப்பில் இருந்து பிறக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //நீங்கள் உங்களை பற்றி உயர்வாக நினைப்பதற்கு காரணம் . தன்னை விட கீழான சாதி இந்த நாட்டில் இருக்கிறது // ஓ என் பொண்டாட்டி பத்தினி என்று சொன்னால் மற்றவன் பொண்டாட்டி எல்லாம் ஒழுக்கம் கெட்டவள் என்று அர்த்தமா? அதே போல் நான் என் ஜாதி எதுவென்றும் இங்கு சொல்லவில்லை, என் ஜாதியை உயர்வாகவும் எங்கும் சொல்லவில்லை..
      //சொல்லப்போனால் ஒரே சாதியில் ஏழைகள் ஒரு மாதிரியும் பணக்காரன் ஒரு மாதிரியும் சடங்குகள் செய்வார்கள் // நிச்சயமாக இல்லை.. கொஞ்சம் திருமண சடங்குகளை பார்த்துவிட்டு சொல்லுங்கள்..
      //தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல், அடுத்த சாதியை சேர்ந்த ஆணையோ பெண்ணையோ திருமணம் செய் என்று கட்டயபடுதுவதுபோல் உள்ளது உங்கள் கருத்து .// நீங்களாக எதையாவது கற்பனை செய்துகொண்டு உளறினால் நான் என்ன செய்வது? இப்படி நான் எங்கே கூறியுள்ளேன்?
      //வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் அவர்கள் குழந்தை என்ன சாதி ? அங்கு எதற்கு சாதி? தேவை இல்லை. // இப்படி ஒரு குடும்பத்தை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம்.. பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதி அங்கு வந்துவிடும் ப்ரதர்.. ப்ரேக்டிக்கலாக பேசுங்கள்..
      // தன் சுய சாதி, மதம் குறித்த பெருமை மாற்று சாதி, மதம் இழிவானது என்று நினைப்பில் இருந்து பிறக்கிறது.// ஆமா ஊரில் இருப்பவனை எல்லாம் கெட்டவன் போல் பேசி தங்களை நல்லவனாக காட்ட நினைக்கும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்.. DOT

      Delete
    2. ’’ஜாதி இல்லை என சாதி’’ என்று சொல்ல வேண்டிய மக்கள் கூட ’’ஜாதி யால் உண்டு நீதி’’ என்ற நிலைக்கு சில அரசியல் வாதிகள் இழுத்து வந்து விட்டார்கள் அவர்கள் பின்னால் செல்லும் மக்களுக்கு உங்களுடைய யதார்த்தமான உணர்வும் உண்மையும் புரியவில்லை ராம்

      Delete
  15. எனது நண்பர்களுக்கு என்னுடைய சாதி - முடி திருத்தும் சாதி என்று தெரியும்.
    பெரியார் என்ற பெருமகனால் நானும் பொறியியல் படிக்க முடிந்தது, சிறப்பான வேலை உள்ளது. இருப்பினும் நண்பர்கள் சாதி சொல்லி அடுத்தவரிடம் பேசும் போது குறுக வேண்டியுள்ளது. மேலும் எதை பேசும் போதும் சாதியை வைத்து ஒரு உதாரணம் சொல்லும் போது சங்கடம் ஏற்படுகிறது. அவரவருக்கு இந்த வலி உண்டு. கீழ் சாதி என்று பல காலமாக இழிவு படுத்த பட்டதால் இப்படி உள்ளது. இன்று 50 வயதாகியும், இப்போதும் உள்ளது. இதெல்லாம் இல்லை என்பது பம்மாத்து. அடிபட்டவனுக்கு தான் வலி தெரியும். இதே வலி என் குழந்தைகளுக்கும் உண்டு. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். மற்றவனை எழ முடியாத படி அடக்கி ஒடுக்குவது, எப்படியோ எழுந்து விட்டால், நேர்மையாக உழைத்து அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் சாதி சொல்லி இழிவு படுத்துவது. எவ்வளவோ உயர்வு பெற்ற மொழி பேசும் தமிழனாக இருந்தும், இன்றும் சாதி உயர்வு போற்றி பேசும் தமிழர்களை நினைத்தால் வேதனையாக உள்ளது. மானமில்லா மனிதர்கள் உள்ள இந்த சமுக அமைப்பை காறி துப்ப தோன்றுகிறது.
    அடுத்தவர்களை வெட்கமில்லாமல் இழிவு படுத்தி விட்டு பூசை,பழக்க வழக்கம், நுங்கில் பாயசம்... .

    ReplyDelete
    Replies
    1. உணமையிலேயே மிகுந்த வருந்தத்தக்க விசயம் சார்.. நண்பர்களே அப்படி பேசினால் அவர்கள் உண்மையான நண்பர்களா என எனக்கு தெரியவில்லை.. நம்மை அப்படி நினைப்பவர்களை நாம் ஒதுக்கி விட வேண்டும்.. கண்டுகொள்ளக்கூடாது.. நாம் நம் வேலையை செய்துகொண்டு அப்படிப்போன்றவர்களை தாண்டி முன்னேறிக்கொண்டு செல்ல வேண்டும்

      Delete
    2. உணமையிலேயே மிகுந்த வருந்தத்தக்க விசயம் சார்.. நண்பர்களே அப்படி பேசினால் அவர்கள் உண்மையான நண்பர்களா என எனக்கு தெரியவில்லை.. நம்மை அப்படி நினைப்பவர்களை நாம் ஒதுக்கி விட வேண்டும்.. கண்டுகொள்ளக்கூடாது.. நாம் நம் வேலையை செய்துகொண்டு அப்படிப்போன்றவர்களை தாண்டி முன்னேறிக்கொண்டு செல்ல வேண்டும்#### எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள் ராம் குமார்? அதுதான் உங்கள் பதிவுக்கும் மேலே வந்த பின்னூட்டத்திற்கும் உள்ள வித்தியாசமே.....அந்த வலிக்கு நீங்கள் தரும் இந்த கண்டுக்காம போகணும் என்ற மருந்து சரிதானா? தவறாக பேசுபவர்களை ஒன்றும் சொல்லாமல் இவரிடம் போய் கண்டுக்காம போகணும் என்பது சரிதானா?

      Delete
    3. உணமையிலேயே மிகுந்த வருந்தத்தக்க விசயம் சார்.. நண்பர்களே அப்படி பேசினால் அவர்கள் உண்மையான நண்பர்களா என எனக்கு தெரியவில்லை.. நம்மை அப்படி நினைப்பவர்களை நாம் ஒதுக்கி விட வேண்டும்.. கண்டுகொள்ளக்கூடாது.. நாம் நம் வேலையை செய்துகொண்டு அப்படிப்போன்றவர்களை தாண்டி முன்னேறிக்கொண்டு செல்ல வேண்டும்#### எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள் ராம் குமார்? அதுதான் உங்கள் பதிவுக்கும் மேலே வந்த பின்னூட்டத்திற்கும் உள்ள வித்தியாசமே.....அந்த வலிக்கு நீங்கள் தரும் இந்த கண்டுக்காம போகணும் என்ற மருந்து சரிதானா? தவறாக பேசுபவர்களை ஒன்றும் சொல்லாமல் இவரிடம் போய் கண்டுக்காம போகணும் என்பது சரிதானா?

      Delete
  16. //ஒழுங்கான பழக்க வழக்கங்கள் மூலமாகவே ஜாதி வேறுபாட்டை கலையலாம்.//

    நீங்கள் வேறுபாடுகள் இருந்தால்தான் நல்லது என்றெழுதிவிட்டு ஜாதிவேறுபாட்டைக்கலைக்க ஏன் வழி சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  17. //ஒருவன் அப்படி வாழ நினைத்தால் அவனை இத்தனை வருடம் ஆளாக்கி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது சங்கடத்தை கொடுக்கலாம். அவன் ஒருவனின் புரட்சிக்காக அவர்களை ஏன் அவன் சங்கடப்படுத்த வேண்டும்//

    அது பெற்றொர்கள் யார்? அவர்கள் பொருளாதார நிலை, சமூகம் எப்படி என்பதையெல்லாம் பொறுத்தது. மதுரை, தேனி மாவட்டமா? முடியாது. சென்னையா? முடியும். பெற்றோர்கள் சாதாரணமானவர்களா? அவர்களிடம் முடியும்!

    நீங்கள் சொல்லும் அவர்களை ஏன் சங்கடப்படுத்தவேண்டுமென்பது பெற்றோர் ஜாதிக்கும் ஜாதி சார்ந்த சமூகத்துக்கும் பயந்து வாழ்பவராக இருந்தால் நீங்கள் சொல்வது சரி.

    தருமபுரி நிகழ்ச்சியில், அப்பெண்ணின் பெற்றோரை அப்படியே விட்டிருந்தால், அல்லது அவ்ர்கள் அங்கு வாழாதிருந்தால், அத்தகப‌பன் ஊர் வசவைக்கேட்டு தற்கொலை பண்ணாமல், தன் பெண்ணையும் மருமகனையும் ஏற்றிருப்பான். சென்னையில் வன்னியப்பெண்ணையோ வேளாளக்கவுண்டப்பெண்ணையோ ஒரு தலித்து தாராளமாக காதல் மணம் செய்யமுடியும் இருகுடும்பங்களின் ஆசிர்வாத்தினால். தில்லியில் பம்பாயில் வாழும் தமிழர்கள் இப்படியுண்டு. எப்படி சாத்தியம் அங்கே. பையன் குணக்கானா? நல்ல உத்தியோகமா? போதும்.

    தருமபுரி வன்னியத் தகப்பனைப்போலத்தான் நீங்களும். நீங்கள் வளரவேயில்லை. உங்களைச் சுற்றியுள்ள சமூகத்துக்காக ஒரு சமூகப்பூச்சியாகத்தான் வாழ்கிறீர்கள்.

    ReplyDelete
  18. //இரு வீட்டினரும் மிகுந்த சந்தோசத்தோடு பகை, கவலை, வஞ்சகம் என அனைத்தையும் மறந்து தங்கள் இல்ல திருமணத்திற்காக மாய்ந்து செய்வது இதெல்லாம். கலப்பு திருமணத்தில் இதெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாது..

    //

    உங்கள் கற்பனை. மகிழ்ச்சி என்பது சமூக எதைச்சொன்னதே அதைச்செய்வதிலிருந்து வந்தால் அது போலி. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதிலிருந்து வருவதுதான் மகிழ்ச்சி.

    நீங்கள் சொல்லும் அனைத்துச்சடங்குகளும் இந்துமதத்தில். வேறுமதத்துக்குப் போய்விட்டால், அவர்கள் எல்லாரும் ஒரேசடங்கைத்தான் அனுசரிப்பார்கள். அங்கு பலபல சடங்குகளா மகிழ்ச்சியைத்தந்தன‌? ஒரு கிருத்துவ முதலிப்பெண்ணை ஒரு கிருத்துவ தலித்துப்பையன் மணந்தால் என்ன சடங்குக்கள் வேறுவேறா? அதே போல இசுலாமியரும்.

    ஆக, உங்கள் மதம்தான் காரணம். அதே வேளையில் இந்துவாக இருந்து கொண்டும், இச்சடங்குகளே இல்லாமலும் மணம் செய்து மகிழ்ச்சியாக வாழமுடியும்.

    மனமிருந்தால் மனமுண்டு. மணமுமுண்டு.

    உங்கள் அடிமனத்தில் பயவுணர்வு அதிகம். எனவே கூட்டத்தோடு கோவிந்தா போட்டால்தான் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள். அதன் விளைவே இப்பதிவு.

    ReplyDelete
  19. //இவர்களைப் பொறுத்தவரை ஒற்றுமை என்பது, இன்னொரு ஜாதியில் திருமண பந்தம் கொண்டிருப்பது தான் போல.. //

    தவறான புரிதல்.

    கட்டாய மணப்பந்தம் செய்யவேண்டுமென எவரும் சொல்வதில்லை. அதாவது கலப்பு மணத்தைக் கட்டாயமாக்கி ஜாதிகளை ஒழிக்கச் சொல்லவில்லை.

    கலப்பு மணம் நிகழும்போது அருவாளை எடுத்து தலித்துப்பையனைப் போட்டுத்தள்ளுவதும், கிராமத்தையே கொளுத்துவதும் தவறென்றுதான் சொல்கிறார்கள். அப்படிச்செய்யும் போது கலப்பு மணம் செய்வோர் பயந்தோடுவார்கள்.

    ஏன் இதைச்செய்கிறீர்கள்? முதலில் கலப்பு மணத்தை ஆதரியுங்கள். அவை பெருகட்டும். பின்னர்தானே ஜாதி ஒழியுமா இல்லையா எனப்பார்க்கலாம்?

    பிள்ளை பெறுமுன்பே பேர் வைக்கப்பார்க்கிறீகளே? அது உயிருடன் வருகிறதா? ஆணா பெண்ண என்று இப்போதே சொல்லிவிடுவீர்களா?

    ReplyDelete
  20. //“மதம் என்பது வீட்டு பூஜை அறை வரை; ஜாதி என்பது வீட்டு வாசல் வரை” (courtesy: Paul Pown Raj) என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடுமே?//

    என்ன பிரச்சினையைப்பற்றி பேசுகிறீர்கள்? எந்தப்பிரச்சினை தீர்ந்து விடும்?

    மதம் என்பது வீட்டுப்பூஜை அறைவரை; ஜாதி என்பது வீட்டு வாசல் வரை என்பது ஒரு பக்காப் பொய்.

    ஏன்?

    ஜாதியும் மதமும் கூட்டமாக மட்டுமே அனுசரிக்கப்படுகிறது.

    ஜாதி மக்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் கூடி எதிர்க்கிறார்கள் அல்லது வாழ்கிறார்கள். அது மாறக்கூடாதென்றுதான் நீண்ட பதிவைப்போட்டு நீங்களே சடக்கென்று மாறிவிடுவதா?

    மதமும் கூட்டத்துக்குத்தான். தனிமனிதனுக்கு என்றால், அதை உங்கள் வாழ்க்கையிலேயே கடைபிடித்திருந்தால், இந்தப்பதிவு உங்கள் மனத்தில் எழுந்திருக்கவே செய்யாது.

    தனிமனித மதம் ஞானியை உருவாக்கும். ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ளைப்பிற‌ர‌ட‌மிருந்து பிரித்து த‌னிக்கூட்ட‌மாக‌ வாழ‌ ஹேது செய்யும் ச‌ட‌ங்குக‌ளை ஒரு ஞானி ஏற்க‌ மாட்டார். ம‌க்க‌ளை இணைக்கும் ச‌ட‌ங்குக‌ளையே ஏற்பார். இணைக்காதென்றால் எறிய‌ச்சொல்வார்.

    கூட்ட‌த்தில் வாழ்ந்து, கூட்ட‌த்திற்காக‌ வாழ்ந்து வ‌ரும் நீங்க‌ள் எழுதுவ‌து:

    “மதம் என்பது வீட்டு பூஜை அறை வரை; ஜாதி என்பது வீட்டு வாசல் வரை” (courtesy: Paul Pown Raj) என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடுமே?

    ந‌கைச்சுவைதானே?

    ReplyDelete
  21. I can write more; but these r enough for u today. Think deeply for a day b4 replying.

    ReplyDelete
  22. மதமும் சாதியும் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.மதம் மாறுவதால் சாதி அழியாது.புது மதம் வந்தால் சில,பல சாதிகள் ஒன்றாகி வலுவாக்கி கொள்ள கூடும்.
    எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது தனித்துவம் வாய்ந்த பழக்கங்கள்,பெருமைகள் இல்லாத சாதிகளிடம் சாதிபிரிவினை குறைந்து அல்லது அழிந்து விடும்.அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.
    கர்நாடகவிற்க்கு நானூறு ஆண்டுகள் முன் சென்ற அய்யங்கார்களோ அல்லது ஒரிஸ்ஸா எல்லையில் வாழும் பிராமணர்களோ பல நூற்றாண்டுகளாக அதே சாதியாக தான் உள்ளார்கள்.ஆனால் மற்ற சாதிகள் அங்குள்ள சாதிகளோடு ஐக்கியமாகி விடும்.
    நாயர்,எழவ சாதிகளோடு ஐக்கியமான தமிழ் சாதிகள் பல.அதே போல் தெலுங்கு பேசும் மக்களோடு புலன் பெயர்ந்து சென்றதால் தெலுகு சாதியில் ஐக்கியமான தமிழ் சாதிகள் பல உண்டு.
    தனித்து காட்டும் பழக்க வழக்கங்கள்,அதில் கொள்ளும் பெருமை தான் சாதியை தக்க வைத்து கொள்கிறது.
    பர்மாவில் வாழ்ந்து அங்கேயே தங்கி விட்ட தமிழர்களோ ,வடகிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கோ இரண்டு தலைமுறைகளுக்குள் அங்கே உள்ள குழுக்களோடு உறவுகள் ஏற்பட்டு அவர்களில் ஒருவராகி விடுவது தான் நடக்கிறது.
    பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைத்து தமிழகத்தை விட்டு பல நூறு,ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ தொடங்கியவர்களில்,அங்கேயே வீடு வாங்கி குடிபெய்ரந்தவர்களில் பிராமணர்களை தவிர்த்து மற்றவர்கள் சாதியை தொலைப்பது எளிது.

    ReplyDelete
  23. பல சாதிகளில் இப்போது வெளிநாடுகளில் வசிப்பவர் பல லட்சங்களில் இருக்கலாம்.அங்கேயே பிறந்து வளர்ந்த அவர்களின் குழந்தைகள் எவ்வளவு பேர் அதே சாதியில் திருமணம் செய்வர்.ஒரு சதவீதத்தை கூட அது தாண்டாது.இந்துவாக,இந்தியனாக இருந்தால் பரவாயில்லை என்று தான் பெற்றோர் எண்ணுவர்.சாதி வாழ அக்ரஹாரம்,சாதிக்கு ஒரு தெரு,சாதிக்கு மட்டுமே உரித்தான வேலை எனபது முக்கியம்.அவை இல்லாமல் போகும் போது அதற்க்கு சங்கு தான்.
    IAS அதிகாரிகள்,அரசியல் தலைவர்களில்/கலைஞர்களில்,பைலோட்களில்,விமான பணிப்பெண்களில் ,மருத்துவர்களில்,வெளிநாடுகளில்,வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள்,பனி புரிபவர்களில் (அனைத்து சாதி,மத மக்களுடன் சேர்ந்து படிக்க,வேலை செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்) சாதி விட்டு சாதி திருமணம் அதிகம் இருக்கும்.சாதிக்கு மட்டுமே உரித்தான தொழில்கள் புரியும் அர்ச்சகர் போன்றவர்களிடம் அது மிக குறைந்த அளவில் /அல்லது இருக்கவே இருக்காது.அனைத்து தொழில்களிலும் அனைத்து சாதிகளும் இடம் பெறும் போது,அனைவரும் ஒன்றாக ஒரே அடுக்கு மாடி குடியிருப்பு,அரசு விடுதி,வீடுகளில் குடியிருப்பது பெருமளவில் நடக்கும் போது சாதி எளிதில் வலுவிழக்கும்

    ReplyDelete
  24. இப்போது தமிழ் மொழியே தெரியாமல் தென்னாப்ரிக்காவில் வசிப்பவர்கள் யார். அவர்கள் தமிழக வம்சாவழியினர்.அவர்கள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கும் தமிழுக்கும் என்ன சமபந்தம் இருக்கிறதோ அதை விட குறைவாக தான் இப்போது சாதிக்கும் பெரும்பான்மையான மக்களுக்கும்
    சாதி என்பதே செய்யும் வேலைகளை குறிக்கும் சொல்.பிறப்பால் இவன் இன்ன தொழில் தான் செய்ய முடியும்,இன்ன செய்ய தகுதியில்லாதவன் எனபது தான் சாதியின் அடிப்படை.மருத்துவர்,பொறியாளர்,முடி திருத்துபவர்,பூஜை செய்பவர்,வணிகம் செய்பவர்,கணக்கு பார்ப்பவர்,போர் வீரர்,சலவையாளர்,மயான தொழிலாளி,ஆடை தைப்பவர் போன்றவற்றின் அடிப்படையில் உருவானது பிரிக்கப்பட்டது சாதி .

    ஒரே சாதிக்குள் திருமணம் எப்படி சாதிக்கு/வர்ணத்துக்கு முக்கியமோ(அது கூட ராஜாக்களுக்கும் ராஜகுருக்களுக்கும்,ஆண்களுக்கும் கிடையாது.நம்பூதிரிகள் வர்மா இன பெண்களை மணந்தாலும் அவர்களின் வாரிசுகள் கோவில் பணி செய்யலாம்.அவர்கள் நம்பூடிரிகலாக தான் கருதப்படுவார்கள்.ஆனால் வேறு வர்ண பெண்களை மணந்தால் அவர்கள் தாயின் வர்ணத்தை சேர்ந்தவர்கள்.தந்தையின் வர்ணத்தை மூன்று,ஐந்து,ஏழு தலைமுறைக்கு வழுவாமல் பின்பற்றினால் தந்தையின் வர்ணத்தை பெறலாம் என்று இருந்தது.ஒரே வர்ணத்துக்குள் திருமணம் என்பதில் பெரிய தடை கிடையாது.ஆண் தனக்கு கீழே உள்ள வர்ணத்தில் உள்ள பெண்ணை திருமணம் செயாவோ,வைத்து கொள்ளவோ தடை கிடையாது.பெண் செய்தால் அவர்களின் வாரிசுகள் ஐந்தாம் வர்ணமான பஞ்சமரில் தான் சேர்த்தி ) அதை விட முக்கியம் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தொழில்.அது இப்போது நடைமுறையில் இருக்கிறதா.அது மாறி விட்ட பின் யார் வேண்டுமானாலும் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்,எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்று வந்த பின் சாதியின் அடித்தளமே ஆட்டம் கண்டு விட்டது.

    ReplyDelete
  25. சாதி வலுவிழக்க அனைத்தையும் விட முக்கிய காரணம் பெண் விடுதலை,பெண் கல்வி,குடும்ப கட்டுபாட்டு முறைகளால் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு மேல் குழந்தைகள் இல்லாத குடும்பங்கள்

    படித்து கணினி பொறியாளர்,கலெக்டர்,மருத்துவர்,ராணுவ போலீஸ் அதிகாரி ,விமான பணிப்பெண்,நடிகை யாரும் கண்ணை மூடி கொண்டு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணமுடித்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுடன் படித்த ,வேலை செய்பவர்களில் மனதுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
    சாதி,மதம் இரண்டும் ஆணாதிக்கத்தின் வேர்.பெண் விடுதலை அதை வெட்டாமல் அதன் இலக்கை அடைய முடியாது.பாலியல் தொழில் செய்யும் பெண்ணை கல்லால் அடிப்பதை காப்பாற்றும் நிறுத்தும் கடவுள்கள் தான் உண்டே தவிர பல பெண்களிடம் செல்லும்/திருமணம் செய்யும் ஆணை ஓரமாக நிற்க சொல்லும் மதமோ,சாதியோ ஒன்று கூட கிடையாது.அப்படி இருந்திருந்தால் அது அக்பரின் தீன் இல்லாஹி போல ஒரு தலைமுறை கூட தாண்டாது.
    கலெக்டர் ஆக,போலீஸ் ஆக,அரசியல்வாதியாக இருக்கும் ஆண் தன ஒரு மகளோ,இரு மகள்களோ தன்னை போல் ஆக வேண்டும் என்று தான் விரும்புகிறான்.ஐந்து ஆண் ஐந்து பெண் குழந்தைகள் இருந்த போது பெண்களை பள்ளியோடு நிறுத்தி திருமணம் செய்த முறை அடியோடு ஒழிந்து வருகிறது.இருக்கின்ற ஒரிரண்டு பிள்ளைகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்பது தவறு என்ற எண்ணமும் வலுப்பட்டு வருகிறது.பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்களும் இப்போது அதிகம்.அந்த குழந்தைகளும் தன பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டுமானால் காதல் திருமணம் அவர்களுக்கு கை கொடுக்கும்.பெற்றோர் பார்த்து வைக்கும் ஒரே சாதி திருமணங்கள் பெற்றோருக்கு முழு டாடா காட்டி விட்டு செல்ல தான் செய்யும்.
    திருமண முறையின் புதிய மாற்றங்களான ஒத்த வயது உள்ளவர்களிடையே(நான்கு,ஐந்து வயது வித்தியாசங்களுக்கு மேல் இப்போது பெற்றோர் பார்த்து சொன்னாலும் எந்த பெண்ணும் ஒத்து கொள்வதில்லை) மணமுடிக்கும் பழக்கமும்,வயதானாலும் பரவாயில்லை,படித்து வேலை கிடைத்த பின்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்,இருவரும் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையும் சாதிக்கு சாவுமணி அடித்து விடும்.போலீசோ,விமான பணிப்பென்னோ கோவிலில் வேலை செய்பவரை திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.அதே வேலை /அதோடு சம்பந்தப்பட்ட வேலை /அவளோடு பணிபுரிபவரை திருமணம் செய்தால் தான் நல்லது,புரிந்து கொண்டு வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகம் என்று நினைப்பார்கள்.
    ஒத்த வயது,படிப்பு,வேலை என்று வரும் போது இருபாலருக்கும் அதே சாதியில் துணை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.பெண் குழந்தை சுமை என்று எண்ணியதால் குறைந்த பெண்களின் சதவீதமும் ஒரு காரணம்

    ReplyDelete
  26. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா, இந்த வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்களுக்கு இல்லை தைரியத்திற்கு, இது போன்ற விஷயங்கள் பலரும் பொதுவில் பேச தயங்குவது மறுப்பது. இந்தப் பதிவின் தலைப்பே நூற்றுக்கணக்கான எதிர்ப்புகளை அள்ளித்தரும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.

    உங்கள் பதிவின் நோக்கம் வேறு, அதைப் புரிந்து கொண்டவர்களின் மன நிலை வேறு. ஜாதியைப் பற்றி பேசினாலே ஜாதி வெறியன் என்ற முத்திரை குத்தப்படும் பகுத்தறிவாளர்கள் சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

    எனது ஜாதியை எனக்கு பிடிக்கும் என்று கூறுவதை ஜாதி வெறியாக பார்க்கும் நிலைமை பரிதாபகரமாக இருக்கிறது. அதிலும் உனக்கு உன் ஜாதியை பிடித்துள்ளது அதனால் மற்ற ஜாதியை நீ கேவலமாக பார்ப்பாய் என்று கூறுகிறார்கள். எனது குடும்பத்தை எனக்கு பிடிக்கும்என்று நான் கூறுவதை 'அடுத்தவன் குடும்பம் நாசமாய் போக வேண்டும் என்று நீ கூறுவது' போல் உள்ளது என்பது போல் வாதம் செய்து கொண்டுள்ளார்கள்....

    ஜாதி கொடுமைகள், ஏற்றத் தாழ்வுகள் நிச்சயம் களையப் பட வேண்டிய ஒன்று தான், ஜாதியை அழிக்க நினைபவர்கள் முதலில் பணம் சொத்து என்ற வஸ்துக்களை அழியுங்கள் உலகத்தில் பாதி ஏற்றத் தாழ்வுகள் அழிந்துவிடும். கம்யுனிசம் என்ற வார்த்தையை சொல்லாதீர்கள் அங்கும் மாவோயிசத்தின் ஆணி வேர் அதனுள் தான் ஒளிந்துள்ளது.

    ஒட்டு மொத்தமாக ஜாதிகளை ஒழிப்பது கஷ்டமே, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க முற்பட வேண்டும். அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு என்னும் நிலைமையில் தான் இது முடியும்.

    மிக பெரிய வாதத்தில் என் மனதில் தோன்றிய ஒரு சில கருத்துக்களை மட்டுமே கூற முடிந்ததுள்ளது... மொத்தத்தில் ஜாதி மதம் என்பது அவனவன் விருப்பம் ஒருவனை பின்பற்றக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா, தைரியமாக என் கருத்தை வழிமொழிந்ததில்... இங்கு நான் என்னமோ ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு விளக்கு பிடிப்பது போல் சிலர் பேசுவது தான் எரிச்சலாக இருக்கிறது.. இவர்களுக்கு எது வாதம் செய்ய ஏதுவாக இருக்கிறதோ, அதை மட்டும் உரிந்து எடுத்துக்கொண்டு என்னென்னமோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. இங்கு பகுத்தறிவாளர்களின் உண்மை குணநலன்களை சொல்லியிருப்பதால் தான் அவர்களுக்கு பற்றிக்கொண்டு வருவதாக எண்ணுகிறேன்.. இது என் கருத்து.. மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அவர் வழியில் செல்லலாம்.. நான் என் வழியில் செல்கிறேன்.. ஆனால் ஜாதி வேறுபாடு நானும் பார்ப்பதில்லை என்று சொல்வதை மட்டும் அவர்கள் மிக எளிதாக மறந்துவிடுகிறார்கள்.. அதிலும் முதல் கமெண்ட்டில் ஒருவர் மிகவும் மேதாவித்தனமாக, “வீட்டிற்குள் தான் உன் ஜாதி உணர்வு என்றால் தமிழ்மணம் என்ன உன் வீடா?” என்று கேட்கிறார்.. நான் என்ன தமிழ்மணத்தில் என் ஜாதியையா தூக்கி வைத்தேன்? என் கருத்தை பகிர்கிறேன்.. என் கருத்து சுதந்திரத்திற்குள் தலையிடும், என் கருத்தை வெளிப்படுத்துவதை கூட மறுக்க நினைக்கும் இவர்களுக்கு என்ன பகுத்தறிவு இருக்கும்?

      Delete
    2. இங்கே சாதி பிடிக்கும்,எனக்கு தேவை எனபது மட்டுமா உள்ளது.சாதி வேண்டாம் என்பவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,யாரையும் நன்றாக வாழ விட மாட்டார்கள்,தானும் வாழ மாட்டார்கள் என்று இருக்கிறதா இல்லையா
      மேஜர் ஆன நம் மகனோ,மகளோ , சகோதரியோ திருமணத்தில் எனக்கு சாதி வேண்டாம் என்று முடிவு எடுக்கும் உரிமை உள்ளதா இல்லையா .சாதி பிடிக்கும் என்றால் சாதிக்கான தொழில் தான் செய்ய வேண்டும்.சாதியினரோடு மட்டும் தான் சேர்ந்து வாழ வேண்டும்.ரத்தம்,கிட்னி,கண் கொடுக்கும் போது,பெற்று கொள்ளும் போது அதே சாதி ரத்தம் தானா என்று பார்த்து வாங்க வேண்டும் .இப்படி வாழ்ந்து கொண்டு சாதி பிடிக்கும் என்றால் ஓரளவிற்கு ஞாயம்
      ஆனால் சட்டம்,பொறியியல்,மருத்துவம் படிக்க வேண்டும், காவல்துறையில் சேர வேண்டும்,விமானியாக வேண்டும்,அரசியல் தலைவராக வேண்டும்,கால்பந்து ,கிரிக்கெட் விளையாட வேண்டும்,அமெரிக்கா,சாதி,டெல்லி,மும்பை,சென்னை,பெங்களுரு சென்று வேலை செய்ய வேண்டும்,அங்கேயே வீடு வாங்கி வாழ வேண்டும் என்று அனைத்து விஷயங்களிலும் சாதியை தாண்டி விட்டு சாதி பிடிக்கும் என்றால் எங்கே சென்று முட்டி கொள்வது

      பரம்பரை பரம்பரையாக கில்லி,கபடி தான் நம் சமூகத்தவர் விளையாடியது.அதை தான் விளையாட வேண்டும் என்று சொல்வதற்கும் சாதிகேற்ற தொழில் தான் செய்ய வேண்டும்,சாதியின் படி முதலிரவு நடத்த வேண்டும்,சாதியின் படி தான் இன்றும் திருமணத்தின் போது பெண்வீட்டினர் ஆண் வீட்டை சார்ந்த அனைவரும் உண்ட பிறகு தான் உன்ன வேண்டும் என்று கூறுவதற்கும் என்ன வித்தியாசம்.அதோடு சேர்த்து கால்பந்து,கிரிக்கெட் விளையாடுபவர்கள் யாரும் நன்றாக வாழ முடியாது,நாசமாக தான் போவார்கள் என்றும் கூறுவது சரியா
      வேறு சாதி திருமணத்தினால் ஏற்படும் குழப்பங்களை,கலாசார மாறுதல்களை விட ,ஊரை விட்டு விட்டு சென்னையில்,திருச்சியில்,பெங்களுருவில் வந்து வாழ்வதில் குழப்பங்கள்,உணவு,உடை,வாழும் முறையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம் .அதனால் அப்படி சென்னையில் ,டெல்ஹியில் வாழ்பவர்களை கரித்து கொட்டுவது சரியா

      Delete
    3. //சாதி வேண்டாம் என்பவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,யாரையும் நன்றாக வாழ விட மாட்டார்கள்,தானும் வாழ மாட்டார்கள் என்று இருக்கிறதா இல்லையா// அப்படி நான் எந்த வரியில் குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள் சார்..
      //சாதி பிடிக்கும் என்றால் சாதிக்கான தொழில் தான் செய்ய வேண்டும்.சாதியினரோடு மட்டும் தான் சேர்ந்து வாழ வேண்டும்.// ஜாதி இருக்கிறது என்று சொல்பவன் கூட வேற்றுமை பாராட்டாவிட்டாலும் நீங்கள் அவர்களை ஏன் பின்னோக்கி இழுக்கிறீர்கள்? எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்கிறேன்.. உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள்.. இந்த பதிவில் நான் எதுவும் ஜாதியை பற்றி தவறாகவோ, அல்லது ஜாதி ஏற்றத்தாழ்வுக்கோ கொடி பிடிக்கிறேனா என்பதை மட்டும் சொல்லுங்கள்.. அதே போல் ஜாதி விட்டு ஜாதி திருமணமே கூடாது என்று நான் இதில் சொல்லவில்லை.. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.. முழுதாக இன்னொரு முறை படித்துவிட்டு என் பதிவில் இருந்து மட்டும் கேள்விகளை கேளுங்கள்.. உங்கள் அனுமானத்தில் இருந்து கேள்வி கேட்காதீர்கள்..

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Mr. Ram Kumar! You better concentrate on issues other than justifying caste system. Knowingly or unknowingly you encourage casteism! If your blog needs to be aggregated in Tamilmanam STOP doing that!

    Casteist blogs had been removed from TM thiratti.

    The same rule will be applied to your blog as well!

    You have a title which encourages casteist people, but act like you are SO INNOCENT?

    Watch out! This is just a "friendly" warning to you! BYE!

    ReplyDelete
    Replies
    1. Who are you to suppress my right to speak? I've my rights to share my thoughts.. If you disagree with my views and points you can tell your side views and justify.. But you have no rights to threaten me.. I never support any caste here.. You understand this article or not? //but act like you are SO INNOCENT?// I've no need to act like any thing.. //Watch out! This is just a "friendly" warning to you! BYE!// Don't try to threaten me.. A friend doesn't warn and friendly warning is an oxymoron.. I won't change my stand.. I too don't want caste discrimination.. In this article also I don't call any community as higher or lower, and didn't say, this community has good values this has bad values.. All I said is, every community has their own tradition.. So உங்க சிண்டு முடியுற வேலைய எல்லாம் இங்க காட்ட நினைக்காதீங்க..

      Delete
  29. அருமை ராம்குமார். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். பின்னூட்டங்களை moderate செய்து போடுங்கள். திசை திருப்பும் பின்னூட்டங்களை delete செய்து விடுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி சார்.. பின்னூட்டங்களை moderate செய்வதைப் பற்றியும் யோசிக்கிறேன்..

      Delete
  30. வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் நன்றாக வாழ மாட்டார்கள்.அவர் குடும்பம் மிகவும் துயரத்தில் இருக்கும் என்ற வாதங்கள் சரியா
    இப்படி அவர்கள் மேல் வெறுப்பு,வன்மம் ஏன்
    நான் படித்த மருத்துவ கல்லூரியில் பல முன்னாள் மாணவர்களோடும் தொடர்பு உண்டு.வேலை செய்த AIR இந்தியாவில்,தனியார் மருத்துவமனைகளில் ,ராணுவத்தில் இருப்பவர்களோடும் இன்றும் பெரும்பாலானோரோடு தொடர்பில் இருக்கிறேன்.இங்கு எல்லாம் குறிப்பிடத்தக்க அளவில் நடந்த திருமணங்கள் சாதி தாண்டிய திருமணங்கள் தான்.நீங்கள் சொல்வது போல ஒன்றும் கிடையாது
    ஒரு விஷயம் நமக்கு பிடிக்காது என்பதற்காக அதற்கு எதிராக அவதூறுகளை அடித்து விடுவது சரியா

    ReplyDelete
    Replies
    1. //சாதி வேண்டாம் என்பவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,யாரையும் நன்றாக வாழ விட மாட்டார்கள்,தானும் வாழ மாட்டார்கள் என்று இருக்கிறதா இல்லையா// அப்படி நான் எந்த வரியில் குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள் சார்..
      //சாதி பிடிக்கும் என்றால் சாதிக்கான தொழில் தான் செய்ய வேண்டும்.சாதியினரோடு மட்டும் தான் சேர்ந்து வாழ வேண்டும்.// ஜாதி இருக்கிறது என்று சொல்பவன் கூட வேற்றுமை பாராட்டாவிட்டாலும் நீங்கள் அவர்களை ஏன் பின்னோக்கி இழுக்கிறீர்கள்? எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்கிறேன்.. உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள்.. இந்த பதிவில் நான் எதுவும் ஜாதியை பற்றி தவறாகவோ, அல்லது ஜாதி ஏற்றத்தாழ்வுக்கோ கொடி பிடிக்கிறேனா என்பதை மட்டும் சொல்லுங்கள்.. //இப்படி அவர்கள் மேல் வெறுப்பு,வன்மம் ஏன்// அதே போல் ஜாதி விட்டு ஜாதி திருமணமே கூடாது என்று நான் இதில் சொல்லவில்லை.. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.. முழுதாக இன்னொரு முறை படித்துவிட்டு என் பதிவில் இருந்து மட்டும் கேள்விகளை கேளுங்கள்.. உங்கள் அனுமானத்தில் இருந்து கேள்வி கேட்காதீர்கள்..
      அதே போல் நீங்கள் சொல்வது போன்ற திருமணங்கள் பொருளாதார அளவில் முன்னேறியிருப்பவர்களுக்கு தான் இன்றைய சூழலில் பிரச்சனைகள் தராமல் இருக்கலாம்..

      Delete
  31. The author has written biased, for caste.

    But tell me, how many of the so called opponents of caste here who wrote against casteism, has married outside their caste and has vowed to marry their son / daughter to marry out side both parent's caste.

    Can any one of those who acts as a "romba nallavan" in the above replies please prove their broad-minded caste thinking?

    None can. Period.

    ReplyDelete
    Replies
    1. தோழரே அதிக குறிப்புகள் நான் எழுதி இருப்பதால் ,எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் உங்களின் குதர்க்கமான கேள்விக்கு பதில் சொல்ல விழைகிறேன்
      என் மாமியார் இஸ்லாமியர்,மாமனார் தெலுங்கு கம்மவார்,என் அண்ணி நாகர்கோவிலை சார்ந்த கிருத்துவ பெர்னாண்டோ சாதி.தம்பி மனைவி முதலியார்.என் அத்தை மகள் கணவர் ஆதி திராவிடர்,சித்தப்பா மகளின் கணவர் மேனன் .என் பெற்றோர் வன்னியர்.என் மைத்துனருக்கு சாதி,மதம் தடையில்லை என்று இணையத்தின் மூலம் பெண் பார்த்து கோவையை அடுத்த காரமடையை சார்ந்த திராவிட இயக்க தோழர் ஒருவரின் மகளை தான் அவருக்கு துணைவி ஆக்கினோம்.அவர்கள் சாதி என்னவென்றே கேட்கவில்லை.
      நீங்கள் கண்ணை மூடி கொண்டு உலகம் இருட்டு என்றால் தவறு யார் மீது.
      முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி ரெட்டி அல்ல ,அவர் கணவர் தான் ரெட்டி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் முதல் பெண் பட்டதாரி கிருஷ்ணம்மாள் அவர்களின் திருமணமும் சாதிமறுப்பு திருமணம் தான்
      சரோஜினி நாய்டு கணவர் தான் நாய்டு. கலாசேத்ரா துவங்கிய ருக்மிணி அவர்களின் (சனாதிபதியாக ஆகா வந்த வாய்ப்பை உதறியவர்)கணவர் வெளிநாட்டினர்.இந்திரா காந்தியின் கணவர் பார்சி,கலைஞரின் குடும்பத்தில் எல்லா சாதியும் உண்டு. எம் ஜி ஆர் இன் பெற்றோரை பற்றி மேலே குறிப்பு கொடுத்துள்ளேன். வெளியுறவு துறையில் வேலை செய்பவர் வெளிநாட்டினரை திருமணன் செய்ய கூடாது என்ற விதியை தளர்த்த பிரதமர் வரை சென்று போராடி பர்மிய பெண்ணை மணந்த கே ஆர் நாராயணனை தேடி சனாதிபதி பதவி வந்தது.
      பாராளுமன்ற சபாநாயகராக இருக்கும் ஜெகஜீவன் ராம் அவர்களின் மகள் மீரா குமார் கணவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்.சுஷ்மா ஸ்வராஜ் கணவர் வேறு சாதி.பா ஜ கா துணை தலைவர் முண்டே மகாஜன் அவர்களின் சகோதரியை மணந்தவர் .வசுந்தர ராஜே கணவர் வேறு சாதி மருமகன் குஜ்ஜர் .ஷீலா டிக்ஷிட் கணவர் தான் டிக்ஷிட்,அவர் பஞ்சாபி .உமா பாரதி,மாயாவதி,மம்தா,ஜெயலலிதா என்று யாரை எடுத்து கொண்டாலும் யாரும் பெற்றோர் விருப்பபடி அவர் சாதி துணையை தேடி கொள்ளவில்லை.
      ஷாரு கானோ,ரஜினியோ,கமலஹாசனோ,ஸ்ரீதேவியோ,குஷ்புவோ,டெண்டுல்கரோ,இர்பான் பதனோ,டோனியோ,கபில் தேவோ,கவாஸ்கரோ சாதியை பார்த்து துணையை தேடவில்லை.
      மருத்துவம்,பொறியியல்,சட்டம்,எழுத்தாளர்கள் என்று எந்த துறையை எடுத்தாலும் அதில் சிறந்து விளங்கியவர்கள்,விளங்குபவர்கள் சாதி கடந்து தான் தங்கள் துணையை தேர்ந்தெடுத்து இருப்பது தெளிவாக விளங்கும்

      Delete
    2. //மருத்துவம்,பொறியியல்,சட்டம்,எழுத்தாளர்கள் என்று எந்த துறையை எடுத்தாலும் அதில் சிறந்து விளங்கியவர்கள்,விளங்குபவர்கள்// இது எல்லாவற்றையும் விட அவர்கள் பொருளாதாரத்தில் சிறந்தவர்கள், அதனால் தான் ஜாதி பெரியதாக பட வில்லை.. அதே போல் நான் அவர்களை போல் சிறந்தவனாக வர விரும்பவில்லை.. என் லெவலில் நான் இருந்தால் போதும்.. என் பதிவில் குறிப்பிட்ட விசயத்தை பற்றி மட்டும் பேசுங்கள்.. உங்கள் மனதிற்கு தோன்றுவது உங்கள் அனுமானத்தில் நீங்கள் புரிந்துகொண்டதை பற்றியெல்லாம் இங்கு சொல்ல வேண்டாம்.. இந்த பதிவில் நான் எதுவும் ஜாதியை பற்றி தவறாகவோ, அல்லது ஜாதி ஏற்றத்தாழ்வுக்கோ கொடி பிடிக்கிறேனா என்பதை மட்டும் சொல்லுங்கள்.. அதே போல் ஜாதி விட்டு ஜாதி திருமணமே கூடாது என்று நான் இதில் சொல்லவில்லை.. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.. முழுதாக இன்னொரு முறை படித்துவிட்டு என் பதிவில் இருந்து மட்டும் கேள்விகளை கேளுங்கள்.. உங்கள் அனுமானத்தில் இருந்து கேள்வி கேட்காதீர்கள்

      Delete
    3. @Nallavana nadikkathavan //The author has written biased, for caste.// எந்த இடத்தில் இப்படி இருக்கிறது என்று சொன்னீர்கள் என்றால் என் தரப்பு விளக்கத்தை தருகிறேன்.. முடிந்தவரை ஜாதி பேதங்களுக்கு கொடி தூக்காமல் நான் எழுதிய பதிவு இது.. அதே போல் நீங்கள் சொன்னது மிகச்சரி.. ஜாதி மத நம்பிக்கை இருப்பவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், சில பகுத்தறிவுவாதிகள் நன்றாக சண்டை மூட்டி குளிர்காய்வார்கள்

      Delete
    4. //எந்த இடத்தில் இப்படி இருக்கிறது என்று சொன்னீர்கள் என்றால்//

      The entire article is. Is that not the crux of this article?. At least that is how I understood the article.

      //என் தரப்பு விளக்கத்தை தருகிறேன்.. //

      No. You do not have to explain.
      I respect your views.

      Mine was an arranged marriage within my caste. I dont have the moral right to express anything against your article. My point was, those who boiled against this article do not have moral rights as well, unless they prove otherwise.

      BTW, I am from Vilampatti.

      Are you the owner of kuttyjapan website?

      Delete
    5. poovannan
      Thanks for the response.
      My respects to you. You dont have to give so many examples. Just saying that you do qualify to say against tcasteism would suffice.

      //உங்களின் குதர்க்கமான கேள்விக்கு//
      My question was genuine.

      //மருத்துவம்,பொறியியல்,சட்டம்,எழுத்தாளர்கள் என்று எந்த துறையை எடுத்தாலும் அதில் சிறந்து விளங்கியவர்கள்,விளங்குபவர்கள் சாதி கடந்து தான் தங்கள் துணையை தேர்ந்தெடுத்து இருப்பது தெளிவாக விளங்கும் //

      The author has not given a universal solution to the issue.
      Giving a solution is not the intention of the author as well, I believe. The author merely intends to prove that marriages within the caste are as good as inter-caste marriages.

      Without supporting one upmanship in caste, what is the problem in living amicably, not compromising caste?

      Seems to me to be best suited and what most are practicing. Ultimately one day caste system might be eradicated. Its a rather slow process. But till then, we have people like the author and me. We form the silent majority in Tamilnadu and what do you propose for us for having this attitude? Should we get scolded for telling reality and truth?

      Ah, the best answer is to lie like other people. Then I will be no more "Nallavana Nadikkathavan". :-)

      Delete
    6. உங்களின் விளக்கத்திற்கு நன்றி.. ஆம் இது எனது வெப்சைட் தான்.. நான் சிவகாசி டவுன்..

      Delete
    7. ராம் நீங்க ஒரு எழுத்தாளர்.அதனால் தான் வருத்தம் அதிகம்.பதிவு முழுக்க சாதிகடந்த திருமணங்களுக்கு இருக்கும் எதிர்ப்பு ,சாதிமறுத்து திருமணம் செய்து கொள்ள பிரச்சாரம் செய்பவர்களை செய்யும் கிண்டல் உங்களுக்கு புலப்படவில்லையா .
      சாதி எங்கே ஒழிகிறது,இளநீர் மோரும்,பால் சாதமும் சேர்ந்து சாப்பிட முடியாது,பரிமாற முடியாது என்றால் அர்த்தம் என்ன
      செட்டியார் சிதம்பரம் கௌண்டர் நளினியை திருமணம் செய்து கொண்டார்.அவர் மகன் ஐயெங்கார் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்தில் எல்லா வகை மோரும் தான் கிடைக்கும்
      ஏழைகள் எந்த சாதியாக இருந்தாலும் இளநீர் மோருக்கு எல்லாம் வழி கிடையாது.ஏழைகள் வெகு எளிதில் சாதியை கடந்து விடுவார்கள்.இப்போது வீடு கட்டும் பல மேஸ்திரிகள் ஒரிசா துணை வைத்துள்ளார்கள்.கூலி குறைவு என்பதால் ஒரிசாவில் இருந்து ஆட்கள் வருகிறார்கள்.இங்கிருப்பவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
      கேரளா,ஆந்திரா,ஒரிசா,வங்காளம்,மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கு பிழைக்க சென்ற ஏழைகள்,பணம் சேர்க்கவில்லை என்றால் வெகு எளிதில் அங்குள்ள மக்களோடு கலந்து விடுகிறார்கள்.
      வேலையின் காரணமாக போன்ற சில மாநில தமிழ் சங்கங்களில் ,அங்கு வசிக்கும் தமிழர்களின் தொடர்பு ஏற்பட்டது. ஏழைகளின் அடுத்த தலைமுறை அந்த மொழி,மக்களோடு முக்கால்வாசி கலந்து விட்டது.
      புதிதாக உருவான நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினை தான் ஒரே சாதி திருமணம் .செவிலியர்களிலும் காதல் திருமணம் குறிப்பிடத்தக்க அளவில் உண்டு. அவர்கள் பணக்காரர்கள் என்று கூற மாட்டீர்கள் அல்லவா .வேலை ,படிப்பு கொடுக்கும் தைரியம் சாதியை தாண்டுவதை எளிதாக்குகிறது.சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பான்மையான சாதனையாளர்கள்

      Delete
    8. தோழர் நல்லவன் என் அண்ணன் எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்ததன் மூலம் தான் என் அண்ணிக்கு அறிமுகமானார். நான் air இந்தியா நிறுவனத்தில் பணி புரியும் போது என் நெருங்கிய நண்பனின் தோழியாக எனக்கு அறிமுகமானாள் என் மனைவி
      நீங்களும் நானும் ராமும் சேர்ந்து தொழில் செய்தால்,ஒன்றாக ஒரே குடியிருப்பில் வசித்தால் நம் குழந்தைகள் காதல் கொள்வது எளிது,சாதி மறுத்து திருமணம் செய்வதும் நடக்கும்
      ஒன்றாக வசிப்பதை ,நெருங்கிய நண்பர்களாக இருப்பதை ஆதரித்து கொண்டு சாதியையும் ,பிடித்து கொண்டு இருக்க முடியாது .இந்த முரண் புரியாதது ஆச்சரியம் தான்
      சாதி வேண்டும் என்றால் சாதிக்கு என்று தனியாக குடியிருப்புகள் வேண்டும் ,குறிப்பிட்ட தொழில்களில்,பழகும் நண்பர்களில் பெரும்பாலோர் ஒரே சாதியாக இருக்க வேண்டும்.
      சாதி பார்க்காமல் பல சாதியினரும் அடுத்தடுத்து குயிருக்கும் அரசு குடியிருப்புகளில் நடக்கும் சாதிமறுப்பு திருமணங்கள் சாதிக்கு ஒரு ஊர்,தெரு இருக்கும் கிராமங்களை விட பல மடங்கு அதிகம்.
      சாதி வேண்டும் என்றால் இவற்றிற்கு எதிர்ப்பு என்று தானே அர்த்தம் வரும்
      வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ள போராடும் நண்பனுக்கு ஆதரவாக இருந்து கொண்டு சாதி வேண்டும் என்று இருக்க முடியுமா இல்லை ஒரே சாதியில் தான் திருமணம் செய்து கொள்வேன் என்பவர்களோடு மட்டும் தான் நட்பு கொள்ள vendumaa

      Delete
    9. ***None can. Period.***

      So, you know the answer too?!! You sound like a "big joker". The world is much bigger than your tiny-little brain! Get that at first!

      Even if they come forward and say that loudly, what is NEXT?

      Will you believe their "verbal statement" and SHUT up?!

      Delete
    10. @Varun, I have seen your arguments with other bloggers elsewhere also. You indulge in too much personal attacks. You do not deserve to be talked with. Relax please.

      Delete
  32. வணக்கம் நண்பரே ....
    உங்களின் இந்த பதிவுக்கு என் வாழ்த்துக்கள் ...
    உங்களின் எண்ணங்களை எழுத்தின் மூலம் பிரதிபலித்தது சிறப்பு ...
    பல இடங்களில் உங்களின் கருத்தோடு நான் ஒத்து போகிறேன் ...

    முக்கியமாக எந்த இடத்திலும் சாதியை ஆதரித்து சொன்னதாக எனக்கு தெரியவில்லை ..
    என்னோட விருப்பம் அது எனக்கு பிடித்திருக்கிறது என்பது எவ்விதத்தில் தவறாகும் ..

    குறிப்பாக சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் நபர்கள் நகர சூழலை மனதில் வைத்தே பேசுகின்றனர், குறு நகரம், கிராம சூழலை கவனிக்க தவறுகின்றனர்!

    முதலில் சாதியை ஒழிக்க உண்மையான அக்கறை இருப்பவர்கள் சாதி சான்றிதழ்களை ஒழிக்க வேண்டும், சாதிகளை கேட்கும் அரசுகளை அகற்ற வேண்டும் .. இப்படி நிறைய இருக்கிறது ... இதில் தெளிவாக தெரிகிறது சாதிகளை வைத்து அரசியல் மட்டும் வெகு சிறப்பாக அரசியல் நடக்கிறது என்று ....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரசன் சே அவர்களே.. ஆனால் நாம் என்ன சொன்னாலும் அவர்கள் காதில் வாங்க மாட்டார்கள்.. சொன்னதையே வேறு வேறு மாதிரி சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள்..

      Delete
  33. 'ஜாதி என்பது வீட்டு வாசல் வரை'- this quote is great. I stand with you in most points you shared ram.. எல்லாமே உயிர்தான் பழக சொல்லி கொடுக்கனும், மனிதம் பழக வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அனானி அவர்களே :-)

      Delete
  34. உங்களை பாத்தா எனக்கு பாவமா இருக்குங்க..
    ஒரு பதிவை போட்டுட்டு நீங்க படுற அவஸ்தை இருக்கே.. அய்யய்யய்யய்யய்யயோ...

    நம்ம வடிவேலு பாணியில சொல்லனும்னா "முடியல..!"

    பதிவை விட பின்னூட்ட அளவுதான் பெருசா இருக்கு..!!

    :-) :-)

    ReplyDelete
    Replies
    1. சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை, நார்த் ஆர்காட், சௌத் ஆர்காட், ஃபாரின், எஃப்.எம்.எஸ் வரைக்கும் வாங்கிட்டேன்.. இந்த ஒடம்பு எவ்வளவு தாங்கும்னு செக் பண்னுறதுக்கு இந்த பதிவு ஒரு வாய்ப்பா அமையும்னு எடுத்துக்கலாம் :-)

      Delete
  35. நிச்சயமாக விளம்பரத்திற்காகவும் , பரபரப்புக்காகவும் இந்த பதிவு எழுதப்பட்டிருக்காது என்று நம்புகிறேன் .

    பிற்போக்குவாதி, முற்போக்குவாதி, நடுநிலையாளன் , நாத்திகன் ,ஆத்திகன் இதெல்லாம் தாங்கள் கவனிக்கப்படவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு அடையாளம் .

    பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒருவன் ஒரே எண்ணத்துடனும்,கொள்கையுடனும் இருப்பதில்லை என்பதே உண்மை . சந்தர்ப்பமும் , சூழ்நிலையும் , அறிவும்,அனுபவமும் நமது கருத்துகளையும் , பார்வைகளையும் மாறிக்கொண்டே இருக்கின்றது .

    இன்று உங்களது இந்த பார்வை பத்து வருடங்களுக்கு முன்போ , பின்போ இருந்ததா ? இருக்குமா ? என்பது தெரியாது . உங்களது இந்த பதிவில் எனக்கு ஒருசில விசயங்கில் உடன்பாடும் , ஓர்சில விசயங்களில் முரண்பாடும் இணைந்தே உள்ளது .

    உங்களது கருத்துக்களை நீங்கள் பதிவு செய்துருக்கீங்க .அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது . படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு கருத்துக்கள் இருக்கலாம் . அதை தான் பதிவு செய்து இருக்கிறார்கள் . என்ன ஒரு சிலர் கொஞ்சம் ......வார்த்தைகளால் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

    நீங்கள் அதற்காக வருத்தப்படவோ , எழுதியது சரியென்றும் , தப்பென்றும் நியாயப்படுத்தவோ அவசியமில்லை என்றே நினைக்கின்றேன். நீங்கள் எழுதியதற்கு தான் நீங்கள் பொறுப்பே அன்றி , மற்றவர்கள் புரிந்து கொண்டதற்கு அல்ல .

    இந்த பதிவும் , பதிவு சார்ந்த பின்னூட்டங்களும் உங்களுக்கும் சரி படிக்கின்ற எங்களுக்கும் சரி நல்ல அனுபவம்.

    சிவகாசிக்காரனிடமிருந்து அணுகுண்டுகள் தவிர்த்து , வழக்கம் போல வான வேடிக்கைகளை எதிர்பார்க்கிறேன் பூச்சக்கரமாகவும் , கம்பி மத்தாப்பாகவும் .


    ReplyDelete
    Replies
    1. ஜீவன் சுப்பு அவர்களே,

      நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை. இந்த சிவகாசிக்காரன் உடன் கடந்த 15 வருடங்களாக நெருக்கம். இருப்பினும் இன்று அவர் எடுத்து வைக்கும் இக்கருத்தில் இருந்து நிச்சயம் விலகல் இருக்கலாம்(10 வருடங்களில்). அதைத்தான் சிலர் பக்குவப்படுதல் என்றும் சிலர் சூழ்நிலை என்றும் சொல்கின்றனர். எது எப்படியோ நீங்கள் சொன்னது போல் வழக்கம் போல வான வேடிக்கைகளை எதிர்பார்க்கிறேன் பூச்சக்கரமாகவும் , கம்பி மத்தாப்பாகவும் எதிர்பார்ப்போம்.

      Delete
    2. ஹ்ம் சரி.. சில நேரங்களில் சில எழுத்துக்கள், சில பிரச்சனைகள்.. அவ்வளவு தான்... இந்த பதிவு இவ்வளவு பெரிய பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்றும் தெரியாது.. உயிரை கொடுத்து எழுதிய கதைகள் யாராலும் சீண்டப்படாமல் போவதும் உண்டு.. இது போல் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் எழுதிய கட்டுரைகள் 3,4 நாட்கள் டென்ஸனாக்குவது உண்டு.. என் பதிவு சீக்கிரம் நார்மலுக்கு வந்துவிடும்.. உங்கள் அக்கறைக்கு நன்றி ஜேவன்சுப்பு & Paul Pown Raj

      Delete
  36. இந்தப் பதிவில் நிறைய உண்மைகள் இருக்கின்றன என என்பதை நியாயமாக யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். சில நேர்மையான விவதங்களை யாருக்கும் சார்பின்றி வைக்கிறேன்.

    இன்று "காமன் வெல்த் நாடுகள்" அதாவது ஆங்கிலேய ஏகாதிபத்தயத்திற்கு கீழ் இருக்கும் நாடுகள் அனைத்தும் (95%) ஆங்கில கலாச்சாரத்திற்கு மாறிவிட்டன. குறிப்பாக ஆப்ப்ரிக்க நாடுகள் யுகாண்டா, கென்யா போன்ற தொண்டுதொன்ற பழக்கவழக்கத்தை உடைய நாடுகள் கூட. இதிலும் தன் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் நாடு இந்தியா குறிப்பாக தென் இந்தியர்கள். நீங்கள் வெளி நாட்டவர்களிடம் பேசினால் தெரியும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்று நம் கலாச்சாரத்திற்கு என்று. ஆகவே ஜாதிய பசக்கவழக்கங்கள் நம் கலாசாரத்தை வைத்திருப்பதில் ஒரு அங்கம் என்பது உண்மை.

    இங்கு ஜாதியை ஒழிக்க வேண்டும் என சொல்லும் பலரையும் பார்த்திருக்கிறேன். தன சட்டைக்கு சலவை செய்பவரை "அவன், இவன்" என்றும், வாசலுக்கு வெளியே வைத்து பேசும் அறிவு ஜீவிகள் அவர்கள். உங்கள் வீட்டின் வரவேர்ப்பறைக்கு முடிவெட்டுபவரையொ, சலவைத் தொழிலாலரையோ அனுமதிக்காத உங்கள் மனதில் சாதி மட்டும் அல்ல ஏற்றத்தாழ்வும் மண்டிதான் கிடக்கிறது. இதை தலித் சமுதாயத்தினர் மேலோங்கி செய்கின்றனர் என்பது என் அனுபவத்தில் பார்த்த வருத்தப்படும் விஷயம். நீ உண்ணும் உணவை உன் வீட்டில் வேலை செய்யும் ஆளுக்கு கொடுக்காதவன், நீ ஜாதி ஒழிப்பு திருமணம் செய்தால் என்ன செய்ய வில்லை என்றால் என்ன? இங்கு இருக்கும் ஏற்றத்தாழ்வு என்பது மனரீதியிலானது ஆனால் அதற்கு ஜாதி ஒழிப்பு விடை என்பது முட்டாள் தனம்.

    என்னைப் பொறுத்தவரை ஒரு பள்ளர் பறையரை தாழ்வாக நினைக்கும் வரை, ஒரு பறையர் அருந்ததியரை தாழ்வாக நினைக்கும் வரை., எப்படி தன்னை ஒரு பிரமனரோ நாடாரோ நாயக்கரோ ஜாதியால் வேற்றுமை பார்கிறார் என்பது நியாயம்? உண்மையில் அது சிறுபிள்ளைத்தனம்.

    அனால் அதே நேரத்தில் திருமண பழக்கவழக்கங்கள் ஒரே சமுதாயத்திர்க்குள்ளும் ஒன்றே போல் இருப்பதில்லை. என் தந்தை வழி திருமண மற்றும் இறப்பு உடல் தகன முறை என் தாய் வழி முறையில் முற்றிலும் வேறு பட்டது. இன்னும் சில நேரங்களில் ஊருக்கு ஊர் வேறுபட்டது.எனவே அதை வைத்து அடிப்படையாக ஜாதி வேண்டும் என சொல்லும் வாதத்தை என் மனம் ஏற்க வில்லை.

    சுருக்கமாக., ஜாதி இல்லை என்று சொல்பவன் தான் அதை நித்தம் அனைத்திலும் பிடித்துத் தொங்கி அடுத்தவர் சுதந்திரத்திலும் கட்டை போடுகிறான். அனால் நியாயஸ்தானோ அதை ஏற்று அதையும் தாண்டி ஒற்றுமை பாவிக்கிறான். ஜாதி எனக்கும் இருக்கிறது ஆனால் அது என் அடையாளம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் மொட்டையாக அது வேண்டாம் இது வேண்டாம் என்பது பேதைத் தனம்.

    ReplyDelete
    Replies
    1. இதே கருத்தை நானும் எழுத நினைத்தேன் .என் பெற்றோர் திருமணம் சாதிமறுப்பு திருமணம் கிடையாது. திருவண்ணாமலை,விழுப்புரம் மாவட்டம் என்று வேறு வேறு மாவட்டம்.
      என் தாய் வழியில் இறந்தவர்களை எரிப்பார்கள்.தந்தை வழியில் புதைப்பார்கள்.
      குல தெய்வத்திலும் பல குழப்பங்கள் உண்டு.என் தாய் வீட்டு குல தெய்வம் எங்கள் தந்தை வழி மக்களுக்கு ஆகாதாம்.அதனால் என் மாமாக்களின் திருமணத்தின் முன்பு ஆசிரியையான என் தாய் விடுமுறை எடுத்து கொண்டு எங்களை பாட்டி வீட்டிற்கு செல்லாமல் பார்த்து கொள்வார்.தாய் வழி பாட்டி வீடு அருகில் இருந்ததால் ,அம்மா வரும் வரை பள்ளி முடிந்த பிறகு அங்கு தான் இருப்போம்.படைத்த பொருள்களையும் சிறு துணுக்கு கூட இல்லாமால் உடனே காலி செய்து விடுவர். தெரியாமல் நாங்கள் எடுத்து உன்று விட்டால் என்ன செய்வது என்று
      இந்த குலதெய்வ வழிப்பாட்டில் கூட பெண்ணடிமைத்தனம் அடங்கி இருப்பதை பார்க்கலாம்.திருமனத்திற்க்கு பிறகு பெண்ணிற்கு குல தெய்வம் கூட விரோதி ஆகி விடுகிறது .கணவனின் குல தெய்வம் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் .அவள் வழி சொந்தங்கள் இறந்தால் கரி மீனிற்கு குறைவு இருக்காது,சுப காரியங்களுக்கு செல்ல தடை கிடையாது.ஆனால் கணவனின் பங்காளிகள் முதல்கொண்டு எந்த இறப்பு என்றாலும் முக்கிய சுபகாரியங்களுக்கு கூட செல்ல தடை தான்.
      வேறு மாவட்டத்தில்,கிராமத்தில் திருமணம் செய்து கொண்டாலும் கூட குல தெய்வம்,உணவு,பழக்கங்களில் பல வேறுபாடுகள் தான்.

      ரத்தம் கொடுக்கும் போது. கண் தானம் செய்யும் போது,வீடு விற்கும் போது,வீடு வாடகைக்கு விடும் போது,வேலைக்கு ஆட்களை வைக்கும் போது என் சாதி ஆட்களுக்கு மட்டும் என்று சாதி பார்க்காதே என்று சொல்வது தவறா.அதே தானே திருமணம் செய்து கொள்ளும் போதும்.
      படித்து வேளையில் இருக்கும் ஆணோ,பெண்ணோ பிடித்தவனை திருமணம் செய்வது தவறு அல்ல.அதற்கு குறுக்கே நிற்பது தான் தவறு என்பதில் தவறு இருக்கிறதா

      Delete
    2. I'm really tired.. Give me a break..

      Delete
  37. //இங்கு ஜாதியை ஒழிக்க வேண்டும் என சொல்லும் பலரையும் பார்த்திருக்கிறேன். தன சட்டைக்கு சலவை செய்பவரை "அவன், இவன்" என்றும், வாசலுக்கு வெளியே வைத்து பேசும் அறிவு ஜீவிகள் அவர்கள். //

    Hypocrites.

    ReplyDelete
  38. அவரவர் செய்யும் தொழிலின் பெயரையே ஜாதியாக்கி (வேளாளன்,நாவிதன்,குயவன்,பறையன், மூப்பன்....) அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் அந்தத் தொழிலைச் செய்வதால் ஊருக்குள்ள தொழில போட்டியோ, பொறாமையோ இருக்காது.

    நாவிதன் கிட்டத்தான் முடிவெட்டிக்னும்னோ வன்னான்தான் துணிதுவைக்கனும்னோ அவசியம் கிடையாது நம்ம முடிய நமளே வெட்டிக்கிட்டு நம்ம துணிய நாமே துவச்சிக்க முடியும். இந்த விதி எல்லோருக்கும் பொறுந்தும்.

    எல்லோரலும் எல்லா வேலையும் செய்யமுடியும்னா பொருளாதார வளர்ச்சி என்பதே இருக்காது. வியாபாரம்னு ஒன்னு இருக்காது. அதனால தான் அந்தக் காலத்தில இப்படி ஆளாளுக்கு ஒரு வேலைய செஞ்சாங்க.

    நீருயர வரப்புயரும், வரப்புயர நெல் உயரும், நெல் உயர கோல் உயரும், கோல் உயரக் குடி உயரும் இல்லைனா அரசரே சாதிக்குப் பத்துப் பேர வேளைக்கு வச்சி அவங்க உற்பத்தி செய்யறதெல்லத்தையும் அவரே வித்து கல்லாக் கட்டியிருக்கலாம். ஏஞ்செய்யல.... தனிமனிதனின் பொருளாதாரம் உயர்ந்தால் தான் சமூகம் உயரும்.

    செய்யும் தொழிலே தெய்வம் னு வாழ்ந்திட்டிருந்த மக்களை, பிற்காலத்தில வந்த அரசியல் வியாதிகள் அரசியல் லாபத்திற்காக ஜாதியைக் கையிலெடுத்தார்கள். இன்னைய வரைக்கும் யாராலும் அதை கீழே வைக்க முடியல முடியாது....

    என்னைய பொருத்தவரை சாதி கண்டிப்பா வேணும். யாதும் ஊரே யாவரும் கேளிர் ன்னு அனைவரும் சமமா வாழ்வோம்.



    ReplyDelete
    Replies
    1. paul pawn raj said
      "என்னைப் பொறுத்தவரை ஒரு பள்ளர் பறையரை தாழ்வாக நினைக்கும் வரை, ஒரு பறையர் அருந்ததியரை தாழ்வாக நினைக்கும் வரை., எப்படி தன்னை ஒரு பிரமனரோ நாடாரோ நாயக்கரோ ஜாதியால் வேற்றுமை பார்கிறார் என்பது நியாயம்? உண்மையில் அது சிறுபிள்ளைத்தனம்."
      இதைத்தான் ராமதாஸ் விரும்புகிறார் பள்ளர் பறையர் சக்கிலியர் நீங்க இருங்க-
      நாங்க பிராமணர் ரெட்டியார் நாடார் இருக்கோம். இரண்டாக பிரித்துகொள்வது.
      இதை நியாயப்படுத்த எவ்வளோவோ காரணங்கள் . சரி நண்பர்களே வாழ்த்துக்கள்

      Delete
    2. //நீருயர வரப்புயரும், வரப்புயர நெல் உயரும்//
      என்னாது பெரிய புள்ள தனமா இருக்கு.சின்னபுள்ளையா இருக்கும் போது "வரப்புயர நீர் உயரும்-நீர் உயர நெல் உயரும்" ன்னு தான் படிச்ச ஞாவகம்

      Delete
  39. இந்த பதிவு நன்றாக வேலை செய்கிறது. நடக்கட்டும்.

    ReplyDelete
  40. சாதி என்பது உங்கள் வீடு வரை மட்டும் என்று வைப்பது தான் பிரச்சனை... நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் சகோதர சகோதிரிகளும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது தான் முரண்... அவர்கள் திருமணம் அவர்கள் உரிமை... எனக்கு பிடித்த பெண்ணை அந்த பெண்ணுக்கும் என்னை பிடிக்கும் பொழுது என் / அவள் குடும்பதின் சாதி திருமணம் செய்ய விடாமல் தடுக்கும் பொழுது தான் சாதி மீது ஒரு மிகப் பெரிய எரிச்சல் வருகிறது...
    பகுத்தறிவாளர்கள் மொழி வெறியர், இனத்தீவிரவாதி என்கிறீர்கள்... ஓரு மொழியை வேறு மொழி ஆதிக்கம் செய்யக்கூடாது என்பது தான் நோக்கமே தவிர வேறொன்றும் இல்லை... தமிழை அறிவியல் கற்றுக் கொடுக்காத மொழி என்பதால் துணிந்து “காட்டுமிராண்டி பாஷை” என்ற தந்தை பெரியார் ஒரு மிகப் பெரிய பகுத்தறிவாளர் தான்...
    இலங்கையில் நடப்பது கட்டாயத் திருமணம்... மீண்டும் ஆதிக்கத்தை நோக்கி போவதால் எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம்...
    மற்ற படி... உங்களுக்குள் மட்டும் (வீடு வரை அல்ல) ஆயிரம் சாதி வைத்துக்கொள்ளுங்கள், எங்களுக்குக் கடுகளவும் கவலை இல்லை...

    ReplyDelete
  41. என்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..//



    இந்த வரிகலுக்கு ஏர்ப்ப பதிவு இது..




    ReplyDelete
  42. நல்ல பதிவு.. நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன்..

    ஜாதி வேறுபாடுகள் இருப்பதால் என்ன ப்ரச்சினை? காலம் காலமாக ஜாதி வேறுபாடுகளை ஒவ்வொரு ஜாதியும் ஒன்றுக்கொன்று அங்கீகரித்து அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர்..

    அவர் அய்யர்.. அதனால கறி சாபிடமாட்டார்..

    ஒரு சில ஜாதிகளில் அறுத்துக் கட்டும் வழக்கம் உண்டு.. அதாவது கணவன் இறந்தவுடன் இன்னொரு கல்யாணம் செய்வது.. மற்ற சாதிகளில் அது இல்லை.. மறுமணம் செய்வதை இழிவாக கருதினாலும், அதை செய்யும் ஜாதிகளில் போய் எவரையும் தடுக்கவில்லை.. மாறாக, இது தன் ஜாதிக்கு கேவலமானது என்றாலும் அது அவங்க குல வழக்கம் என்று அங்கீகரிக்கும் மனப்பான்மையே இருந்தது..


    ஆக ஒவ்வொரு ஜாதியும் வழக்கங்களும், தங்களின் வாழ்க்கையில் கடைபிடிப்பவையாக இருந்ததே ஒழிய, மற்ற ஜாதிகளிளை வற்புறுத்தி கடைபிடிக்க வைத்ததில்லை..

    ஆனால் இந்த ஜாதி ஒழிப்பு பரதேசிகளை பாருங்கள்.. ஜாதி வேண்டாம்ன, அவங்கபாட்டுக்கு வேறு ஜாதியில பண்ணிட்டு போக வேண்டியதுதானே. எதுக்கு போய் இருக்கற ஜாதிகளை நோண்ட வேண்டும்.. அதுவும் பார்ப்பன ஜாதி என்றால், என்ன வேணும்னாலும் செய்யலாம்..

    இவர்களின் ஜாதி ஒழிப்பின் நோக்கம், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதல்ல.. பார்ப்பன பெண்களை கல்யாணம் செய்ய வேண்டும் என்ற வக்கிரமான எண்ணம்.. எந்த ஜாதி ஒழிப்பு பன்னாடையும், தன்னை விட ஒரு கீழ் ஜாதி பெண்ணை மணந்ததில்லை.. அம்பேதகர் கூட ஒரு பிராமண பெண்ணை மணந்தாரே ஒழிய, தன்னை விட கீழ் ஜாதி பெண்ணை மணக்கவில்லை..


    ஆக இங்கே யார் இழிவானவர்கள்? வேறுபாடுகளை அங்கீகரித்து ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யாமல் வாழும் ஜாதிகளா, இல்லை வேறுபாடுகளே இருக்ககூடாது என்னும் சகிப்புத்தன்மை இல்லாத பகுத்தறிவு மிருகங்களா?

    ReplyDelete
  43. இங்கே இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகின்றன..

    நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்வதை ஜாதி தடுக்கிறது என்று..

    உண்மையில் எந்த ஜாதியும் இவர்களை தடுப்பதில்லை.. இவர்களின் தாய் தந்தையரே தடுக்கின்றனர்.. காரணம், அவர்கள் தன் மகனின் நலனை மட்டும் விரும்பாமல், தன் மகனுக்கு அடுத்து வரும் சந்ததியினரின் நலனை பற்றியும் யோசிப்பதால், தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகின்றனர்..

    ஆனால் இந்த ஜாதி ஒழிப்பாள இளசுகளை பொறுத்தவரை, தன்னுடைய சுய விருப்பத்தை மீறி உலகத்தில் எதுவும் இல்லை.. 20 வருடம், நாயாய் தேய்ந்து, தனக்காகவே வாழும் அப்பன் ஆத்தாளின் விருப்பம் கால் தூசுக்கு சமம்..

    தன் சுக துக்கங்களில் வாழ்க்கை முழுதும் ஆதரவாக இருந்த உறவினர்கள், இவர்களின் முதல் எதிரி..

    அப்படி, இவர்களுக்கு தன் விருப்பம் மட்டுமே தேவை, தன் தாய் தந்தையர், அவர்களின் ஜாதி, உறவினர்கள் எதுவும் வேண்டாம் என்றால், அவர்களின் சொத்துக்களையும் வேண்டாம் என்று உதறிவிட்டு போக வேண்டும்..

    ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.. தன் விருப்பமும் வேண்டும்.. தன் பெற்றோரின் சொத்தும் வேண்டும்.. அப்புறம், இவர்கள் கல்யாணம் செய்தபின், இவர்களின் பெற்றோர், இவர்களுடைய குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் (அடியாள் போல)..

    ஆக, முழுக்க முழுக்க சுயநலவாதிகளாகத்தான் இந்த சாதி ஒழிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்..

    ஒரு டாலர் 50 ரூபா என்று செயற்கையாக வைத்துக் கொண்டு, கரன்சி மாற்றத்தின் மூலம் பெறப்படும் கார்ப்பரேட் ஐ.டி சம்பளத்தை பெற்றுக் கொண்டு, பேசும் இந்த இளசுகளுக்கு, உறவினர்கள், சமூகத்தின் தேவைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

    ஆனால் இடுப்பொடிய வேலை செய்யும் இவர்களின் தாய் தந்தையருக்கும், சமூகம் வாழ்க்கையில் வகிக்கும் முக்கியமான பங்கினை மறக்க முடியாது..

    அது இந்த ஜாதி ஒழிப்பாளர்களுக்கு புரியவா போகிறது?

    சுயநலக் கூட்டங்களின் கூடாரங்களே இந்த பகுத்தறிவு வாதிகள்..

    இதோ.. இனி வரும் பொருளாதார வீழ்ச்சி, இந்த மாதிரி குள்ளநரிகளுக்கு மிகப்பெரிய சம்மட்டி அடியாக விழப்போகிறது..

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஓபனாக பேசுவதற்கு முதலில் வாழ்த்துக்கள்.. உங்கள் கருத்துக்களுக்கு மிக நன்றி.. ஆனால் இவர்கள் (பகுத்தறிவு ஆட்கள்) நாம் என்ன சொன்னாலும் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் :-)

      Delete
    2. அவர் கருத்தில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா.
      அவர் ஐயர் கறி சாப்பிட மாட்டார்
      அவரவர் வழி அவரவர்களுக்கு என்ற கூற்றில் துளியாவது உண்மை இருக்கிறதா
      இன்றும் சிதம்பரம்,திருப்பதி ,சிறிய கோவில்கள் என்று எங்கும் பணி புரியும் அர்ச்சகர்கள் சிறு வயதில் திருமணம் செய்வது,மிகுந்த ஆசாரத்துடன் வாழ்வது என்று தான் வாழ்கிறார்கள்.யாரும் பொய் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு சாதிமறுப்பு திருமணம் நடத்துவதில்லை
      பிரச்சினை அவர்கள் வாரிசுகள் பைலட்,விமான பணிப்பெண்,மருத்துவர்,செவிலியர்,விளையாட்டு வீரர் என்று உருவாகி பல சாதியினருடன் சேர்ந்து வேலை/படிப்பில் ஈடுபடும் போது காதல் வயப்படும் போது தான்.
      எந்த சாதியில் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று என் வாரிசுகளை வளர்க்கிறேன்.அவர்கள் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்,வேலை செய்யலாம்,வசிக்கலாம்,
      ஆனால் இந்த சாதிக்குள் மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் எனபது தூய ஆசார சைவர்கள் மாதிரி.அவர்கள் வேலு மிலிடரிக்கு சாப்பிட வந்து விட்டு மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து ஆசைபடும் தன குடும்பத்தவரை (வாங்கி தர நண்பர்கள் தயாராக இருக்கும் போது) ,தயிர் சாதம் தவிர வேறு எதுவும் சாப்பிட கூடாது என்று கூறுவது போல.
      ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டு ஆச்சாரமாக வாழ வேண்டும் என்று ஆசாரங்களை கடைபிடிக்க முடியுமா
      சாதி வேண்டும் என்பவர்கள் வேறு சாதியினரோடு சேர்ந்து வேலை செய்ய கூடாது,பழக கூடாது .பழகி விட்டு நீ வேறு சாதி என்பதால் வீடு வாடகைக்கு தர மாட்டேன்,என் வாரிசுகளை திருமணம் செய்து தர மாட்டேன் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் கிடையாது
      என் வாரிசுகளும் உங்கள் வாரிசுகளும் ஒன்றாக படிக்கும் போது /வேலை செய்யும் போது சாதி ஒரு பொருட்டல்ல என்பவனின் வாரிசுகள் சாதி பார்க்காமல் துணை தேட தான் செய்யும்.அது தவறா.

      Delete
  44. அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அனானி :-)

      Delete
  45. en mathil ulla karuthukkal 100 % unmai vazgthukkal

    ReplyDelete
  46. தமிழில் அம்பேத்கர் திரைப்படம்
    http://www.youtube.com/watch?v=hScBhoGOJZc

    ReplyDelete
  47. உன்மை தான் ஜாதியை அழிக்க முடியாது..
    ஜாதி என்பது சாமி மாதி அத வெளிய சொல்லி ஆட வைச்சி நாசம் பன்னுராங்க நா நாடார் இது வரை நா யார் கிட்டையும் நீ என்ன ஜாதி என்று கேக்க மாட்டேன் ஏன் தெரியுமா நா பழகுற எல்லாரும் வேறு ஜாதியாக தான் இருப்பார்கள் என் ஜாதி எப்போதும் என் மனசுக்குள் தான் இருக்கும் அவளோ தான் எல்லாருக்கும் ஜாதி முக்கியம் தான் என்னை போல இருந்தா.. :)

    ReplyDelete
  48. உன்மை தான் ஜாதியை அழிக்க முடியாது..
    ஜாதி என்பது சாமி மாதி அத வெளிய சொல்லி ஆட வைச்சி நாசம் பன்னுராங்க நா நாடார் இது வரை நா யார் கிட்டையும் நீ என்ன ஜாதி என்று கேக்க மாட்டேன் ஏன் தெரியுமா நா பழகுற எல்லாரும் வேறு ஜாதியாக தான் இருப்பார்கள் என் ஜாதி எப்போதும் என் மனசுக்குள் தான் இருக்கும் அவளோ தான் எல்லாருக்கும் ஜாதி முக்கியம் தான் என்னை போல இருந்தா.. :)

    ReplyDelete
  49. இதை படிக்கும் பொது எனக்கு உலகத்தில் உள்ள அணைத்து கேட்ட நல்ல வார்த்தைகளும் வந்தது உன்னை திட்டுவதற்காக. பிறகு உன் அறியாமையை நினைத்து சிரித்துக்கொண்டேன். தம்பி...! தமிழ் 50,000 வருடங்கள் பழமையானது.. அழகானது அதனால் எந்தனை உயர்ந்த நூல்கள் பண்பாடுகள், கலை, அறிவியல், வரலாறு உருவாகி இருகின்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர்...உலகமே தமிழர்கள்தான் ஆம் ஒருகாலத்தில் உலகத்தில் உள்ள அணைத்து மனிதர்களாலும் பேசப்பட்டது. அது நமக்கு மட்டும் தாய் மொழி அல்ல உலகத்திற்க்கே காரணம் அது பல மொழிகளுக்கே தாய் மொழி... ஒருவிதத்தில் பார்த்தல் தமிழ் இந்த பூமியில் உள்ள அனைவருக்கும் சொந்தம். தமிழன் என்று மார்தட்டி கொள்வது பெருமை. சாதி என்பது ஆரியர்களால் தோற்று வைக்கப்பட்டது. சாதியினால் ஒரு பைசா பிரயோஜனம் இல்லை இன்று. நீயே சொல்ற வீட்டுக்கு மட்டும் தான் அது என்று. தமிழ் நாட்டில் உள்ள சாதி சுமார் 1000 வருடமே பழமையானது, மடத்தனமானது. அதன் தோன்றலே மடத்தனமானது. DNA சோதனையில் கூட சாதியை கண்டுபிடிக்க முடியாது. ஒரு மொழியாக இருந்தால் பேசலாம், மதமாக இருந்தால் கூட வழிபடலாம். சாதியை வைத்து ஒன்னும் பண்ண முடியாது. மதம் மனிதனை நெறிபடுத்தினால் வைத்துகொள்ளலாம் இல்லையென்றால் தூக்கி எறியலாம். சாதியை வைத்து என்ன சாதிப்பாய்.. உன் நண்பர்கள் கூட வேறு சாதி. சாதி மறுத்து திருமணம் செய்யாமல் எப்படி சாதி அழியும் ஒழியும்? ஆகையால் கலப்பு(சாதிமறுப்பு ) திருமணதாலேயே மடத்தனமா மனிதத்திற்கு தமிழ் மொழி பற்றுக்கு எதிரான சாதியை ஒழிக்க முடியும். அடேய் தம்பி கண்டிப்பாக சாதி அழிந்தொழியும். உன்னை போன்ற படித்த முட்டாள்களை/சாதி வெறியர்களை அழித்தால் சாதி அழிந்துவிடும். பல ஆராய்சிகள் செய்யும் நான் என் ஆராய்ச்சியினை உன்னை போன்றோரை அழிக்க பயன்படுத்தினால் என்ன ஆகும்? இதுபோன்ற மடத்தனமான விஷயங்களை இனி பதிவு செய்யாதே. உன்னை என் தம்பியாக நினைத்து மன்னித்துவிடுகிறேன் மாறிவிடு. சாதி அழிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த சாதியென்ற மடத்தனமான கொள்கை அழியும்...அழிக்கப்படும்...

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One