கெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..

Wednesday, August 20, 2014

இந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை? அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று எனக்குத் தெரியவில்லை.. மனதில் இருக்கும் கஷ்டத்தை, வக்கிரத்தை, கோபத்தை, சந்தோசத்தை, இயலாமையை செயலில் காட்ட முடியாதவர்களுக்கான ஒரு வடிகாலே கெட்ட வார்த்தை என்பது என் அவதானிப்பு.. கெட்ட வார்த்தை என்பது அந்த அளவுக்குக் கெட்ட விசயம் அல்ல என்பதும் என் கருத்து.. கெட்ட வார்த்தை என்றாலே ”அய்யோ அபச்சாரம்” என்று அசிங்கமாக நினைப்பவர்கள் இனி மேற்கொண்டு இதைப் படிக்காமல் இருப்பது நல்லது.. ஏகத்திற்கும் சினிமாவில் வந்த கெட்ட வார்த்தைகள் மலிந்து காணப்படும் ஒரு கட்டுரை இது.. இனி மேட்டருக்கு வருகிறேன்..

நேற்று கே டிவியில் ’மகாநதி’ படம் போட்டார்கள்.. அந்தப் படத்தில் கல்கத்தாவில் ஒரு டாக்ஸிக்காரனும், கமலும், ராஜேஷூம் மூன்று வெவ்வேறுக் காட்சிகளில் ஒரு கெட்ட வார்த்தையைப் படத்தில் சொல்கிறார்கள்.. அது சென்சார் கட் இல்லாமல் அப்படியே வருகிறது... இத்தனைக்கும் அந்தக் காட்சிகளுக்கு அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான வார்த்தை அல்ல.. ஆனால் கமல் அவரது மகளை சோனாகாச்சியில் இருந்து மீட்டு வந்த பின், இரவில் தூக்கத்தில் அவள் முனகுவது போல் ஒரு காட்சி வரும்.. அப்போது அதே வார்த்தையை அந்தப் பெண் சொல்கிறாள்.. ஆனால் கே டிவியினால் அந்த வார்த்தை சென்சார் கட் செய்யப்படுகிறது.. உண்மையில் அந்த இடத்தில் அந்த வார்த்தை அவ்வளவு வலியையும், அழுத்தத்தையும் கொடுக்கக்கூடியது.. ஆனால் கட் செய்யப்பட்டு விட்டது.. ஏன் என்றுத் தெரியவில்லை.. ஒரு வேளை ஆண்கள் மட்டும் சகஜமாக அந்த வார்த்தையைச் சொல்லலாம், பெண் சொல்லக்கூடாது என்கிற கலாச்சார அக்கறையாக இருக்கலாம்.. அல்லது பெண்கள் கெட்ட வார்த்தை பேசுவது போன்றக் காட்சியைக் காட்டினால் தங்கள் டிவியின் மதிப்பு போய் விடுவதாகக் கூட நினைக்கலாம்.. அது அவர்களுக்கே வெளிச்சம்..





இப்போது சில நாட்களாகத் தான் நான் இந்தப் பழக்கத்தைக் கவனிக்கிறேன்.. அதாவது டிவிக்காரர்களே தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக்கொண்டு சென்சார் கட் செய்துகொள்வதை.. ஆனால் காமெடிக் காட்சிகளில் கூட அவர்கள் சென்சார் கட் என்னும் பெயரில் செய்யும் அட்டூழியங்கள் தான் தாங்க முடியாதவை..

தினமும் காலை 8.45க்கு ’சூரிய வணக்கம்’ என்னும் நிகழ்ச்சி முடிந்ததும் சன் டிவியில் 10மணி வரை நகைச்சுவைக் காட்சிகள் போடுவார்கள்.. அதில் வடிவேலு சொல்லும், “ங்கொய்யால” என்னும் வார்த்தை கூட mute செய்யப்படுகிறது.. இரண்டு நாட்களுக்கு முன் ‘ஜெய்ஹிந்த்’ படக்காமெடி போட்டார்கள்.. அதில் “ஷோலே” படப்பாடலைப் பாடிக்கொண்டு செந்தில் இன்னும் இருவருடன் பைக்கில் வருவார்... அவர்களை மடக்கிப் பிடிக்கும் கவுண்டர், “நீ அமிதாப்பச்சன், நீ தர்மேந்திரா, நீ என்ன அஸ்ரானியா இல்ல மசிராணியா?” என்பார்.. அதைக் கூட ம்யூட் செய்து விட்டார்கள்.. அந்த இடத்தில் மசுராணி என்பதை யாரும் கெட்ட வார்த்தையாக எடுக்கவும் மாட்டார்கள்.. அந்தக் காட்சியில் அந்த வார்த்தை எதுவும் கெட்ட அர்த்தத்தையையோ அல்லது சமூகத்தையே கெடுத்து விடும் விசயத்தையோ சொல்லவில்லை.. நக்கலாக, ரைமிங்காக சொல்லும் ஒரு வார்த்தை அது.. ஆனால் அது மியூட் ஆகிறது.. அதைக் கட் செய்து என்னத்தைச் சொல்ல வருகிறார்கள் இவர்கள்? 



“ஹலோ மசிருன்னாலும் கெட்ட வார்த்தை தான்.. காமெடிக்குக் கூட கெட்ட வார்த்தையை சகித்துக்கொள்ள முடியாது.. இந்த மாதிரி ஒரு வார்த்தையைக் கட் செய்த டிவியை நான் பாராட்டியேத் தீருவேன்” என்கிறீர்களா? இன்னும் சொல்கிறேன், கேளுங்கள்.. அதே படத்தில் அந்தக் காட்சியைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் லாக்-அப்பில் போடுவார் கவுண்டர்.. அப்போது ஒரு வசனம் பேசுவார்.. “தம்பி பேரு புலிக்குட்டி, அண்ணே பேரு பூனைக்குட்டி, தாயோழி மிருகப் பரம்பரையா இருக்கும் போல” என்று.. அந்த வார்த்தையை அப்படியே மியூட் செய்யாமல் தான் போடுகிறார்கள் சன் டிவியில்.. மயிரு என்னும் வார்த்தையை விட தாயோழி என்னும் வார்த்தை ரொம்ப நல்ல வார்த்தையா? மிக மிக மோசமான வார்த்தை அது.. மயிரு என்பதை மியூட் செய்வதில் காட்டிய அக்கறை அந்த இன்னொரு வார்த்தையை கட் செய்வதில் இல்லாமல் போனது ஏன்? அதே போல் தான் ’மகாநதி’யில்.. ஒரு கார் டிரைவர், ”தேவடியாப் பசங்க” என்கிறான்... கமலும் அதே வார்த்தையைச் சொல்கிறார்.. ராஜேஷ் “நாட்டுல தேவடியாத்தனத்துக்கு துணை போறவனுக்குத் தான் மரியாதை” என்கிறார்.. இதில் எல்லாம் கட் ஆகாத, மியூட் ஆகாத வசனம், கமலின் மகள், “விடுங்கடா தேவடியாப்பசங்களா, ஒரு நாளைக்கு எத்தனப்பேருடா?” என்று கேட்கும் போது மட்டும் அக்கறை பொத்துக்கொண்டு வருவது ஏன்? 

அட அவ்வளவு ஏன் போன மாதம் “மூன்று முகம்” படம் போட்டார்கள்.. அதில் ஃப்ளாஷ்பேக்கில் அலெக்ஸ் பாண்டியன் ரஜினி, அவர் மனைவியிடம் கொஞ்சுவது போல் வரும் பலக் காட்சிகளை வெட்டியே விட்டார்கள்.. ஆனால் அதை விட மோசமானக் காட்சிகள் இருக்கும் சாக்லேட், குஷி போன்றப் படங்களை அப்படியேப் போடுவார்கள்.. ’மூன்று முக’த்தில் செந்தாமரையிடம் போலீஸ் ஸ்டேசனில் வீராவேசமாகப் பேசி, அவரை லாக்-அப்பில் போட்டுவிட்டு ஸ்டைலாக சிகரெட்டை வாயில் தூக்கிப்போட்டு ‘bastards' என்பார் ரஜினி... அதையும் மியூட்டி விட்டார்கள்.. இங்கிலீஷ்ல கூட கெட்ட வார்த்தையை யாரும் தெரிஞ்சுக்கக் கூடாது என்று, ஆங்கிலத்தில் bastard என்று சொன்னால் மியூட் செய்யும் அக்கறை, தமிழில் தேவடியாப்பய என்று சொல்லும் போது மட்டும் இல்லாமல் போனது ஏனோ? அதைக்கூட ஒரு பெண் சொன்னால் மியூட் செய்து விடுகிறார்கள்.. அதே போல் ”நாடோடிகள்” படத்தில் சசிக்குமாரின் நண்பன் கிணற்றில் விழுந்து விடுவார்.. அது தெரிந்தவுடன், நண்பனின் பெயரைக் கத்திக்கொண்டே ஓடி வரும் சசிக்குமார் தன் இன்னொரு நண்பனிடம், “அவனுக்குத் தான் நீச்சல் தெரியாதுன்னு தெரியும்லடா, அப்புறம் என்ன ’புழுத்திக்குடா’ அவன இங்க கூட்டிட்டு வந்த?” என்பார்.. தென்தமிழகத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும் அது ஒரு கெட்ட வார்த்தை என.. அதுவும் இப்போது வரை கட்டோ, மியூட்டோ செய்யப்படாமல் தான் ஒலி/ஒளிபரப்பப்பட்டு வருகிறது... கெட்ட வார்த்தை லிஸ்டிலேயே வராத மயிரு போன்ற சாதாரண வார்த்தைகளை எல்லாம் கட்டோ மியூட்டோ செய்துவிட்டு, படா படா வார்த்தைகளை எல்லாம் அசால்ட்டாக ஒலி/ஒளிபரப்புவது என்ன மாதிரியான சமூக அக்கறை என்று தெரியவில்லை.. ஒரு வேளை, இந்த மாதிரி சின்னச்சின்ன வார்த்தைகளை எல்லாம் கத்துக்கக்கூடாது, ஸ்ட்ரெயிட்டா பெரிய பெரிய வார்த்தைகளைத்தான் இந்தச் சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையாகக் கூட இருக்கலாம்...





இதெல்லாம் நம்ம சன் மற்றும் கே டிவியில்.. அடுத்தது உலக டிவிக்களின் திலகம் நம்ம விஜய் டிவி... நமக்கெல்லாம் நம்ம உடம்புல அல்லது நம்மளுக்கு ரொம்ப வேண்டியவங்க உடம்புல இருந்து ரத்தம் வந்தாத் தான் பொறுக்காது.. ஆனா இந்த விஜய் டிவிக்காரர்களுக்குப் படத்தில் யாருக்காவது ரத்தம் வந்தால் கூடப் பதறிவிடுவார்கள்.. அந்த இடத்தை ஷேட் (shade) செய்து விடுவார்கள்.. எதுக்காம்? இது போன்றக் காட்சிகளைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்கள் பயந்து விடுவார்கள் அல்லது வன்முறையில் இறங்கிவிடுவார்கள் என்கிற அக்கறையாம்.. அடுத்தது கொஞ்சம் கிளாமரான க்ளீவேஜ் காட்சிகள் எல்லாம் வந்தால் அங்கும் ஷேட் செய்து விடுவார்கள்.. இது எதற்காம்? இதுவும் குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணம் தோன்றாமல் இருப்பதற்காம்.. அடப்பாவிகளா, அத அப்படியேக் காட்டுனாக்கூட அவன் பாட்டுக்க இருப்பான்.. ஷேட் பண்ணுனாத்தான் “அங்க என்ன இருந்திருக்கும்?”னு யோசிக்க ஆரம்பிப்பான் நம்மப் பய.. அப்புறம் அந்த மாதிரி இடங்களை வெறித்துப் பார்க்க ஆரம்பித்துவிடுவான், அதில் ஏதோ தங்கமலை ரகசியம் இருப்பது போல்.. CBFCயே சென்சார் கொடுத்த பின் உங்களுக்கு என்ன ஸ்பெசல் அக்கறை? ஷேட் செய்கிறேன் பேர்வழி என்று நீங்கள் செய்வது இன்னும் தான் கிளர்ச்சியை அதிகரிக்கும்.. ஒரு வேளை கிளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று தான் ஷேட் செய்கிறார்களோ?!!!

நான் பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி மட்டுமே பார்ப்பதால் தான் அவர்கள் செய்யும் விசயம் மட்டும் என் கண்களுக்குப் பட்டது.. அவர்களை மட்டும் சொல்வதால் மற்றச்சேனல்கள் எல்லாம் யோக்கியம் என்று அர்த்தம் அல்ல.. சமீபத்தில் கலைஞர் டிவியில் கூட இப்படித் தான் செய்தார்கள் “பசங்க” படம் போடும் போது.. அதில் புஜ்ஜிமா அவன் அம்மாவிடம் தன் மழலைக்குரலில் சொல்வான், “அம்மா குஞ்சுமணி வெளிய வந்துருச்சிமா” என்று... அடுப்படியில் இருந்து அவன் அம்மா சொல்வார், “எடுத்து உள்ள போட்டுட்டு வெளையாடுப்பா” என்று... இதில் குஞ்சுமணி என்னும் வார்த்தையை மியூட்டி விட்டார்கள்.. இன்னொரு காட்சியில் அடிக்கடி கிழிந்து போகும் தன் டவுசரைப் பற்றி சக நண்பர்களிடம் பக்கடா சொல்கிறான், “எங்கம்மா கூட அடிக்கடி சொல்லுவாங்கடா, ’உனக்கு அருவாமனக் குண்டி அதான் எல்லா டவுசரும் கிழிஞ்சிருது’னு”.. இதில் குண்டி என்னும் வார்த்தையை மியூட்டி விட்டார்கள்.. நம் உடலில் இருக்கும் ஒரு உறுப்பை சொன்னால் கூட மியூட் செய்யப்பட்டு விடும் போல நம் டிவிக்களில்.. அந்த வார்த்தைகளை எப்படி சொன்னால் ஒத்துக்கொள்வார்கள்? Ass, dick என்று அழகான ஆங்கிலத்தில் சொல்லலாமா? மத்த சேனல்காரனாவது கெட்ட வார்த்தைனு அவனுக்குத் தெரியுறத கட் பண்ணுனான்.. நம்ம தமிழினத் தலைவரோட சேனல்ல உடல் உறுப்புக்களை அதற்கான வார்த்தைகளைச் சொல்லிக் குறிப்பிட்டால் கூட கட் செய்கிறார்கள்.. 





இதையெல்லாம் கேட்டால் சமூக அக்கறை என்பார்கள்.. இவர்களின் சமூக அக்கறை, சமூகம் கெட்ட வார்த்தையைத் தெரிந்துகொள்ளக் கூடாது, பேசிவிடக்கூடாது, வல்கரானக் காட்சிகளைப் பார்த்து விடக்கூடாது என்று நினைக்கும் அக்கறை என்னை புல்லரிக்கச்செய்கிறது... ஆனால் எந்த வார்த்தைகளை கட் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஏனோதானோவென்று கட் செய்து விடுகிறார்கள், அது தான் பிரச்சனை.. மூன்று முகத்தில் bastards என்று சொல்வதும், மகாநதியில் கமலின் மகள் தேவடியாப்பசங்களா என்று சொல்வதும், ஜெய்ஹிந்த்தில் மசுரானி என்று சொல்வதும், பசங்க படத்தில் குஞ்சுமணி, குண்டி என்று சொல்வதும் படத்திற்கு தேவையானவை, முக்கியமானவை.. அந்தக் காட்சிகளுக்கு அந்த வார்த்தைகள் வலு சேர்க்கின்றன, அழகாக்குகின்றன.. அதைப்பார்த்துச் சமூகம் கண்டிப்பாகக் கெட்டுவிடாது.. கதை மற்றும் காட்சியின் ஓட்டத்துடன் அவை கரைந்துவிடும்... ஆனால் அவை அனைத்தும் கட்டோ, மியூட்டோ செய்யப்படுகின்றன.. அதுவே மகநாதியில் பிற பாத்திரங்கள் தேவடியாப்பய என்று சொல்வதும், ஜெய்ஹிந்த்தில் தாயோழி என்பதும், நாடோடிகளில் புழுத்தி என்பதும் நிச்சயம் படத்திற்கு தேவையற்ற வசனங்கள்.. அந்த வசனங்களால் அந்தக் காட்சிகளில் எந்த விதமான அழுத்தமும் அதிகமாகக் கிடைக்கப்போவதில்லை.. காட்சிக்கு தேவையில்லாத வசனங்களான அவை மியூட் செய்யப்பட வேண்டியவை.. ஆனால் அந்த வசனங்கள் அனைத்தும் அப்படியே வருகின்றன... இந்த லட்சணத்தில் தான் டிவிக்காரர்களின் சென்சார் இருக்கிறது...

சரி, சமூகம் கெட்ட வார்த்தையைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்கிற அக்கறையில் இருக்கும் சன் டிவிக் குழுமமும், கலைஞர் டிவியும் மற்ற விசயங்களில் எப்படி இருக்கிறார்கள்? இவர்கள் போடும் மெகா சீரியல்களில் இல்லாத சமூக சீரழிவு விசயங்களா அந்தக் கெட்ட வார்த்தையில் இருக்கின்றன? உண்மையில் கெட்ட வார்த்தை என்பது பிறரை வைவதற்குப் பயன்படுவதை விட, சகஜமான கிண்டலுக்கான வார்த்தையாக மாறிப்போய்விட்டது இப்போதெல்லாம்.. இதைப் பற்றி ஜெயமோகன் கூட விலாவாரியாக ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.. ஒவ்வொரு குடும்பத்தையும், வாழ்க்கையையும் அழிப்பது போல் தினமும் காலையில் இருந்து இரவு வரை காட்டும் மெகா சீரியலுக்கு என்ன மாதிரியான சென்சாரை இவர்கள் வைத்திருக்கிறார்கள்? ஒவ்வொரு சீரியலும் சட்டத்தை எப்படி ஏமாற்றுவது, பிறர் குடியை எப்படிக் கெடுப்பது, கூட இருந்தே எப்படிக் குழி பறிப்பது, அடுத்தவன்/ள் மனைவி/கணவனை எப்படி ஆட்டையைப் போடுவது, உறவுகளை எப்படிக்கொச்சைப்படுத்துவது என்பதை எல்லாம் டாக்ட்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு டீல் செய்கின்றன.. அதை விடவா கெட்ட வார்த்தைகள் சமூகத்தை சீரழித்து விடப்போகின்றன? கொஞ்ச நாட்களுக்கு முன் நானே ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன், ”அடுத்தவளின் கணவன் மேல் ஆசைப்பட்டால் அது சன் டிவி சீரியல்.. அடுத்தவளின் காதலன் மேல் ஆசைப்பட்டால் அது விஜய் டிவி சீரியல்” என.. இந்த லட்சணத்தில் சீரியல் போடுகிறவர்கள் தான் கெட்ட வார்த்தைகளைத் தடுத்து நிறுத்தித் (அதுவும் அரைகுறையாக) தங்கள் சமூக அக்கறையைக் காட்ட நினைக்கிறார்கள்..

டிவிக்களில் வரும் இன்னொரு அபத்தம், ரியாலிட்டி ஷோக்கள்.. மானாட மயிலாட (இதை முதன் முதலில் ”மானாட மார்பாட” என்று உண்மையைச் சொன்னவர் டாக்டர்.ராமதாஸ், இப்போது ஃபேஸ்புக்கில் கிஷோர் அண்ணன் அடிக்கடி அப்படிச்சொல்கிறார்), ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், கனெக்‌ஷன் போன்ற ரியாலிட்டி கேம் ஷோக்களும் தங்கள் பங்குக்கு அனைத்தையும் செய்கின்றன... ஒருத்தியின் புருஷனுடன் இன்னொருவனின் பொண்டாட்டியை அசிங்கமான அங்க அசைவுகளுடன் ஆட வைத்து “கெமிஸ்ட்ரி சூப்பர்” என்று கொண்டாடும் நிகழ்ச்சிகளை நடத்தும் இவர்கள் தான் கெட்ட வார்த்தைகளை மியூட் செய்கிறார்கள் என்பதைத் தான் என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியவில்லை.. சூப்பர் சிங்கரில் அழும் குழந்தைகளை அரை மணிநேரம் காட்டுகிறார்கள்.. அதைப் பார்த்துக் கெட்டுப்போகாத குழந்தையின் மனதா ரத்தக் காட்சியைப் பார்த்து கெட்டுவிடப் போகிறது? ஆணும், பெண்ணும் எதிர் எதிராக நின்று கொண்டு இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டும் ஆட்டத்தை “கெமிஸ்ட்ரி சூப்பர்” என்று சிறுவர்களுக்கு ரசிக்கக் கற்றுக்கொடுக்கும் சேனல்கள் தான் க்ளீவேஜ் காட்சிகளை ஷேட் செய்கின்றன.. கனெக்‌ஷன் என்னும் நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் பேசுவதில் முக்கால்வாசி டபுள் மீனிங் தான்.. இதையெல்லாம் எந்தச் சேனலும் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை..

டிவிச் சேனல்கள் சென்சார் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், கெட்ட வார்த்தைகள் மட்டும் அல்லாது, கெட்ட விசயங்கள் அனைத்தையுமே சென்சார் செய்ய வேண்டும்.. ஆனால் அப்படிச் செய்தால் டிவிக்களில் ”வயலும் வாழ்வும்”, மற்றும் ஆன்மிக சொற்பொழிவு போன்றவை மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கும்.. இதனால் தான் சமூக அக்கறை இருக்கும் தூர்தர்ஷனும், ஆகாசவானி ரேடியோவும், கோடை எஃப்.எம்.மும் முக்குகின்றன மற்ற சேட்டிலைட் மற்றும் எஃப்.எம்.களில் இருந்து வரும் போட்டியை சமாளிக்க முடியாமல்... சரி அது வேற விசயம், நம்ம டாப்பிற்கு வருவோம்.. கெட்ட வார்த்தைகளை விட மனதிற்கு அதிக பாதிப்பையும், கெடுதல்களையும் கொடுப்பவை சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் தான்.. முதலில் சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் முறைப்படுத்திவிட்டு, சினிமாக்களை நோண்டுங்கள் சேனல்காரர்களே..

இல்லை அது முடியாது என்றால் எதையுமே சென்சார் செய்யாதீர்கள்.. எங்களுக்கு வேண்டியதை, எங்களுக்கு எது தேவையோ, நாங்கள் எதை ரசிப்போமோ அதை நாங்களே தேர்வு செய்துகொள்கிறோம், வேண்டாததைத் தவிர்த்து விடுகிறோம்... நீங்கள் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று அரைகுறையாக சென்சார் செய்வது பல நேரங்களில் எரிச்சலைத்தான் தருகிறது.. அதற்குப் பதில் பேசாமல் அப்படியே விட்டுவிடலாம்.. நாங்களாவது டிவியின் sound system தான் பழுதடைந்து விட்டதோ என்று பீதியாகமல் இருப்போம் உங்களது தேவையற்ற மியூட்களால்...

21 comments

  1. கொஞ்ச நாட்களுக்கு முன் நானே ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன், ”அடுத்தவளின் கணவன் மேல் ஆசைப்பட்டால் அது சன் டிவி சீரியல்.. அடுத்தவளின் காதலன் மேல் ஆசைப்பட்டால் அது விஜய் டிவி சீரியல்” என..///// hahahaha anna... superu...
    matra padi ninga kettathu sonnathu ellam 100% unmai...
    vithyaasamaana oru alasal...

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான அலசலா? ஒரு மார்க்கமா சொல்ற மாதிரி இருக்கே? :P

      Delete
  2. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரு வசனம் பிரகாஷ்ராஜ் பேசுவாரு. அதை ம்யூட் பண்ணிருப்பாங்க. அடுத்த செகண்டே கமல் கேப்பாரு... என்ன சார் பெத்த பொண்ணையே லோலாயிங்கறீங்க? அப்படின்னு... என்ன எழவுக்கு பி.ராஜ் சொன்னதை ம்யூட் பண்ணாங்கன்னு இப்பவும் எனக்கு குழப்பம்தான். இப்படி அபத்தங்கள் சினிமாலயும் இருக்கு. இப்ப சேனல்காரனுங்க புதுசா இந்த அபத்தத்தை ஆரம்பிச்சிருக்காங்க.

    ReplyDelete
    Replies
    1. அய்யோ ஓவர் கடுப்பா இருக்கு சார்.. “சப்ப ஃபிகர்”னு சொன்னா “சப்ப”ங்கிற வார்த்தையை கட் பண்ணுறாய்ங்க!!!! அதுல என்ன தப்பு இருக்குன்னு தெரில..

      Delete
  3. 100 % உண்மையான்ன தெளிவானதொரு அலசல்ணா ! இவனுங்க சென்சார் பன்ற வார்த்தையெல்லாமே இப்படித்தான் இருக்கு . கொஞ்சநாளைக்கு முன்னாடி , கேடீவி சிறைச்சாலை படம் பார்க்கும்போதும் இப்படித்தான் செஞ்சாங்க . அந்த படத்துல , வசனங்களும் , காட்சிகளும் அவ்வளவு அழுத்தமா இருக்கும் . ஆனா, எக்கச்சக்க காட்சிகள் சென்சார் கட் பண்ணி, கடைசில ஏதோ எச்சச்சோறு கணக்கா படத்த ஓட்டுனானுங்க இப்போ, ரீசன்டா சன் டீவில ஒரு நாடகம் . அதுல , கல்யாணம் முடிஞ்ச புதுமணத்தம்பதி , அதுல மனைவிக்கு முன்னாள் காதலன் இருக்கறத தெரிஞ்சி அவன கணவன தேடிக்கண்டுபிடிக்கற உத்தமசிகாமணியாவும் , அதே சீரியல்ல , முழுகாம இருக்க நண்பன் பொண்டாட்டிய கரெக்ட் பன்ற நண்பன்னு இன்னொரு டாபிக்கும் ஓடிட்டு இருந்துச்சி. இதே போன்ற மெகா சீரியல்கள்ல , காதல காட்டுறேன் பேர்வழினு படுக்கையறை வரைக்கும் வந்துட்டு , டயலாக் பேசுறதெல்லாம் சினிமாவுல கூட வராது. அந்த அளவுக்கு அபத்தமா தான் இருந்துச்சி. நா கடந்த 5 வருஷமா டீவி பாக்கறத விட்டுட்டேன் . எப்பவாச்சும்தான் பார்ப்பேன் .அப்படி பாக்கறப்பவே , இவ்ளோ கன்றாவியான ப்ரோகிரம் போடுற சேனல்கள்ல , வர்ற படங்களின் சென்சார் கட்டுகள்லாம் படுதிராபையா இருக்கு . இதே விஜய் டீவிதான் ஒரு காலத்துல ஹாலிவுட் படமெல்லாம் போடுறப்ப , அப்போதைய ஆங்கிலச்சேனல்களால் சென்சார் செய்து போடப்பட்ட காட்சிகளகூட அப்பட்டமா போட்டவங்க ..மசுரு , குண்டி, குஞ்சுமணி ,BASTARDS ங்ற வார்த்தையெல்லாம் , எப்படி கெட்டவார்த்தையா மாறுச்சினு புரியல . BASTARDSங்றதெல்லாம் , உணர்ச்சியின் காரணமா பேசப்படுற வார்த்தைனுதான் வச்சிக்கமுடியும் . அதோட அர்த்தமும் ரொம்ப மோசமானதுனு சொல்லமுடியாது .அப்படி பார்த்தா , SHIT கூட கெட்டவார்த்தைனுதான் சொல்லனும் . வார்த்தைகளின் பலமும் , பலவீனமும் அதோடு ஒன்றி வரும் காட்சியமைப்பைப்பொருத்து தான் மாறுபடுகின்றன என்பது இவர்களுக்கு ஏன் புரியவில்லை ? விட்டால் என் மசுரு கொட்டிடுச்சினு ஒருத்தர் புலம்பர சீன் வந்தா , அதயும் சென்சார் பண்ணி 'என் ____ கொட்டிடுச்சு' னு தான் விடப்போறாய்ங்க . ஏற்கனவே இவனுங்க சென்சார்ல தலைய பிச்சிகிட்டு இருக்க , நமக்கு உண்மையாலுமே மயிரு கொட்டத்தான் ஓ சாரி ,சென்சார் நமக்கு ____ கொட்டத்தான் போகுது .

    ReplyDelete
    Replies
    1. ஆமா shitனு சொன்னா கட் ஆகாது.. நம் மக்களும் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.. அதுவே பீ என்று சொன்னால் நாமே முகம் சுளிப்போமே? இங்கிலீஷ்ல கெட்ட வார்த்தை பேசுனாக் கூட தப்பில்ல.... :P

      Delete
  4. தோழர் என்னிடம் இன்னொரு டவுட்டும் இருக்கிறது பிகரு எப்ப கெட்ட வார்த்தை ஆச்சுன்னு தெர்ல.. நடுகடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா பாட்டில் 'கண்ணால பார்த்த முயுட் கொஞ்ச முடியுமா', 'கண்ணால பார்த்த முயுட் கொஞ்ச முடியுமா '..

    நீங்க ஏன் தோழர் நீயா நானா பத்தி எழுதக் கூடாது நேத்து பேஸ்புக்ல மருத்துவர் ருத்ரன் பொங்கி இருந்தாரு அது தான் உண்மை அது தான் நிதர்சனம்.. தன்னுடையா அறிவுஜீவி பிம்பத்தை மக்கள் மனதில் விதைத்து மக்களை முட்டாளாக்குது என்னைக் கேட்டால் அது தான் ம்யுட் செய்யப்பட வேண்டிய ஆபாசம் :-)

    ReplyDelete
    Replies
    1. நீயா நானா எல்லாம் நம் அலசலுக்கு அப்பாற்பட்டது.. அசிங்கப்பட்டால் தான் trp எகிறும், நாலு பேர் நல்லவிதமாகச் சொல்லுவதை விட காறித்துப்பினால் தான் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்கிற உயரிய நோக்கில் செயல்படும் நீயா நானா போன்ற அரைவேக்காட்டுப் புரோகிராம்களைப் பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை (இப்போதைய நிலை மட்டும்)..

      நண்பா, மொத இந்த ”டோலர்”னு சொல்றதை நிறுத்துங்க.. ஏதோ தீவிரவாத குரூப்ல பேசுற மாதிரி இருக்கு...

      Delete
    2. அண்ணே ! ஒரு வேள சீனு அண்ணன் மார்க்சீசியவாதியாவோ, கம்யுனிசவாதியவோ இருக்கலாம் !! அதுவுமில்லாம , டாலர் நாட்டுக்காரன் கம்பனில ஒர்க் பன்றதால, டோலர்னு வருது போல !!

      Delete
    3. இந்த வாதிகள் எல்லாமே எனக்கு வியாதிகள் தான்.. கொஞ்சம் அலர்ஜி..

      Delete
  5. அருமையான பதிவு ராம்குமார் !!! என் மனதில்பட்ட எல்லத்தைதும் அப்படியே கொட்டி தீர்த்து விட்டீர்கள்... நீங்க சொல்ற மாதிரி எல்லா டி.வி சீரியலுக்கும் சென்சார் பண்ணா ஒரு சீரியல் கூட ஒளிபரப்ப முடியாது..

    ReplyDelete
    Replies
    1. சீரியலில் யாரும் கை வைத்து விடக்கூடாது என்று தான் இவர்கள் தங்களை யோக்கியமாகக் காட்டிக்கொள்ள சினிமாக் காட்சிகளில் கை வைக்கிறார்கள்..

      Delete
  6. மிக அருமையான பதிவு! இந்த சாணல்களை திருத்த முடியாது! இதை மியுட் செய்து என்னத்தை பெரிதாய் சாதித்துவிட்டார்கள்? நான் டீவி பார்ப்பதையே குறைத்துவிட்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என் ரூமில் இருக்கும் ஒரே துணை டிவி தான்.. அதுவும் இல்லாமல் சிறு வயதில் இருந்தே நான் டிவி அடிமை. அதனால் டிவியை நான் வெறுப்பது கடினம்.. :)

      Delete
  7. Replies
    1. என்ன பாஸ் வாயிலேயே வயலின் வாசிக்குறீங்களா?

      Delete
  8. இந்த டிவி சேனல்காரங்களுக்கு சமூக அக்கறை இருப்பதாக இப்போதான் கேள்விபடுறேன் !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. அக்கறை எல்லாம் துப்புறவாகக் கிடையாது சார்.. நான்காம் தூணின் ஒரு அங்கம் என்பதால், இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள், அவ்வளவே...

      Delete
  9. ok ok படத்தில் வரும் ஒரு வார்த்தை ஜோக்கை தவிர்த்திருக்க வேண்டும். TV களும் அதை கட் செய்யாமல் திரும்ப திரும்ப போட்டு காமிச்சு தென் தமிழக குழந்தைகளுக்கும் அந்த வார்த்தையை சொல்லி கொடுத்து விட்டன. ஒரு வேலை மெட்ராஸ் பக்கம் அதை ஒரு 'கெட்ட' வார்த்தையாகவே யோசிப்பதில்லை போல.

    கெட்ட வார்த்தைகளையும், வல்கர் காட்சிகளைகளையும் கட் செய்யவேண்டியது அவசியமே.

    ReplyDelete
    Replies
    1. எது கெட்ட வார்த்தை?ங்கிறது தானே இங்கே பிரச்சனை? சென்னைப் பக்கம் நம்ம ஆட்கள் “க்காலி” என்பது போல் சர்வசாதாரணமாக “த்தா” என்பார்கள்.. அதற்கான அர்த்தமோ, இடம், பொருளோ அவர்களுக்கு முக்கியமில்லை.. சரி அதை விடுங்கள், கெட்ட வார்த்தை என்று சமூகத்தில் கூறப்படும் அனைத்தையும் டிவியிலும் சரி சினிமாவிலும் சரி வைக்கவே கூடாது என்கிற நிலை வந்தால் தான் இது சரியாகும்..

      Delete
  10. அருமையான எழுத்தாற்றல். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One