தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....

Friday, March 13, 2009

பாலிவுட் இன் எவேர்க்ரீன் ஜோடி சாருக்கான் மற்றும் கஜோல் நடித்த வெற்றி படம் தான் இந்த தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே (வீரமான ஆண்மகன் காதலியின் கைபிடிப்பான்)... அக்டோபர் 20, 1995 இல் வெளியான இந்த படம் இன்று வரை மும்பை இல் உள்ள மராத்தா மந்திர் என்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது!! தொடர்ந்து 700 வாரங்கள் ஓடி இந்த திரைப்படம் சாதனை புரிந்துள்ளது....

ஹிந்தி சினிமா வின் சிறந்த படங்கள் மற்றும் அதிக வசூலான படங்களில் இதற்கு ஒரு மரியாதையான தனி இடம் உண்டு... கதையில் ஒன்னும் பெரிய புதுமை எல்லாம் இல்லை... மோதலில் ஆரம்பிக்கும் காதல், குடும்ப எதிர்ப்பை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதே கதை... ஆனால் அதில் சாருக்கான், கஜோல் மற்றும் அம்ரிஸ் பூரி இன் நடிப்பும் திரைக்கதையும் பாடல்களும் இசையும் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்... எத்தனை ஜோடி சினிமாவில் வந்தாலும் ஷாருக், கஜோல் ஜோடி போல் சத்தியமா வராது...

பின் குறிப்பு:
இந்த படம் தான் "ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது (உண்மையில் அருமையான கிளைமாக்ஸ்)....
இவ்ளோ பெரிய ஹிட் அடிச்ச படத்த நம்ம மக்கள் விட்டு வச்சுருப்பாகளா? ஒரு தடவையா? ரெண்டு தடவையா? பல தடவை இந்த படத்த நம்ம தமிழ் சினிமால எடுத்து தள்ளிட்டாங்க.... தல நடிச்ச 'உன்னை தேடி' அப்டியே இந்த படத்தோட ஜெராக்ஸ் தான்... நம்ம தனுஷ் நடிச்ச 'யாரடி நீ மோகினி' படத்தோட ரெண்டாம் பாதியும் இதே படம் தான்...

வாழ்க தமிழ் சினிமா.....

2 comments

  1. //இந்த படம் தான் "ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது //


    அண்ணே,

    மூன்றாம் பிறை அப்படின்னு ஒரு படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வந்ததே. தெரியுமா?

    ReplyDelete
  2. தலைவா, நம்ம தமிழ் பட ஆளுங்களுக்கு மத்த மொழியில் வெற்றி அடையும் ஒன்று தானே கண்ணுக்கு புலப்படும்..

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One