தமிழா!!!

Friday, March 13, 2009

இவன் நம்முள் ஒருவன்
பத்தாவது படித்து விட்டு
பட்டத்தையும் முடித்து விட்டு
பரதேசம் போனான்
வேலை தேடி...
கண்ணீரில் மிதக்கிறது
குடும்பமே வாடி....

அயல் நாட்டில்
அநாதை போல் அழைந்து
வெயிலிலும் பனியிலும் மழையிலும்
கருகி இருகி கரைந்து
நீ சம்பாதிக்கும்
அந்த காகிதத்தால்
உதடு இளித்தாளும்
உள்ளம் வலிக்கிறது...

எந்திர பறவை நிலையத்தில்
நீ கொண்டு வரும்
தொலைக்காட்சி பெட்டி
கணிப்பொறி பெட்டி
இதர பல பொருட்களின் இடையிலும்
கண்கள் உன்னை தான்
தேடுகின்றன முதலில்...

நீ கொடுத்த சென்டிலும்
உன் வியர்வையை நுகரும் மனைவி...
வெளிநாட்டு ஆடையிலும்
உன் உதிரம்அறியும் உடன்பிறந்தோர்..
பத்து கிலோ பெருத்தாலும்
"என்னப்பா இப்டி இளச்சுட்ட?"
என்று கேட்கும் தாய்...
இவர்களை எல்லாம் விட
உனக்கு அந்நிய மண்ணில்
கிடைத்து விடபோவது என்ன??
பணமா? பொருளா?

நீ அங்கிளா, அப்பாவா
என்று உன்
மகனுக்கு தெரியச்செய்ய
அந்த பணமும் பொருளும்
போதாது உனக்கு!
பாசம்-
உலகில் நிலையானது இது தான்...

அந்நியனின் அடிவருடியாய்
அங்கே காட்டிய அதே முனைப்பை
இங்கு இந்தியாவில் காட்டு..
அன்பின் அருமையும்
காதலின் கருணையும்
அருகில் இருக்க
பணம் ஒரு பொருட்டா?

சற்றே சிந்தி...
என்ன இல்லை இங்கு?
தொழில் இல்லையா?
வேலை இல்லையா?
நிம்மதி இல்லையா?
இருக்கிறது
இங்கே எல்லாம் இருக்கிறது...
இருப்பதைஎல்லாம் இங்கே விட்டுவிட்டு
நீ இருட்டில்
வெளிநாட்டில்
தேடுவது எதை?

உலகிற்கே கணிதத்தையும் வான சாஸ்திரத்தையும்
கொடையளித்த இந்த தேசம்
ஆயிரம் ஆண்டுகள் வன்கொடுமையால்
கொள்ளையடிக்கப்பட்ட இதே தேசம் தான்
இன்று
உனக்கு இருக்க இடமும்
உயர படிப்பும் கொடுத்தது...

செய்நன்றி மறந்தவனுக்கு
உய்வில்லை என்று
சபிக்கிறான் வள்ளுவன்...
செய்நன்றி மறவாதே...
உன்னை உயர்த்திய தேசத்தை
நீ உயர்த்த வேண்டாமா?
வெளிநாட்டான்,
வேலைக்கு நம்மை நாட வேண்டாமா?
உலகின் தலைஎழுத்தை
நிர்ணயிப்பவர்களாக நாம்
மாற வேண்டாமா?
வேண்டும்.. எல்லாம் வேண்டும்...
அதற்கு
சேர்ந்து உழை, இந்திய மண்ணில்
நம் புகழை பொறி உயர விண்ணில்...

சொர்க்கமே என்றாலும்
தமிழா!
அது நம்மூர போல வருமா?!?!?!

14 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Excellent Poem Ram...
  You hit the nail right on its head.
  Awaiting further poems and thoughts from you...

  am gonna start a post on the Y***** that will be held (??) in our college... follow if interested

  ReplyDelete
 3. //Excellent Poem Ram...
  You hit the nail right on its head.
  Awaiting further poems and thoughts from you...//

  Thank you jaaz...

  //am gonna start a post on the Y***** that will be held (??) in our college... follow if interested//

  Sure....

  ReplyDelete
 4. கந்தக புமியில் இருந்து
  குயில் ஒன்று
  காந்தம் கொண்டு ஈற்குது என்னை
  கவிதை கொண்டு .........

  கடாரம் வெல்லவும்
  கங்கை கொள்ளவும்
  கரை கடக்க தான் வேண்டும் ....

  கலாச்சாரம் கடக்க சொல்லி
  கற்றுக் கொடுக்க வில்லை தமிழினம் ...

  ரோமானியம் கொண்டவன்
  ரோமங்களில் கூட தமிழ் கொள்ளவில்லை
  கலாச்சாரம் கடந்து சென்றவனை
  செவிப்பறையில் அறைந்தாய்
  ராம்குமார்
  குயில் ஒன்று கூவுது ....

  ReplyDelete
 5. வேறிடம் சென்று வெற்றிடம் கண்ட தமிழனுக்காய் வெரு'ப்பா உரைத்த நண்பனுக்கு!..
  அந்நியனுக்கு அடிமை'யாய் ஆழி தாண்ட தேவை இல்லை..
  அவனே இங்கு வந்து விட்டான், அதிதியாய்..
  அதிதியை ஆள விட்டாய், சற்று
  அதிதமாகவே ஆட்சேப்பிக்கிறாய்!!
  உம் நாட்டில் உம் உழைப்பு உமக்கும் உம் மக்களுக்குமே சாருமோ?!..
  சற்றே சிந்திக்க..

  சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
  துஞ்சிடோம்.. இனி அஞ்சிடோம்..

  எவனோ, என்றோ, எங்கோ சொன்னது.

  ReplyDelete
 6. //கலாச்சாரம் கடக்க சொல்லி
  கற்றுக் கொடுக்க வில்லை தமிழினம் ...

  ரோமானியம் கொண்டவன்
  ரோமங்களில் கூட தமிழ் கொள்ளவில்லை//

  உங்கள் வருகைக்கு நன்றி ராஜேஷ்...
  கலாச்சாரம் பற்றி கூடிய விரைவில் என்னிடம் இருந்து ஒரு பதிவை எதிர்பாருங்கள்...

  ReplyDelete
 7. உங்கள் வருகைக்கு நன்றி லக்ஷ்மிகாந்தன்...

  ReplyDelete
 8. Sivakasikarare...
  thangal muyarchiyai paratikiren.
  melum nar kavithaikal yezhutha yenathu vazhthukal.

  ReplyDelete
 9. dai Usuru............ Super da :)

  ReplyDelete
 10. இதச்சொன்னா நமக்கு inferiority complex ன்ரான்
  நம்ம 10F & 10D friends உம் cousin brothers உம் ......

  ReplyDelete
 11. நீ அங்கிளா, அப்பாவா
  என்று உன்
  மகனுக்கு தெரியச்செய்ய
  அந்த பணமும் பொருளும்
  போதாது உனக்கு!

  அற்புதம் ராம்குமார். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One