கிட்டத்தட்ட மொத்த தமிழ்நாடுமே ட்ரைலர் பார்த்துவிட்டு எதிர் பார்த்துக்கொண்டிருந்த படம் எந்திரனுக்குப் பிறகு அநேகமாக பில்லா2 ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ட்ரைலர் மாஸாக இருந்தது. படம் சுமார் தான் என்று பலரும், சூப்பர், கேவலம் என்று சிலரும் காலையில் இருந்தே சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி கலந்துபட்ட விமர்சங்களின் தாக்கத்தோடும் ஒரு வித பயத்தோடும் தான் தியேட்டருக்கு சென்றேன். ‘தல’ நிரூபித்து விட்டார் - ரஜினிக்கு பிறகு anti-hero என்றால் அது தமிழ் சினிமாவில் தன்னைத்தவிர வேறு யாரும் இல்லையென்று.
ஒரு சாதாரண பையன், ரவுடியாக முறுக்கேறி, கேங்க்ஸ்டராக மாறி, டானாக உருவாவதே படம். இதில் நீங்கள் எதிர்பார்ப்பது போல் காமெடி, குத்துப்பாடல், மரத்தடி டூயட் எல்லாம் இருக்காது. Mission Impossible, Die Hard, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பியர்ஸ் ப்ராஸ்னனோ, ப்ரூஸ் வில்லிஸோ சந்தானத்தோடு காமெடி செய்வது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அது போல் இருக்கும் இது போன்ற கதையில் காமெடி, நடனம் எல்லாம் சேர்ப்பது. எல்லா பாத்திரங்களுமே கதைக்கு மிகவும் தேவையான சரியான பாத்திரங்கள். லாரி ஓட்ட வாய்ப்பு கொடுக்கும் பாயில் இருந்து, சைவ ஹோட்டல் அண்ணாச்சி, மொழி மாற்று கூட்டாளி என்று எல்லாமே கதைக்கு தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்கின்ற பாத்திரங்கள்.
”நாம வாழணும்னா யார வேணும்னாலும் எத்தன பேரனாலும் கொல்லலாம்”னு பில்லா முதல் பாகத்தில் சொல்லும் அஜித், இதில் அதை செயலாக செய்திருக்கிறார். ஒரு டானாக உருவாக அவர் கடந்து வரும் பாதைகள் தான் பில்லா 2. ஹீரோ என்றாலே பேட்டை வில்லனை அடித்து துவைத்து ஒரு தத்துவப் பாடலோடு என்ட்ரியானால் தானே ரசிகர்களுக்கு பிடிக்கும்? ஆனால், அடியாட்கள் முன் அடிவாங்கி மண்டியிட்டு “டேய் என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்....” என்கிற அந்த மாஸ் டயலாக்கை மிகவும் அசாதாரண சூழலில், வெறியோடு பேசி அஜித் என்ட்ரியாகும் அந்த காட்சி நிஜமாகவே மாஸ் தான். ப்ளாஸ்பேக்காக கதை செல்கிறது.
ஒவ்வொருவரும் செய்ய யோசித்து பின்வாங்கி விலகும் செயல்களில் தானாக முன்வந்து அஜித் இறங்குகிறார். கடத்தல் லாரியை உரியவரிடம் சேர்த்து, அவர் மூலம் வரும் பழக்கத்தில் கொஞ்சம் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் இன்னும் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் ஆயுத பேர வர்த்தகத்தின் தலைவனின் பழக்கம் என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் அஜித் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது மிகவும் கோர்வையாக, விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள், வசனமும், யுவனின் பின்னணி இசையும் தான். மிகவும் கூர்மையான, அஜித் என்னும் பிம்பத்திற்கும் பில்லா என்னும் பாத்திரத்திற்கும் கெத்து ஏற்றும் வசனங்கள். இன்டர்வலுக்கு முன் அவர் பேசும் வசனமும் அப்போது வரும் இசையும் மாஸ் & கிளாஸ். இன்டர்வலுக்கு பிறகு வரும் சண்டைக்காட்சியும் தரம். சண்டைக்காட்சிகளையும் சும்மா சொல்லக்கூடாது, ஹாலிவுட்டுக்கு இணையான காட்சியமைப்புகள். அந்த கோர்ட்டு சீன் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் என்றாலும், அதையும் ரசிக்கும் படி காட்சி அமைப்புகளும் எடிட்டிங்கும், இசையும், நடிப்பும் அமைந்துள்ளன. கடைசி அரை மணி நேரம், ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, வசனங்கள், முடிவில் அந்த பில்லா பின்னணி இசையோடு அஜித் ப்ளைட்டில் ஏறுவது என்று ரசிகர்களுக்கு தீனி போடும் விசயங்கள் படம் முழுவதும் உண்டு.
இரண்டு முக்கிய வில்லன்கள். இருவருமே நல்ல நடிப்பு. ஒருவருக்கு சரியாக வசன உச்சரிப்பு வராததால் தான் இன்னொருவரை புரியாத பாஷை பேச வைத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு வில்லனின் பேச்சு வில்லத்தனம் என்றால், இன்னொருவனின் செயல் வில்லத்தனம். ஹீரோயினும் இருவர். பார்வதி ஓமனக்குட்டன் மட்டும் ஓரளவு நடிக்க முயற்சிக்கிறார். நடிப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகியும் விட்டார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். அவரது மூக்கும் பல்லும் என்னை என்னமோ செய்கிறது. ப்ரூனா அப்துல்லா கல்யாணம் ஆகிவிட்டதாக கேள்வி, அதனால் அவரை நான் சரியாகக் கூட ‘கவனிக்க’வில்லை.
ஒரு முக்கியமான ஆளைப்பற்றி இன்னும் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் போல இருக்கிறது. ஆம், நம்ம ’தல’ அஜித் பற்றி தான். ஆரம்ப காட்சியில் “மயிர புடிங்கிட்டு இருந்தேன்” என்று சொல்வதில் ஆரம்பிக்கும், அசால்ட்டான எதற்கும் வலைந்து கொடுக்காத, தைரியமான அந்தப் பார்வை படம் முடிந்த பின்னும் உங்கள் மனதுக்குள் இருக்கும். சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களின் கூட தல ஜொலிக்கிறார். இளவரசு கொடுக்கும் ரூபாய் கெட்டை கையில் விரித்து, ஒரு சின்ன பார்வையோடு தலை அசைப்பதில் கூட பெர்ஃபெக்ஷன் தெரிகிறது. பெரும்பாலும் வெறும் பார்வை தான். அதில் கோவம், துக்கம், வெறுப்பு, வெறி, ஆத்திரம், ஏமாற்றம் என்று அனைத்தையும் காட்டியிருக்கிறார். இதற்கு முன் இவ்வளவு எக்ஸ்பிரஷ்ன்கள் நான் ‘தல’யின் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை.
இயக்குனர் சக்ரி கதை நடக்கும் கால சூழலை அழகாக கொண்டுவந்திருக்கிறார். இப்போது வரும் பீரியட் ஃப்லிம்களில் எல்லாம் கதை நடக்கும் வருடத்தையோ காலத்தையோ காட்ட காலெண்டரை ஒரு முறையாவது காட்டிவிடுவார்கள், அல்லது அந்தக்கால சினிமா பாடல் டீக்கடையிலோ, ரேடியோவிலோ ஓடுவது போல் காட்டுவார்கள். ஆனால், 1990களின் ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கிறது என்பதை காட்சி அமைப்புகளும் செட்களுமே நமக்கு அழகாக உணர்த்துகின்றன.
”மத்தவங்களோட பயம், நமக்கு பலம்” - இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு மிக அழகான, விறுவிறுப்பான, மாஸான ஒரு மசாலாப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். ‘தல’ ரசிகர்களுக்கு சரியான தீனி தான். ஒரு தல ரசிகனாக நான் மிகவும் ரசித்துப் பார்த்த படங்களுள் இதுவே முதல் இடம் என்று சொல்லுவேன். எனக்கு பெர்சனலாக மங்காத்தா, பில்லா முதல் பாகத்தை விட இது பிடித்திருந்தது..
நான் முதலில் சொன்னது போல,
Wellsaid brother....
ReplyDeleteI will go for this evening show....
Mostly positive reviews coming....
Thala thala thaan...
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteAnonymousஆக வந்து மரியாதை இல்லாமல் பேசுபவர்களின் கமெண்ட்டுகள் உடனடியாக தூக்கப்படும்..
ReplyDeleteவிமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.
ReplyDeleteஒரு அஜித் ரசிகன் இவ்வாறாக அஜித் வெறியனாக மாறியுள்ளான்.
ReplyDeletepadam mokkai padam... rombavae mosamaa irukku...indha padathukku edhukku ivalavu periya vimarsanam?? aiyoooo kadavulae
ReplyDeleteஅஜீத் ரசிகனான எனது கருத்தும் இதுதான். பில்லாவில் விஜய்யை எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும். ஏனென்றால் இப்போது பில்லா என்றாள் அது அஜீத்தான்.
ReplyDeleteநான் அஜித் பேன் கிடையாது....
ReplyDeleteஎனக்கு படம் ரொம்பவே பிடித்து இருந்தது.....தமிழில் வந்த சிறந்த கேங்ஸ்டர் படங்களில் இந்த படத்திற்கு சிறந்த இடம் உண்டு...
படத்தை பற்றி நானும் எழுதி உள்ளேன்...
நேரம் இருக்கும் போது படித்து பார்க்கவும்..
http://hollywoodraj.blogspot.in/2012/07/2.html
நச்சுன்னு விமர்சனம் நண்பா.. படம் எனக்கும் ரொம்பப் புடிச்சிருந்தது! (எனக்கு அஜித்தோட பெர்சனல் பேவரிட் வரலாறு..)
ReplyDeletesuperb nanba........ win or lose we dont care no one can beat Thala!!!
ReplyDelete