அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?

Thursday, July 5, 2012

இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற நிரந்தர செல்வாக்கா? அல்லது வந்த வேகத்தில் வெடித்துச் சிதறிவிடும் நீர்க்குமிழி போன்றதா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அணுகியிருக்கிறேன். பார்க்கலாம்..

சுமார் எட்டு வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ’ஜனா’ என்கிற படம் ரிலீசான மே 1, 2004, விஜய்யின் ’கில்லி’ ரிலீசான ஏப்ரல்17, 2004ம் காலத்தில் இருந்து ஆரம்பிப்போம். ’வில்லன்’ என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியாகக் கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சநேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். ’வில்லன்’ படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் ’வசீகரா’, ’பகவதி’ என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, ஷாஜகான், தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது தான் ‘திருமலை’ வெற்றி. ’திருமலை’ ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ’ஆஞ்சநேயா’.. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.. ‘ஆஞ்சநேயா’ அட்டர் ஃப்ளாப் ஆனது..

பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் & பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. காரணம் அஜித்தின் கரடுமுரடான வார்த்தைகளும், எதையும் வெளிப்படையாக பேசும் அவரின் பேட்டிகளும் தான்.. அதே வருடத்தில் விஜய்க்கு 'உதயா' என்றொரு ஃப்ளாப் வந்தாலும், 'கில்லி'யின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. படம் வெற்றி தான் என்றாலும், அதற்கு முன் வந்த அஜித்-சரண் காம்பினேசன் (’காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’) அளவிற்கு இந்தப் படம் அமையவில்லை..

இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த மூன்று படங்களில் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) இரண்டு வெற்றி பெற்றன. சச்சின் சுமாராகத்தான் ஓடியது.. ஏனென்றால் அது மோதியது ’சந்திரமுகி’யோடு!!  அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட லேசாக ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்கலில் ’பரமசிவன்’, ’ஆதி’ என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ’ஆதி’யை விட ’பரமசிவன்’ நன்றாக ஓடியது. 2006ன் 'ஆதி'யே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த 'திருப்பதி' ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தலை காட்டி தங்களை ‘தல’ ரசிகர்கள் என தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார். 2006 அஜித்திற்கு ஒரு நல்ல படமாக அமைந்தது..

ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.. இப்போது தான் அஜித் - விஜய் என்று இருவருக்குள் மட்டும் இருந்த போட்டியில் புதிதாக ஒருவர் வந்தார்.. அவர் தான் சூர்யா..

சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்கலுக்கு வந்த ’வேல்’ என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட ’அழகிய தமிழ் மகன்’ படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது. அவரின் இரட்டை வேட நடிப்பை, அதில் காட்டிய வித்தியாசத்தை அவர் ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை..

ஆனால் அஜித் இதே வருடத்தின் முடிவில் ’பில்லா’ என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப் படத்தை ரீ மேக் செய்ய ஒரு தைரியம் வேண்டும்.. அதை ஹிட்டாக்க அதை விட பெரிய உழைப்பும், டீமும் அமைய வேண்டும். அனைத்தையும் அஜித் சாதித்துக்காட்டினார்.. ஆனால் விஜய், ’அழகிய தமிழ் மகன்’ என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார். ஆனாலும் அவரின் கெட்ட நேரம் அதோடு முடியவில்லை..

2008, 2009, 2010 என வரிசையாக ’குருவி’, ’வில்லு’, ’வேட்டைக்காரன்’, ’சுறா’ என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை ’சுறா’ மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல ’பில்லா’ வெற்றியை தக்க வைக்க முடியாமல் ’ஏகன்’, ’அசல்’ என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்??

இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும், அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு,  குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமாக அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் ’வாரணம் ஆயிரம்’, ’அயன்’, ’ஆதவன்’, ’சிங்கம்’ என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். 


ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழி உடைய ஆரமபித்தது. விஜய்க்கு அந்தக்குமிழி உடைய ஒரே மாதிரியான அவரின் படங்கள் காரணம் என்றால், சூர்யாவிற்கு அவரே காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் மேடை மேடியாக ஏறி சுயபுகழ்ச்சி பேசுவது என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”,  என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். 'சிங்கம்' படத்துக்குப்பிறகு அவர் 2011 தீபாவளிக்கு நடித்த 'ஏழாம் அறிவு' எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், 'காவலன்' என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், 'வேலாயுதம்' மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. யாராவது ஒரு ஆளுக்கு ‘என்ன நடித்தாலும் ஹிட்’ என்கிற பட்டம் போய்த்தானே ஆக வேண்டும்? அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கிற்கு சென்றது. கார்த்தியே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்..

கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. அவரின் ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு எக்குத்தப்பாக எகிறியது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த ’சிறுத்தை’ அனைவரையும் கவர்ந்து, அவரை முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது. 

ஆனால், நம்ம நடிகர்களுக்கு தான் ஒரு விசயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள தெரியாதே? கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று பொம்மை செல்ஃபோன் பதிந்து வைத்த வார்த்தைகளையே திரும்ப திரும்ப பேசுவது போல், அவரும் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் ’சிறுத்தை’ நடித்திருந்தார். ஆனால் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் ’மங்காத்தா’, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது. 

விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வர ஆரம்பித்தன இப்போது. ’மங்காத்தா’ மட்டும் தான் அதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. அஜித்தின் இயல்பான, உண்மையான சுபாவம் பலருக்கும் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை, அவர் செய்த உதவிகளை, பெர்சனலாக அவருக்கு இருக்கும் நல்ல குணங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அதை ஒவ்வொருவரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. பொது மக்களிடம் இது அவருக்கு இன்னும் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. 

ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் ”திமிராக இருக்கிறார்” என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள், அவரின் படங்களை கிண்டலடிப்பவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. ’பில்லா 2’ ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள்.

ஏனென்றால் அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், இனி படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான ஒரு மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். கொஞ்சம் யோசித்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அது, அஜித் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை என்பது தான். ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்கள், ’திமிர் பிடித்தவன்’ என்று பேசிய மக்கள், இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது, இனிமேலும் வேறு யாருக்கும் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.. அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை என உறுதியாகச் சொல்லலாம். இந்த புகழ்ச்சி அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது..

நீ எப்பவுமே டாப் தான் ‘தல’....

40 comments

  1. ithai nan vazhimozhigiren nanbaaaaaaaaaaa

    ReplyDelete
  2. @selvasankar & praveen - thank u..
    @ram - its just for an introduction to know about the rise and fall of actors as a mass hero

    ReplyDelete
  3. Good one machi... you have enough knowledge about the history of movies..The way you narrated is awesome.. Keep writing...

    ReplyDelete
  4. Porumai vaenum nanba ipdi lam post panrathuku congrats da very article about our THALA 2004 to 2012 varai nan marandha sila visayam kuda apdiyae nyapakam vandhathu..!! unmai dhan nanba oru stage la ajith fanah romba kindal pannanga relatives,friends lam but namma yappayum Thala fan dhan :-)

    ReplyDelete
  5. உங்கள் பதிவின் கடைசி பாரா . அஜித் என்னும் மனிதனின் வெற்றியை துல்லியமாக பிரதிபலிக்கிறது நண்பரே .. அஜித் மட்டும் இல்லை அவரின் ரசிகர்களும் பக்குவமானவர்கள்தான் .. உங்களின் யதார்த்தத்தை எடுத்துரைக்கும் இந்த பதிவு அதற்க்கு ஒரு உதாரணம்...

    நான் வாலி படத்திலிருந்து அவரின் ரசிகன் , ஆனால் என்றும் அவரின் ரசிகனாக இருந்ததுக்கு வருந்தியதில்லை , எனக்கு தெரியும் நல்ல மனது என்றாவது ஒரு நாள் வெற்றி பெரும் என்று... இந்த பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் விஜய் சூரியா கார்த்தி இவர்களிடம் இல்லாத ஒரு விஷயம் நம்ம தலையிடம் நிறைய இருக்கும் விஷயம் அவரின் பக்குவமான வெள்ளை மனசுதான் , நடிப்பிலும் தல அவர்களையெல்லாம் விட பல மடங்கு சிறந்தவர்தான் , இந்த இரண்டும் சேர்ந்துதான் அவரை உச்சத்தில் ஏற்றி இருக்கிறது...

    great human being ... i learnt(still learning) a lot from him... thala pola varuma?

    ReplyDelete
  6. Awesome Article.

    //
    சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2001 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.//

    Please correct the year to 2011.

    ReplyDelete
  7. fantastic boss...100% agree wid u...

    ReplyDelete
  8. Thala always Great......................

    ReplyDelete
  9. Thala always Great......................

    ReplyDelete
  10. excellent write up.... very true...

    ReplyDelete
  11. excellent artice.. proud to be a thala fan... u summarized his career very welll.. well written.. keep going..

    ReplyDelete
  12. Good One boss...
    But how come attagasam disappointed fanz?? Not sure boss.
    Becos I always feel attagasam had registered the word "THALA" among all types of people (if I’m correct, even in other films people started to use the word thala only after that). From scene to Songs, everywhere the thala mass is there. I'm sure so many fans still use the "thala pola varuma" as their personal number ringtone including me!
    And also feel bit of overbuild up when it explaining about other actors movies,
    Just reminded me of thala's words in an old interview:
    "Yennoda vetrigal maraikka padukiradhu! Yennoda Blockbusters are called super hits, yennoda super Hits are called Hits, Hits are called Average & Average are called flops."

    ReplyDelete
  13. In my opinion,
    Whatever told by thala was opposite in other actors movies..

    ReplyDelete
  14. very Nice Blog Bro. Thala Pola Varuma? Thanks for Sharing.

    ReplyDelete
  15. தங்களின் இந்த பதிவை நான் எனது பிளாக்கிள் share செய்யலாமா ? தங்கள் அனுமதி தேவை . உங்கள் பதிலை rrajja.mlr@gmail.com க்கு அனுப்பவும் .
    எனது தளம் http://rajamelaiyur.blogspot.inஎன் ராஜபாட்டை........

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்! அஜித்தை பற்றிய சிறந்த அலசல்!

    ReplyDelete
  17. நடுநிலமையோடு அலசியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

    ReplyDelete
  18. மிக அருமையன விமர்சனம்....
    வாழ்த்துகள் சகோதரா....

    ReplyDelete
  19. @ram kumar

    With Your Permission,Can I Translate This Article To English And Republish It? If Not,Can You Do It For Those Who Dont Know Tamil?

    ReplyDelete
  20. @logesshwar: ya u can translate it. But u must give my blogspot link and mention it as a translated version of my original post..

    ReplyDelete
  21. விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்யான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அது ஒவ்வொரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.

    நீ எப்பவும் டாப் தான் ‘தல’....

    ReplyDelete
  22. தல எப்பவுமே தலதான்

    ReplyDelete
  23. அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். //Super

    ReplyDelete
  24. Thala da........................Thala Pola Varuma..........

    ReplyDelete
    Replies
    1. தல எப்பவுமே தல தான்.. :-)

      Delete
  25. //எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”,//

    //ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது//

    // ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. // உங்களுக்கு எதிர்காலம் கூட தெரிஞ்சிருக்கு. ஒரு டைம் மேஷின்ல பயணம் செய்த அனுபவம் படித்தவுடன் கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபக் ராம் :-) தல எப்பயுமே தல தான்

      Delete
  26. விரிவான அலசல்.தல டாப் தான்

    ReplyDelete
  27. We are love one and only thala he roll model for every youngstars

    ReplyDelete
  28. kovam irrukara edthlathan nalla konumum irrukkum

    ReplyDelete
  29. ajith unga jaathiyaa? romba paaraati ezhuthi irukeenga?

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One