சந்தானத்தின் முதல் தயாரிப்பு, 1981ல் பாக்யராஜின் இயக்கத்தில் வந்த ‘இன்று போய் நாளை வா’வின் தழுவல், பவரின் பங்கு என இந்தப்படம் பார்க்க பல சுவரசியமான காரணங்கள் இருந்ததால் இன்று அங்கிங்கு ரெகமெண்டுக்கு ஆள் பிடித்து ஒரு வழியாக நைட் ஷோவிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்றேன். படம் எப்படி, பழைய இன்று போய் நாளை வா-வை மிஞ்சியதா என பார்க்கலாம். முதலில், பழையதை மறக்காமல் தன்னோடு ‘லொள்ளு சபா’வில் இருந்தவர்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதற்கு சந்தானத்திற்கு பாராட்டுகள்.
தெரிந்த கதை தான். மூன்று நண்பர்கள் ஒரு ஃபிகரை டாவடிக்கிறார்கள். முதலில் யாரையுமே விரும்பாத அவள் கடைசியில் அவர்களில் ஒருவனை விரும்பி கைப்பிடிக்கிறாள். இந்த லட்டும் மாதிரி கதையை காமெடி என்னும் சீனியில் முக்கி தந்திருக்கிறார்கள். தன் சொந்தப்படம் என்றாலும் பவருக்கு அதிகமான வாய்ப்புகளை தந்திருக்கும் சந்தானத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எழுத்து போடும் போது, பவர் பெயருக்கு வந்த விசிலும் கைதட்டலும் பிரமிக்க செய்து விட்டது. படத்திலும் அவர் பெயர் பவர் தான். பவரை விட வேறு பவரான பெயரை பவருக்கு வைக்க முடியுமா?
ஆரம்ப காட்சியில் இருந்தே நகைச்சுவையே பிரதானம் என வரிந்து கட்டி கிளம்பியிருப்பதால், நீங்கள் குறுகுறுவென்று கதையையும் லாஜிக்கையும் தேட நினைத்து தோற்றுப்போகாதீர்கள். பவரை அறிமுகப்படுத்தும் காட்சியில் இருந்து கதை டாப் கியரில் எகிறுகிறது. முதல் பாதி வரை அவர்கள் ஹீரோயின் விஷாகா சிங்கை கரெக்ட் பண்ண செய்யும் லூட்டிகள் தான் நிரம்பி இருக்கின்றன. அதிலும் பவர் நடனம் ஆடுகிறேன் பேர்வழி என செய்யும் அலம்பல்கள், ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ... செம.. உண்மையை சொல்கிறேன், ஒரு படத்திற்கு போய் சிரித்து சிரித்தே தொண்டை கட்டியது எனக்கு இதில் பவரை பார்க்கும் போது தான். என்னா நடிப்பு? இவர் இதே லைனை பிக்-அப் செய்து போனால் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் நிச்சயம் உண்டு. ஆமா, மக்கள் மனதில் ஏற்கனவே அரியாசனம் போட்டு அமர்ந்து தான் இருக்கிறார். இருந்தாலும் சினிமாவிலும் இடம் வேண்டாமா? பவரு, எல்லாருக்கும் காட்டு உன் பவரு..
ஹீரோயின் விஷாகா சிங், ‘பிடிச்சிருக்கு’ படத்திலும் இன்னும் சில விளம்பரங்களிலும் போர்த்திக்கொண்டு வந்தாலும் இதில் கவர்ச்சியில் விளையாண்டிருக்கிறார். காமெடி படத்திற்கு இவ்வளவு கவர்ச்சி தேவை இல்லை. சில நேரங்களில் அழகாகவும் பல நேரங்களில் சுமாராகவும் இருக்கிறார். ஷீலா கி ஜவானி போல் இவருக்கு இதில் ஒரு பாடல் வேறு. மூன்று ஹீரோக்களில் பவர் தான் முதல் இடம். சந்தானத்தையே தன் மேனரிஸங்களாலும் டயலாக் டெலிவரியாலும் காலி பண்ணிவிடுகிறார். கதைக்கு ஹீரோவாக வரும் சேது, பாவம் தக்கி முக்கி நடிக்கிறார். கோவை சரளா, விடிவி கணேஷ், ஹீரோயினின் அப்பா அந்த நடன இயக்குனர் என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி கொஞ்சம் சறுக்கினாலும் முடிவில் ஓரளவு நிமிர்ந்து விட்டது.
வசனங்கள் பலவும் ஒன் லைனர்களாகவே இருப்பதால் நினைத்து சிரிக்கும் அளவுக்கோ மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்கோ இல்லை. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் முன் இன்னொரு ஒன் லைனர் வந்துவிடுகிறது. படம் பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்திருந்தாலும், படம் முடிந்தவுடன், “என்னாச்சி?” என நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோ போல் நாமும் கேள்வி கேட்போம் மனதில் எதுவும் நிற்காததால். பாடல்களில் “லவ் லெட்டர்” மட்டும் நல்லா இருக்கு. பின்னணி இசையும் சுமார் தான். என்னாச்சு தமன்? படத்தை பவரை வைத்தே தூக்கி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். அது பல இடங்களில் ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது.
ஆனால் என்ன தான் படம் காமெடியாக இருந்தாலும் பழைய ‘இன்று போய் நாளை வா’வோடு பொருத்திப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதில் பாக்யராஜ் அந்தக்கால இளைஞர்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக அவர்களின் நட்பை, ஒரு பெண்ணுக்காக அதில் வரும் விரிசலை இயல்பாக காட்டியிருப்பார். அதில் திரைக்கதையில் இயல்பாகவே நகைச்சுவை சேர்ந்திருந்தது. ஆனால் இதில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு காதலர்களும் ராதிகா வேறொருவனை விரும்புவது தெரிந்ததும் அவள் குடும்பத்து ஆட்களை அடித்து அனுப்புவார்கள், ஆனால் ஹீரோ மட்டும் வழக்கம் போல மிகவும் அப்ராணியாக வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வந்து கொடுப்பான். நமக்கே அவன் மீது ஒரு சிம்பதி வந்துவிடும். ஹீரோயினுக்கு லவ் வர இது ஒரு ஆழமான காரணமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். இது தான் பாக்யராஜ் டச். ஆனால் இதில் ஹீரோ ஹீரோயினின் தம்பிக்கு நீச்சல் கற்றுத்தருகிறான். அதிலேயே லவ் வந்துவிடுகிறது. அதே போல் அந்த கொலுசு காட்சி, ஹிந்தி டியூஷனை வீட்டிற்கு மாற்றும் காட்சி எல்லாம் அவ்வளவு இயல்பான நகைச்சுவையாக இருக்கும். இதில் பவர் ஸ்டார் கோயிலில் இருந்து வீட்டிற்கு நாட்டியம் கற்க வரும் காட்சி மட்டுமே சூப்பர்.
பவரை எடுத்துவிட்டு பார்த்தால் இது மிக மிக சுமாரான படம் தான். தனக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். “சிம்புவுக்கு நான் தான் போட்டி. ஆனந்த தொல்லை கொடுக்க போறேன்” என்று சொல்வதாகட்டும், ரசிகர்களை செட் செய்து பொது இடத்தில் சீன் போட்டு தன்னைத்தானே கலாய்ப்பது ஆகட்டும், பவர் பிரித்து மேய்ந்திருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவைக்கு ஏற்ற அருமையான உடல்மொழி வருகிறது. அந்த ஸ்நேக் ஃபைட் மூவ்மெண்ட் மரண மாஸ். ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரமை கூட ஓவர் டேக் செய்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் ரெண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு கேரண்டி கொடுக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படம், நீங்கள் பழைய ‘இன்று போய் நாளை வா’வை நினைவில் கொள்ளாமல் இருந்தால். ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிப்பு தான். நினைவில் நீங்கா காவியம் எல்லாம் இல்லை. ஆனால் பார்க்கும் அந்த ரெண்டரை மணிநேரம் நல்ல பொழ்துபோக்கு உண்டு. முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் “கடைசில என்னையும் ஃபைட் பண்ண வச்சுட்டாங்களே”, “நானாவது காமெடியன்னு எனக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா நீ காமெடியன்னு தெரியாம இன்னும் ஹீரோவாவே நெனச்சுக்கிட்டு இருக்கியே” என சந்தானமும் பவர் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு பவர் ஸ்டார் விளையாட்டு. கொண்டாடுங்கள்..
முடிவாக,அவரின் திரைக்கதை யுக்தியை எந்த கொம்பனாலும்
நெருங்க முடியாது என ஆணித்தரமாக விளக்கும் படம். தலைவர் பவர் மட்டும்
இல்லையென்றால் படம் காலியாகியிருக்கும்.. ஒரு முறை பார்க்கலாம், சம்பந்தமே
இல்லாமல் சிரித்துவிட்டு வரலாம். “கண்ணா லட்டு தின்ன ஆசையா” - திகட்டும் இனிப்பு..
பழைய இன்று போய் நாளை வா என்று நீங்கள் குறிப்பிடாமல் இருந்தால் யாரும் ஒப்பிடமாடார்கள்,
ReplyDeleteநல்ல விமர்சனம் !
பழைய இன்று போய் நாளை வா என்று நீங்கள் குறிப்பிடாமல் இருந்தால் யாரும் ஒப்பிடமாடார்கள்,
ReplyDeleteநல்ல விமர்சனம் !
ஒரு படத்தின் ரீ-மேக்கை பார்க்கும் போது, அதன் ஒரிஜினல் கண்டிப்பாக ஞாபகம் வந்து தானே ஆகும்? உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல சார் :-)
DeleteNice review boss..
ReplyDeleteநன்றி ராஜ் :-)
Deletenalla vimarsanam
ReplyDeleteநன்றி அனானி :-)
Deleteஅனானி... நன்றாக இருக்கிறது...
Deleteஉங்கள் பெயர் தெரியாததால், அப்படி சொல்லிவிட்டேன்.. மன்னிக்கவும்..
Deleteநன்றாக இருக்கிறது.. இதற்கு எதற்கு மன்னிப்பு.. புரியவில்லை..
Deleteஹா ஹா அப்ப சரி, ரொம்ப நல்லது :-)
Deleteநானும் இதையே நினைத்தேன்...நான் எழுத நினைத்த அத்தனை விசயங்களையும் நீர் எழுதி விட்டதால், நான் எழுதும் வாய்ப்பை இழந்தேன் என்பதை மிக அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஐயயோ.. அட விடுங்க நண்பா.. விமர்சனம் என்பது மொத்தமே 5,6 தான் வேறு வேறாக இருக்கும்.. மற்றதெல்லாம் நம் சொந்த கருத்தை எழுதினாலும் இன்னொருவர் எழுதியது போலவே இருக்கும்.. அண்ணன் அட்ரா சக்க செந்தில்குமார் விமர்சனமும் இதே போல் இருந்தது.. ஒரே நல்ல விசயம் நான் அவருக்கு முன் எழுதி எஸ்கேப் ஆகிவிட்டேன்..
Deleteநீங்கள் எழுதுங்கள்.. கண்டிப்பாக உங்கள் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்..
Deleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கும், இன்னும் பலரின் அறிமுகம் கிடைக்க வைத்ததற்கும் மிக்க மகிழ்ச்சி & நன்றி..
ReplyDeleteஎல்லோருமே பவர் ஸ்டார் ரசிகர்களாகி விட்டார்கள்
ReplyDeleteஉலகில் மொத்தமே இரண்டே ஜாதி தான்.. ஒன்று பவர் ஸ்டார், மற்றொன்று அவர் ரசிகர்கள்...
DeleteI have posted this link in பவர் ஸ்டார் facebook
ReplyDeletelet all power star fans enjoy after reading this