நித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா?

Friday, March 5, 2010

கடந்த சில நாட்களாக வலையுலகில் நித்யானந்தாவை தாக்கித்தான் பெரும்பாலான பதிவுகள் வருகின்றன. எதற்கு இவர் மேல் இவ்வளவு காண்டு? ஒரு வேலை இப்படிப்பட்ட கீழ்த்தரமான செய்திகளை ஊதி பெரிதாக்கி புகழ்ச்சி அடைய விரும்புகிறார்களா என்று தெரியவில்லை. என்றால், இவர்களுக்கும், சன் டிவி, நக்கீரனுக்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு சில சந்தேகங்கள்.

*வாழ்வின் மூன்று அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறையுள் இப்போது செக்ஸ் என்ற நான்காவதையும் தங்களோடு இணைத்துக்கொண்டன. அதனால் செக்ஸ் இல்லாமல் ஒரு மனிதன் இன்றைய சூழ்நிலையில் வாழ்வது மிகவும் கடினம். பரஸ்பர புரிதலோடு இருவர் இணைந்து செய்வது எப்படி குற்றம் ஆகும்?

*நித்யானந்தா சாமியார் வேஷம் போட்டு இப்படி அசிங்கமாக நடந்து கொண்டாரே என்று கேட்கிறார்கள். அவர் வேஷ காரராகவே இருக்கட்டும். அவரை நம்பியவர்கள் அவர் மேல் கோபப்படலாம். நமக்கு எதற்கு வீண் வேலை?

*நம் கெட்ட பழக்கமே இது தான். பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் எவளை எவள் புருஷன் வைத்திருந்தான், அந்த நடிகை இப்போது எந்த நடிகனுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கிறாள் என்பதை தான் நாம் கூர்ந்து கவனித்து, முதல் ஆளாக அந்த செய்தியை நம் நண்பர்களிடம் சொல்ல போட்டி போட்டு துடிக்கிறோம்.

*இந்த நடிகனோ நடிகையோ பல பேர்களுடன் ஊர் சுற்றுகிறார் என்று எந்த நடிகனையோ நடிகையையோ கேவலமாக பேசுகிறோமா? கண்ணதாசனின் வனவாசத்தை படித்து கோபப்பட்டிருந்தால் இன்று ஒரு திராவிட கட்சிக்காரர் கூட இருக்க முடியாது.

*நித்யானந்தா புத்தகத்தை ஒரு ஊடகமாக பயன் படுத்தி தன்னை ஒரு நல்லவன் போல் காட்டிக்கொண்டார். அதே போல் நடிகர்கள் சினிமாவில் உலகிற்கே உபதேசம் செய்து அந்த ஊடகத்தின் மூலம் தங்களையும் நல்லவர்களாக காட்ட முற்படுகிறார்கள்.

*'நித்யானந்தா செய்த செயல் பல இடங்களிலும் பரவலாக நடப்பது தான். அவர் இருக்கும் இடமும் தன்னை சுற்றி அமைத்துக்கொண்ட பிம்பமும் தான் அவருக்கு எதிராக இப்போது திரும்பி உள்ளது.

*'வீட்டு வேலைக்காரியை கற்பழித்த பாதரியார்', 'மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்', 'பதவி உயர்வுக்கு படுக்கைக்கு அழைத்த மேலாளர்' என்று தினமும் இதே போன்ற சமுதாயத்தில் பொறுப்பும் மதிப்பும் உள்ள பலரை பற்றியும் இப்படி செய்தி வருகிறதே?

*அதை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். 'எது டிவி தலைப்பு செய்திகளில் முதலாவதாக வருகிறதோ, எது பத்திரிக்கையின் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்கிறதோ அதை தான் நாமும் வழி மொழிய வேண்டும்; அப்போது தான் நமக்கும் ஒரு பாப்புலாரிட்டி கிடைக்கும்' என்ற எண்ணம் தான் இது போன்ற கேவலமான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க சொல்கிறது.

*நினைவிருக்கிறதா, செரீனா பானு, சிவகாசி ஜெயலட்சுமி இவர்களை எல்லாம்? இவர்களுக்கு எதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது? ஒரு காரணமும் இல்லை. 'நம்மால் முடியவில்லை, இவனக்கு (இவளுக்கு) மட்டும் எங்கிருந்து இப்படி அதிர்ஷ்டம் கொட்டுகிறதோ' என்ற பொறாமையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

*சில வருடங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவின் குளியல் டிவிடி வெளி வந்த போது அதை பார்க்க முடியாதவர்கள் தான் அப்போது பல பேர் இருந்திருப்பார்கள். ஆனால் நெற்றிக்கண் வெளியிட்ட புகைப்படங்கள் சாதாரண பாமரன் கையிலும் இருந்தது. அந்த குளியல் காட்சியை படம் பிடித்தவனை விட நெற்றிக்கண் பத்திரிகை தான் மிகவும் காவாளித்தனமாக செயல் பட்டது.

*இன்று அதைத்தான் நமது சன் டிவியும் நக்கீரனும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்துமணி மேட்டருக்கு குடுமிப்பிடி சண்டை போட்ட தினகரனும் தினமலரும் இப்போது கை கோர்த்து செல்கிறார்கள்.

*அந்த சாமியார் எங்கே கை வைக்கிறான், எப்படி துள்ளிக்குதிக்கிறான் என்பதை எல்லாம் ஒரு நீலப்படத்தை காண்பிப்பது போல் விலாவாரியாக காட்டவேண்டுமா?

*ஒருவன் இருபது வயதுகளிலேயே சாமியாராக போவது என்பது இன்றைய சூழலில் எப்படி சாத்தியப்படும் என்று யோசித்திருந்தால் அன்று அவர் பின்னாடி இவ்வளவு கூட்டமும் சென்றிருக்காது, இன்று இந்த விஷயம் நம் வீட்டு பெட்டிக்குள்ளும், காலையில் நம் முகத்தில் முதலாவதாக முழிக்கும் நாளிதழிலும் வந்திருக்காது.

*சாமியார்களால் பல பிரச்சனைகள் தீர்கிறது என்றால் இவர்களையே ஏன் நாம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுக்க கூடாது? அவர்கள் தான் தம் ஞான திருஷ்டியால் இந்த உலகையும் நாட்டையும் அழிவில் இருந்து காப்பாற்றி செழிப்பாக வைத்திருக்கலாமே?

*நமது கஷ்ட காலங்களில் நம்பிகைக்கு ஒரு துணையாகவும், மகிழ்ச்சி தருணங்களில் தலைக்கனம் ஏறாமல் இருக்க ஒரு கைப்பிடியாகவும் நாம் அமைத்துக்கொண்ட ஒரு நம்பிக்கை தான் கடவுள். நமக்கும் கடவுளுக்கும் நடுவில் புரோக்கர் எதற்கு?

*நித்யானந்தா மட்டும் அல்ல, இந்த சம்பவம் மூலமாக பலன் அடைய நினைக்கும் ஒவ்வொருவரும் கெட்டவர் தான் (நான் உட்பட).

*கடவுளை மற; மனிதனை நினை - இது பெரியார்.
சாமியாரை மற; சாமியை மட்டும் நினை - இது அடியேன்.

6 comments

  1. ஒரு வேளை விஷயம் இப்படி இருந்தால்...

    அந்த வீடியோவில் ரஞ்சிதா வந்தது போல் அடுத்த நாள் காட்சியில் வேறு பெண் இருந்திருந்தால்?
    இதுபோல் நிறைய பேர் அந்த மடத்தினுள் போகாமல் இருக்கவும், ஏற்கனவே உள்ளே அவரை முழுமையாக நம்பும் மக்களில் சிலராவது திருந்தவும் இந்த shock treatment அவசியம்தான். ஆனால் கொஞ்சம் ஏற்கத்தக்க முறையில் இந்த விஷயத்தை Sun TV வெளியிட்டிருக்கலாம்.

    ReplyDelete
  2. /சாமியாரை மற // - நீங்க

    சன் டீவீயை நம்பலாமா ? - இது நான்

    ReplyDelete
  3. அந்த வீடியோவில் ரஞ்சிதா வந்தது போல் அடுத்த நாள் காட்சியில் வேறு பெண் இருந்திருந்தால்?

    இருக்கின்றார்கள் என அம்பலமாகியுள்ளது. இறைவனை கோவிலில் தேடாமல் மனிதர்களிடமும், மடங்களிடமும் தேடிய குறுக்கு புத்திகாரர்கள் தான் நித்தியா போன்ற சாமியார்களின் வளச்சிக்கு காரணம்.

    அங்கி அணிந்த பாதிரியார்கள் செய்த கற்பழிப்புகளையும், கன்னியாஸ்திரிகள் செய்த காமலீலைகளையும் பார்க்கவோ, கேட்கவோ மக்களுக்கு கொடுத்துவைக்கவில்லை. புகழ்பெற்ற வேளாங்கன்னி மாதாவின் கோவிலில் நடந்த பல அக்கிரமங்களை இணையத்தில் தேடிப்பாருங்கள்.

    நடிகையாக இருந்ததால் வியாபார உத்திக்காக ஊடகங்கள் பயணபடுத்திக் கொண்டன அவ்வளவு தான் நண்பரே!

    ReplyDelete
  4. Sivakasi Thalai ku Kelviyum Avarey Answerum Avarey.,Paavam Romba than Kolambi irukkar.,Yaruna Aaruthal Sollunga.Romba nambi irunthu iruppar pola....Hahahahahahha...Vidunga Sir.Kandippa Intha Dose Makkalukku Thevai Than sir.

    ReplyDelete
  5. நல்ல சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்.

    ReplyDelete
  6. அந்த Cdயை தயாரிச்சதே சன்tvயும் நக்கீரன் கோபாலுதான் இம்த பிரச்சனையே அவர்கள் திட்டமிட்டு ஏற்படுத்திய பிரச்சனையே
    இந்த பிரச்சனைக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும்

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One