நீங்களே சொல்லுங்க....

Thursday, March 4, 2010


அது ஒரு கல்லூரி. அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு காலத்தில் அந்த ஊருக்கே மாதிரியாக விளங்கினார்கள். நான் சொல்வது ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு. அது பணக்கார மாணவர்கள் படிக்கும் கல்லூரி அல்ல. ஆனால் பண்பான மாணவர்களும் ஒழுக்கமான மாணவத்தலைவனும் இருந்த கல்லூரி. இன்று அந்த கல்லூரியில் பலர் வசதி படைத்தவர்களாய் இருந்தாலும், ஒழுக்கம் என்பது மேலிருந்து கீழ்வரை யாரிடமும் இல்லை. இந்த அளவுக்கு அந்த கல்லூரி சீரழிந்து போய்க்கொண்டு இருக்கிறது. மாணவத்தலைவராக ஒரு பஞ்சாபி மாணவன் சும்மா டம்மி பீசாக இருக்கிறான். அவனை ஆட்டுவிப்பது அந்த கல்லூரி நிர்வாகத்தினர் தான். கல்லூரி நிறுவனரின் மனைவி தான் நிர்வாக தலைவி. அவர் மகன் இதே கல்லூரியில் ஒரு மாணவன். இவர்கள் இருவரும் நினைத்தது தான் கல்லூரியில் நடக்கும்; அந்த பஞ்சாபி மாணவத்தலைவன் மூலமாக. நாம் இப்போது அந்த கல்லூரியின் தமிழ் துறை நாசமாய் போய் விட்டது. ஏன் என்று கேட்கிறீர்களா?

மிகப்பெரிய அறிஞர்களும் மேதைகளும் வகுப்புத்தலைவனாக இருந்த தமிழ் துறையை இப்போது ஒரு அங்கிள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் (சச்சின் பட அய்யாசாமி மாதிரி இவர் பல வருடம் தன் பதவியையும் விடாமல் ஓய்வும் எடுக்காமல் இருப்பதால் இவர் அங்கிள் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்படுகிறார்). இவருடைய அக்கப்போர் கொஞ்சநஞ்சமல்ல.

*இவர் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த கல்லூரியில் தான் படிக்கிறார்கள். அனைவருக்கும் எதாவது பதவி வாங்கி கொடுத்து விட்டார்.

*'மாணவர்களின் நலன் கருதி தான் அத்யாவசிய பொருளான புத்தகத்தின் விலை கூட்டப்பட்டது' என்று நிர்வாகம் சொன்னால், கல்லூரி மாணவத்தலைவருக்கு எஸ்எம்எஸ் க்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்புவார்(ஒரு மிஸ்டு கால் கூட குடுக்க மாட்டார்). அதை பெருமையாக நோட்டிஸ் போர்டிலும் ஓட்டிவிடுவார். ஆனால் சென்ற முறை தன் தூரத்து உறவினர் ஒருவருக்கு வகுப்பில் பதவி தரவில்லை என்றவுடன் கோபமாக மாணவத்தலைவரை சந்தித்து ('என் தயவு இல்லாம நீ எப்படி பதவியில் இருக்குற னு பாப்போம்' என்று) தன் உரிமையை பெற்று வெற்றியோடு வந்தவர் தான் இந்த தமிழ் துறை மாணவ தலைவர்.

*தன் வகுப்பையே இரண்டாகப்பிரித்து தன் இரண்டு தம்பிகளுக்கும் அதை பங்கிட்டுக்கொடுத்த வள்ளல் இவர்.

*அதே நேரத்தில் தன் தமிழ் துறை மாணவர்கள் உயர் கல்விக்காக வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து இன ரீதியாக ஒடுக்கப்பட்டு அனைவரும் அரியர்ஸ் வைத்து கிட்டத்தட்ட வாழ்வையே இழந்த போது அதை கண்டுகொள்ளாதது போல் இருந்தார். கேட்டால், "என் மௌன அழுகை உனக்கு புரியாது மச்சி" என்று உணர்ச்சி பூர்வமாக கவிதை எழுதினார்.

*தன்னை இந்த தமிழ் துறையின் காவலாளியாகவே நினைத்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்வதே இவர் வேலை.

*இப்போது கூட தமிழ் துறையின் பெருமையையும் புகழையும் உயர்த்துகிறேன் பேர்வழி என்று தமிழ் வரலாறு தெரியாதவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு "தமிழ்த்துறை விழா" நடத்த ஏற்ப்பாடு செய்தார். துறையின் ஒத்துழைப்பு இல்லை என்றவுடன் "தமிழ் விழா" என்று பெயர் மாற்றி அதே விழாவை நடத்த ஏற்பாடு செய்கிறார்.

*இவரை எதிர்த்து ஒரு பெண் தான் அடிக்கடி பேசுவாள்; வகுப்புத்தலைவர் தேர்தலிலும் நிற்ப்பாள். ஆனால் அவளை பற்றி மற்ற மாணவர்களிடம் அசிகமாக கமென்ட் செய்வது, அவள் அந்தரங்க வாழ்கையை அசிங்கமாக பேசுவது என்று பலவிதங்களில் தன் கலையை வெளிப்படுத்தி தன்னை ஒரு கலைஞராக காட்டிக்கொள்வார்.

*அதுவும் கல்லூரியில் தேர்தல் வந்துவிட்டால் போதும் இவருக்கும் இவர் தம்பி இருவருக்கும். சக மாணவர்களுக்கு சரக்கு வாங்கி கொடுப்பது, காண்டீனில் இருக்கும் பஜ்ஜி, டீ அகௌன்ட் எல்லாவற்றையும் தாங்களே கட்டிவிடுவது என்று அலப்பறை செய்துவிடுவார்கள். அனைவருக்கும் மறக்காமல் பரிசும் வந்து விடும்.

*நம் தலைவரும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார். 'நான் வெற்றி பெற்று வந்தால் மாணவர்கள் அனைவருக்கும் பிட் சி.டி. தருவேன்' என்று பகிரங்கமாக அறிவிப்பார். 'என்ன இவ்ளோ கேவலமா இருக்கு?' என்று யாரவது கேட்டால் இவரே ஒரு கேள்வி பதிலை தயாரித்து "என் வீட்டில் நான் மறைவாக சந்தோசமாக பிட் படம் பார்த்த போது 'நம் சக வகுப்புத்தோழர்கள் அனைவராலும் பிட்டு படம் பார்க்க முடியவில்லையே?' என்று நான் வருந்தியதன் விளைவு தான் இந்த திட்டம்" ஒரு போடு போட்டார். தேர்தலில் ஓட்டும் பெற்றார். 'பிட்டு படம் தரிங்க, டிவிடி யார் தருவது?' என்று கேட்டால் கோபத்தில் உள்ளம் குமுறி ஒரு கவிதை பாடி விடுவார்.

*வகுப்பில் எப்போதும் அடிதடி தான். தங்களுக்கு பிடிக்காதவர்களின் கை கால்களை வாங்குவது சர்வ சாதாரணம். அதுவும் இவரின் மூத்த தம்பி அதில் கில்லாடி.

*'நீ லீடராக இருக்கும் போது தான் பா கிளாஸ் ல பிரச்சனையை வருது' என்று யாரவது நாக்கில் பல் போட்டு பேசி விட்டால், கடந்த முறை லீடராக வேறொருவர் இருந்த போது நடந்த ஒன்றிரண்டு சாதாரண பிரச்னையை மிகை படுத்தி சொல்வது, அல்லது மற்ற வகுப்பில் நடக்கும் சோதா பிரச்சனைகளை பேசி சமாளிப்பது இந்த அய்யாசாமி என்ற அர்னால்டுக்கு கை வந்த கலை.

*சொல்லுங்க மத சக மாணவர்களை மிக கேவலமாக பேசுவார்; காட்டு மிராண்டிப்பய கூட்டம் என்று சாடுவார். அவர் குடும்பத்திலும் அந்த காட்டுமிராண்டி வழக்கம் உண்டு என்றும் அதை முதலில் நிறுத்தவேண்டும் என்றும் இவருக்கு தோணவே தோணாது. அதே நேரத்தில் கிறிஸ்த்துவ முகமதிய மாணவர்களிடம் 'நான் உங்களில் ஒருவன்' என்று காடும் விதமாக எதாவது செய்து கொண்டிருப்பார் (அவர்கள் மத விழாக்களில் தான் அசைவ உணவு உண்டு என்பதால் தானோ என்னவோ!).

*இவருக்கு பல துதி பாடிகள் உண்டு. தலைவர் 'இன்றும் பிட் அடித்து மாட்டிக்கிட்டார்' என்று பெருமையாக சொல்லி அதற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை எல்லாம் ஏற்ப்பாடு செய்து ஜமாய்த்து விடுவார்கள். தல்கைவரும் சிரித்துக்கொண்டே அரைகுறை ஆடை அழகிகளை பார்த்துக்கொண்டிருப்பார்.

*ஆடல் பாடல் என்றால் என்னவென்றே தெரியாதவரை அழைத்து வந்து "எங்களலாம் மெரட்டுராங்க தல" என்று பேச வைத்து சரமாரியாக பஞ்சர் வாங்குவார். ஆனாலும் அனைவரையும் பாசத்தோடு அரவணைத்து செல்லும் ஒரு பாசத்தலைவனாக தன்னை காட்டிக்கொள்வார்.

வகுப்பை, மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்று ஒரு லீடர் யோசிக்காமல் இப்படி கேளிக்கைகளிலும் அடாவடித்தனத்திலும் ஈடு பட்டால் அந்த தமிழ் துறை எப்படி உருப்படும்?

8 comments

  1. நினைத்தாலே...அருமையாக கூறியுள்ளீர்கள்

    ReplyDelete
  2. இத மட்டும் நேரடிய சொல்லி இருந்த இந்நேரம் சிவகாசிக்கு ஆட்டோவோ இல்ல மீன் பாடி வண்டியோ அனுப்பி இருப்பார்கள்... சொன்னவரைக்கும் இது அக்மார்க் உள்குத்து !!!

    அன்புடன்
    இன்னொரு சிவகாசிக்காரன்

    ReplyDelete
  3. தங்களின் ஆதங்கம் நியமானது தான், இவ்வாறு இருந்தால் தமிழ் துறை மட்டுமல்லாது கல்லூரியும் மற்றொரு சட்டசபை போல ஆகிவிடும். . . . கல்லூரிகள் வியாபார கடைகள் ஆகிவிட்டது நண்பரே , கல்யாண பரிசாக வீடு கொடுத்த காலம் போய், சீதனமாய் பொறியியல் கல்லூரிகள் கொடுக்க தொடங்கி விட்டனர். இளநிலை பொறியியல் படித்தவன்,முதுநிலை மாணவனுக்கு இயக்குனர். . . என்று ஒளியும் இந்த அவலம் என்பது தான் கவலை அளிக்கின்றது.

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா கலைஞர நல்லா வாரி இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஏங்க அவருக்கு முடியே இல்லை, நான் எப்படி வாரி விடுறது..

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One