நண்பர் செல்வக்குமார் வினையூக்கி (http://vinaiooki.blogspot.in/) அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தன் பக்கத்தில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார்..
1. மோடி ஏன் பிரதமராக வேண்டும்?
2. மோடி ஏன் பிரதமராகக்கூடாது?
இது தான் அந்தக்கேள்விகள்.. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்களை வரிசையாக எழுதி எந்தப்பக்கம் அதிகமான பாயிண்டுகள் வருகின்றனவோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பது நண்பரின் எண்ணமாக இருக்கலாம்.. சரி, நம் பங்குக்கு நாமும் இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லிப்பார்ப்போமே என்று எழுதிய ஒரு பதிவு தான் இது..
முதலில், மோடி ஏன் பிரதமராக வேண்டும்?
குஜராத் என்கிற இந்தியாவின் நீளமான கடற்கரை பகுதியை கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தின் முதல்வரை இன்று ஒரு நாடே ‘பிரதமராக வா’ என்று அழைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மிகச்சிறந்த அளவில் உயர்த்தும் நிர்வாகத்திறன் படைத்திருப்பவர் இன்றைய சூழலில் அவர் மட்டும் தான்.. மிகப்பெரிய இரண்டு பொருளாதார வல்லுநர்கள் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருக்கும் தேசத்தில், இந்திய பொருளாதாரம் கஷ்டப்படும் போது, இந்திய மக்கள் தொகையில் 5% மட்டும் இருக்கும் குஜராத்திகள், நம் தேசத்தின் GDPக்கு 7% பங்களிக்கிறது. பஞ்சம் மிகுந்த பூமிகளில் ஒன்றான குஜராத் இன்று விவசாயத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆற்று நீர்ப்பாசனம் கிடையாது.. முழுவதும் கிணற்று நீர்ப்பாசனம் தான்.. காரணம்?
பொருளாதார வல்லுநர்களே இலவசத்தை கையில் எடுக்க துணியும் போது, தைரியமாக தன் தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளைப்பார்த்துக்கேட்டார், “உங்களுக்கு நான் இலவச மின்சாரம் தருகிறேன்.. ஆனால் எப்போது கரெண்ட் வரும், எப்போது போகும் என்று எனக்கே தெரியாது.. ஆனால் மின்சாரத்திற்கு குறைந்த பட்ச கட்டணம் வசூலிப்பேன். 24மணி நேரமும் மின்சாரம் இருக்கும். உங்களுக்கு இலவசம் வேண்டுமா? அல்லது மின்சாரம் வேண்டுமா?”. நாம் ஜெயிப்போமா இல்லையா என்று கவலைப்படாமல் இப்படி தைரியமாக கேட்டு, ஜெயிக்கவும் செய்தார். இன்று 24மணி நேர மின்சாரமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
உற்பத்தித்துறையில் இன்று இந்தியாவில் குஜராத் தான் முன்மாதிரி மாநிலம். வெளிநாட்டு முதலீடுகளை மிக அதிக அளவில் ஈர்த்துக்கொண்டிருப்பது அது தான். UNICEF சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சிறந்த உள்கட்டமைப்பை பெற்றிருப்பதாக குஜராத்தை பாராட்டுகிறது. அதே போல் தொடக்கக்கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையும், தொடக்கக்கல்வி கொடுக்கும் பள்ளிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன. இதை எல்லாம் மோடி என்கிற ஒருவர் மட்டும் செய்கிறார் என்று பொய் கூற விரும்பவில்லை. அவருக்கு பின் இருக்கும் IAS, IPS, போன்றவர்களின் திட்டமிடல் தான்.. ஆனால் அதே போல் மற்ற முதல்வர்களுக்கும் IAS, IPS ஆட்கள் இருக்கிறார்களே? அவர்களின் அறிவை எந்த முதல்வர் ஒழுங்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்?
அனைத்தையும் விட, ஒரு இந்துவாக, இந்த தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவனாக எனக்கு மோடி போன்ற என் சமூகத்துக்கு உதவும், கட்டாய மதமாற்றத்தை எதிர்க்கும், தீவிரவாதத்தை ஒடுக்கும் (சுவாமி நாராயண் கோவில் தீவிரவாத பிரச்சனைக்கு பிறகு அங்கே தீவிரவாதிகளால் வாலாட்ட முடியவில்லை), சிறுபான்மையினர் உரிமை என்னும் பெயரில் நடக்கும் மத துவேசங்களையும் அவர் எதிர்ப்பதும் ஒரு காரணம்.. ஆனால் இந்த நேரத்தில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றால், அவர் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளின் தோற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த முறை அவர் கடந்த் தேர்தலை விட அதிக தொகுதிகளில், இஸ்லாமியர் அதிகம் வாழும் தொகுதிகளிலும் அதிகம் வென்றிருக்கிறார். உலகில் இருக்கும் எந்த நாட்டிலும், பெரும்பான்மை மக்களை இந்திய அரசியல்வாதிகள் போல் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததில்லை.. இந்தியாவில் இந்த அநீதி நடக்கிறது. அரசு கோப்புகளின் இந்துவாக இருந்து சலுகைகளை அனுபவிக்கும் ஒருவன், தனிப்பட்ட வாழ்வில் வேறொரு மதத்தை பின்பற்றி அரசுக்கும், தான் சார்ந்திருக்கும் மதத்துக்கும், உண்மையாக சலுகை கிடைக்க வேண்டியவனுக்கும் துரோகம் செய்கிறான். மோடி தன் பெரும்பான்மை சமூகத்துக்கு உண்மை செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
சரி இப்போது, மோடி ஏன் பிரதமராகக்கூடாது?
குஜராத் என்கிற இந்தியாவின் நீளமான கடற்கரை பகுதியை கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தின் முதல்வரை இன்று ஒரு நாடே ‘பிரதமராக வா’ என்று அழைத்துக்கொண்டிருப்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு தெரிந்திருக்கும் உண்மை, ‘யார் பிரதமராக வந்தாலும் நம் வாழ்க்கை ஒன்றும் பெரிதாக மாறிவிடப்போவதில்லை. நம் பொருளாதாரம் என்பது நம் பொருளாதார வல்லுநர்களை சார்ந்து இல்லை. தான் உழைத்தால் தான் தனக்கு சோறு’ என்று புரிந்து கொண்ட மக்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இந்த சூழலில் மக்கள் யாரும் மோடியை பிரதமராக கனவு கண்டு கொண்டிருக்கவில்லை. In fact, அவர்களுக்கு மோடி வந்தால் என்ன பிரச்சனை எல்லாம் வருமோ என்னும் கவலை தான் இருக்கிறது.
சில மீடியா ஆட்களும் ஏதோ மோடி தான் இந்தியாவை காப்பாற்ற வந்த மோஸஸ் போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைக்கின்றன. உண்மை தான் அவர் ஆட்சியில் தான் குஜராத் பொருளாதார வளர்ச்சி பெற்றது. ஆனால், பெண்களின் சுகாதாரம், அரோக்கியம், குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைப்பேறின் போது நிகழும் மரணம், ஆண்-பெண் விகிதாச்சாரம் இது எல்லாமே அங்கு மிக மிக குறைவாக, அதன் பொருளாதார வளர்ச்சிக்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறது. இது ஏன் என்று லேசாக யோசித்தால் ஒரு விசயம் நமக்கு புலனாகும்.. ஈசியாக புகழ்ச்சி கிடைக்கும் விசயங்கள், பணத்தை வைத்து காட்டும் ஜிகினா வேலைகள் தான். ஏழைகளை கண்டுகொள்ளாமல், நாட்டின் சுகாதாரத்தில், அக்கறை கொள்ளாமல் இருந்தால் இங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை.. ஏனென்றால் எல்லா மாநிலமும் அப்படித்தான் இருக்கின்றன. அதனால் பொருளாதாரம், பள பள சாலைகள், வெளிநாட்டு முதலீடு என்று மீடியாக்களின் கேமராவை குளுகுளுவென்று வைத்திருந்தாலே போதும், ஈசியாக ‘நல்லவனாகி’ விடலாம் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை.
அது போக, ஒரு நாட்டின் தலைவனாக வருபவனுக்கு தன் குடிமக்களிடம் பேதம் இருக்க கூடாது.. ஒரு இஸ்லாமிய மன்னர் தாடி, மீசை வைத்திருக்கும் இந்துக்களுக்கு ”ஜிசியா” என்னும் அதிக வரி போட்டாராம்.. ஆனால் அவருடை ஆட்சியைத்தான் முகலாயர்களின் பொற்கால ஆட்சி என்கிறோம்.. அதே போல் தான், தன் குடிமக்களிடம் பேதம் பார்த்து, அவர்களை இம்சிக்கும், போலி என்கௌண்டர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் இவர் பிரதமராக வந்தால் நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்னவாகும் என்கிற ஐயமும் இருக்கிறது. பெரும்பான்மையினர் வேண்டுமானால் சந்தோசமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளலாம். மோடி குஜராத் கலவரத்தில் குற்றமற்றவர் என தீர்ப்பு வந்து விட்டதே என அவர் ஆதரவாளர்கள் கூறலாம். தான் அமைச்சராக இருந்தே ஒரே காரணத்துக்காக தனக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த ரயில் விபத்துக்காக பதவியை துறந்த அரசியல்வாதிகளை கண்டவர்கள் நாம். தான் முதல்வராக இருக்கும் ஒரு மாநிலத்தில் நடந்த கலவரத்தை அடக்காமல் அதை வேடிக்கை பார்த்த இவரை எப்படி நம்பி ஆட்சியை கொடுக்க முடியும்?
நாடாளுமன்றம் என்பது அனைத்து கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து நடக்கும் ஒரு அரசு நிர்வாக அலுவலகம். ஆனால் மோடியின் பெயரை பிரதம வேட்பாளராக சொன்னதுமே, பா.ஜ,க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துவிட்டன. ஒரு வேளை நாளை இவர் பிரதமரானால் இவரால் அவர்களோடு ஒத்துப்போக முடியுமா? அல்லது அவர்களால் இவரோடு ஒத்துப்போக முடியுமா? இவரை எதிர்த்த கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிலை என்னவாகும்? குறிப்பாக ஏற்கனவே பின் தங்கியிருக்கும் பிஹாரை நினைத்தால் மிக கவலையாக இருக்கிறது. மோடி ஒரு நிர்வாகியாக இருக்கலாம். ஆனால் துவேசம் இல்லாத, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற வஸ்துக்கள் எதுவும் அவரிடம் இருப்பதாகப்படவில்லை. நம் நாடு பொருளாதாரத்தில் மிக மெதுவாக கூட முன்னேறட்டும். ஆனால் மக்களின் சுகாதாரம் வாழ்வாதாரம் போன்றவற்றின் மேல் அக்கறையில்லாத, உயிர்களில் இந்து உயிர் இஸ்லாமிய உயிர் என்று பேதம் பார்க்கும் ஒருவரின் தயவில் அது வல்லரசானால், நாளை அந்த வல்லரசு நாட்டில் நல்ல குடிமகனுக்கு பஞ்சம் வந்துவிடும்.. வேண்டாம் எங்களுக்கு மோடி..
பின் குறிப்பு:
நீங்களும் ஒருவரை ஆதரிகக்வோ எதிர்க்கவோ செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து விட்டு அதன் சாதக பாதகங்களை எல்லா விதத்திலும் தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கு ஒருவரை பிடித்திருந்தால் அவரின் negative விசயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.. அப்போது தான் அட்லீஸ்ட் ஒரு விவாதத்திலாவது நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க உதவியாக இருக்கும்..
சகோதரரே!
ReplyDeleteநீங்கள் சொன்ன ப்ளஸ் பாயிண்டுகளில் நான் படித்த சில விசயங்களை பகிர்கிறேன்!
1.அங்கு மின்சாரம் தனியார்மயம்.
2.இஸ்லாமியர்கள் வாக்கினால் ஜெயித்தாரானால்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஜெயித்தவர்கள் ஏன்!
தோற்றார்கள்!
வாக்கு விழக்கூட பயமும் காரணமாக இருக்கலாம்.
ராஜபக்சே தொடர்ந்து ஜெயிக்கிறார்.
ஈழத்தில் என்ன பூமழையா !?பொழிந்தது.
என் கருத்து இது.
மற்றும் பகிர்வுக்கு நன்றி!
ஓட்டுப்போடுவதில் என்ன பயம் இருக்கப்போகிறது? //ராஜபக்சே தொடர்ந்து ஜெயிக்கிறார்.
Deleteஈழத்தில் என்ன பூமழையா !?பொழிந்தது.// ராஜபக்ஷே ஈழத்தில் எங்கு ஜெயித்தார்?
பின் குறிப்பு : இதற்கு உங்கள் பதிவு எதற்கு...?
ReplyDeleteஅண்ணே பதிவு என்னுடையது.. பின்குறிப்பில் இருக்கும் கருத்து மட்டும் அவர் சொன்னது..
Delete// நம் பங்குக்கு ///
ReplyDeleteபுரிகிறது...!@
திருத்தி விட்டேன் அண்ணே :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteசாதக/பாதக விஷயங்கள்ல தெளிவு இருந்தா வாதிடலாம்..///
ReplyDeleteஅருமை ராம்
sako..!
ReplyDeletekonja velaiyaala poi viten.
angu muslimkalukku mattum pirachanaiyaa??
enapathai vida.
thalith makkal kooda thanneer vazhanguvathaaka
mukanoolil padiththum ullen.
haren paandiyaa enpavar kolavazhakkil ivar sampantha
pattathaaka avarin kudumpam kutram saattukirathu.
(t.v,nikazhchiyl arinthathu)
atharkaaka congresai naan varaverkavillai.
iranadaiyum thavirthu maatru arasiyalaiye naan virumpukireb.
//haren paandiyaa enpavar kolavazhakkil ivar sampantha
Deletepattathaaka avarin kudumpam kutram saattukirathu.// ஏதாவது ஒரு அரசியல்வாதியின் மீதாவது கிரிமினல் குற்றம் இல்லாமல் இருக்கிறதா? நம் நாட்டின் ஓட்டு அரசியல் என்பதே இருக்கும் கழிசடைகளில் குறைவாக நாற்றம் எடுக்கும் கழிசடையை தேர்ந்தெடுப்பது தான்.. அந்த வகையில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள்..
payam kaaranama..!?"//
ReplyDeleteean payam irukkaathu ...!?
mannikkavum...
eezhathil illaiyentraalum...
ilangaiyil eppadi sako..!
நல்ல அலசல்......
ReplyDeleteநல்ல விவாதம்... இருப்பினும் மனம் தெளியவில்லை, குழப்பம் நீடிக்கிறது
ReplyDeleteகுழம்புங்கள்.. உங்களை நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கவே முடியாது.. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் குறைவாக ஊறிய மட்டையை தேர்ந்தெடுப்பது தான் நம் கடமை.. அந்த குறைவாக ஊறிய மட்டை எது என்பதை புரிந்து கொள்வதில் தான் நம் திறன் இருக்கிறது
Deleteஇந்தியாவின் வளர்ச்சி அரசியல்வாதிகள் கையில் இருப்பதாக நான் நம்பவில்லை
ReplyDeleteஇந்திய அபரீதமான மனித வளம் கொண்டது
இந்தியா மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டது
அதன் வளர்ச்சிக்கு இந்த தன்மை மிகவும் உதவுகிறது
உதாரணமாக மும்பை தாக்குதல் / வெடிகுண்டு சம்பவங்கள்
நடந்த இரு நாட்களுக்குள் ROUTINE மும்பை இயக்கத்துக்கு
மும்பை மக்கள் தயார்ஆகிவிட்டர்கள்
இது இந்தியா முழுக்க உள்ள தன்மை
அரசியல் வாதிகள் தங்கள் ஆளுமை கொள்கைகளாலும்ஊழல்களாலும்
இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஓர் 10 சதவிகிதம் வளர்ச்சியை
கெடுக்க முடியும்
90 சதவிகித வளர்ச்சி இயல்பான வளர்ச்சி யாராலும் தடுக்க இயலாத வளர்ச்சி
1967 ல் உணவுபற்றாகுறையால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது ...
அதாவது 1967 மக்கள் தொகைக்கு அரிசி வழங்க இயலவில்லை .
இன்றைக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு அரிசி கிடைகிறது
விலைவாசி உயர்ந்தாலும் கிடைகிறது.
இது என்ன திராவிடர் கட்சிகளின் மேலாண்மை செயலா ?
இல்லை
இயல்பான மனித தேடலின் வளர்ச்சி
திராவிடர் கட்சிகளால் போட்டி போட்டுகொண்டு
ஊழலை மட்டுமே வளர்க்க முடிந்தது
திரு மோடி அவர்களை பற்றி பிம்பமே உருவாக படுகிறது .
ஆனால் இருக்கிறவர்களுக்குள் அவர்
ஊழல் இல்லாத RED TAPE இசம்
இல்லாத தலைவர் என்று தோன்றுகிறது .
நமது பொருளாதார வளர்ச்சியில் பணக்காரர்கள் மிகுந்த பணக்காரர்கள் ஆகிறார்கள்
நடுத்தர வர்க்கமும் வாழ்க்கைதரம் முன்னேறி வந்து கொண்டு இருக்கிறது
நகரத்து ஏழைகளும் முன்னேறி வந்து கொண்டு இருக்கின்றனர் .
அடித்தட்டு மக்கள் மிகுந்த சிரமங்கள் கொண்டு வாழ்க்கை நடத்து கின்றனர்
மோடி பிரதமராக வருவதற்கான சாத்தியகூறுகள் கம்மி
இந்தியாவின் ஒட்டு மொத மாநிலங்களின் வாக்கு வங்கியை வைத்து பார்க்கவும்
வந்தாலும் வெகு காலம் பிரதமராக இருக்க அரசியல் சுழ்ச்சிகள் விடாது
அவருக்கு இன்னும் MATURITY வரவேண்டும்
பிம்பம் காட்டப்படும் அளவு குஜராத் இல்லை
அடிப்படையில் குஜராத்திகள் எப்படியோ மோடியும் அவ்வாறே
யார் பிரதமராக வந்தாலும் இந்தியா வளரும்
வரலாறு சொல்லும் உண்மை
அற்புதமான கருத்துகள். நன்றி ஐயா.
Deleteதிரு Meenakshisundaram Somaya -
Deleteஉங்களது கருத்துக்களை முகநூலிலும் எடுத்து எழுதியிருக்கிறேன். நன்றி ஐயா.
மிக மிக உண்மை.. என் கட்டுரையிலும் ஒரு வரியில் அதை சொல்லியிருக்கிறேனே.. யார் ஆட்சி செய்தாலும் நான் இன்று உழைத்தால் தான் நாளைக்கான என் சோறு எனக்கு உறுதி என்று.. மக்கள் அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள்.. அவர்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை.. கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கும் என்றூ ஒரு குரூப்பும் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று ஒரு குரூப்பும் பேசுமே அது போல் தான் இங்கும், மோடி-காங்கிரஸ் க்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு..
Deleteபதிவுகள் நான் படிப்பது நிறைய குறைந்து விட்டது; எழுதுபவர்களும், எழுதுவதும் குறைந்து விட்டது.
ReplyDeleteஎல்லோரும் அனேகமாக முகநூலுக்கு சென்று விட்டார்கள், நானும்.
முகநூலில் எழுதும் 'சிந்தனையாளர்களில் Ram kumar ம் ஒருவர்'. அவரது கருத்துகள் மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்டவை, சிந்திக்க வைக்கும்.
இந்த அற்புதமான பதிவை எனது பக்கங்களில் பகிர்கிறேன். நண்பர்களும் அவரவது கருத்துக்களை பாரபட்சமில்லாமல் மனசு நோகாதபடி பதிய வேண்டுகிறேன். நன்றி நண்பர்களே.
மிக அருமை உங்கள் கருத்துக்கள்
ReplyDeleteஎன் மனதின் பிரதிபலிப்பு
ஆனால் மோடி பிரதமராவதையே நான் ஆதரிக்கிறேன்அதற்கு இரண்டே காரணங்கள் தான்
1. இந்தியா ஊழல் அரசாங்கத்தின் கையில் இருந்து விடுபடும்
2. இந்தியாவில் தற்போது இந்துக்களை இசுலாமியராக மாற்ற மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வேலைகள் நடைபெற்று வருகிறது இந்தியாவை இசுலாமிய நாடாக மாற்ற பெரிய பல கைகள் ஆதரவுடன் பல வேலைகள் நடைபெற்று வருகிறது அது தடைபெறும்
இந்திய மண்ணின் மக்கள் இந்துக்களாக இருப்பதையே விரும்பும் சக சகோதரனனின் என்னமே இது
வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்
eamba nee siruvan entru nirupithuvitayae
Deleteஅவர் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.. இதில் சிறுவன், பெரியவன் என பேதம் என்ன? உங்கள் கருத்தை முதலில் சொல்லுங்கள் அனானி..
Deleteநண்பரே.....
ReplyDeleteகாங்கிரஸ் தான் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் தருவோம் என்றது,...... மோடியோ தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கரன்ட் பில் கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.....தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும்போது இதுவரை இந்தியாவின் எந்த அரசியல்வாதியும் இப்படி சொன்னதில்லை......
அதுதான் நேர்மைத்துணிவு.....அது அவரின் வெற்றியல்ல.... நல்லவர்களை அடையாளம் காணத்தெரிந்த குஜராத் மக்களின் வெற்றி..... ஆனால் தேசம் முழுவதும் மக்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.....ஹ்ம்ம்ம்ம்ம்....
மாற்றம் முதலில் மக்களிடம் வர வேண்டும்.. அரசியல்வாதிகளிடம் பின் தானாக வந்துவிடும்..
DeleteI like Modi. Last 60 years Cong. lead India. And last 10 years, cong. MMsingh is PM. But, what happened to India. If Modi will become PM for Next 5 years, Definitly, correption is decreased,And E-gov is implemented .
ReplyDeleteEg: For Name, address changing in Ration card, How many days, weeks, months reqd. in TN and other states?
In gujarat Just One or Two hours is enough. Im not lying. In Vijay TV Neengalum Vellalam oru kodi program , a gujarat Tamilar said the Information.
This is Ice berg of Modi Administration power.
மோடி நல்லவரா கெட்டவரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று இவர் சிறந்த லாம நோக்கமற்ற பிஸினஸ் மேன். தற்போது தேசத்திற்கு இவர் தேவை. ஆனால் .... சில கணக்குகளை இவர் இப்போதே போடத்துவங்கியிருக்கிறார் என்பது உண்மை.
ReplyDelete1.மாநில கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நடுவண் அரசை பிடிக்க மாநிலங்களில் இவரது சுற்றுப்பயணம். (உ-ம். தற்போதைய ஆந்திராவில் இவரது சுற்றுப்பயணத்தில் கூடிய கூட்டம் மற்றும் வரவேற்பினைக்கண்டு தற்போது ஆளும் காங்கிரஸ் ஆடிப்போய்விட்டது. இதன் மூலம் மாநிலக்கட்சிகள் இப்போதே மோடியை வைத்து கணக்குகள் போடத்துவங்கி விட்டன. அடுத்து அவரது விசிட்... கோவை... பொறுத்திருந்து பார்ப்போம்.)
2. காங்கிரஸின் எடுபடாத அரசியல் மற்றும் ஊழல். (உ-ம் டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை சரித்தது 1970 ரூ 7.10/டாலர் இன்று 62.30/டாலர், 1.5 லட்டம் கோடி ஊழலை நிரூப்பிக்க தேவையான ஆவணங்களை இன்று காங்கிரஸ் அழித்துவிட்டது என்ற செய்திகள், கவுரவ பிச்சை இடும் 100 நாள் வேலைத்திட்டம்.. இன்னும் நிறைய சொல்லலாம்.)
உண்மையில் மோடி வந்தால் நன்மை நடக்கும், அந்த நம்பிக்கை எனக்கு உண்டு..
Delete