இலங்கையில் உயிரை எடுத்தோம், தமிழகத்தில் மானத்தை வாங்குவோம் - அழியட்டும் தமிழன்..

Wednesday, July 20, 2011

தினமும் எதாவது ஆங்கில அல்லது ஹிந்தி - பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் வடநாட்டு - செய்தி சேனல்களைப் பார்க்கும் போது தோன்றியது தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு. எந்த சேனலைத் திருப்பினாலும் "தமிழ் அமைச்சரின் ஊழல்" என்றே இந்த ஸ்பெக்ட்ரம் என்னும் விசயம் சொல்லப்படுகிறது. 

இன்று வரை இதில் எவ்வளவு பணம் ஊழல் செய்யப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. 1.76லட்சம் கோடி வருமான இழப்பு. இப்படி இழப்பு ஏற்படுத்த சாதாரண மந்திரிக்கு மட்டும் லஞ்சம் கொடுத்தால் போதுமா? இதை ஏன் வடநாட்டு மீடியாக்கள் சொல்வதில்லை? தெரிந்தும் சொல்ல மறுக்கின்றனவா? அவர்கள் அங்கே சொல்வதை இங்கே நமது அடிவருடிகளும் ஏதோ ராசாவும் தயாநிதி மாறனும் தான் ஊழல்வாதிகள் என்பதைப் போல் சித்தரிக்கிறார்கள்.
நேரடியாக ஊழல் மற்றும் லஞ்சம் நிகழ்ந்த காமன்வெல்த், ஆதர்ஷ் போன்றவை பற்றி இப்போது எந்தத் தொலைக்காட்சியிலும் ஆங்கில நாளிதழ்களிலும் செய்தியே வருவதில்லை. வராத மாதிரி பார்த்துக்கொள்ளப்படுகிறது என்றும் சொல்லலாம். ஏன் என்றால் காங்கிரஸுக்கு அது கெட்ட பெயரை உண்டு பண்ணிவிடும் நேரடியாக அந்தக் கட்சிக்காரர்களே அதில் ஈடு பட்டிருப்பதால். ஆனால் இந்த அரசு ஊழலை எதிர்ப்பது போலவும் காட்டவேண்டுமே, அதற்கு என்ன செய்வது?

'சிக்குனான்டா அடிம' என்பது போல் ராசாவை தேர்தல் நேரத்தில் அமுக்கினார்கள். அது ஒன்றை மட்டுமே வைத்து இன்று வரை இதை தேய் தேய் என்று தேய்க்கிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சி என்றாலும் நாங்கள் ஊழலை ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம் என்பது தான் இவர்கள் சொல்ல வருவது. அதிலும் செய்திகளில் தமிழ் அமைச்சர்கள், தமிழ்நாட்டு அமைச்சர்கள் என்று குறிப்பிட்டு கூறும் போது இதில் ஏதோ உள்அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.

தன்னை வெறுத்த மாமியாரைக் கொன்ற சீக்கிய இனத்தவரை பிரதமராக்கி அழகு பார்ப்பவர் தான் அன்னை சோனியா (த்தா வச்சுருக்கான் பாரு தெளிவா. 'அன்னை சோனியா', 'புரட்சித்தலைவி அம்மா'னு). தன் கண்வனைக் கொன்றவர்கள் இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் ஆதலால் அந்த இனத்தையே வேரோடு அழித்தாகிவிட்டது அங்கே. இன்னும் கொஞ்சம் நஞ்சம் அங்கே மிச்சம் இருப்பதும் சிங்களவனோடு கலந்து தமிழ் என்பது இலங்கையில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும். 

அந்த அன்னைக்கு ஒரு இனத்தையே அதன் கலாச்சாரத்தையும் வேரையும் அழித்தும் தன் ரத்தவெறி அடங்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம்? தமிழ் பேசுபவன் எங்கு இருக்கிறான் என்று தேடினால் இதோ தான் வாழ்க்கைப்பட்ட இந்திய நாட்டின் காலடியில் இருப்பது தெரிந்துவிட்டது. சொந்த நாட்டிலே போர் தொடுக்க முடியாது, இலங்கையில் செய்தது போல் பேடித்தனமாக பின் இருந்து தாக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவு தான் இந்த "தமிழர்களின் ஊழல்".

உயிரைத்தான் வாங்க முடியவில்லை. மானத்தை வாங்கலாம் அல்லவா? ஒரு காலத்தில் நாம் பிஹாரிகளையும் ஜார்கண்ட்காரர்களையும் ஊழல்வாதிகள் என்று எள்ளினோம். இன்று லட்சம் கோடி ஊழல் என்று உலகமே வாயைத் திறந்து பார்க்குமாறு செய்தாகிவிட்டது.

சரி, அந்த லட்சம் கோடி ஊழலும் தமிழன் செய்தான் என்றே வைத்துக்கொள்வோம். ஊழல் பணம் எங்கே என்று கேட்டால் 'அது ஊழல் இல்லை வருமான இழப்பு' என்றார்கள். எல்லா அமைச்சர்களும் அப்படித்தானே செய்தார்கள், பின் எதற்கு கைது? என்றால், "அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்தார்" என்கிறார்கள்.

இன்று வரை அந்த லஞ்சப்பணத்தையும் சரி, லஞ்சம் கொடுத்தவர்களையும் சரி இந்த அரசாங்கமும் வடநாட்டு மீடியாக்களும் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் காரணம் நீரா ராடியா என்னும் வடநாட்டுக்காரி தானே? ரிலையன்ஸுக்கும் சம்பந்தம் உள்ளதே? டாடா கூட பேசினாரேப்பா? அவர்கள் மேல் எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன?

இன்றைய தேதியில் ரிலையன்ஸ் மீதும் டாடா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மறுதினமே இந்த அரசு (எந்த அரசாக இருந்தாலும்) கவிழ்ந்துவிடும். அவர்களைப் பற்றி எல்லாம் இரண்டு நாட்கள் செய்தி போட்டுவிட்டு அப்படியே மறந்தாகிவிட்டது. ஆனால் கனிமொழி, தயாநிதி என்று ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர். "Tamil Minister Arrested" என்று செய்திகள் வேறு.

இதை எல்லாம் பார்க்கும் மக்கள் சிரிதும் யோசிப்பதே இல்லையா? ஒரு அமைச்சர் எப்படி அத்தனையும் செய்ய முடியும்? "எனக்கு ஒன்னுமே தெரியாது"ன்னு ஒரு பிரதமர் சொல்றாரு. அமைச்சரவையில் வேறு யாருக்குமேவா தெரியாது? சரி ஊழல் நேரடியாகத் தெரிந்த ஆதர்ஷ், காமன்வெல்த் பற்றியெல்லாம் ஏன் யாருமே பேசுவதில்லை? மீடியாக்களும் மறந்துவிட்டனவா?

ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் தமிழனும் மற்ற ஊழல் பற்றி பேசுகிறானா? ஏதோ ஊழல் என்றாலே தமிழ்நாடு தான் என்றாகிவிட்டது. வடநாட்டுக்காரன் எல்லாம் நம்மை நக்கலாகத்தான் பார்க்கிறான். இப்போது கூட கட்சிக்கு நாயை விட அதிகமாக விசுவாசமாக இருக்கும் சிதம்பரத்துக்கு அவர் தமிழன் என்கிற காரணத்தால் தான் செக் வைக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது.

"தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கு குணமுண்டு"
தமிழனையும் அழித்தாகிவிட்டது, அவன் குணத்தையும் மானத்தையும் அழித்துவிட்டு அவனை தலைகுனியச் செய்ய இப்போது அடுத்த மூர்க்கத்தனம் நடக்கிறது. நாம் நம் அடையாளத்தை இழக்கப் போகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக. நம் மானம் போகப்போகிறது. இதற்கு இலங்கையைப் போல் செத்துப்போய்விடலாம்.


மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

13 comments

  1. யோசிக்க வைக்கும் நல்ல பதிவு.

    ReplyDelete
  2. //ரிலையன்ஸ் மீதும் டாடா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மறுதினமே இந்த அரசு (எந்த அரசாக இருந்தாலும்) கவிழ்ந்துவிடும்// பணக்காரர்கள் கைகளில் நாடு என்ற தூர நோக்கு சிந்தனை வசனத்தில் தெரிகிறது :)
    மிக தெளிவாக இருக்கிறீர்கள் ..தரமான ஆக்கம்.

    ReplyDelete
  3. இதேபோல் ஆங்கில சேனல்களின் செயல்களை பற்றி நண்பர் சொன்னார் ஆனால் எனக்கு அப்போது சரியாக விளங்கவில்லை . இப்பதிவை படித்தபிறகு நன்றாக புரிந்தது . ஆனால் என்ன சதி செய்தாலும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேருன்ருவது கடினம்தான் நண்பா .

    ReplyDelete
  4. நன்றி S.Sudharshan..
    @ரா.அசோக் : தேசியக் கட்சிகள் வேரூன்றுவது கடினம் தான். ஆனால் தேசிய கட்சியின் ஆளுமையில் எப்போதுமே இருப்போம் அல்லவா? நாம் எல்லாரும் இந்தியத் திருநாட்டின் குடிமகன்கள் தானே?! so sad

    ReplyDelete
  5. மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்...

    வள்ளுவர் தீர்க்கதரிசிதான்...இயல்பான கோபம்...நல்ல பதிவு...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. nalla pathivu. yosikka vaikirathu. Rajakum, Maranukkum intha thirukkural porunthatho? Illa avarkal ellam Tamilarkal illainu oru podu poda poringala? Nee oozhal panni tamilana kaati kudutha ellarum eri than mithipan. Ilangaiku pona ayutham ellam Tamil Nadu vazhiya than pochu. enga poiruntheenga ella Tamilarkalum? vaiko mattum thanaya kathinaru. Avarayum thokadichutu English channela kora solrathu enna niyayam?

    ReplyDelete
  7. நம்மவர் செய்தது மிகப்பெரும் தவறுதான். ஆனால் இதில் மற்றவர்கள் இன்னும் சிக்கவில்லை. அதனால் நாம் அவமானப் படுகிறோம்.

    ReplyDelete
  8. தெளிவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நீங்கள் ஒருவர்தான் சரியாக ஆய்ந்து எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. பதிவர் தென்றல் பற்றி அறிவீர்களா? தங்களுடன் பேச விருப்பம். thagavalmalar.blogspot.com

    ReplyDelete
  11. சார் உங்கள் இந்த கருத்தில் நன் மாறுபடுகிறேன் . உழல் எந்த காலத்திலும் அங்கிகரிக்கபடகூடாது .இன்னும் இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை.2G தீர்ப்பு வரும் பொழுது பாருங்கள். உழல் பரவாயில்லை என்ற தோணி தவிர்க்கப்பட வேண்டியது.

    ReplyDelete
    Replies
    1. http://www.sivakasikaran.com/2013/08/blog-post.html
      இந்த பதிவை படித்தீர்கள் என்றால் இன்னும் கொஞ்சம் குழம்புவீர்கள் சார்.. :P

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One