'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது?' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24வயசுல கல்யாணம் பண்றதுனா சும்மாவா?) கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மாட்டுத்தாவணியில் நின்று கொண்டிருக்கிறேன். 'இந்த வெயில் காலத்துல கல்யாணம் பண்ணி இவைங்கலாம் என்ன பண்ணப்போறாய்ங்க?' என்று அவனுக்கு இன்று இரவு வரப்போகும் தலையாய பிரச்சனையை தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே வந்தது நம்ம சிவகாசிக்குப் போற பஸ்ஸு. இன்னும் ரெண்டரை மணிநேரம் கொதிக்கும் தார் டின் பயணம். ஒரு அரை லிட்டர் 7அப் பாட்டிலுக்கு தண்டம் அழுதுவிட்டு பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடிக்கலாம்னு பாத்தா ரெண்டு ஜன்னல் பக்கமும் வெயில். சாயந்திரம் ஆரம்பிக்கும் வேளையில் இது தான் தொல்லை. சரி காற்றோட்டமாவது இருக்குமே என்று ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்.
'இந்த வேக்காடுல எவனாவது பக்கத்துல உக்காந்தான்னா தாங்க முடியாது' - பையை எனக்கு அருகில் சீட்டில் போட்டு "ஆள் வாராங்க" என்று யாரையும் உட்கார விடவில்லை. 'அதான் அத்தன சீட் காலியா இருக்குல? இங்கேயே வந்து மொக்கிறாய்ங்க'. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று கேட்ட அழகான பெண்ணுக்குக்கூட என் பதில் "ஆள் வாராங்க". என் இருக்கையைத் தவிர அனைத்தும் நிரம்பி விட்டன. கண்டக்டர் சீடியை போட்டுவிட்டு டிக்கெட் கொடுக்கவும் டிரைவர் காலரை தூக்கி விட்டு வண்டியை ஆன்செய்யவும் தான் மனதில் ஒரு சந்தோசம்.
"யெய்யா யெய்யா ஏறிக்கிறேன், நிறுத்துயா" கண்டக்டர் விசிலில் வண்டி நின்றது. ஒரு கிழவி ஏறியது வண்டியில். என் ஒரு சீட் மட்டுமே காலி. கண்டக்டரும் டிரைவரும் என் ஜென்ம விரோதி போல் தோன்றினார்கள். கிழவி ஏறியவுடன் முன்பக்கம் சென்றது. "எம்மா அந்த ரெண்டாவது சீட்ல எடம் இருக்கு பாரு" கண்டக்டர் சொன்னார். சொன்னார் என்ன சொன்னார், சொன்னான் படுபாவி. அது மெதுவாக என்னை நெருங்கியது. என் அருகில் வந்ததும் "என்னயா ஆம்பளயாள் கிட்ட ஒக்கார சொல்ற? நான் நின்னுகிட்டே வாரேன்" என்றது அந்த பேரழகுப் பாட்டி. நான் சீட் கொடுக்க மறுத்த அந்தப்பெண் கிக்கிபிக்கி என்று சிரித்தாள். என் வாழ்வின் உச்சகட்ட அவமானம். இப்போது யாரையாவது என் அருகில் அமர வைத்துக்கொண்டால் தான் ஓரளவாவது சமாளிக்கலாம். இல்லேனா அடுத்து ஒரு பொம்பள வந்தா என்ன எந்திரிக்க சொல்லிருவாய்ங்க.
மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் ஒரே ஒருவன் ஏறினான். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. 'அடச்சே அவன் தானா?' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு "டேய் மாப்ள" என்று கை காட்டினேன். முதலில் என்னை சரியாக அடையாளம் தெரியாமல் பின் சில மைக்ரோ செகண்டுகளில் தெரிந்து கொண்டது அவன் முகத்தில் ஓடியது. சிரித்துக்கொண்டே "டேய் மச்சீ" என்றான். அது என்னவென்று தெரியவில்லை. ஊரில் ஒழுங்காக கைலி கட்டிக்கொண்டு இருக்கும் வரை மாப்ளன்னு பேசுறாய்ங்க.. மெட்ராஸ் போயி முக்கா டவுசர் போட்டதும் வாயில இவைங்களுக்கு "மச்சீசீசீ"னு வந்துருது. ப்ளடி பாஸ்கர்ஸ்.
அருகில் வந்து அமர்ந்து கொண்டான். பல நாள் கழித்து பார்த்துக்கொண்டதால் நாங்கள் ஒன்னும் பின்னிப்பிணைந்து கொள்ளவில்லை. எனக்கு என் சீட் தப்பித்தது என்ற சந்தோசம், அவனுக்கு சீட் கிடைத்த சந்தோசம் அவ்வளவு தான். மூனு வருசம் ஒன்னாப் படிச்சதெல்லாம் எவனுக்கு வேணும்? படிச்சப்போ பிட் கொடுத்து காப்பாத்தினானோ இல்லையோ இப்போது என் சீட்டை காப்பாத்திட்டான். "அப்பறம் மச்சி, லைஃப்லாம் எப்டி போகுது?"
"நல்லா போகுதுடா. ஒனக்கு?"
"சூப்பரா போகுது மச்சி"
மச்சினு சொல்லாதடா மானங்கெட்டவனே. "என்னடா மதுரப்பக்கம்? நீ மெட்ராஸ்ல தான வேல செய்ற மாப்ள?"
"இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன் மச்சி. நம்ம சோபாவோட கல்யாணம்டா! ஒனக்கு சொல்லல? நீ என்ன இங்க?"
"எனக்கும் ஒரு கல்யாணம்டா. ஸ்கூல் ஃபிரண்ட் கல்யாணம். சோபாக்கும் இன்னைக்குத் தான் கல்யாணமா? சொல்லவே இல்லையேடா? ஹிம் செம ஃபிகர். எவனுக்கோ குடுத்துவச்சுருக்கு பாரேன்"
"அதப்பத்தி ஒனக்கென்ன? நம்ம செட்ல என்னத்தவிர யாருக்குமே சொல்லலடா" பெருமையாக சொல்கிறான் என்று பார்த்தால் முகம் சோகமாக இருந்தது.
"ஏன் யாருக்கும் சொல்லல?" முகத்தை அவன் பக்கம் திருப்பி கேட்டேன். அவன் என்னை சட்டை செய்யாமல் வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தான்.
என் தொடையில் ஏதோ உறுத்தியது. ஆஹா வைப்ரட்டரில் வைத்திருந்த ஃபோன். இவ்வளவு களேபரத்தில் அதை விட்டுவிட்டேன். வேகமாக எடுத்துப்பார்த்தேன். என் செல்லம் தான். 11மிஸ்டு கால்ஸ். 7எஸ்எம்எஸ். முதல் இரண்டு எஸ்.எம்.எஸ் சாதாரணமாக அடுத்த இரண்டு கெஞ்சல் தொனியில் கடைசி மூன்று 'என் மூஞ்சிலேயே முழிக்காத' என்னும் ரேஞ்சில்.
பதறிப்போய் ஃபோன் செய்தேன். கட் செய்தாள். மீண்டும் மீண்டும் கால் செய்தேன். அட்டண்ட் செய்து உடனே கட் செய்தாள். 'என்ன நெஞ்சழுத்தம்டீ ஒனக்கு!' கால் செய்வதை நிறுத்திவிட்டு எஸ்.எம்.எஸ் டைப் செய்தேன்.
"பொட்டச்சி சாகவாசம் மட்டும் வச்சுக்கிடாதடா மச்சி" அழுத்தமாக கலக்கமாக அவனிடம் இருந்து வார்த்தைகள் வந்தன. எஸ்.எம்.எஸ். டைப் செய்றத பாத்துருப்பானோ என்று பதறி ஃபோனை என் மடியில் கவுத்தி வைத்து அவனைப் பார்த்தேன். அவன் அப்போது பார்த்த திசையிலே இப்போதும் பார்த்துக்கொண்டிருந்தான். நல்ல வேள எஸ்.எம்.எஸ்அ பாக்கல.
"என்ன மாப்ள சொன்ன?"
"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டுறத மொத நிறுத்துறா"
"எனக்குக்கூட தான் நீ மச்சின்னு கூப்டுறது கேவலமா இருக்கு"
"மெட்ராஸ்லயே அப்டித்தான் கூப்டுறாய்ங்க தெரியும்ல"
"யெப்பா ராசா இது மதுர. சரி மேட்டர சொல்லு. எதுக்கு 'பொட்டச்சி சவகாசம் வச்சுக்காத'ன்னு சொன்ன?"
"நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்"
"நான் என்னடா கேட்டேன்? ஓ ஒனக்கு மட்டும் சோபா பத்திரிக்கை வச்சதப் பத்தி கேட்டதா? அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?" ஏதோ காதல் தோல்வி கசமுசா என்று தெரிந்தது. ஆனாலும் எந்த விதமாகத் தோல்வி என்று தெரிந்துகொள்வதில் ஒரு ஆனந்தம் தானே? அதுவும் இவன மாதிரி ஒரு அப்பிராணி சிக்குனா எந்தப் பொண்ணு தான் விடுவா? ஆனாலும் மனதில் சோபா மேல் இருந்த பழைய கிரேஸ் கொஞ்சம் குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். போயும் போயும் இவன! அய்யோ ஆண்டவா.
இவன் கறுப்பு. அவா தமன்னாவ விட செகப்பு. இவன் ஒடிஞ்சு விழுற விளக்கமாத்து குச்சி மாதிரி ஒல்லி. அவா தள தளன்னு பால்கோவா மாதிரி. இவன் குட்டை. அவா ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய சராசரி உயரம். அந்தக் கூந்தல்? அடர்த்தியாக அவள் இடுப்புவரை தொங்கிக்கொண்டிருக்கும். வெள்ளிகிழமையானால் நாங்கள் எல்லாம் செத்துவிடுவோம், அவளின் ஈரமான பின்னாத நீண்ட கூந்தலைப் பார்த்து. ஹோம்லி கேர்ள்னு சொல்லுவாய்ங்களே அது அவளுக்கு தான் பொருந்தும். அவ்வளவு அடக்கஒடுக்கமான அமைதியான பெண். ஒரு பெண் எப்படி இருந்தால் ஆணுக்குப் பிடிக்குமோ அதை விட அதிகமாகவே அவளிடம் எல்லாம் இருந்தன. ஆனால் இவன்? சரி வேண்டாம். சோகமாக இருப்பவனப் பத்தி தப்பா நெனைக்கக்கூடாது. அவனே ஆரம்பித்தான்.
"நாங்க காலேஜ் டேஸ்க்கு அப்புறம் சென்னைல ஒரு இன்டர்வியூ நடக்கும் போது மீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பழக்கம்டா. மொத ஒரு வருசம் ஃபிரண்ட்ஸா தான் இருந்தோம். அப்பறம் தான் நாங்க லவ் பண்றோம்னு எங்களுக்கே தெரிஞ்சது." ஏதோ கேன்சர் இருப்பதை டாக்டர் கண்டுபிடித்தது போன்ற சோகத்தில் சொன்னான்.
"சரி இப்போ எதுக்குடா இன்னொருத்தன கல்யாணம் பண்றா? எதுவும் சண்டையா?"
"ஹிம்" விரக்தியாகச்சிரித்தான் "இப்போ வரைக்கும் நான் அவகிட்ட ஒரு தடவ கூட சண்ட போட்டது இல்ல" ஒரு பெருமூச்சோடு ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டான்.
"மாப்ள என்ன தான்டா பிரச்சன? ஏன்டா இந்த கல்யாணத்துக்கு அவா ஒத்துக்கிட்டா?"
"நானும் அவளும் வேற வேறயாம்"
"வேற வேறனா? வேற வேறயா இருந்தாத்தான்டா எல்லாம் சரியா நடக்கும்" என் புத்திசாலித்தனமான ஜோக்கை அவன் ரசிக்கவில்லை. பேசாமல் இவனைத் தள்ளிவிட்டு அந்தப் பாட்டியை உட்காரச்சொல்லலாமா என்று யோசித்தேன்.
"வேற வேற ஜாதிடா. அவங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்களாம்" அவன் சொல்லும் தொனியிலேயே தெரிந்தது சோபா இவனை கழட்டி விட சொன்ன வார்த்தை தானே அன்றி அதில் ஒன்றும் உண்மை இல்லை என்று. சோபா மட்டுமா எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு நல்ல ஆயுதம் தானே. இந்த ஜாதிங்குற ஒன்னு இல்லாமலே இருந்திருந்தா பொண்ணுங்கல்லாம் என்ன காரணம் சொல்லுவாளுக?
"சரி மாப்ள, அது நீ லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போதே தெரியாதா அவளுக்கு? அப்ப சொல்ல வேண்டியது தானடா?"
"மொத ப்ரொபோஸ் பண்ணதே அவா தான்டா" குண்டைத்தூக்கிப் போட்டான்.
"டேய் என்னது அவா ப்ரொபோஸ் பண்ணுனாளா? அவள அமைதியான பயந்த சுபாவம் உள்ள பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம் எல்லாரும்?"
"ஆமாடா. அத நானும் லவ்வுன்னு தான் நம்பிக்கிட்டு இருந்தேன். மொத எல்லார்கிட்டயும் என்ன பெஸ்ட் ஃபிரண்ட் பெஸ்ட் ஃபிரண்ட்னு சொல்லியே பேசிட்டு இருப்பா. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பெறகும் நான் மத்தவங்க முன்னாடி அவளோட பெஸ்ட் ஃபிரண்ட் தான். லவ்வர்னு சொன்னா அவளப்பத்தி தப்பா நெனைப்பாய்ங்களாம். நானும் சரி நம்ம ஆளோட பேர் கெட்டுப்போயிறக்கூடாதேன்னு கம்முனு இருந்தேன்டா" என் முகம் பார்க்கவேயில்லை அவன். இந்தப் பசங்க எல்லாவனுமே இப்படித்தான். தைரியம் கெடையாது. இதே ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமைனா இந்நேரம் முகத்துக்கு நேரா பாத்து தைரியமா அழுதுகொண்டோ கோவத்தோடோ நியாயம் கேட்பாள். இவனுங்க ஒன்னத்துக்கும் ஆக மாட்டானுங்க.
"இப்படித்தான்டா ஒரு தடவ, என் கூட பாஸ்கர்னு ஒருத்தர் வேல செய்யுறாரு. அவர் கிட்ட இவள லவ் பண்றதப் பத்தி சொன்னேன். அவரும் 'வாழ்த்துக்கள் பாஸ், கலக்குங்க'ன்னு சொன்னாரு. இத அவாகிட்ட சந்தோசமா சொன்னேன்டா. அதுக்கு என் கூட எப்படி சண்ட போட்டா தெரியுமா?"
"ஆமா நீ பாட்டுக்க அவளுக்கு முன்னப்பின்ன தெரியாதவங்க கிட்ட சொன்னா அந்த்ப்பொண்ணுக்கு கோவம் வரத்தான செய்யும்?" என்னால் அவனிடம் எப்படியெல்லாம் கரக்க முடியுமோ அந்த மாதிரியெல்லாம் பேசினேன்.
"டேய் டெய்லி பேசும் போதே அவா சொல்ற கண்டிஷன் என்ன தெரியுமா? 'நாம லவ் பண்றது யாருக்குமே தெரியக்கூடாது'னு தான் சொல்லுவா" எனக்கு ஏதோ கள்ளக்காதல் கதையைக் கேட்பது போல் இருந்தது. "ஒனக்கே தெரியும் நானும் கண்ணனும் எப்படி பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்னு. நான் அவன் கிட்ட கூட இப்போவரைக்கும் சொல்லலடா. இந்த மேட்டர் தெரிஞ்ச ரெண்டாவது ஆளே நீ தான்"
கொஞ்சம் பெருமையாக இருந்தது. சுடச்சுட நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு விஷயம் கிடைத்ததால். "சரி அவளுக்கு யாருனே தெரியாத ஆள் கிட்ட சொன்னதுனால அவளுக்கு என்னப் பிரச்சனையாம்?"
"அதுக்கு அவா சொன்ன காரணம் தான்டா என்ன ரொம்ப வருத்தப்பட வச்சது மச்சி" சாகப்பொற நேரத்துலையும் இவன் மச்சியை விட மாட்டான் போல "அதாவது நாளைக்கு இவளுக்கு மாப்ள பாக்கும் போது அந்த மாப்ள வீட்டுக்காரங்க அவருக்கு சொந்தக்காரங்களா இருந்து அவரு இவளப் பத்தி அவங்க கிட்ட தப்பா சொல்லிட்டா என்ன பண்றதுன்னு கேட்டாடா!"
"டேய் அவா ஒன்னத்தானடா லவ் பண்ணிக்கிட்டு இருந்தா? பெறகு ஏன்டா அப்டி சொன்னா?"
"நானும் அதத் தான்டா கேட்டேன். 'நாளைக்கே என்னவேணும்னாலும் நடக்கும்'னு சொன்னாடா"
எனக்கு அவன் மீது லேசாக பச்சாதாபம் வந்தது. "டேய் நம்ம சோபாவாட இப்படியெல்லாம் பேசுனது? ரொம்ப நல்ல பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம்"
"எவளையும் அப்டி மட்டும் நெனைக்காதடா. அவளுக தேவைக்கு மட்டும் நம்மள யூஸ் பண்ணிட்டு ஒரு டிஸ்ஸு பேப்பர் மாதிரி தூக்கிப்போட்டுட்டு போயிடுவாளுக" என்னால் அவன் சொன்ன உவமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
'இதாவது பரவாயில்லடா. ஒரு தடவ என்ன நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல வெயிட் பண்ண சொன்னா. சாந்தரம் 4 மணிக்குப் போனேன். ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். அவா வரவே இல்ல. கால் பண்ணா அட்டண்ட் பண்ணல, எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை வரல. எனக்கு ரொம்ப பயம் ஆகிருச்சி. வீட்டுக்குப்போகவும் மனசு இல்ல. 8மணிக்கு மேல எனக்கு கால் பண்ணாடா."
"நீ அப்போ வரைக்கும் ஸ்டேஷன்லயா இருந்த?"
"ஆமா' அவன் முகம் மாறியது. "போன் பண்ணி 'ஸாரி செல்லம் கொஞ்சம் லேட் ஆகிருச்சி. இந்தா வந்துறேன்'னு சொல்லிட்டு என் பதிலுக்குக் கூட வெயிட் பண்ணாம ஃபோன வச்சுட்டா. நான் நாய் மாதிரி எவ்ளோ நேரம் ஆனாலும் அங்கேயே இருப்பேன்னு அவளுக்குத் தெரியும். 8.30க்கு வந்தா"
"நல்லா நாலு கேள்வி கேட்டியாடா?"
"அப்படி கேக்கணும்ன்னு தான் இருந்தேன். ஆனா அவளப்பாத்ததும் அவா மேல இருந்த கோவம் எல்லாம் போயிருச்சி"
"அதான்டா இவளுக நம்ம தல மேல ஏறி ஆடுறாளுக" என் கோவம் எனக்கு. கால் கட் பண்ணிய என்னவள் இப்போது வரை திரும்ப என்னை அழைக்கவும் இல்லை, ஒரு எஸ்.எம்.எஸ் கூட இல்லை.
"உண்மை தான்டா. நான் அமைதியா இருந்ததப் பாத்துட்டு 'நான் இப்போ சொல்றத கேட்டு நீ கோவப்படக்கூடாது'னு சொன்னா. இனிமேல் கோவப்படுறதுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னேன்."
"ஆமா இதுக்கு மேல என்னடா நடக்கணும் நம்மள அவமானப்படுத்த? சரி அப்டி அவா என்ன சொன்னா?"
"ஹா ஹா" சோகத்தில் சிரிப்பவனின் நிலையை அவன் வலியை உணர்ந்தேன். "பெருசா ஒன்னும் சொல்லலடா. 'ஸாரி செல்லம், என்ன பொண்ணு பாக்க வந்திருந்தாங்க, அதான் லேட்டு'ன்னு சொன்னா. அவா எதுக்கு சாரி சொல்றான்னு பாத்தியா? லேட் ஆனதுக்கு ஸாரியாம், பொண்ணு பாக்க வந்தது ஏதோ சாதாரண விசயம் மாதிரி சொன்னாடா"
எனக்கு சோபா இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவளாக இருப்பாளா என்று தோன்றியது. அதுவும் அவள் வாயில் இருந்து இவனையெல்லாம் 'செல்லம்' என்று சொல்லியிருக்கிறாள் என்றால் இது காலக்கொடுமை தான். "அடுத்து என்ன தான்டா ஆச்சு? நீ என்ன சொன்ன?"
"ஓஹ் அப்டியா? நீ என்ன சொன்னனு கேட்டேன். அதுக்கு அவா 'மாப்ள வீட்ல எல்லாருக்கும் என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பாவுக்கும் மாப்ளைய புடிச்சிருக்கு'னு சொன்னா."
"டேய் என்னடா இது? அவா கல்யாணம் இப்போ வேண்டாம்னு கூட வீட்ல சொல்லலையா?"
"எதுக்கு சொல்லணும்னு கேட்டாடா! 'நான் தான் முன்னாடியே சொல்லிருக்கேனே நம்ம லவ்வுக்குலாம் எங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்கன்னு, இப்போ எனக்கு மாப்ள வேற பாத்துட்டாங்க. என்னால எப்டி வீட்ல சொல்லமுடியும்டா? என்னப் பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்களா? என்ன ஆனாலும் நீ தான்டா என்னோட பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னா. அன்னைக்குல இருந்து மச்சி, யார் 'பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னாலும் எனக்கு யாரோ என் பொறப்ப பத்தி தப்பா பேசுற மாதிரி இருக்கு"
"டேய் இப்படியெல்லாமாடா அவா நடந்துகிட்டா? அதான்டா சிம்பு எதோ ஒரு படத்துல சொல்லுவானே ஜீன்ஸ் போட்டவயெல்லாம் கெட்டவ இல்ல. அடுத்து என்னதுடா சுடிதார் போட்டவளா இல்ல சேல போட்டவளா?" என்னை அவன் முறைத்தான். "ஸாரி மாப்ள"
"அவான்னு இல்லடா எல்லாப் பொண்ணும் அப்படித்தான். அதான் பொட்டச்சி சகவாசம் வச்சுக்கிடாதன்னு சொன்னேன். அவளுக்கு நான் ஒரு மோதிரம் வாங்கிக்கொடுத்தேன்டா. ஹிம் இன்னைக்குக் கூட அவ கைல இருந்தது. கல்யாணத்துகு ஒரு மாசத்துகு முன்னாடி ஃபோன் பண்ணா. ரொம்ப நாளைக்குப் பிறகு கூப்டுறாளேன்னு சந்தோசமா அட்டண்ட் பண்ணேன். 'GRT கடை எத்தன மணி வரைக்கும் தொறந்து இருக்கும்? நீ கூட எனக்கு ஒரு தடவ ரிங் வாங்கிகுடுத்தேல'னு கேட்டா. எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு?"
"சரி விட்ரா. எதுக்கு டென்ஷன் ஆகுற? அதான் உன்ன விட்டு போயிட்டால? இன்னும் எதுக்கு வருத்தப்படணும்?"
"இல்லடா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இவளுக எல்லாருமே இப்படித்தான்டா. கல்யாணம் ஆகுற வரைக்கும் சப்ஜெக்ட்ல டவுட் க்ளியர் பண்றதுல இருந்து, ஊர் சுத்திக்காட்டி, துணிமணி எடுத்துக்கொடுத்து, அடிக்கடி கிஃப்ட் வாங்கிக்கொடுத்து, நல்லா கவனிச்சி, டெய்லி வாட்ச்மேன் வேல பாக்குறதுக்கு ஒருத்தன் வேணும் இவளுகளுக்கு. அவனுக்குப் பேரு லவ்வர். அது கூட அவன் கிட்ட மட்டும் தான் சொல்லுவாளுக. மத்தவங்களுக்கு அவன் ஒரு பெஸ்ட் ஃபிரண்ட். ஒரு காலத்துல லவ்வரும் ஃபிரண்ட் புருஷன் இது எல்லாத்துக்குமே வேற வேற அர்த்தம்டா. ஆனா இன்னைக்கு புருஷன் லவ்வர் பெஸ்ட் ஃபிரண்ட்னு பேரு மட்டும் தான் வேற வேற. ஆனா எல்லாருக்கும் வேல என்னமோ ஒன்னு தான்"
அனுபவப்பட்டவன் சொல்வது எல்லாமே எனக்கு சரி என்று தோன்றியது. மீண்டும் ஆரம்பித்தான். "அது எப்டிடா லவ் பண்றவன் கிட்டயே தைரியமா 'நாம லவ் பண்றத வெளிய சொல்லாத'ன்னும், 'எனக்கு மாப்ள பாக்குறாங்க'னும், சொல்ல முடியுது? ஏன்னா இவளுக பொம்பளைகளாம். கெட்ட பேர் எடுத்தா குடும்பத்துக்கே அசிங்கமாம். நம்மல மட்டும் என்ன ரோட்லயாடா பெத்துவிட்ருக்காய்ங்க? நம்ம குடும்பத்துக்குலாம் மானம் ரோஷம் கெடையாதா?" கோவத்தில் மிகவும் சத்தமாகப் பேச ஆரம்பித்தான்.
"மாப்ள பைய பேசுடா" அவன் தொடையில் கையை வைத்து அழுத்தினேன். அதற்குள் வண்டி விருதுநகர் வந்துவிட்டது.
"காதல்னாலே எல்லாரும் தப்பா புரிஞ்சு வச்சுருக்காங்கடா. காதல்னா என்னன்னு தெரியுமா?"
எனக்கு பயமாகிவிட்டது. இவ்வளவு நேரம் வருத்தம் இனிமேல் தத்துவமா என்று பயந்துவிட்டேன். "மாப்ள நான் இங்க தான் எறங்கணும். உன்கிட்ட ஃபோன்ல பேசுறேன்டா"
"சிவகாசில தானடா ஒங்க வீடு?"
"இல்ல மாப்ள சித்தி வீட்ல வேல இருக்கு"
"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டாதடா"
"சரி மாப்ள வரேன்" என்று ஒரு வழியாக இறங்கி அவன் மொக்கையில் இருந்து தப்பித்து அடுத்த சிவகாசி பஸ்ஸுக்கு காத்திருந்தேன். தொடையில் ஒரு நமநமப்பு. ஆஹா போன் அடிக்குது. எடுத்துப் பார்த்தேன். என்னவள். அட்டண்ட் செய்தேன்.
"என்ன செல்லம் கோவமா? நான் நெறையா மெசேஜ் அனுப்பியும் கால் பண்ணியும் நீ கண்டுக்கவே இல்லையா, அதான்டா உன் கால கட் பண்ணிட்டேன். சாரிடா எரும. அதுக்காக என் கூட பேசாம இருந்திருவியாடா?"
"இட்ஸ் ஓகேடா செல்லம். ஒம்மேல எனக்கு கோவம் வருமாடா? பஸ்ல பழைய ஃபிரண்ட் ஒருத்தன பாத்தேன். அவன் கூட பேசிக்கிட்டே..."
"அப்போ உன் ஃபிரண்ட்ட பாத்தா என்ன மறந்துருவல்ல?"
"இல்லமா இது கொஞ்சம் சீரியஸ் விசயம்டா.... " முழு கதையையும் அவளிடம் சொன்னேன்.
"சே இப்டியெல்லாமாடா பொண்ணுங்க இருப்பாங்க?" என்றாள் என்னவள். நல்லவள்.
"ஆமா கண்ணு. அதானாலத் தான் அவன் இப்போ எல்லா பொண்ணுங்க மேலையும் வெறுப்பா இருக்கான்"
"சரி நீ நம்ம மேட்டர இன்னும் யார்கிட்டயும் சொல்லலையே? உன் ஃப்ரண்ட் கிட்ட சொல்லிட்டியா? நீ பாட்டுக்க ஓட்ட வாய் மாதிரி யார் கிட்டயும் சொல்லிறாதடா"
நினைத்துக்கொண்டேன் 'குத்துங்க எசமான் குத்துங்க'..
climax comedy semma!
ReplyDelete"அவளுக தேவைக்கு மட்டும் நம்மள யூஸ் பண்ணிட்டு ஒரு டிஸ்ஸு பேப்பர் மாதிரி தூக்கிப்போட்டுட்டு போயிடுவாளுக"//
ReplyDelete1000% உண்மை பாஸ்
same feeling
நன்றி naughtydhurga மற்றும் Niroo
ReplyDeleteகதயின் நடை நடனம் போல இருக்குது
ReplyDeleteApdiye Namma oorku poyitu vanthpula irnthuchu Ram...Enna nanum Sivaksi karanthan ..
ReplyDeleteSundararajan A Sharjah
நன்றி தோழா..
ReplyDeleteநன்றி
ReplyDeleteசிறுகதை அருமை
matchi..;.nanum virudhunagar tanda boss solrenu tappa nenaikatha matchi................. summa ovovru varathaiyum summa natchunu iruklu da matchi... oru exmple da; ponnungala oil mari boys la porota maavu mari nammala porichiruvaluga matchi yapagam vatuko k k k k
ReplyDeleteகுத்துங்க எசமான் குத்துங்க... கதைல கடைசி உங்க கத எனாச்சுனு சொல்லவே இல்லையே?
ReplyDeleteஹா ஹா என் கதை தான் அந்த நண்பனின் கதையும்... அந்த நண்பனின் நிலை தான் என் நிலையும்.. நான் வேறு என் நண்பன் வேறு இல்லை.. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Deleteஎங்க கால காதல்கள் ஒன்று விடாம நின்னு போராடி வெற்றி பெறும்...இல்லை ..சொல்லாமலேயே மனசுக்குள் குமைந்து போய் அழிந்து போகும்... ஆனால் இந்தக் காலத்தில் இப்படி பெண்கள் இருக்கிறார்களா...வீட்டின் உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து ஒட்டாத வாழ்வைத் தொடர்வார்களேயொழிய நீங்கள் கூறுவது போல் திருமணத்தை அவ்வளவு எளிதாக(casual) எடுத்துக்கொள்வார்களா என்ன?
ReplyDeleteகாதல் பற்றியும் திருமணம் பற்றியும் சரியான புரிதல் இல்லாத அவசர குடுக்கைகள் பலர் இன்று இப்படித்தான் இருக்கிறார்கள்.. இவர்களைப்பொறுத்தவரை காதல் என்பது மனதில் இருக்கும் ஒரு குறுகுறுப்பு.. அவ்வளவு தான்.. அதற்காக ரிஸ்க் எடுக்கும் அளவிற்கு யாருக்கும் தைரியம் இல்லை.. ஆனால் சான்ஸ் கிடைத்தால் மற்ற அனைத்தையும் பண்ணும் தைரியம் இருக்கும் இவர்களுக்கு...
Deleteகுத்துங்க எசமான் குத்துங்க
ReplyDelete