முகமூடி - சூடு போட்ட பூனை..

Friday, August 31, 2012

ஹாலிவுட்காரர்கள் பறந்து பறந்து சண்டை போடும் படங்களை சூப்பர் ஹீரோ படங்களில் மட்டுமே காண்பது சாத்தியம். அவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கோ முன்றாண்டுகளுக்கோ ஒரு முறை வரும் ஸ்பைடர்-மேன், சூப்பர்-மேன், பேட்-மேன், அவெஞ்செர்ஸ் போன்ற படங்கள் போதும்.. இது போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு கெத்தே அவர்களை எதிர்த்து போட்டியிடும் வில்லன் தான்..  வில்லன் பாத்திரம் மிகவும் கொடூரமானவனாக பயம்கொள்ள வைப்பவனாக இருந்தாலே போதும், படம் பாதி ஹிட். பெரும்பாலும் அவன் அறிவியல் சம்பந்தப்பட்ட்வனாகவோ அல்லது மிகுந்த பலசாலியாகவோ இருப்பான்.. ஹீரோவே அவனிடம் கடைசி வரை அடியும் மிதியும் பட்டு தான் ஜெயிப்பார். இந்த மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்தாலே அங்கு ஹிட்டு தான்.

ஆனால் நமக்கு அப்படி இல்லை. இங்கு நமக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பல கொடூர வில்லன்களையும், அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவனை துவம்சம் செய்து மக்களை காக்கும் பல உன்னத சூப்பர் ஹீரோக்களை காலகாலமாக நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.. என்ன தான் சூப்பர் - மேன், ஸ்பைடர் - மேன் வந்தாலும், நம்மால் ரஜினியை தானே ரசிக்க முடிகிறது? கிட்டத்தட்ட நம் சினிமாவில் வரும் பாதி ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்கள் தான்.. பறப்பார்கள், கட்டிடத்தில் இருந்து ரயிலுக்கு தாவுவார்கள், துப்பாக்கி குண்டாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, ஊரே அவரை நம்பி தான் இருக்கும்.. இந்த மாதிரி நம்முள் ஒருவரையே சூப்பர் ஹீரோவாக்கி, தனியாக சூப்பர் ஹீரோ என்று யாருமே தேவைப்படாத ஒரு சூழலில், ”முகமூடி” என்று ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்திருக்கிறது. பொதுவாக மிஸ்கின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிற மொழிப்படங்களை காப்பி அடிக்கிறார் என்று. இந்த முறை அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க ‘சூப்பர் ஹீரோ’ சப்ஜெக்ட் என்று சொல்லி ‘முகமூடி’ எடுக்க ஆரம்பித்தார். இதிலும் அவரது வழக்கமான தரையோடு ஒட்டிய கேமரா ஷாட், டாஸ்மாக் காட்சிகள், ஒரு அடியாள் அடி வாங்கி விழும் வரை காத்திருந்து விட்டு அடுத்த அடியாள் குடுகுடுவென ஓடிப்போய் ஹீரோவை அடிப்பது, போலீஸ் காட்சிகள், மீன் மார்கெட், ஆஸ்பத்திரி சண்டை போன்ற க்ளீஷேக்கள் உண்டு.  சரி படம் எப்படி? கதை என்னவென்று கேட்கிறீர்களா?

ஊரில் வயதானவர்கள் மட்டும் வசிக்கும் பங்களாக்களில் கொள்ளையடித்து அந்த வயதானவர்களையும் மர்ம கும்பல் ஒன்று கொன்று குவிக்கிறது. இதை கண்டு பிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி நாசர். அந்த கொள்ளை கூட்ட தலைவன் நரேன். குங்ஃபூ பள்ளி நடத்து போல் வெளியில் காட்டிக்கொண்டு அவர் கொள்ளையடிக்கிறார். வீட்டில் வெட்டியாக இருக்கும் ஜீவா அந்த வில்லனை எப்படி அழிக்கிறார் என்பதே கதை. இதில் ஜீவாவின் குங்ஃபூ மாஸ்டராக 90களின் கிராமிய நாயகன் செல்வா நடித்திருக்கிறார்.

நாம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கேள்விப்பட்ட கதை தான். பொதுவாக சூப்பர் ஹீரோ கதைகள் மிகவும் வழக்கமானவையாக தான் இருக்கும். ஆனால் திரைக்கத்தை நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடும். இண்டர்வெல் பாப்கார்ன் படம் முடிந்த பின்னும் மிச்சம் இருக்கும், அந்த அளவுக்கு காட்சியோடு ஒன்றி விடுவோம். லாஜிக் இல்லையென்றாலும் நம்மால் அதை எல்லாம் கவனிக்க முடியாத அளவுக்கு காட்சிகள் நம்மை கட்டிப்போட்டு விடும். ஆனால் ‘முகமூடி’ திரைக்கதை படு சொதப்பல். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ”இதெல்லாம் எப்படிப்பா நடக்கும்?” என்கிற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்போம்..காதல் காட்சிகளும் படு சொதப்பல். இது வரை ஹீரோயின்களை கண்ணியமாக காட்டிய மிஸ்கினும் ஹீரோயினின் தொப்புளை காட்ட ஆரம்பித்துவிட்டார் ஃபாரின் லொகேஷனில். 

வழக்கமான மிஸ்கின் படங்களில் நமக்கு ஒரு பரபரப்பு இருக்கும். வில்லன் கோஷ்டி மீது ஒரு வெறுப்பும் கோவமும் இருக்கும். இந்த படத்தில் அந்த மாதிரி ஒரு காட்சியும் கிடையாது. ஜீவா ஹீரோயின் ஏரியாவில் போய் சீன் போடும் ஒரே ஒரு காட்சி மட்டும் தான் படத்தில் நல்லா இருக்கு.. இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையா? 

வில்லன் தன்னிடம் இருக்கும் 10,20 பேரை வைத்துக்கொண்டு அப்படி அத்தனை பேரை சிறை பிடிக்கிறார்? ஆஸ்பத்திரி சண்டையில் 4,5 பேர் மட்டும் தான் வருவது போல் காட்டுவார்கள், ஆனால் ஜீவா அடிக்க அடிக்க ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள், கரண்ட் வந்தவுடன் 4,5 பேர் மட்டும் ஓடுவது போல் காமிப்பார்கள். ரெண்டாவது முறை முகமூடியை பார்க்கும் போதே ஹீரோயின் அவனுக்கு லிப்கிஸ் கொடுக்கும் அளவுக்கு காதலில் எப்படி கசிந்துருகுவாள்? கடைசி காட்சியில் வில்லனோடு சேர்த்து வெறும் 3பேர் மட்டுமே சண்டைக்கு வருகிறார்கள். மீதி ஆட்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? தமிழ்நாடே “முகமூடி, முகமூடி” என்று சொல்வதாக நாசர் கூறுவார். அப்படி யார் எப்போது கூறினார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம். முகமூடியும் ஊருக்கு அப்படி ஒன்று நல்லது செய்திருக்க மாட்டார். கடைசி வரை போலீஸ் தான் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறது. ஜீவா அந்த இடங்களில் இருக்கிறார் அவ்வளவு தான். கிளைமாக்ஸில் கூட முகமூடியை விட அவரது தாத்தா தான் பலரை ஒழிக்கிறார். பின்ன சூப்பர் ஹீரோன்னு என்ன இதுக்கு ஒருத்தர் இருக்கணும்? - இப்படி உங்களுக்கு படம் பார்க்கும் போதே பல கேள்விகள் தோன்றும்.

மிக முக்கியமான ஒன்று, மிஸ்கின், நரேனின் வேடத்திற்கு கொடுத்த பில்ட்-அப். ”நரேனின் பாத்திரம் பலரை பயமுறுத்தும்” என்று. ஆனால் நரேனை பார்த்தால் ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த மாதிரி பார்வை மட்டும் தான். மற்றபடி ஒன்றும் இல்லை. க்ளைமேக்ஸ் காட்சியில் அவரின் டயலாக்கும் அதை அவர் சொல்லும் விதமும் - சோ சேட் நரேன்.. வில்லன் வேடம் பயமுறுத்துவதற்கு பதில் நம்மை நக்கலாக சிரிக்க வைக்கிறது.  முதலிலேயே சொன்ன மாதிரி வில்லன் பாத்திரம் தான் சூப்பர் ஹீரோவின் மாஸை உயர்த்தும். நரேனின் பாத்திரம் மிகவும் சோடை போயிருப்பதும் படம் நம்மை கவராததற்கு ஒரு முக்கிய காரணம். 

இசை, கேமரா என்று எல்லாமே வழக்கமான மிஸ்கின் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. இந்த கதைக்கு எதற்கு ஒரு சூப்பர் ஹீரோ? சாதாரண தமிழ் ஹீரோவே போதுமே மிஸ்கின்? சரி, சூப்பர் ஹீரோ வருகிறார். அவர் என்ன தான் செய்கிறார்? உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. போலீஸே எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடுகிறதே? பின்ன என்ன அவசியம் முகமூடிக்கு? இப்படி பல கேள்விகள் நம்மை கேட்க விடாமல் செய்திருந்து, பலமான வில்லன் பாத்திரத்தையும் அமைத்திருந்தால் படம் ஒரு வேளை நன்றாக இருந்திருக்கலாம். மிஸ்கின் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இனிமேலாவது பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள்.
முகமூடி - புலியை பார்த்து சூடு போட்ட பூனை தீக்காயத்தால் இறந்து போனது..

11 comments

 1. முழுமையான விமர்சனம்

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம்

  ReplyDelete
 3. முகமூடி - புலியை பார்த்து சூடு போட்ட பூனை தீக்காயத்தால் இறந்து போனது..

  முழுமையான நல்ல விமர்சனம் ...

  ReplyDelete
 4. படம் எபபுடிய்ன்னு புரிஞ்சு போச்சு சார் ......... நன்றி .

  ReplyDelete
 5. நன்றி நண்பர்களே..

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி தோழா !!!

  ReplyDelete
 7. avasara pattu ticket book panniteno? pakalam...

  ReplyDelete
 8. //இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையா? //
  இது மட்டும் இல்ல.. இப்ப வர்ற முக்காவாசி தமிழ்படங்களுக்கு ஹீரோயினி தேவையே இல்ல..

  ReplyDelete
 9. at last, you made me talk brother..

  விமர்சனங்களை பொறுத்த வரைக்கும் ரெண்டு விஷயம் முக்கியம்..
  Number 1 : விமர்சனமாகப்பட்டது எந்தவித சுய விருப்பு வெறுப்பு இல்லாது நடு நிலை குன்றாது நின்று குறை நிறைகளை ஆய்ந்து குறிப்பிடுவனவாக இருத்தல் நன்று..
  (அதை தங்களுடைய பில்லா இரட்டையோட விமர்சனத்தை பார்த்தே நான் அறிந்து கொண்டனன், தங்களிடம் அதை எதிர்பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று..)
  Number 2: திரைக்கதை, பின்னணி இசை, கேமரா கோணம், காட்சி அமைப்பு, ஷாட், ப்ரேம்.. போன்ற இன்னபிற குறிப்பு வார்த்தைகளை ஆங்காங்கே தூவி விட்ட பத்திகள் எல்லாம் திரைப்பட விமர்சனங்கள் ஆகிவிடாது மிஸ்டர்..

  ATLAST, YOU MADE ME TALK BROTHER..

  ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One