இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது. தனித்தமிழ் நாடு என்று சிலர் பேசி வரும் காமெடியையும் விவாதித்தோம்.
சம உரிமைகளோடு ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் போதே இந்த மக்களாலும் அரசியல்வாதிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை தன் மாநிலத்தவனுக்கும், அருகில் இருக்கும் தன் இனத்தவனுக்கும். இதில் தனிநாடாக வாங்கி விட்டால் ரொம்ப சந்தோசமாகிவிடும், அதை எதிர் பார்ப்பவர்களுக்கும் ஆள்பவர்களுக்கும். மொத்தாமாக கொள்ளையடித்து இங்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் காசுக்கும் பதவிக்கும் விற்றோ அல்லது கொன்றோகூட போட்டு விடுவார்கள்.
நாங்கள் பேசும் போது எனக்குள் இது சம்பந்தமாக கேட்டுக்கொண்ட பல கேள்விகளை இங்கே வைக்கிறேன். தனித்தமிழ் நாட்டிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் கொஞ்சம் பதில் கூறினால் எங்களுக்கும் அதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவென்று தெரியுமல்லவா?
1. சமஉரிமையோடு இருக்கும் வாய்ப்பை எல்லாம் விடுத்து தனிநாடு தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் தான் நம் இனம் அழிந்தது இங்கு மிக அருகில். கிட்டத்தட்ட நம் தமிழகத்திற்கும் இதே நிலைமை வரவேண்டுமா?
2. சரி, உங்கள் ஆசைப்படி தனித்தமிழ் நாடு கிடைத்துவிட்டது.. உங்களுக்கு யாரை தலைவனாக தேர்ந்து எடுப்பீர்கள்? இப்போது இருப்பவர்களில் யாருக்காவது அதற்கான தகுதி இருப்பதாய் நினைக்கிறீர்களா? இங்கு இருக்கும் யாராவது உங்களுக்காய் உண்மையாக போராடுவாரா?
3. நீங்கள் நினைப்பது போல் தனி தமிழ்நாடு கிடைத்ததும், அருகில் இலங்கையில் முகாம் இட்டிருக்கும் சீன மற்றும் பாகிஸ்தான் இராணுவம் லைட்டா ஒரு குண்டு வீசினால், நீங்கள் பிரிந்து வந்த இந்தியாவிடமே மீண்டும் போய் கையேந்துவீர்களா?
4. ஒரே நாடாக இருக்கும் போதே இந்த கேரளம் ஆந்திரம் கர்நாடகாக்காரன் எல்லாம் நீர் குடுக்கமாட்றான். தனி நாடாக மாறிவிட்டால் நீர் பீறிட்டு வந்துவிடுமோ?! சும்மாவே டெல்டா விவசாயி தூக்கில் தொங்கியும், பூச்சி மருந்தை குடித்தும் நம்மை பாவியாக்கிக்கொண்டிருக்கிறான்.. தனி நாடாகிவிட்டால் மொத்தமாக விவசாயிகளை ஒரு மைதானத்தில் நிற்க வைத்து எல்லோரையும் கொன்றுவிட்டு தனிநாட்டை உருவாக்குங்கள்..
5. பெங்களூருவிலும், ஹைதராபாத்திலும் இன்னும் பிற வெளிமாநிலங்களிலும் படிக்கும், வேலை பார்க்கும் தமிழருக்கெல்லாம் இலவச விசா வாங்கிக்கொடுப்பீர்களா? அல்லது, அவர்களை அங்கிருந்து பத்திவிட்டால் அவர்களுக்கு அதே தரமான படிப்பையும், அதே வேலைவாய்ப்பையும் இங்கே ஏற்படுத்திகொடுப்பீர்களா?
6. இங்கே வேலை செய்யும் பிற மாநிலத்தவற்கு என்ன பதில் சொல்வீர்கள்?
7. வருஷத்துக்கு ஒரு தடவையாவது சபரிமலை, திருப்பதி என்று நினைத்தவுடன் சாதாரணமாக செல்லும் மக்களுக்கு அண்டை நாட்டு மாநிலங்களான கேரளம் ஆந்திரத்தோடு என்ன மாதிரி உடன்படிக்கை போட்டு அனுப்புவீர்கள்?
8.ஏற்கனவே பெட்ரோலுக்கு யானை விலை இருக்கிறது. இந்த நிலையில் அதை நீங்கள் இறக்குமதி செய்து மலிவு விலைக்கு விற்று, மக்களை விலைவாசியில் இருந்து காப்பாற்றி... அப்பப்பா நினைக்கவே பயமாக இருக்கிறது. பொருளாதாரம் என்ன ஆகும் என்று யாராவது யோசித்துப்பார்க்கிறீர்களா? நாணயத்தின் மதிப்பை எப்படி காப்பாற்றுவீர்கள்? இங்கு இருக்கும் பல கம்பெனிகளும் தெரித்து ஓடிவிடும்.. ஏற்கனவே இலவத்திற்கு பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படுகிறது மத்திய அரசில் கையேந்திக்கொண்டு.. இதில் தனி நாடு கேட்டால் எல்லோரும் கை ஏந்த வேண்டியது தான்..
9. வெளிநாடுகளில் (குஜராத், மராட்டியம், உத்திரபிரதேசம் போன்றவை) இருந்து வரும் வியாபாரிகள் கோவை திருப்பூரில் துணியையும், ராஜபாளையத்தில் நூலையும், சிவகாசியில் பட்டாசையும் வாங்க வருவார்களா? இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கு வரி வேறு இருக்குமே?! தொழில்துறைக்கு என்ன திட்டம் போடுவீர்கள்?
10. தினமும் 'சர், சர்' என்று செல்லும் பைக், கார் எல்லாமே இறக்குமதி செய்து தான் விற்கவேண்டும். ஏற்றுமதி எதிலுமே இருக்காது.. ஆஆ, ஒரே ஒரு பொருளை மட்டும் நம் புது தனி தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் நன்றாக ஏற்றுமதி செய்வார்கள்.. அது தான் நம் ஆற்றுப்படுகைகளில் இருக்கும் மணல்..
11. தெலுங்கு சினிமாவையோ மலையாள சினிமாவையோ காப்பி அடித்து காப்பிரைட்ஸ் வழக்குவந்தால், முந்தைய நாள் பணத்தை செட்டில் செய்து படத்தை ரிலீஸ் செய்து தப்பிக்க இயலாது. அந்த நாட்டில் கழி திண்ண வேண்டியது தான்.
12. தமிழக கிரிக்கெட் அணி இந்திய அணியோடு சேப்பாக்கத்தில் மோதும்.
13. அப்படி விளையாடும் கிரிகெட்டையும் நீங்கள் எந்த தொலைக்காட்சியில் பார்ப்பீர்கள்? Sony, Ten Cricket, Star Sports, ESPN எதில் பார்ப்பீர்கள்? இதெல்லாம் தெரியுமா? தனி காசு கொடுக்க வேண்டியது இருக்கும்.. ஒரு வேளை sun cricket என்று எதாவது சேனல் வந்து நம்மை காப்பாற்றலாம்..
14. கேரளாத்தில் இருந்து கொட்டப்படும் கழிவுகளையும், ஆந்திர நக்ஸல்களையும் கர்நாடக அத்துமீறல்களையும் என்ன செய்துவிட முடியும்?
15. மத்திய மந்திரி சபையில் இருக்கும் தமிழக அமைச்சர்களை என்ன செய்வீர்கள்? கஷ்ட்டப்பட்டு பெற்ற பதவி அல்லவா?
16. தமிழகத்துக்குள் இருக்கும் ரயில் பாதைகளையும் நான்கு வழிப்பாதைகளையும் அவர்கள் இடிக்க சொன்னால் என்ன செய்வீர்கள்? அல்லது எல்ல விலை கொடுத்து அதையெல்லாம் வாங்குவீர்கள்? அவ்வளவு பொருளாதார வசதி இருக்கிறதா இங்கே? மத்திய அரசு அலுவலகங்களை எல்லாம் சூறையாடி விடலாமா? நமக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு அது தானே?
17. மத்திய அரசில் வேலை செய்யும் தமிழக ஊழியர்களின் நிலை என்ன? என்ன வேலை வாய்ப்பை கொடுப்பீர்கள்?
18. விலை மலிவாக இருக்கிறதே என்று நினைத்து வாங்கிப்படிக்கும் deccan chronicle, economic times போன்ற தமிழகத்தில் அச்சகம் இல்லாத பத்திரிகைகள் எல்லாம் படிக்க முடியுமா?
19. NDTV, AajTak போன்ற டிவிக்களை பார்த்து அறிவாளிகளாக சீன் போடமுடியுமா?
20. ஆசையாக வீடு கட்டி அழகுபடுத்த கடப்பா கல், டைல்ஸ், மொசைக், கிரானைட் போன்றவைகள் வானத்தில் இருந்து நேராக வந்துவிடுமா?
21. அட, எல்லாத்தையும் விடுங்க, ஒவ்வொரு படத்திலும் அழகழகாக பிற நாட்டு அழகியை
நடிக்கவைக்க முடியுமாய்யா உங்களால? இப்போ பாருங்க ஈசியா கேரளா ஃபிகரு,
பாம்பே ஃபிகரு எல்லாம் வருது. அதெல்லாம் நடக்காம போயிருமேங்கிறது தான் என்
உண்மையான ஆதங்கம்..
22. இந்த தனித்தமிழ் நாடு கோஷம் போடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தான்.. அவர்கள் எல்லாம் தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு ஏதாவது வேலையோ தொழிலோ செய்து விட்டு அதன் பின் இந்த கோஷத்தை போடுவதை பற்றி யோசிக்கலாம்.. தன் கையில் காசு இருக்கும் வரை அடுத்தவனின் கஷ்டம் தெரியாது.. அட்லீஸ்ட் தனி நாடாக பிரிந்தவுடனாவது அவர்கள் எல்லாம் நம் நாட்டிற்கு பிழைக்க வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். வருவார்களா? அல்லது புது நாடு வாங்கிய பின்னும் வெளிநாட்டுக்காரனுக்கு உழைத்துக்கொடுப்பார்களா?
தனித்தமிழ் நாடு கேட்கும் ஒவ்வொருவரும், இந்திய பாகிஸ்தான் பிரிவினையை பற்றி நன்றாக படித்துவிட்டு அதற்கு மேலும் தனித்தமிழ் நாடு கேட்க ஆசை இருந்தால் தாரளமாக கேளுங்கள்...
22. இந்த தனித்தமிழ் நாடு கோஷம் போடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தான்.. அவர்கள் எல்லாம் தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு ஏதாவது வேலையோ தொழிலோ செய்து விட்டு அதன் பின் இந்த கோஷத்தை போடுவதை பற்றி யோசிக்கலாம்.. தன் கையில் காசு இருக்கும் வரை அடுத்தவனின் கஷ்டம் தெரியாது.. அட்லீஸ்ட் தனி நாடாக பிரிந்தவுடனாவது அவர்கள் எல்லாம் நம் நாட்டிற்கு பிழைக்க வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். வருவார்களா? அல்லது புது நாடு வாங்கிய பின்னும் வெளிநாட்டுக்காரனுக்கு உழைத்துக்கொடுப்பார்களா?
தனித்தமிழ் நாடு கேட்கும் ஒவ்வொருவரும், இந்திய பாகிஸ்தான் பிரிவினையை பற்றி நன்றாக படித்துவிட்டு அதற்கு மேலும் தனித்தமிழ் நாடு கேட்க ஆசை இருந்தால் தாரளமாக கேளுங்கள்...
அவ்வளவு சீரியசாக யாரும் தனித்தமிழ்நாடு கேட்கிறார்களா என்ன? தெலுங்கானாவையே பிரித்துக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் .....இதையா செய்யப் போகிறார்கள் ? இருந்தாலும் ஓகே ! படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது ! நான் 11, 12,13,18, 19 , 20 ஐ மிகவும் ரசிக்கிறேன் ! அதிலும் 21 படு சூப்பர் ! முழு பதிவையும் நகைச்சுவையாகவே எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து !
ReplyDeleteதன் பேரன்கள் எடுக்கும் /தயாரிக்கும் திரைப்படங்களுக்கு "குட்டிகள்" எல்லாம் மலையாளம், மும்பையில் இருந்து இறக்குமதி என்பதால் தனி தமிழ் நாடு என்பது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது புரிகிறது.
ReplyDeleteஎல்லாம் சும்மா ஓட்டுக்குத்தான்
ReplyDeleteஇல்லை, இதை பேசுபவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. தங்களை ஈழ ஆதவாளர்களாக காட்டிக்கொள்ளும் சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான். தமிழ்நாடு நல்லா இருப்பது அவங்களுக்கு பிடிக்கவில்லை போல
ReplyDelete//தமிழக கிரிக்கெட் அணி இந்திய அணியோடு சேப்பாக்கத்தில் மோதும்//
ReplyDelete>>> Indian Dons vs Tamil Billas???
அதுக்குள்ள பேர் வச்சுட்டீங்களா? ஒரு ஹோப்பா தான்யா போய்கிட்டு இருக்கு
ReplyDeleteAll points are superb!!!!
ReplyDeleteதனி தமிழ் நாடு வேண்டும் என்ற அளவில் யாரும் பெரிதாக பேசவில்லை... அதற்கான தேவையும் இப்போது இல்லை.
ReplyDeleteஆனால் இந்த மாநில மக்களின் உணர்வுகள் உதாசினப்படுத்தபடுகிறது என்பதை மறுகக முடியாது.. அமெரிக்காவில் டர்பன் அணிந்த சீக்கியார்களின் சோதிக்கப்படுகிறார்கள் என்றவுடன் துடித்த மன்மோகன் சிங்கின் மீசை தமிழக மீனவர்கள் கொல்லுபட்டபோது அமைதி காத்தது ஏன்? இதை போல பல வகையில் புறக்கணிக்க படுகின்றோம், ஆனால் நாம் நம் உரிமையை தான் இப்போது கேட்கின்றோம் தனி நாடு அல்ல...
அதே சமயம் ஒரு மாநிலம் தனி நாடானால் செயல்பட திணறும் என்று நீங்கள் சொல்லும் காரணம் ஏற்று கொள்ள முடியாது..
இதற்கு சில உதாரணம் மலேசியாவில் இருந்து பிரிந்த சிங்கபூர் வளர்ச்சியில் மலேசியாவை தூக்கி சாப்பிட்டு விட்டது, சுற்றிலும் எதிரிகளால் சூழப்பட்ட இஸ்ரேல் தோற்றம் அதன் இன்றைய வளர்ச்சி.. சோவியத் யூனியனில் இருந்து பிரித்த பல நாடுகளின் வளர்ச்சி என்று எதுவும் சோடை போகவில்லை.
ஒரே தேவை ஒரு நல்ல தலைவரின் வழி காட்டுதல்
அது தான் இங்க இல்லையே?!
ReplyDeleteஇரண்டு நாடுகளுக்கு இடையே ஆணை கட்டக்கூடாது என்ற அடிப்படையில் தான் இன்றளவும் பாகிஸ்தான்னிலிருந்து இந்தியாவிற்கு சிந்து நதி வருகிறது.எனவே இந்தியாவை விட்டு தமிழ்நாடு பிரிந்துவிட்டால் நிச்சியம் தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும்.
ReplyDeleteசரி
Deleteஎப்படி? கட்டிய அணையை வெடி வைத்து தகர்த்துவிடுவீர்களா? சரி, இப்போது பாகிஸ்தான் அணை கட்டினால் இந்திய அரசு பொங்கி எழுந்துவிடுமோ? நீங்க வேற ப்ரித்திக்.. ஏதோ பாகிஸ்தான் கருணைல தண்ணி வந்துட்டு இருக்கு.. தமிழகமும் அப்படித்தான்.
ReplyDeleteசிந்து நதி இந்தியாவில் இருந்து தான் பாகிஸ்தான் போகிறது... அதே போல கங்கை பங்காளதேஷ்கு போகிறது.. இந்த இரண்டு மூன்று நாடுககளிடையே நதி நீர் ஒப்பந்தம் கை எழுத்தாகி உள்ளது..
ReplyDeleteஒரே நாடாக இருக்கும் போதே இந்த கேரளம் ஆந்திரம் கர்னாடகா காரன் எல்லாம் நீர் குடுக்கமாட்றான். தனி நாடாக மாறிவிட்டால் நீர் பீரிட்டு வந்துவிடுமோ?.
ReplyDeleteபிரச்னையே இது போல குடுக்க மாட்டேன்.அடிப்பேன் என்று சொல்லுவதால் தானே.
தனி நாடுன்னு ஒன்னு உருவாசின்னா முதல்ல பெரிய ஜெயுலு கட்டி உள்ள அந்தக்காலத்துல எப்படி மாவு, எண்ணை முதலான விஷயங்களுக்கு மக்கள் உழசாங்களோ அந்த விஷயங்கள் நம்ம அரசியல் வாதிங்க கிட்ட ஒப்படைச்சிட்டு.....
ReplyDeleteஅவங்ககிட்ட இருக்க பணத்த புடுங்குனாலே நீங்க சொல்ற அத்தன விஷயத்தயும் செய்ய முடியும்.
http://selvanuran.blogspot.com/2011/02/blog-post_09.html
ReplyDeleteநண்பரே உங்கள் கேள்விகளுக்கு இங்கே பதில் இருக்கிறது நன்றி
அண்ணே நீங்க பெரிய அறிவுஜீவி....உங்களுக்கு இன்னுமா பாரத் ரத்னா விருது கொடுக்கவில்லை?
ReplyDeleteஎன்னா கொடுமை ராமு?
tasmac ah vittuteengaley...
ReplyDeleteநான் உங்கள் கருத்துகளுக்கு முற்றும் உடன்படுகிறேன்.
ReplyDeleteபாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நிணைவகற்றாதீர். வந்தேமாதரம்.
மிக்க நன்றி SINTHIPPAVAN அவர்களே.. பாரத நாடு பழம் பெரும் நாடு தான்.. இந்த அரசியல்வாதிகள் தான் நம்மை வஞ்சிக்கிறார்கள்.. அவர்களை தான் நாம் நன்றாக ‘கவனிக்க’ வேண்டும்..
Deleteமிகச் சரியாக சொன்னீர்கள் சார்.
Deleteநம்மால் முடியுமா...?என்று சிங்கப்பூர் நினைத்திருந்தால் சிங்கப்பூர் இப்படி வளர்ந்திருக்க முடியுமா..? தனிதமிழ்நாடு கிடைத்தால் நமக்கு நட்பு நாடாக சீனாவும், பாக்கிஸ்தானும் சேர்ந்து கொள்ளும் தம்பி...!கியூபா,வியட்நாம், வெனிசுலா போன்ற காம்ரேட்கள் நமக்கு கைகுழுக்குவார்கள்...! இந்தியா உடைவதை உலகமே விரும்புகின்றது இதுதான் உலக அரசியல்..!
ReplyDelete//நட்பு நாடாக சீனாவும், பாக்கிஸ்தானும் சேர்ந்து கொள்ளும் தம்பி...!// இவர்கள் யாருக்கு உண்மையான நட்பு நாடாக இருக்கிறார்கள்? சரி அவர்கள் நட்பு நாடாக இருப்பதால் காவிரியும் பெரியாறும் சரியாகிவிடுமா? காஷ்மீருக்கும் திபெத்துக்கும் இன்று என்ன நிலை என்று பார்த்தீர்களா? அதே நிலை தான் நமக்கும் வரும்..
Delete//கியூபா,வியட்நாம், வெனிசுலா போன்ற காம்ரேட்கள் நமக்கு கைகுழுக்குவார்கள்...!// நம்மிடம் பெட்ரோல் வளம் இல்ல, அதனால் யாரும் நம்மை சப்போர்ட் பண்ண மாட்டார்கள்..
//நம்மால் முடியுமா...?என்று சிங்கப்பூர் நினைத்திருந்தால் சிங்கப்பூர் இப்படி வளர்ந்திருக்க முடியுமா..?// சிங்கையில் இருக்கும் மக்கள் போல் நம் மக்கள் முதலில்ல் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.. அங்கே வந்த லீக்குவான்யூ போன்ற தலைவர்கள் எவன் இங்கே இருக்கிறான்?
I am sure that you cant run even a petty shop, i think you are corporate slave. For you info, tamilnadu was ruled by more than four kings at a same time.
ReplyDeleteoh i see.. first try to run a family with ur full effort.. //i think you are corporate slave// oh i see... to whom u r working for? first try to come out of ur comfort zone and see the world man..
Delete//tamilnadu was ruled by more than four kings at a same time. // அதற்காக? என்ன செய்ய வேண்டும்? தனித்தமிழ் நாடு வாங்கியவுடன் வன்னியருக்கு என்று தனி நாடு கேட்க திட்டமா?
//I am sure that you cant run even a petty shop,// உன்னை விட பிறரை மட்டமாய் நினைப்பதை நிறுத்து... முதலில் நான் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் சொல்.. அல்லது இங்கிருக்கும் கருத்துக்களை படித்துவிட்டு அது சம்பந்தமாக பேசு.. நான் பெட்டிக்கடை வைக்கிறேனா, அல்லது எதுவும் முதலாளிக்கு உழைத்துக்கொடுக்கிறேனா என்பதல்ல இங்கு பிரச்சனை. சம்பந்தம் இல்லாமல் உளற வேண்டாம் பிரதர்..
திரு.வீடு சுரேஷ் குமார் ஐயா,
ReplyDeleteபாகிஸ்தானும் சீனாவும் யாருக்கு உதவுவார்கள்???நமக்கா?,இலங்கைக்கா???.
தீவிரவாத பாகிஸ்தான் ,அடாவடி சீனா உதவியில் வாழுமளவிற்க்கு தமிழன் ஒன்றும் மானங்கெட்டவனல்ல திரு.வீடு சுரேஷ் குமார் அவர்களே.
அதாவது பாகிஸ்தானில் இருந்து சிந்து நதியும், சீனாவில் இருந்து ஹ்வாங் ஷோ, பிரம்மபுத்திரா நதியும் தமிழகத்திற்கு திருப்பி விடப்படும்.. நான் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கலாம் என்பது இவர்களின் கனவு/நப்பாசை..
Deleteஇப்ப இருக்கின்ற காங்கிரஸ் அரசு ஆட்சியில் மட்டும் தமிழன் மானத்தோடு வாழ்கின்றானா....? அட போங்க சார் சொந்த நாட்டில் அநாதை சார் தமிழன்.
Deleteபவானி நகரில் காவிரியின் நிலையைப் பார்த்தால் நம்ம நாடு விவசாய நாடு அப்படின்னு சொன்னா நாண்டுக்கிட்டுத்தான் சாவனும்...முப்போகம் தஞ்சையில் விவசாயம் இனி விளையும் அப்படின்னு நீங்க நம்பினா ஒரு நடை செங்கிப்பட்டி, மற்றும் பல கிராமங்களுக்கு ஒரு நடை போய்ப் பாருங்க வயலை அழித்து பெரிய..பெரிய..இரும்பு குழாய் தயார் செய்கின்ற தொழிற்சாலை உருவாக்கிட்டாங்க.....!
50 வருசம் முன்னாடியே நம்ம மாநிலத்தை சீனாவிடமோ...! பாக்கிஸ்தானுக்கோ கொடுத்திட்டா உருப்படும் வெங்காயம் அப்படின்னு ஒரு பகுத்தறிவு தலைவன் கூறினான் அப்பவே அதைத்தான் நான் இப்ப ரிபீட்டு!!!
இப்படி சொன்னவரை எப்படி பகுத்தறிவு வாதி என்று கூறுவது.?
Deleteபாகிஸ்தானிலிருந்தும் சீனாவிலிருந்தும் தண்ணீர் எப்படி வரும் ? டப்பாவில் அடைத்து கப்பலிலா?,விமானத்திலா?
செங்கிப்பட்டியில் அந்த நிறுவனங்கள் வந்ததற்கு நாம் தான் காரணம்.. நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகள் ஆவதற்கும் நாம் தான் காரணம்..
Delete//50 வருசம் முன்னாடியே நம்ம மாநிலத்தை சீனாவிடமோ...! பாக்கிஸ்தானுக்கோ கொடுத்திட்டா உருப்படும் வெங்காயம் அப்படின்னு ஒரு பகுத்தறிவு தலைவன் கூறினான்// பகுத்தறிவை விடுங்கள் அந்த ஆளுக்கு முதலில் அறிவு இருக்கிறதா என்று தெரியவில்லை.. சுதந்திரம் கிடைக்கும் வரை மூடிக்கொண்டு இருந்துவிட்டு சுதந்திரம் கிடைத்தவுடன் திராவிடம் திராவிடம் என்று கூச்சல் போட்ட ஆள் தானே அவர்?
பாகிஸ்தானும் சீனாவும் நமக்கு ஆதரவு கொடுக்குமா அல்லது இலங்கைக்கு ஆதரவு கொடுக்குமா? உங்கள் கூற்றுப்படி தனி நாடாகிவிட்டால் சென்னைக்கு பத்து கி.மீ தாண்டி வேறொரு நாடு.. திடீரென்று அங்கிருக்கும் நக்ஸல்களோ இல்லை ராணுவமோ வந்து சென்னையை துவம்சம் செய்தால் என்ன செய்வீர்கள்? சரி இதெல்லாம் அதீத கறபனை.. ரொம்ப சிம்பிள், தண்ணீருக்கு என்ன செய்வோம் முதலில்?
இந்தப் பதிவின் தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அப்படி ஒருவேளை நடந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றெல்லாம் என் மனதுடன் ஒரு ஓட்டம் ஓடிவிட்டு இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கினேன், ஆச்சரியம் நான் நினைத்த பெருமபாலான கேள்விகளை நீங்களும் கேட்டிருந்தீர்கள், அதை விட ஆச்சரியம் இன்னும் சிறப்பான சில விசயங்களையும் நீங்கள் யோசித்து எழுதி இருந்தது தான்,
ReplyDeleteஇப்பதிவு அக்காலம் இக்காலம் என்றில்லை, முக்காலத்திற்கும் பொருந்தும், அருமையான பதிவு நண்பா, மீள் பதிவை பகிர்ந்ததற்கு நன்றி
//வெளிநாடுகளில் (குஜராத், மராட்டியம், உத்திரபிரதேசம் போன்றவை) இருந்து வரும் வியாபாரிகள் கோவை திருப்பூரில் துணியையும், ராஜபாளையத்தில் நூலையும், சிவகாசியில் பட்டாசையும் வாங்க வருவார்களா? இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கு வரி வேறு இருக்குமே?! தொழில்துறைக்கு என்ன திட்டம் போடுவீர்கள்?// ஹா ஹா ஹா
நன்றி நண்பா.கேரளாக்காரன் அறிவுப்பூர்வமாக அணுகியதால் இத்தாலி பிரச்சனையை சமாளித்தான்.. மக்கள், மாநில அரசியல்வாதிகளை நிர்பந்தித்தார்கள்.. மாநில அரசியல்வாதிகள் மத்திய அரசை மிரட்டி நினைத்ததை சாதித்து விட்டார்கள்.. ஆனால் இங்கு நாம் அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக அணுகுகிறோம்.. நம் மாநில அரசும்/அரசியல் கட்சிகளும் நம்மை நேரடியாக மத்திய அரசோடு மோத விட்டு சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.. பிரச்சனை நம் தேசிய கட்சிகளிடம் இல்லை.. நம் மாநில அரசும்/ மாநில அரசியல் கட்சிகளும் தான் பிரச்சனை..
Deleteமேதாவித்தனமான கேள்விகள் நீங்கள கேட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு
ReplyDeleteபதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கேட்டு பெறவும் இப்படி விடுதலை உணர்ச்சியை கொச்சை படுத்த வேண்டும் இந்திய ஒன்றியத்தில் இருந்து தனி தமிழ்நாடு பிரிவது பிரிவினைவாதம் என்றால் பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்தில் இருந்து இந்திய ஒன்றியம் எதற்க்காக விடுதலை வாங்கியது
ReplyDeleteஅதுவும் சரி தான்.. தனித்தமிழ்நாட்டில் இருந்து எங்கள் வீட்டை மட்டும் பிரித்து இன்னொரு நாடு வேண்டும் என நானும் கேட்கலாம் என்றிருக்கிறேன் சார்.. என் உரிமைக்காகப் போராட, குரல் கொடுக்க நீங்களும் வருவீர்கள் என நம்புகிறேன்
Deleteபாக்,பங்களா இந்தியாவை விட்டு பிரிந்ததால் அழிந்து விட்டதா என்ன??
ReplyDelete