தல நீங்க இப்போ விஜய்ய சப்போர்ட் பண்ணணுமா?

Thursday, February 3, 2011

"எங்களை யாராலும் இனி பிரிக்க முடியாது" - இந்த வார குமுதத்தில் அஜித்தும் விஜய்யும் சேர்ந்துவிட்டதாகவும், இனி யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது போலும் இருந்தது. இதைப்படித்ததுமே அஜித் ரசிகனான எனக்கு அஜித் மீது வெறுப்பு தான் வந்தது, ''தல க்கு அறிவே வராதா?' என்று.

அஜித் ரசிகர்களில் பல பேர் என்னைப்போல விஜய் &அவரின் அலம்பல் பிடிக்காமல் 'இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி இல்லையா?' என்று நினைத்து அஜித் பின் சென்றவர்கள். ஒருவர் படத்தில் மட்டும் (வெட்டியாக) சீன் போடுவார், நேரில் ஊமை; இன்னொருவர் ஏனோ தானோவென்று இருக்கும் கதையிலும் உயிரைக்கொடுத்து நடித்துவிட்டு, நேரிலும் பேட்டியிலும் சீருவார். எனக்கு இரண்டாமவர் தான் பிடித்தது. அவரின் நேர்மை, மற்றும் முதலாமவரின் ஆட்டம் அதிகமானதால். சும்மா இருந்த அஜித்தை சீண்டியவர் இவர் தான். தன் படங்களில் தேவை இல்லாத வசனங்களை வைத்து அஜித்தை நேரடியாகவே தாக்கினார். அஜித்தும் அவ்வப்போது தன் படங்களில் பதிலடி கொடுத்தார். ஆனால் அவை எடுபடவில்லை. ஏனென்றால் விஜய்க்கு அப்போது இருந்த மீடியா சப்போர்ட் தலக்கு இல்லை.

இந்த நிலையில் இப்போது இருவரும் சேருவது தான் பிடிக்கவில்லை. விஜய், தன் படத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் தான் இப்போது இவர் கண்ணுக்கு அஜித் தெரிய ஆரம்பித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து போஸ் கொடுக்கிறார்கள், ஏதோ பால்ய சிநேகிதர்களைபோல சமீப காலமாக இவரது பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. இத்தனை நாள் தல மீது இல்லாத பாசமும் நட்பும் இப்போது மட்டும் இந்த விஜய்க்கு ஏன் திடீர் என்று வர வேண்டும்? 

"ஏன்ப்பா இத்தனை நாட்கள் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் இப்போதாவது சேருகிறார்களே, இதில் ஏன் உனக்கு வயித்தெரிச்சல்?" என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு என் பதில், "நான் ஒரு அஜித் ஃபேன். எனக்கு என் தல தான் முக்கியம். சரியாக 8,9 வருடங்களுக்கு முன்பும் தல அஜித்துக்கு கிட்டத்தட்ட இப்போது விஜய் அனுபவிக்கும் இதே போன்றதொரு நிலைமை தான். அப்போது இந்த விஜய்க்கு சன் டிவி சப்போர்ட்டாக இருந்தது. அஜித் படமும் விஜய் படமும் ஒன்றாக வந்தால், இந்த சன் டிவி தனது டாப்10 மூவீஸில் விஜய் படதிற்கு தான் முதல் இடம் கொடுக்கும். வில்லன் பகவதி காலத்தில் இருந்து இப்போது வரை இந்த நிலை தான். மோசமான விஜய் படங்கள் எல்லாம், நன்றாக இருக்கும் அஜித் படங்களை விட சூப்பராக ஓடும். கிட்டத்தட்ட அஜித்தின் ஒவ்வொரு படமும் ஹிட் ஆவதே பெரிய விசயம். இந்த கால கட்டத்தில் தான் அவரும் சறுக்க ஆரம்பித்தார், ஜனா, ஆஞ்சநேயா, ஜி என்று. அவருக்கு தியேட்டரும் கிடைக்காது, மீடியா சப்போர்ட்டும் இருக்காது. 

அப்போதும் கூட தல எவன் காலிலும் விழவில்லை. அமைதியாகத்தான் இருந்தார். இந்த விஜய் அப்போது மிகவும் சந்தோசமாக எதைப்பற்றியும் கவலைப்படமால் இருந்தார். ஏனென்றால் அவர் படங்களுக்கு தான் தாருமாறாக சப்போர்ட் இருந்ததே?! ஏன், 'என் துறையில் இருக்கும் அஜித்திற்கு மீடியா சப்போர்ட் இல்லை' என்று அன்று இவர் அஜித்திற்கு ஒரு குரல் கொடுத்திருக்கலாமே?தனக்கு என்று வந்தால் தான் எல்லா வலியும் எப்படி என்று தெரியும்.

திருவாளர் விஜய் அவர்களே, உங்களுக்கு காலம் இருக்கும் போது, நீங்கள் 'எவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன?' என்பது போல் இருப்பீர்கள். உங்கள் ரசிகர்களும் உங்கள் கெப்பாகுட்டி எவ்வளவு என்றே தெரியாமல் உங்கள் பின்னால் துதி பாடிகொண்டும், அஜித் ரசிகனை அசிங்கப்படுத்திக்கொண்டும், அஜித் போஸ்ட்டர்களை கிழித்துக்கொண்டும் இருப்பார்கள். அதுவே உங்களுக்கு ஒன்று என்றால் என் தலயும் நாங்களும் இப்போது வர வேண்டுமா? இணைந்த கைகள் என்று நீங்கள் இப்போது காட்டிக்கொள்வீர்களா? ஒரே ஒரு படத்திற்கே நீங்கள் இவ்வளவு கொதித்தீர்கள் என்றால், கிட்டத்தட்ட 10வருடங்களாக இந்த நெருக்கடியை அனுபவிக்கும் அஜித்துக்கும், என்னைப்போன்ற ரசிகர்களுக்கும் எப்படி இருந்திருக்கும்?

நீங்கள் உங்கள் அரசியல் பிரவேசத்திற்கு உங்கள் ரசிகர்களைப்போல் எங்களையும் ஊறுகாயாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கவேண்டாம். உங்கள் துறையிலேயே இத்தனை நாட்களாய் உங்களால் கஷ்டப்பட்ட, கஷ்டப்படுத்தப்பட்ட் ஒருவரின் தயவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிர் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பெர்சனலாக பிரச்சனை வரும் போது தான் உங்களுக்கு மக்கள் கஷ்டப்படுவது, அரசியல்வாதிகளின் அராஜகம் எல்லாம் தெரியும். டெல்லியில் சாலையில் நடந்து கொண்டே ஒரு மத்திய மந்திரியிடம் பேட்டி எடுத்த போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு?

அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தை வைத்து உங்கள் படத்தை வெளியிட விடவில்லை என்று சொன்ன நீங்கள் தான் சில வருடங்களுக்கு முன்பு, "லொள்ளு சபா' என்னும் அருமையான நிகழ்ச்சியை உங்கள் அரசியல் மற்றும் ஆட்சி அதிகார பலத்துடன் மன்னிப்புகேட்க வைத்து நிறுத்தினீர்கள். உங்களுக்கு ஒரு ஞாயம் பிறருக்கு ஒரு ஞாயமா?

எப்போதும் அடுத்தவன் சப்போர்டிலேயே முன்னேறிய உங்களுக்கு இப்போது தான் முதல் பிரச்சனையே வந்திருக்கிறது. அதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இதைகூட சொந்தமாக தீர்க்க முடியாமல் பிறரின் தயவை எதிர் பார்க்கும் நீங்களா அரசியலுக்கு வந்து இந்த மக்களுக்கு தைரியமாக சொந்த முயற்சியில் நல்லது செய்யப்போகிறீர்கள்? இந்த நிலையில் உங்களுக்கு இப்போது அஜித் உதவி செய்தால் அவரை விட முட்டாள் யாரும் கிடையாது. ஆனால் அவர் நல்லவர், எவனையும் கழுத்தறுக்கமாட்டார். உங்களுக்கு தன்மானம் என்ற ஒன்று இருந்தால், நீங்களே அஜித்திடமும் பிறரிடமும் கை ஏந்தாமல் சொந்த முயற்சியில் இறங்குங்கள். முதலில் தினமும் ஏதாவது நாளிதழுக்கோ, பத்திரிகைக்கோ ஒப்பாரி வைத்து பேட்டி கொடுப்பதை நிறுத்துங்கள்.

பி.கு: இன்றைய ஆனந்த விகடனில், விஜய் தன்னை, விஜயகாந்த், ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், மற்றும் உச்ச கட்டமாக காந்திஜி போன்றோர்களோடு ஒப்பிட்டு மிகவும் கொந்தளித்து பேசியுல்லது கெட்ட காமடி.. மேடைல 10நிமிசம் தடுமாறாம பேசவே முடியாத உங்களுக்கெல்லாம் எதுக்குங்க அரசியல் ஆச? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ், என்னத்தையோ பண்ணுங்க போங்க...

28 comments

  1. ஏன்டா உனக்கு தேவை இல்லாத வேல!!!இலங்கைல எவ்வளவு பிரச்சினை நடந்துச்சு அத பத்தி எல்லாம் ப்ளாக் ள எழுதாம உலக மகா பிரச்சினை யான விஜய் & அஜித் பிரச்சினை தேவையா??? கருங்காலி நாயே!!!

    ReplyDelete
  2. இலங்கை பிரச்சனையா? அது இத விட மிகப்பெரிய காமடி பீஸாக மாறியிருக்கிறது நமது அரசியல்வாதிகளாலும் அரசியல் சூழ்நிலையாலும். அதைப்ற்றி இந்திய இறையான்மைக்கு (?!?!?!?) உட்பட்டு பேச வேண்டும். எனக்கு அது கொஞம் கஷ்டம். ஏனென்றால் இலங்கை பிரச்சனையில் நான் அவ்வளவு வெறியில் இருக்கிறேன் நம் நாட்டின் மீது.. சரி' இந்த "கருங்காலி நாயே!!!"னா என்ன அர்த்தம்?

    ReplyDelete
  3. அஜித் ரசிகனாக நான் உங்களின் ஒவ்வொரு வார்த்தையோடும் ஏன் எழுத்துகளோடும் ஒத்து போகிறேன் ...

    //அதுவே உங்களுக்கு ஒன்று என்றால் என் தலயும் நாங்களும் இப்போது வர வேண்டுமா?

    தல ஆதரித்தாலும் அவர் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தில் அவர் சொல்லுவதை கேட்க மாட்டார்கள் ...

    // எப்போதும் அடுத்தவன் சப்போர்டிலேயே முன்னேறிய உங்களுக்கு இப்போது தான் முதல் பிரச்சனையே வந்திருக்கிறது. அதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா?

    இவர்கள் தலைக்கு கொடுத்த தொந்தரவுகளை ஞாபகபடுத்தி பார்க்கட்டும் ... அவர் தனியே நின்று தன் ரசிகர்களை மட்டும் நம்பி , இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார் ... ஆனால் இவர்கள் யார் யார் காலிலோ விழுந்து இன்று அவர்களாலேயே ஆப்பு வைக்கபட்டு அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள் ..

    // ஒரே ஒரு படத்திற்கே நீங்கள் இவ்வளவு கொதித்தீர்கள் என்றால், கிட்டத்தட்ட 10வருடங்களாக இந்த நெருக்கடியை அனுபவிக்கும் அஜித்துக்கும், என்னைப்போன்ற ரசிகர்களுக்கும் எப்படி இருந்திருக்கும்?

    ஆனால் அதர்க்காக எப்பொழுதும் அடுத்தவர்களின் மேல் பழி போடாதவர் தல ... அவரின் இந்த ஜெனுனாலிட்டியே அவருக்கு இவ்வளவு ஆதரவு இருக்க காரணம் ... ஆனால் இவர்கள் ஒரு படத்திர்க்கே அவன்தான் காரணம் இவந்தான் காரணம் என்று அடுத்தவன் மேல் பழி போட்டு கொண்டு இருக்கிறார்கள் ... இதிலிருந்தே தெரிகிறது இவர்களின் யோக்கியதானம் ...

    // ஏன், 'என் துறையில் இருக்கும் அஜித்திற்கு மீடியா சப்போர்ட் இல்லை' என்று அன்று இவர் அஜித்திற்கு ஒரு குரல் கொடுத்திருக்கலாமே?

    இதுக்கு காரணமே இவரும் அவரு அப்பனும்தான.. எப்படி ஆதரவா குரல் கொடுப்பாறு .. ஆனால் தல இப்பொழுது இவர்களுக்கு ஆதரவு தந்தால் முதன் முறையாக அவரின் நடவடிக்கையின் மேல் எனக்கு கோபம் எழும் .. ஆனால் நீங்கள் சொல்லியதை போல அவர் அப்பாவி இவனுக்கும் ஆதரவு தருவார் ...

    // இன்றைய ஆனந்த விகடனில், விஜய் தன்னை, விஜயகாந்த், ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், மற்றும் உச்ச கட்டமாக காந்திஜி போன்றோர்களோடு ஒப்பிட்டு மிகவும் கொந்தளித்து பேசியுல்லது கெட்ட காமடி..

    கூடிய விரைவில் விஜய் அவர்களை அடுத்த டி.ஆரா ஆக்கிடுவாணுக்க போல ...

    ReplyDelete
  4. நல்ல சொன்னிங்க. நானும் தல ரசிகன்தான். ஆனா எங்க வீட்டுல என்ன தவிர எல்லாருக்கும் விஜய்யை தான் பிடிக்குது.

    ReplyDelete
  5. ஏண்டா அடுத்த படம் நடிக்க வக்கில்லாத ஒருத்தனுக்கு சப்போட் பண்ணி பேச உனக்கு வெக்கமில்லையாடா.உன்ர தல இன்னும் எத்தனை படம் நடிக்கிறான் எண்டு பார். டாக்ரர் சொல்லி இருக்கிறார் பைற்,டான்ஸ் பண்ண கூடாது காட் வீக் எண்டு சொன்னவன் எல்லாம் என்னும் எத்தன படமடா நடிக்க போகிறான். தன்னால விஜயையோட மோத முடியாது எண்ட உடனே புரியாணி செய்து கொடுத்து நண்பனாகி இருக்கிறார் எண்டு உனக்கு தெரியாது போல. நோண்ட்சானுகளுக்கெல்லாம் பான் வேற.

    ReplyDelete
  6. அருமையான பதிவு நண்பரே. உண்மையில் நீங்கள் சொல்வது போல் விஜய்யும், அவரது தந்தையும் அஜித்திற்கு பல நெருக்கடிகளை கொடுத்தார்கள், அரசியல் பின்னணியோடு. ஆனால் அஜித்தோ 'மறப்போம், மன்னிப்போம் டைப்'. இந்த நேர்மையான குணம் தான் அவரின் பலமும், பலவீனமும் கூட. ஆனால் தல தன் ரசிகர்களை தன சுயலாபத்திற்காக உபயோகப்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார். கண்டிப்பாக அவர் 'விஜய்க்கு ஆதரவு தாருங்கள்' என்று சொல்ல மாட்டார். அதற்கு அஜித் ரசிகனான நான் உத்தரவாதம் தருகிறேன்...

    ReplyDelete
  7. sandai pottukitu iruntha thaan unaku pidikuma , nalla aaluda nee, kalaingar support pananum na , direct pannu , athuku ethuku da vijaya ya seendura ,ithellam oru polapu

    ReplyDelete
  8. /**நன்றாக இருக்கும் அஜித் படங்களை விட சூப்பராக ஓடும். கிட்டத்தட்ட அஜித்தின் ஒவ்வொரு படமும் ஹிட் ஆவதே பெரிய விசயம். இந்த கால கட்டத்தில் தான் அவரும் சறுக்க ஆரம்பித்தார், ஜனா, ஆஞ்சநேயா, ஜி என்று **/
    Machi, Ithu uankkey overa illa!!
    Nee un Thalaya vida periya Comedy piece pola???

    ReplyDelete
  9. KUMARsaid, enna ramu nee unmaiyelaye comedy peesu pola.unakku onnu theriyuma oru villegukku 2 perukkukooda ajithai pidikkathu appadi erukkumpothu unkalai yaru vijaykku pinnadi varasollurathu.vijaykku fans+family+extra everybody like him you know........nankale pothum are you ok........

    ReplyDelete
  10. நாங்களும் ஏதோ உன்ர தலைக்கு நடிக்க தான் வக்கில்லை விஜய்யோடயாவது நட்பாய் இருக்கிறான் இருந்திட்டு போகட்டும் எண்டு நினைச்சா ரொம்பத்தான் குதிக்கிறீரோ. எவனுக்கடா வேணும் உங்கட தலயோட உதவி? விஜய் கேட்டானோடா உங்கட தலயிட்ட உதவி? சீமான் ,கப்ரன் வியஜகாந், ஜெயல்லிதா எண்டு உதவிக்கு வரேக்கையே வேண்டாம் தேவையெண்டால் சொல்லுறேன் எண்டு சொன்னவன் தானடா நம்மட தளபதி. ஏண்டா சம்மந்தமே இல்லாமல் எழுதிறாய். உங்கட தல தலை கீழா நிண்டாலும் தளபதிய ஜெயிக்க ஏலாதடா.

    ReplyDelete
  11. இப்ப விஜய், அஜித் தனக்கு போட்டி என்று கனவில கூட நினைகிறதில்லை.
    ஏனென்றால் விஜய்,சூர்யா என்று எப்பவோ மாறிவிட்டுதடா பண்ணாட.
    அவருக்கு ரசிகர்கள் பலம் மட்டும் போதும். இது கூட தெரியாது.

    ReplyDelete
  12. Vijay has extended support to Ajith in 2005 itself when Vijay is in peak and Ajith was amongst issues. He went to Thirupathi opening function and since then Vijay, Ajith were frequently meeting each other. Since 2005 in Christmas holidays time we have read in news paper that Ajith's family gave party to Vijay's family and vice versa. Check the facts mate...

    ReplyDelete
  13. @all anonymous: டேய் பொட்டைகளா, முடிஞ்சா உங்க டாக்டர் தலவலிய, தமிழ் சினிமால அடையாளம் காட்டுற மாதிரி 2 படம் நடிக்க சொல்லுங்கடா. அது ரீ-மேக் படமா இருக்க கூடாது. பாத்தோமேடா உங்க நடிப்ப, அழகிய தமிழ் மகன் (என்னாங்கடா பேரு சம்பந்தமே இல்லாம?) க்ளைமாக்ஸ்ல, செம நடிப்பு.
    உங்க டாக்டர்.தலவலி உண்மையிலேயே ஒரு நல்ல நடிகனா இருந்திருந்தா, அவன் பக்கம் நியாயம் இருந்திருந்தா இந்நேரம் நீங்க எல்லாம் இப்படி பொட்டத்தனமா பேர் போடாம பேசி இருக்க மாட்டீங்கடா. ஆம்பளனா பேர் போட்டு பேசுடா

    ReplyDelete
  14. விஜய் ரசிகர்கள் நாங்கள் எல்லாம் பொட்டைதான் இதனால்தான் எங்களுக்கு சில நேரத்தில் எங்களுக்கு விஜய் பிடிக்காது ஆனால் இதை பற்றி அஜித் ரசிகர் பேசக்கூடாது

    ReplyDelete
  15. கருங்காலி கலரில இருக்கிறத்தில உனக்கு கருங்காலி நாயே! எண்டது ரொம்ப பொருந்துது.

    ReplyDelete
  16. உன்ர அஜித் சிந்தி தாய்க்கும் மலையாலி தகப்பனுக்கும் பிறந்தவன்.சிந்தி தாய்க்கும் மலையாலி தகப்பனுக்கும் பிறந்தவனுக்கு சப்போர் பண்ணி பேச உனக்கு வெக்கம் இல்லையாடா? இலங்கைத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்க வேணும் எண்டு கேட்டவன் தனேடா உங்கட அஜித்.உனக்கு வெட்கமா இல்லை அஜித் ஃபன் எண்டு சொல்ல.

    ReplyDelete
  17. நான் விஜய், அஜித் ரசிகனோ எதிரியோ அல்ல. நல்ல சினிமா ரசிகன். இந்த பதிவு நிச்சயமாகவே கலக்கல். நெத்தியடியாக உள்ளது, நண்பரே!

    ReplyDelete
  18. //உன்ர அஜித் சிந்தி தாய்க்கும் மலையாலி தகப்பனுக்கும் பிறந்தவன்.சிந்தி தாய்க்கும் மலையாலி தகப்பனுக்கும் பிறந்தவனுக்கு சப்போர் பண்ணி பேச உனக்கு வெக்கம் இல்லையாடா? //

    இந்தியால பொறந்த எவனும் எங்கயும் நடிக்கலாம். புளிச்சி போன "தாய் தகப்பன், சிந்தி" மாதிரி வசனத்தை நிறுத்துங்கடா நொன்னைங்களா..... சினிமா நடிகர்களுக்கு ஆபத்து அப்டின்னு கலைஞர் முன்னாடி பேசுனாரே அஜித், அதுதாண்டா தில்லு!! ஆமா, நீ தமிழன்தான, இலங்கை பிரச்னை நடந்தப்ப நீ என்னத்த கிழிச்ச. மாவீரன் முத்துகுமார் தவிர மத்தவன் எவனுக்கும் இது பத்தி பெருமை பேச தகுதி இல்லை. என்னையும் சேத்துதான். சிவகாசிக்காரரே, நீங்க வெடிய கொளுத்துங்க..நீங்கதான் ஒரிஜினல் சிவகாசி!

    ReplyDelete
  19. @vijithan: //சிந்தி தாய்க்கும் மலையாலி தகப்பனுக்கும் பிறந்தவனுக்கு சப்போர் பண்ணி பேச உனக்கு வெக்கம் இல்லையாடா? // இதுக்கும், நான் அஜித்தை சப்போர்ட் செய்வதற்க்கும் என்ன சம்பந்தம் அய்யா இருக்கு? எனக்கு உங்களைப்போல மொழி, மதம் ஜாதி பாகுபாடு எல்லாம் பார்த்து நடிகனையோ அரசியல்வாதியையோ சப்போர்ட் பண்ண தெரியாது.
    //இலங்கைத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்க வேணும் எண்டு கேட்டவன் தனேடா உங்கட அஜித்//
    அவர் தொழில் நடிப்பது, ஒரு நடிகனிடம் என்ன எதிர் பார்க்க வேண்டுமோ அதை மட்டும் எதிர் பாருங்கள்.ஏன் நடிகனை அவன் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத துறையில் நுழைய சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  20. //சிவகாசிக்காரரே, நீங்க வெடிய கொளுத்துங்க..//
    என்னத்த? ஒரு புஸ்வானம் போட்டதுக்கே இந்த பய புள்ளைக இப்படி பம்முராயிங்க..

    ReplyDelete
  21. தம்பி...
    சரி வெடிய கொளுத்தி போட்டுட்டே! பத்தவெக்காத எடத்துல எல்லாம் வெடிக்கறது!

    ராமு -
    {{ //சிந்தி தாய்க்கும் மலையாலி தகப்பனுக்கும் பிறந்தவனுக்கு சப்போர் பண்ணி பேச உனக்கு வெக்கம் இல்லையாடா? // இதுக்கும், நான் அஜித்தை சப்போர்ட் செய்வதற்க்கும் என்ன சம்பந்தம் அய்யா இருக்கு? எனக்கு உங்களைப்போல மொழி, மதம் ஜாதி பாகுபாடு எல்லாம் பார்த்து நடிகனையோ அரசியல்வாதியையோ சப்போர்ட் பண்ண தெரியாது.
    //இலங்கைத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்க வேணும் எண்டு கேட்டவன் தனேடா உங்கட அஜித்//
    அவர் தொழில் நடிப்பது, ஒரு நடிகனிடம் என்ன எதிர் பார்க்க வேண்டுமோ அதை மட்டும் எதிர் பாருங்கள்.ஏன் நடிகனை அவன் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத துறையில் நுழைய சொல்கிறீர்கள்?}}

    இதை விட ஒரு தெளிவான பதிலை யாராலும் சொல்ல முடியாது! ஒன்னே ஒன்னு மட்டும் புரியுது ...ஈழத்தமிழர்கள் பேருல நிறைய பேரு பேருல நம்ம ஊரு பக்கிங்க ATROCITY பண்ணிக்கிட்டிருக்கு!

    இதுங்க எல்லாம் யாரு எதுக்காக இப்படி பண்ணுது என்கிறது எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.

    நான் எல்லாம் பழைய ஆளு ரஜினி/கமல் சண்டை தான் போடுவோம், அஜித்/விஜய் சண்டை நமக்கு தூரம்தான்!

    இருந்தாலும் இந்த விஜய் இருக்கானே...

    அப்பப்பா, படம் பேரு மட்டும் TITLE ல போடலேன்னா ஒரே படத்த திருப்பி திருப்பி பல வருஷமா ஓட்டுறான்னு சனம் எல்லாம் OPERATOR எ கொண்டே போட்டிருக்கும்!

    இத்தன நாலு சினிமால இருந்து பொலிடிக்ஸ் பண்ண வந்து ஊர கெடுத்தது போதாதுன்னு இது வேறயா...இத ஓய்ச்சு விடுற எந்த அரசியல் வாதியா இருந்தாலும் எம்பரம்பரையே அவனுக்கு வோட்டு போடும்!

    அத விட அவங்கப்பன்...அவன் பேச ஆரம்பிச்சாலே மீசை தாடி இல்லாத TR பேசுற மாதிரி தான் இருக்கு!

    ஒலகத்திலேயே தம்புள்ளைய ஓய்ச்சுவிட்ட ஒரே பெருசு அவனா தான் இருக்கும்னு நெனக்கிறேன்.

    ReplyDelete
  22. //TITLE ல போடலேன்னா ஒரே படத்த திருப்பி திருப்பி பல வருஷமா ஓட்டுறான்னு சனம் எல்லாம் OPERATOR எ கொண்டே போட்டிருக்கும்! //

    ha ha.. super nae..

    //அத விட அவங்கப்பன்...அவன் பேச ஆரம்பிச்சாலே மீசை தாடி இல்லாத TR பேசுற மாதிரி தான் இருக்கு!

    ஒலகத்திலேயே தம்புள்ளைய ஓய்ச்சுவிட்ட ஒரே பெருசு அவனா தான் இருக்கும்னு நெனக்கிறேன். //

    இவனுங்க படத்த ரசிச்சோம்னா ஏதோ இவனுகளையே ரசிச்ச மாதிரி நெனச்சுக்கிட்டு அரசியலுக்கு வந்து கிழிக்கப்போற மாதிரி பேசுரானுங்க.. "உனக்கு எதுக்கு அரசியல்?"னு யாரவது கேட்டால் இவர்களால் பதில் சொல்ல முடியுமா? "மக்களுக்கு நல்லது செய்ய" என்று வேண்டுமானால் சொல்லுவார்கள். நீ நடிக்காமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் நல்லது தான்னு யாரவது அவருக்கும் அவங்க நைனாவுக்கும் சொல்லுங்கோ..

    ReplyDelete
  23. >>> ஒரு நடிகனை சப்போர்ட் செய்யும் பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். நேர்மையான, தெளிவான பதிவு. ராமு..பட்டைய கிளப்பிட்டீங்க.

    ReplyDelete
  24. From the above comments:
    இவ்வளவு கேவலமாவ இருபாங்கே இந்த விஜய் ரசிகர்கள்.

    ReplyDelete
  25. aamaa, kaattu miraandi thanama comment podurainga, neradiya pesa vakku illama.. sari vidunga, avangalum enna seivanga, satti (vijay) la iruntha thane agaippai la varum

    ReplyDelete
  26. நானும் தலையின் தீவிரமான ரசிகர்
    விஜய்க்கு ஆதரவு அளிப்பது றோட்டில போற நாயை வம்புக்கு இழுத்தமாதிரி ஆகிடும்

    ReplyDelete
  27. Both are not world class actors and they havent done anything great to Tamil Cinema.. Why to fight with them? And Ram, you must stay away from Thevar Street for your good, I am telling you..

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One