காதலிக்கு கடிதம் - காதல் தோல்விக்கு பின்...

Sunday, September 5, 2010

நான்: உனக்காக நான் செய்த ஏர்டெல்-ஏர்டெல்
10 பைசா திட்டம்
பயன்படுத்தப்படாமலே இருக்கிறது..
மனசாட்சி: 150 ரூபாய் போச்சுடீ..

நான்: என் விடுமுறைகள்
உன்னைப்பார்க்க ஏங்கிக்கிடக்கின்றன..
மனசாட்சி: பஸ் காசு மிச்சம்..

நான்: நீ கொடுத்த வாழ்த்து அட்டையும்
என் வீட்டு பூஜை அறையில் காதல் கடவுள் உன்னால்
சிபாரிசு செய்யப்பட்ட மனிதனின் கடவுள் பிள்ளையாரும்
உன்னை ஞாபகப்படுத்தி
மனம் வலிக்கச்செய்கிறார்கள்..
மனசாட்சி: எட்டணா கலர் அட்டைல கவுத்திப்புட்டாலே..

நான்: நன் கொடுத்த புத்தகங்களையோ
பிறந்த நாளுக்கு நான் பரிசளித்த மோதிரத்தை பார்க்கும் போதோ
அந்த வெள்ளை நிற சுடிதார் அணியும் போதோ
உனக்கு ஒரு நொடி கூட என் எண்ணம் வரவில்லையா?
மனசாட்சி: ஆயிரக்கணக்குல செலவழிச்சதுலாம் வீணா போச்சே...

நான்: வீட்டில் யாரும் உன் படிப்புக்கு துணை நில்லாத போது
என் மடிக்கணினியை விற்று
உனக்கு கல்வி கட்டணம் செலுத்தியபோது
நீ சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும்
என் நினைவுகளில் உள்ளது..
'என் family a விட நீ தான் எனக்கு எப்பவும் வேணும் ராம்'
என்று சொல்லியதை கூடவா மறந்து விட்டாய்?
மனசாட்சி: இன்னைக்கு அவளே தானடா
'எங்க குடும்ப மானமே போயிடும்
உன்ன கட்டிக்கிட்டா' னு சொல்லிட்டா..

நான்: உன்னால் நான் இழந்தது
என் வாழ்வில் பல..
மனசாட்சி: ஆமா ஆமா,
இதுவரைக்கும் எழுபத்தாயிரத்தி சொச்சம்..
வட்டி என்ன ஆச்சு?

நான்: இழந்தவை எல்லாம் திரும்ப வருமா?
உன்னையும் சேர்த்து தான் கேட்கிறேன்..
மனசாட்சி: நீ கூட வர வேண்டாம் தாயி..
அந்த காச மட்டும் ரிட்டன் பன்னிரு..
என்னோட அடுத்த பிகருக்கு செலவழிக்கணும்..

8 comments

 1. காசேத்தான் காதலியடா.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி மதுரை சரவணன் அவர்களே...

  ReplyDelete
 3. //நீ கூட வர வேண்டாம் தாயி..
  அந்த காச மட்டும் ரிட்டன் பன்னிரு..
  என்னோட அடுத்த பிகருக்கு செலவழிக்கணும்.. //

  அது...........!

  :))

  ReplyDelete
 4. ஏம்ப்பா என்ன லவ் ஃபெயிலியரா

  ReplyDelete
 5. Madikaniyalom yaaru unna vikka sonna??? manasula periya Suryavamsam Sarath Kumar, devayaniya collectorukku padikka vaikuraaru.....

  ReplyDelete
 6. @Alex: hi hi hi.. naama than kastam nu vantha karnanaa mariduvome...

  ReplyDelete
 7. ponga boss....
  inimae yavathu polappa paarunga...

  ReplyDelete
 8. Good one. nice....

  ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One