As usual ஸ்ட்ரெயிட்டாவே மேட்டருக்கு வந்துருவோம். லெக்கின்ஸ் பிரச்சனை போன வாரம் வெடித்த போது தினகரனில் ஒரு கட்டுரை வந்தது. அதாவது பெண்களின் உடையைப் பற்றி ஆண்கள் வாயைத் திறக்கவே கூடாதாம்.. ஞாயமாகப் பார்த்தால், ஆண்கள் டவுசர் போட்டுக் கொண்டு வாக்கிங் போவது, தொப்பை தெரிகிற மாதிரி டீ ஷர்ட் அணிவது, இதையெல்லாம் எதிர்த்துப் பெண்கள் தான் போராட வேண்டுமாம்.. எனக்கு அந்தக் கட்டுரையைப் படித்த போதே சில விசயங்கள் தோன்றின. அப்போதே சொன்னால் இருக்கும் வெறியில் எல்லோரும் என்னை ஆணாதிக்கவாதி ஆக்கிவிடுவார்கள் என்பதால் ஒரு வாரம் கேப் விட்டு இதைப் பதிகிறேன்.
நான் இந்த லெக்கின்ஸ்சுக்கு ஆதரவா இல்லையா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என் ஆதரவாலோ எதிர்ப்பாலோ லெக்கின்ஸ் வியாபாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை என்னும் போது, அதைச் சொல்லி என்ன பிரயோஜனம்? பெண்களின் உடை அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பதையும் நான் மதிக்கிறேன்.. மற்றபடி அந்த தினகரன் கட்டுரைக்கு என் பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம்..
முதலில், ’பெண்களின் ஆடைகளைப் பற்றி ஆண்கள் குறை கூறுவது தப்பு’ என்று கட்டுரை எழுதும் உங்களுக்கு, ஆண்களின் ஆடையைப் பற்றி மட்டும் குறை கூற என்ன உரிமை இருக்கிறது? ரோட்டில் வாக்கிங் போகிற ஆண் முழங்கால் வரை சுருள் முடி தெரிய சீன் காட்டிக்கொண்டு, தொப்பை குலுங்க நடக்கிறான், வேஷ்டி கட்டிக்கொண்டு தொடையைக் காட்டுகிறான், ஒத்துக்கொள்கிறேன்.. எங்காவது ஆண் வெறும் பனியனை மட்டும் அணிந்து கொண்டும், அக்குளைக் காட்டிக்கொண்டும் பஸ், ஆபிஸ், ரயிலில் எல்லாம் போகிறானா? ஒரு ஆண் ஜீன்ஸ் அணிந்து வருவதற்குக் கூட அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கின்றன பல அலுவலகங்களில். டீ ஷர்ட்க்கும் அதே கட்டுப்பாடு தான்.. அந்தந்த இடங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் பாவப்பட்ட ஆண்களுக்கு மட்டுமே இருக்கின்றன, பெண்கள் அந்த வரையறைக்குள் வருவதில்லை என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
சமூக சீர்திருத்தம், பெண்ணியம், பெண் சுதந்திரம் என்கிற பெயரில் பெண்களுக்கு மட்டுமே அடக்குமுறைகள் இருக்கின்றன, அவர்கள் என்ன செய்தாலும் சரி, அப்படியே தவறுகள் செய்தாலும் அவர்கள் எல்லாம் ரொம்ப பாவம், என்பது போன்ற கருத்துக்களைப் பொதுவெளியில் வைப்பது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது, குறிப்பாக மீடியாக்களில். ’ஆண்களின் அடக்குமுறைகளைப் பற்றி வாய்திறக்க ஆள் கிடைக்காதா, எங்களுக்கும் ஒரு புரட்சியாளன் வர மாட்டானா?’ என்று நாங்களெல்லாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.. ஒரு வேளை பெண்களுக்கு உங்களைப் போல் ஒரு ஆண் ஆதரவாளர் கிடைத்த மாதிரி, எங்கள் உரிமைக்கும் ஏதாவது பெண் கிடைப்பாரா என்றும் காத்திருக்கிறோம் நாங்கள்.
சில மாதங்களுக்கு முன், கடை வைத்திருக்கும் ஒரு பெண் வாரமலரின் ‘இது உங்கள் இடம்’ பகுதிக்குக் கடிதம் எழுதியிருந்தார். வேஷ்டி கட்டியிருக்கும் ஆண்கள் கடையில் அவர் கண் முன்னே தங்கள் வேஷ்டியைத் தொடை தெரியத் தூக்கி அண்ட்ராயரில் இருந்து காசு எடுத்துக் கொடுப்பது அவருக்கு அருவெறுப்பாக இருக்கிறதாம். “பெண் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் நாகரிகமே இல்லாமல் இப்படி தொடையைக் காட்டலாமா?” என்று கேட்கிறார் அவர். இந்தக் கடிதத்தை இந்த உலகம் எப்படி அணுகும்? ”ச்செய் இந்த ஆம்பளைகளுக்கு வெவஸ்தையே இல்லப்பா, பொம்பளப்பிள்ள இருக்குற இடத்துல இப்படியா செய்வான்?” என்பார்கள்.. இதுவே ஒரு ஆண், தன் கடைக்கு வரும் பெண்கள் ஜாக்கெட்டில் இருந்து காசை எடுக்கும் போது தனக்கு அது அசிங்கமாகத் தெரிகிறது என்று மட்டும் எழுதியிருந்தால் என்ன களேபரம் நடந்திருக்கும்? ஆணாதிக்கம், பார்வையில் வக்கிரம், பெண் அடிமைத்தனம் என்றெல்லாம் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார்கள்..
ஒரு பாலினத்தவரின் ஆடை சுதந்திரம் சமயங்களி்ல் எதிர்பாலித்தவரைத் தொந்தரவு செய்யவதற்கோ, அவர்களின் கண்களுக்கு அசிங்கமாகத் தெரிவதற்கோ வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. மேலே கூறிய ஒரு பெண்ணின் கடிதம் அதற்கும் சிறந்த உதாரணம். So, இங்கு பிரச்சனை ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துப் பார்க்கப் படுவதால் தீரப்போவதே இல்லை.. ரூல்ஸ் என்றால் இருவருக்கும் ரூல்ஸ் தான் அது அலுவலகத்திலும் சரி, பொதுவிடங்களிலும் சரி, வீட்டிலும் சரி, வாக்கிங்கிலும் சரி.. இல்லை, சுதந்திரம் என்றால் அதுவும் இருவருக்கும் தான்.. இன்னொரு முக்கிய விசயம், நாட்டில் சில விசயங்களை மீடியாக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது..
வக்கிரமான சினிமா, சிறுவர்கள் செய்யும் வன்முறைகள், கள்ளக்காதல்கள், எங்கோ ஜாதி, மதத்தின் பெயரால் நடந்த வன்முறை இவற்றையெல்லாம் ஏதோ தங்களுக்கு தான் சமூகத்தின் மீது அதிக அக்கறை இருக்கிறது என்பது போல் இந்த மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு முக்கியச் செய்தியாக்காமல் இருந்தாலே போதும். அந்தக் குற்றங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல், சாமானியன் மீது எந்த பாதிப்பையும், வன்முறை எண்ணத்தையும், வஞ்சத்தையும், ‘இதெல்லாம்
நாட்டுல சகஜம்ப்பா’ என்கிற மோசமான எண்ணத்தையும் விதைக்காமல் இருக்கும். இப்போதெல்லாம் எல்லா விசயங்களும், அது நல்லதோ கெட்டதோ, “அவன் செய்யிறான், நானும் செய்யிறேன்’, ‘இப்பலாம் யாரு இதப்பண்ணல? எல்லாம் ரொம்ப சகஜமாயிருச்சி’ என்கிற விதத்தில் தானே பரவுகின்றன.. அதிலும் கெட்ட விசயங்கள் மிக வேகமாகப் பரவுகின்றன. இது எவ்வளவு பெரிய மோசமான முன்னுதாரணம்? குடி சகஜம் என்று பலரும் நினைக்க ஆரம்பித்ததில் மீடியாவிற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது தானே? அந்த லிஸ்டில் இந்த லெக்கின்ஸ் சமாச்சாரத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.
இது லெக்கின்ஸுக்கு எதிராகப் பதறிய குமுதத்திற்கும் பொருந்தும், ‘எனி ப்ராப்ளம் ஷாலினி?’ என ஆதரவாகப் பொங்கிய தினகரனுக்கும் பொருந்தும். அனைத்திலும் பத்திரிகை சுந்ததிரம் என்கிற பெயரில் மூக்கை நுழைக்கும் இந்த மீடியாக்கள் பாக்கி வைத்திருப்பது நம் வீட்டு கழிவறையை மட்டும் தான் என நினைக்கிறேன். அல்ரெடி பெட்ரூம் வரை என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதைத் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சொந்த மற்றும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளின் மூலம். ஒரு உதாரணம் சொல்கிறேன். இளையராஜா சில காட்சிகளில் பின்னணி இசைக்கு எந்தக் கருவியையும் பயன்படுத்தியிருக்க மாட்டார், வெறும் மௌனம் மட்டும் தான் அந்தக் காட்சிக்குப் பின்னணி. அவ்வளவு அருமையான உணர்வைக் கொடுக்கும் அந்தக் காட்சிகள். உண்மையிலேயே சமூகத்தின் மீது அக்கறை இருந்தால், இளையராஜாவின் அந்த டெக்னிக்கை, அதாவது வாசிப்பு தேவையில்லாத இடத்தில் வாசிக்காமல் இருங்கள், அதுவே போதும். அது தான் நீங்கள் இந்தச் சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. இந்த லெக்கின்ஸ், குடி, கள்ளக்காதலை எல்லாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம், நன்றி.
மற்றபடி, தனிப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ, உங்கள் ஆடை என்பது உங்கள் வசதி, உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது தான். ஆனால் பொது இடத்தில் நீங்கள் சிகரெட் குடிப்பது எப்படி இன்னொருவரை உடல் அளவில் பாதிக்குமோ, சில ஆடை முறைகள் சிலரை மனதளவிலும் பாதிக்கலாம், உங்கள் மீது தப்பான, அருவெறுப்பான எண்ணத்தைக் கொண்டு வரலாம், அந்தக் கடை வைத்திருக்கும் பெண்மணிக்கு அண்ட்ராயர் ஆளால் ஏற்பட்ட உணர்வு மாதிரி. அதனால் இருவருமே கொஞ்சம் கண்ணியமாக இருங்கள். உங்களுக்கும் நன்றி..
Well said. Your blog reflects clearly what I thought of saying
ReplyDeleteExactly my thoughts.
ReplyDeleteசரியான பதிவு.
ReplyDeleteஅட்டகாஷ் ;-)
ReplyDeleteஉங்களுக்கென உள்ள தளத்தில் உங்கள் தனித்தன்மையோடு உள்ளொன்று வைத்து பேசாமல் போட்டு தள்ளி விட்டீர்கள்..
ReplyDeleteஉங்களுக்கென்ன நீங்கள் சொல்லும் (முற்போக்காளர்கள் என சொல்லிக்கொள்ளும்) சிலரிடம் தற்காத்துக் கொள்வதே என் போன்றோருக்கு பெரும்பாடாக அல்லவா இருக்கிறது...
அவர்கள் உங்களை என்ன செய்தார்கள்? கண்டுகொள்ளாமல் விடுங்கள்..
DeleteCorrectly said. Media should know about their limits.
ReplyDeleteகலக்கிட்டீங்க பாஸ்... லிமிட்னா ரெண்டு பேருக்கும் லிமிட் தான். அது சரி எல்லா ஆபீஸ்லயும் "Workplace Attire" இருக்கும். ஆனா பொண்ணுங்க தான் இத மதிக்குறதே கெடையாது. கடைசி வரைக்கும் அது பவர்பாய்ண்ட் ல மட்டும் தான் இருக்கும். ஆனா நாம ஷூ போடாம செருப்பு போட்டாலும் நம்மள ஆதிவாசி மாதிரி பாப்பானுங்க.
ReplyDeleteநல்லா டிரஸ் போடுங்க... நல்லதையே போடுங்கனு சொல்றது தான் இப்போ பெரிய பிரச்சினை
அழகா சொன்னீங்க.. இடத்துக்கு தகுந்த மாதிரி உடுக்கலாம்.. இருவருமே கொஞ்சம் கண்ணியமாக இருக்கலாம்..
ReplyDelete